வியாழன், 31 டிசம்பர், 2015

ஸ்ரீ வேங்கடவர் துதிப்பாடல்



அலர்மேல் மங்கை யுறைமார்பனே அமரர்க்கு அரசே
நிலமேல் மாமலை யில் நின்று எல்லோர்க்கும் அருள்பவனே

பல கல்வியையளித்து புலவராய் ஆக் குபவனே
கலியு கவரத வாழ்க நீ வேங்க டவா எம்மானே.

அமர ரும்நர ரும்முனி வரும் வணங்குபவரே
இமயோ ரும் புவி யோரும் வந்தென்றும் வணங்குபவரே
யமன்அசன் வந்துன்னை என்றும் மலரால் போற்றுபவரே
சமம்தரும் விருடகி ரீசவேங் கடவா எம்மானே.

உண்ணும் சோறும் பருகும் நீரும் எல்லார்க்கும் தருவோனே
கண்ணும் கருத்துமாய் யாவரும் மனதால் போற்றுவோனே
மண்ணுல கத்தால் வாழவந்து நின்ற அமரர்கோவே
பண்பரு ணாம்நீல மலைக்கரசே வாழ்க எம்மானே

பஞ்ச மாபாத கம்யாவும் பறந்தோடச் செய்பவனே
வஞ்ச கர்யாவ ரும்விலகி ஓடஓடச் செய்வோனே
தஞ்ச மடைந்தோ ரைதயங்கா துநித்தம் காப்பவனே
அஞ்ச னாத்ரீச வாழ்க வேங்கடவா அருட்கடலே.

கலைமக ளும்மலை மகளும் இருவரும் உன்னுடை
மலையில் வந்து உன்னை மலரால் அர்சனை செய்பவரே
விலையிலா மாணிக்கமே மாமலை தணில் வாழ்பவனே
தலையால் பணிவேன் கருடாத் ரீசனே வேங்கடேசேன

கொடையாய் பாயாய் விதாநமாய் விசிரியாய் விளங்கிடும்
படைநடுங் கும்பணி அரசன் பணிசெய் திருவோனே
வடையழுது செய்வதி லே பிரிய முடையவனே
தடைநீக் கும்சேசாத்ரீசவாழ்க என்றும் வேங்கடேசனே

நலந்தரும் நராணன் நாமம்கொண்டமலை யரசனே
வலம்வந்து உன்னை பணிவோர்க் குவாழ்வு தருபவனே
பலமனைத் தைதந்து பவநா சத்தை தருபவனே
மலையில் நாராய ணாத்ரீச வாழ்கநீ வேங்கடேசனே.

மனிதர் களின் பாவம் போக்
கும் மாமலை யாம் திருமலை
கணிகளும் பூக்களும் பூத்துக் குலுங்கும் மலையரசே
பனிப்பட லம்மே கமும் சூழ்ந்தமாமலை யரசனே
தனிப்பெ ருமையாம் வேங்கடாத் ரீநாத என்றும் வாழ்கவே.

பாவம் அகற்ற தவமிருப் பவர்க்கு அருள்பவனே
தவமுனி வர்களெல் லாரும் உன் மலையில் வாழ்பவரே
அவமிலா அரசர் களெல்லாம் உன்பாதம் பணிவாரே
கவிபோற் றும் கருணாகர வாழ்கநீ வேங்கடேசனே.

அவதா ரம் பத்து எடுத்து அவனியை காத்தவனே
உவமானம் இல்லாத உருபெறும் தேவர் தலைவனே
எவரும் உன்னைத் தவிர வேறெவரை தொழாதவரே
அவனியில் அனைவரை யும் வேங் கடவா காத்தருளே.

வேங்கடேசன் திருவடிகளே சரணம்.



 

புதன், 30 டிசம்பர், 2015

பஞ்ச உபசாரங்கள்


சுவாமிக்கு செய்யவேண்டிய பஞ்ச உபசாரங்கள்:

1) சந்தனம் இடுதல்.

2) அர்ச்சனை செய்தல்.

3) தூபம் காட்டுதல்.

4) தீப ஆராதனை செய்தல்.

5) நைவேத்தியம் சமர்ப்பித்தல்.

ஆலய தரிசன பலன்


காலை  ----------- பிணி போக்கும்.

நண்பகல் --------- தனம் கொடுக்கும்.

மாலை ------------ பாவம் அகற்றும்.

அர்த்தசாமம்  ----- வீடு பேறு,முக்தி அளிக்கும்.
 

