சனி, 16 ஜூலை, 2016

மகோன்னத வாழ்வருளும் ப்ருஹஸ்பதி கவசம்!

இந்த ஸ்லோகம், பரமசிவனால் ரிஷிகளுக்கு உபதேசிக்கப்பட்டது. இதைப் படிப்பவரின் எல்லா எண்ணங்களும் ஈடேறும். எங்கும் எதிலும்  வெற்றியைக் காணமுடியும். வயிறு, இதயப் பகுதிகளில் தோன்றக்கூடிய நோய்கள் நீங்கும். நீண்ட ஆயுள் கிட்டும். குரு கிரக தோஷம் விலகும்.

ப்ரஹஸ்பதி த்யானம்தப்த காஞ்சன வர்ணாபாம் சதுர்புஜஸமன்விதாம்
தண்டாக்ஷ ஸூத்ரஹஸ்தம் ச கமண்டலுவரான்விதாம்
பீதாம்பரதரம் தேவம் பீதகந்தானுலேபனம்
புஷ்பராகமயாபூஷம் விசித்ரமகுடோஜ்வலம்
ஸ்வர்ணாஸ்வரதமாரூடம் பீதத்வஜ ஸுஸோபிதாம்

மேரோ: ப்ரதக்ஷிணம் ஸம்யகாசரந்தம் ஸுஸோபனம்
அபீஷ்டவரதம் தேவம் ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வ காமார்த்த ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும் ஸதா

பொதுப் பொருள்:
 
உருக்கிய தங்கம் போன்ற நிறத்தைக் கொண்டவரே, நான்கு கரங்கள் உடையவரே, அந்தக் கரங்களில் தண்டம், ருத்ராக்ஷ மாலை, கமண்டலு, வரத முத்திரை ஆகியவற்றைத் தரித்தவரே நமஸ்காரம். பொன்னாடை அணிந்தவரே, மஞ்சள், சந்தனம் பூசியவரே, ஒளிவீசும் விசித்திரமான கிரீடம் அணிந்தவரே,

மஞ்சள் வண்ணக் கொடி கட்டப்பட்ட, தங்க நிறத்தில் ஜொலிக்கும் குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்திருப்பவரே, மேரு மலையை மிக அழகாக வலம் வருபவரே, கோரிய வரங்களைத் தட்டாமல் அளிப்பவரே, தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே, ப்ரஹஸ்பதி எனும் குரு பகவானே, என் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி அருள்வீராக. 

ப்ரஹஸ்பதி ஸஸிரோ பாது லலாடம் பாது மே குரு:
கர்ணௌ ஸுரகுரு: பாது நேத்ரே மேபீஷ்டதாயக:

ப்ரஹஸ்பதியே என் தலையைக் காப்பீராக. குருவானவரே என் நெற்றியைக் காப்பீராக. தேவர்களின் குருவே என் காதுகளைக் காப்பீராக. விரும்பிய பொருளை விரைந்து அளிப்பவரே என் கண்களைக் காப்பீராக.

நாஸாம் பாது ஸுராசார்ய: ஜிஹ்வாம் மே வேதபாரக:
முகம் மே பாது ஸர்வக்ஞ புஜௌ பாது ஸுபப்ரத:

ஸுராசார்யரே என் மூக்கைக் காத்தருள்வீராக. வேதங்களில் கரையைக் கண்டவரே எனது நாக்கைக் காத்தருள்வீராக. ஸர்வக்ஞரே எனது முகத்தைக் காத்தருள்வீராக. சுபமான நற்பயனை அளிப்பவரே என் புஜங்களையும் காத்தருள்வீராக.

கரௌ மே வரத: பாது வக்ஷோ மே பாது கீஷ்பதி:
ஸ்தனௌ மே பாது வாகீஸ: குஷிம் மே ஸுபலக்ஷண:

வரங்களை வாரி வழங்குபவரே, என் உள்ளங்கைகளைப் பாதுகாப்பீராக. வாக்குக்கு அதிபதியானவரே, என் மார்பை பாதுகாப்பீராக. வாகீஸ்வரரே எனது ஸ்தனங்களைக் காப்பீராக. அழகிய லக்ஷணம் பொருந்தியவரே எனது வயிற்றைக் காப்பீராக.

நாபிம் பாது ஸுநீதிக்ஞ: கடிம் மே பாது ஸர்வத:
ஊரும் மே பாது புண்யாத்மா ஜங்கே மே க்ஞானத: ப்ரபு:

மங்களமான நீதியை அறிந்தவர் என் தொப்புளைக் காக்கட்டும்.  எல்லாவற்றையும் அளிப்பவர் எனது இடுப்பைக் காக்கட்டும்.  புண்ணியமான மனமுடையவர் என் தொடைகளைக் காக்கட்டும். அறிவை வளர்க்கும் பிரபுவானவர் என் ஆடுசதைகளைக் காக்கட்டும்.
 