பஞ்ச பத்திரம்


துளசி, அருகம்புல், வேம்பு, வன்னி, வில்வம் ஆகியவை பஞ்ச பத்திரம் ஆகும்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சஷ்டி தேவி அருளிய துதி!

ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியிலும் கந்தனுடன் சஷ்டி தேவியையும் (தேவசேனை) துதித்து பலன் பல பெற்று நலமுடன் வாழ்வோமே!
சஷ்டி தேவி அருளிய துதி


"நமோ தேவ்யை மஹாதேவ்யை
ஸித்யை சாந்த்யை ச நமோ நம:
ஸுபாயை தேவஸேனாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

வரதாயை புத்ரதாயை
தனதாயை நமோ நம:
ஸுகதாயை மோக்ஷதாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

ஸ்ருஷ்ட்யை ஷஷ்டி அம்ச
ரூபாயை ஸித்தாயை நமோ நம:
மாயாயை ஸித்தயோகின்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸாராயை ஸாரதாயை ச
பரா தேவ்யை நமோ நம:
பால அதிஷ்டாத்ரு தேவ்யை ச
ஷஷ்டி தேவ்யை ச நமோ நம:

கல்யாணதாயை கல்யாண்யை
பலதாயை ச கர்மணாம்
ப்ரத்யக்ஷாயை ஸ்வபத்தானாம்
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸுத்த ஸத்வ ஸ்வரூபாயை
வந்திதாயை ந்ருணாம்ஸதா
தேவரக்ஷண காரிண்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

பூஜ்யாயை ஸ்கந்த காந்தாயை
ஸர்வேஷாம் ஸர்வகர்மஸி
ஹிம்ஸா கோடி வர்ஜிதாயை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

தனம் தேஹி யசோ தேஹி
புத்ரம் தேஹி ஸுசரேஸ்வரி
மானம் தேஹி ஜயம் தேஹி
த்விஷோ ஜஹி மஹேஸ்வரி

தர்மம் தேஹி ஸுகம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம,

தேஹி பூமி ப்ரஜாம் தேஹி
வித்யாம் தேஹி ஸுபூஜிதே
கல்யாணம் ச ஜயம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

தேவசேனை சஸ்ரநாமத்திலிருந்து நூதன துதிகள்

தயாமூர்த்தி தாரித்யதுக்க பயநாசினி
புஷ்கரா புஷ்கரக்ஷேத்ர தேவதா
மந்த்ரிணி மந்த்ர ஸாரக்ஞா
மாதவிஸுதா முக்தி தாயினி

ராதா லக்ஷ்மிபதிஸுதா
வாக்ப்ரதா சரஜன்மஸதி
ஷஷ்டி ஷஷ்டீஸ்வரி
ஷண்முகப்ரியா ஷடானன ப்ரீதிகர்த்ரீ

ஸங்கீதரஸிகா ஸ்கந்த உத்ஸாஹகரி
ஹரிநேத்ரஸமுத்பவா ஸ்வாமி மோஹினி
ஸ்வாமினி ஸ்வாமி அத்ரி நிலயா
க்ஷிப்ரஸித்திப்ரதா அம்ருதேஸ்வரி

அபார கருணா இஷ்டார்த்த தாயினி
உமாப்ரியா உமாஸுதப்ரியா
க்ருபாபூர்ணா க்ருத்திகா தனயப்ரியா
குஹ்யா குஹப்ரியா குஹ இஷ்டா

குஹஸ்ரீ குஹஉத்ஸுக சின்மயி
ஜயகரி ஞானதாத்ரி ஸர்வ அர்த்ததாத்ரி
ப்ரக்ருதி ஷஷ்டி அம்சா பரமேஸ்வரி பரதேவதா.




 

சஷ்டி தேவி விரத மகிமை!

 ஸ்வயம்பு மனுவின் புதல்வன் பிரியவிரதன். அவன் தவத்தில் மூழ்கியிருந்ததால் மணம் செய்துகொள்ளவில்லை. பின்னர் பிரம்மாவின் வற்புறுத்தலால் மணம் செய்துகொண்டான். ஆனால் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அப்போது காசிப முனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். யாகப் பிரசாதத்தால் மனைவி மாலினி கருவுற்றாள். 12 வருடங்கள் கருவைச் சுமந்தவள் தங்க மயமான ஒரு குழந்தையைப் பெற்றாள். ஆனால் அது முழு வளர்ச்சியுடன் இல்லை.  அதைக்கண்டு மிகவும் மனம் வருந்திய பிரியவிரதன், அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒரு காட்டுக்குள் சென்றான். 

அங்கே ஒரு ஒளிமயமான மண்டபம் தென்பட்டது. அதில் அழகிய ஒரு யோகினி தன் பக்தர்கள் புடைசூழ காணப்பட்டாள். அதிசயித்த பிரியவிரதன், ""தாயே- தாங்கள் யார்?'' என்றான்.""நான் தேவர்களுக்கு வெற்றி தரும் தேவசேனா தேவி. கந்தனின் மனைவி. பிரக்ருதியின் ஆறாவது அம்சம். தேவசேனை, ஈஸ்வரி, சஷ்டி என்கிற பிரபாவ நாமம் கொண்டவள். குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தையையும், மணமாகாதவர்களுக்கு கணவனையும் மனைவியையும், ஏழைகளுக்கு பணம், சுகம், சௌபாக்கியமும், நன்மை செய்பவர்களுக்கு மங்களமும் அளிப்பவள்'' என்றாள்.

ஸ்வயம்புவின் மகன் பிரியவிரதன் தன் குழந்தையைக் காண்பித்து வேண்ட, அவள் குழந்தையைத் தடவியதும் அது முழுஉருவத்துடன் மிளிர்ந்தது. சஷ்டி தேவி அவனிடம், ""மாதம்தோறும் வளர்பிறை சஷ்டி திதியில் என்னை இன்பமுடன் பூஜித்து வணங்கு. உன் மக்களிடமும் சொல். உன் குழந்தை ஸுவ்ரதன் என்று பெயர் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்வான். தான, தர்ம, யாகங்கள் செய்வான். வீரனாகவும் திகழ்வான். உன் நாடும் சிறப்புறும்'' என்று கூறி மறைந்தாள்.அன்றுமுதல் பிரியவிரதன் சஷ்டி விரதம் மேற்கொண்டான். அபிஷேக பூஜை, தூப, தீப, நிவேதன ஆராதனைகளுடன்,

"ஓம் ஹ்ரீம் ஷஷ்டி தேவ்யை ஸ்வாஹா'


என்னும் சஷ்டிதேவி
அஷ்டாட்சர ஜெபத்தைக் கூறி வணங்கிவந்தான். மன்னனும் மக்களும் நலமடைந்தனர்.

(இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஓதினால் குழந்தைப் பேறு கிட்டும்.)


எல்லாவித நலன்களும் பெற சொல்லவேண்டிய துதிகளை சஷ்டி தேவியே அருளியுள்ளாள். அவை தனியே கொடுக்கப்பட்டுள்ளன. முருகன், அவனது வேல், மயில், சேவல் என எல்லாவற்றையும் பாடிய அருணகிரியார் தேவசேனை, வள்ளி தேவியை தனித்துப் பாடவில்லை. அதிசயமே! வள்ளி, தேவசேனைக்கு இரண்டு அஷ்டோத்ரங்கள், சகஸ்ரநாமங்களும் உள்ளன. கோவில்களிலும் அவை தனியே பூஜிக்கப்படுவதில்லை.

தேவசேனை சகஸ்ர நாமத்திலிருந்து ஒருசில உருக்கமான நூதன நாமாவளிகள் இங்கு தனியே தரப்பட்டுள்ளன. வேறெங்கி லும் காணப்படாத நாமங்களை ஜெபித்து நன்மை பெறலாம்.

குமாரசஷ்டியில் ஆரம்பித்து, ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியிலும் கந்தனுடன் சஷ்டி தேவியையும் (தேவசேனை) துதித்து பலன் பல பெற்று நலமுடன் வாழ்வோமே!


சஷ்டி தேவி அருளிய துதி!


"நமோ தேவ்யை மஹாதேவ்யை
ஸித்யை சாந்த்யை ச நமோ நம:

ஸுபாயை தேவஸேனாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

வரதாயை புத்ரதாயை
தனதாயை நமோ நம:

ஸுகதாயை மோக்ஷதாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

ஸ்ருஷ்ட்யை ஷஷ்டி அம்ச
ரூபாயை ஸித்தாயை நமோ நம:

மாயாயை ஸித்தயோகின்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸாராயை ஸாரதாயை ச
பரா தேவ்யை நமோ நம:

பால அதிஷ்டாத்ரு தேவ்யை ச
ஷஷ்டி தேவ்யை ச நமோ நம:

கல்யாணதாயை கல்யாண்யை
பலதாயை ச கர்மணாம்

ப்ரத்யக்ஷாயை ஸ்வபத்தானாம்
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸுத்த ஸத்வ ஸ்வரூபாயை
வந்திதாயை ந்ருணாம்ஸதா

தேவரக்ஷண காரிண்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

பூஜ்யாயை ஸ்கந்த காந்தாயை
ஸர்வேஷாம் ஸர்வகர்மஸி

ஹிம்ஸா கோடி வர்ஜிதாயை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

தனம் தேஹி யசோ தேஹி
புத்ரம் தேஹி ஸுசரேஸ்வரி

மானம் தேஹி ஜயம் தேஹி
த்விஷோ ஜஹி மஹேஸ்வரி

தர்மம் தேஹி ஸுகம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம,

தேஹி பூமி ப்ரஜாம் தேஹி
வித்யாம் தேஹி ஸுபூஜிதே

கல்யாணம் ச ஜயம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம:


தேவசேனை சஸ்ரநாமத்திலிருந்து நூதன துதிகள்!

தயாமூர்த்தி தாரித்யதுக்க பயநாசினி
புஷ்கரா புஷ்கரக்ஷேத்ர தேவதா
மந்த்ரிணி மந்த்ர ஸாரக்ஞா
மாதவிஸுதா முக்தி தாயினி
ராதா லக்ஷ்மிபதிஸுதா
வாக்ப்ரதா சரஜன்மஸதி
ஷஷ்டி ஷஷ்டீஸ்வரி
ஷண்முகப்ரியா ஷடானன ப்ரீதிகர்த்ரீ
ஸங்கீதரஸிகா ஸ்கந்த உத்ஸாஹகரி
ஹரிநேத்ரஸமுத்பவா ஸ்வாமி மோஹினி
ஸ்வாமினி ஸ்வாமி அத்ரி நிலயா
க்ஷிப்ரஸித்திப்ரதா அம்ருதேஸ்வரி
அபார கருணா இஷ்டார்த்த தாயினி
உமாப்ரியா உமாஸுதப்ரியா
க்ருபாபூர்ணா க்ருத்திகா தனயப்ரியா
குஹ்யா குஹப்ரியா குஹ இஷ்டா
குஹஸ்ரீ குஹஉத்ஸுக சின்மயி
ஜயகரி ஞானதாத்ரி ஸர்வ அர்த்ததாத்ரி
ப்ரக்ருதி ஷஷ்டி அம்சா பரமேஸ்வரி பரதேவதா.



குமார சஷ்டி!



ப்பசி அமாவாசையை அடுத்த பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதிவரை ஆறுநாட்கள் தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். அதுபோல கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி திதியை குமார சஷ்டி, சுப்ரமணிய சஷ்டி என்று ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகளில் கொண்டாடுவார்கள்.
பிள்ளைப்பேறு வேண்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதமிருந்து பூஜை செய்து, ஒரு பிரம்மச்சாரிக்கு உணவளித்து வேட்டியை தானமாகத் தருவர்.
இதனை சஷ்டி தேவி வழிபாடு என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான கௌமாரியின் இன்னொரு பெயரே சஷ்டி தேவி. சிவனின் சக்தி பராசக்தி என்பதுபோல, குமரனின் சக்தி சஷ்டி தேவி.
குஜராத்தில் புகழ் பெற்ற ஆதிஅம்பாஜி கோவிலில் சஷ்டி தேவியைக் காணலாம். வியாசரின் பிரம்ம வைவர்த்த புராணமும், தேவி பாகவதமும் சஷ்டி தேவி பற்றியும், உபாசனைப் பலன்கள் பற்றியும் கூறுகின்றன.
பிரம்ம வைவர்த்த புராணத்தின் பிரகிருதி காண்டம், முதல் அத்தியாயம் (79-86 துதிகள்) சஷ்டி தேவியைப் பற்றி சுருக்கமாக விவரிக்கும்.
"ப்ரதான அம்சரூபா யா தேவஸேனா ச
நாரத மாத்ருகா ஸா பூஜ்யதமா
   ஸாச ஷஷ்டி ப்ரகீர்த்திதா ஸிசூனாம்
ப்ரதிவிஸ்வம் து ப்ரதி பாலன காரணி'
என்னும் சுலோகம், "பிரகிருதி தேவியின் பிரதான அம்சம், சஷ்டி தேவி என்கிற தேவசேனை; அவள் உலகத்திலிருக்கும் குழந்தைகளைக் காப்பவள்' என்று கூறுகிறது.
"தபஸ்வினி விஷ்ணுபக்தா
கார்த்திகேயஸ்ச காமினி
ஷஷ்ட அம்சரூபாச ப்ரக்ருதே:
தேன ஷஷ்டி ப்ரகீர்த்திதா.'
அவள் தவம் செய்பவள்; விஷ்ணுபக்தை; கார்த்திகேயன் மனைவி; பிரகிருதியின் ஆறாவது அம்சமானதால் சஷ்டி என்று பெயர்.
"புத்ர பௌத்ர தாத்ரி யா
தாத்ரி ச ஜகதாம் ஸதா
ஸுந்தரி யுவதி ரம்யா
ஸததம் பர்துரந்தி கே.'
மகன், பேரன் ஆகியோரை அளிப்பவள்;
ஜகத்தைக் காப்பவள்; அழகானவள்; யுவதியானவள்.
"பூஜா யா ஸுதிகாகாரே
பரஷஷ்டிதினே சிஸோ:
ஏக வம்சதிதமே சைவ
பூஜா கல்யாண ஹேதுகி.'
அவளை பிரசவ அறையில் ஆறாவது நாள், 21-ஆவது நாள் போற்றினால் மங்களமே நிகழும்.

"ஸஸ்வத் நியமிதா ச ஏஷா
நித்யா காம்யா அபி அத: பரா
மாத்ரு ரூபா தயாரூபா
ஸஸ்வத் ரக்ஷணகாரிணி
ஜலே ஸ்தலே ச அந்தரிக்ஷே
சிசூனாம் ஸ்வப்னகோசரா'
அவள் அன்னையின் வடிவமாய்; தயை, கருணையின் வடிவமாய்; நித்யமாய்- சாஸ்வதமாய் இருந்து, நிலம், நீர், ஆகாயம், கனவு போன்றவற்றிலெல்லாம் குழந்தையை எப்போதும் காக்கிறாள். ஆக, அவள் துதிப்பவர்களை- கர்ப்பத்திலிருந்தே குழந்தையைக் காப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மகனையும் மகளையும், பேரனையும் பேத்தியையும் அளித்து எப்போதும் காக்கிறாள்.
ஸ்ரீதேவி பாகவதத்தின் 9-ஆவது ஸ்கந்தம், 46-ஆவது அத்தியாயமானது,  சஷ்டி தேவி உபாக்யானம் என்று தேவசேனை (சஷ்டிதேவி) மகத்துவம் கூறும். (72 சுலோகங்கள்).
"ஷஷ்ட அம்சா ப்ரக்ருதே யா ச
ஸச ஷஷ்டி ப்ரகீர்த்திகா
பாலகானாம் அதிஷ்டாத்ரி
விஷ்ணுமாயா பாலதா.'  (4)
"மாத்ருகாஸுச விக்யாதா
தேவ ஸேனாபிதா சயா
ப்ராண அதிக ப்ரியா ஸாத்வி
ஸ்கந்த பார்யா ச ஸுவ்ரதா.'  (5)
"ஆயு: ப்ரதாச பாலானாம்
தாத்ரி ரக்ஷண காரிணி
ஸததம் சிசுபார்ஸ்வஸ்தா
யோகேன ஸித்த யோகினி.' (6)
சஷ்டி தேவி விஷ்ணுவின் மாயையாக உதித்தவள். குழந்தைகளைக் காப்பவள். சஷ்டி தேவியே தேவசேனை என்று மதிக்கப்படுபவள். உயிரைவிட நேசிப்பவள். கந்தனின் மனைவி. அவள் ஒரு யோகினி; குழந்தை அருகில் செவிலித் தாய்போல இருந்து ரட்சிப்பவள்.


குமார சஷ்டி அன்று சஷ்டி தேவியைப் போற்றுவோம்.




வியாழன், 24 டிசம்பர், 2015

சேந்தனார் வரலாறு!



‘திருவாதிரையில் ஒரு வாய்க்களி’ என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும். திருவாதிரை தினத்தில் களிக்கும் தனி இடம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அத்தகைய சிறப்பான இடத்தை ‘களி’ பிடித்ததற்கான கதையை காணலாம்.

சேந்தனார் வரலாறு!

சிதம்பரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். சேந்தனாரும், அவரது மனைவியும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கினர். தினமும் உணவு உட்கொள்ளும் முன்பாக சிவதொண்டர்
 களுக்கு உணவிட்ட பின்னரே அவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை உணர்ந்திருந்தனர் இருவரும். தவிர இயல்பாகவே, அந்த தம்பதியரிடம் ஈகை குணம் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் பட்டினத்தார் அனைத்தையும் துறந்து துறவு வாழ்வுக்கு திரும்பி விட்டார். இதனால் அவரது சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார் சேந்தனார். ஆனால் தனக்கென்று எதுவும் எடுத்துக் கொள்ள வில்லை. காலம் கழிக்க வேண்டுமே என்ன செய்வது?. விறகு வெட்டி அதனை விற்பனை செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தினர்
  சேந்தனார் தம்பதியர்.

களி சமைத்தனர்

அந்த ஏழ்மை நிலையிலும் சிவ தொண்டர்
களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நற்குணம் பெற்றவர்களாக அவர்கள் திகழ்ந்தனர். ஒருநாள் கடுமையான மழையின் காரணமாக சேந்தனார், விற்பனைக்காக கொண்டு சென்ற விறகுகள் ஒன்று கூட விற்பனையாகவில்லை. விறகுகளை விற்றால்தானே காய்கறி வாங்கி வீட்டில் சமையல் செய்ய இயலும்; சிவதொண்டர்களுக்கு உணவளிக்க முடியும் என்ற கவலையுடன் வீடு திரும்பினார் சேந்தனார்.

ஆனால் அவரது மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி அதில் சுவையான களி சமைத்தார். பின்னர் தாங்கள் சமைத்த உணவுடன் சிவதொண்டர் யாராவது வருவார்களா? என்று காத்திருக்க தொடங்கினர். சேந்தனாருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. ‘இந்த மழைக்குள் யார் வந்து உணவு கேட்கப்போகிறார்கள்?, அப்படியே உணவுக்காக ஏதாவது ஒரு அடியார் வந்தாலும் கூட, அவருக்கு இந்த களி பிடிக்குமா? அவர்கள் இதனை சாப்பிடுவார்களா? என்ற மனக் கவலை தொற்றிக்கொண்டது. இதே மனநிலையுடன் தம்பதியர் சிறிது நேரம் காத்திருக்க தொடங்கினர்.

சுவை மிகுந்த களி

அப்போது ஒரு சிவ தொண்டர், சேந்தனாரின் வீட்டு வாசலில் மழைக்காக ஒதுங்கினார். பின்னர் அந்த அடியார், சேந்தனாரிடம், ‘ஐயா! உங்கள் வீட்டில் உண்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா? எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது’ என்று கேட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சேந்தனார், அந்த அடியாரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மனைவியிடம் களியை எடுத்து பரிமாறும்படி கூறினார்.

களியை சாப்பிட்ட அடியார் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டார். ‘அருமையான சுவை! இதே போல் சுவையுடன் நான் எந்த உணவும் சாப்பிட்டதில்லை. இந்த களி, அமிர்தத்தையும் மிஞ்சிடும் சுவையில் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது’ என்று கூறினார். இதனை கேட்டதும் மனவருத்தத்தில் இருந்த சேந்தனாருக்கும், அவரது மனைவிக்கும் ஆனந்தம் தாளவில்லை. அந்த அடியார் மேலும் பேசத் தொடங்கினார். ‘நீங்கள் சமைத்துள்ள இந்த களி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் இருந்தால் கொடுங்கள். நான் அடுத்த வேளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.

மூலவர் திருமேனி மேல்...

‘சமைத்ததே கொஞ்சம்தான். நாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வது’ என்று சேந்தனார் எண்ணவில்லை. அடியாரின் ஆனந்தமே முக்கியம் என்று நினைத்து இருந்த அனைத்து களியையும் எடுத்து கொடுக்கும்படி மனைவியிடம் கூறினார். கணவரின் சொல்படியே மீதமிருந்த களியை எடுத்து அடியாரிடம் கொடுத்து விட்டு அன்றைய தினம் பட்டினிக் கிடந்தனர் தம்பதியர்.

மறுதினம் காலை வழக்கம் போல், தில்லை நடராஜப் பெருமான் கோவில் சன்னிதியை திறக்க வந்த அர்ச்சகருக்கு, அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்! நடராஜரின் வாயில் களி ஒட்டிக் கொண்டிருந்தது. கருவறையில் கொஞ்சம் சிதறியும் கிடந்தது. ‘யார் கருவறைக்குள் புகுந்தது. களியை யார் நடராஜரின