பாதௌ மே பாது விஸ்வாத்மா ஸர்வாங்கம்
ஸர்வதா குரு:
 
உலகெங்கும் வியாபித்தவர் எனது கால்களையும், குருவானவர் எப்பொழுதும் எல்லா அங்கங்களையும் ரட்சிப்பீராக. 

ய: இதம் கவசம் திவ்யம் த்ரிஸந்த்யம் ய: ப்டேந்நர:
ஸர்வான் காமானவாப்னோதி ஸர்வத்ர விஜயீ பவேத்
ஸர்வத்ர பூஜ்யோ பவதி வாக்பதேஸ் ச ப்ரஸாதத:

இந்த கவசத்தை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று  வேளைகளிலும் படிப்போர், எல்லா நலன்களையும், வெற்றிகளையும் எளிதாக அடைவர். ப்ரஹஸ்பதியின் இந்தப் பேரருளால் எல்லோராலும் புகழப்படுபவராகவும், மதிக்கப்படுபவராகவும் விளங்குவர்.

ப்ருஹஸ்பதிஸ் ஸுராஸார்ய: தயாவான் ஸுபலக்ஷண:
லோகத்ரய குரு மான் ஸர்வக்ஞஸ் ஸர்வகோவித:

ப்ருஹஸ்பதியானவர் தேவர்களுக்கு ஆசாரியர். தயை உள்ளவர். சுபமான லக்ஷணங்கள் பெற்றவர். மூன்று உலகங்களுக்கும் குருவானவர். சோபையுள்ளவர். ஸர்வத்தையும் அறிந்தவர். எல்லாவற்றிலும் கரை தேர்ந்தவர்.

ஸர்வேஸஸ் ஸர்வதா பீஷ்டஸ் ஸர்வஜித் ஸர்வபூஜித:
அக்ரோதனோ முனிஸ்ரேஷ்ட: நீதி கர்த்தாகுரு: பிதா

அவர் சகலத்திற்கும் ஈஸ்வரர். எப்போழுதும் எல்லோரையும் மிகவும் விரும்பி அருள்பவர். எல்லாவற்றையும் ஜெயித்தவர். எல்லோராலும் பூஜிக்கப்பட்டவர். கோபமற்றவர். சிறந்த முனிவர். நீதியை செய்தவர். குரு, தந்தையைப் போன்றவர்.

விஸ்வத்மா விஸ்வகர்தா ச விஸ்வயோநிரயோநிஜ:
பூர்புவஸ்வ: ப்ரபுஸ்சைவ பர்தா சைவ மஹாபல:

உலகின் ஸ்வரூபமாக இருப்பவர். உலகை உருவாக்கியவர். தெய்வீக அவதாரம் எடுத்தவர். பூ:, புவ:, ஸுவ: என்ற மூவுலகங்களுக்கும் பிரபுவாகத் திகழ்பவர். உடன் பிறந்தவராக இருப்பவர். மிக்க பலமுள்ளவர்.

சதுர்விம்ஸதி நாமானி புண்யானி நியதாத்மனா
நந்தகோப க்ருஹாஸீன விஷ்ணுனா கீர்த்திதானி வை

இந்த புண்ணியமான ப்ரஹஸ்பதியின் நாமங்கள் நந்தகோபனின் வீட்டில் வசித்த மகாவிஷ்ணுவான கிருஷ்ணனால் ஒருமைப்பட்ட மனத்துடன் கூறப்பட்டன.

ய: படேத் ப்ராதருத்தாய ப்ரயதஸ்ஸு ஸமாஹித:
விபரீதோபி பகவான் ப்ரீதஸ்யாத்து ப்ருஹஸ்பதி:

மிக்க முயற்சியுற்றவனாகவும், அடங்கிய மனமுடனும், எவன் காலையில் எழுந்து இதைப் படிக்கிறானோ, அவனுக்கு ஜாதகத்தில் பலன்கள் விபரீதமான முறையில் இருந்தாலும் பகவானான ப்ருஹஸ்பதி திருவருளால் அவையெல்லாம் நல்லனவாகவே மாறும்.

யஸ்ஸ்ருணோதி குருஸ்தோத்ரம் சிரம் ஜீவேன்னஸம்ஸய:

ஸஹஸ்ர கோதானபலம் விஷ்ணோர் வசனதோபவேத்
ப்ருஹஸ்பதி க்ருதாபீடா நகதாசித்பவிஷ்யதி.

யார் இந்த குரு ஸ்தோத்திரத்தைக் கேட்கிறாரோ, அவன் சிரஞ்சீவியாக வெகு காலம் வாழ்வார். திருமாலின் வாக்குப்படி ஆயிரம் கோதானம் செய்த பயனும் கிட்டும். குரு க்ரஹ பாதிப்புகள் ஒரு பொழுதும் ஏற்படாது.  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக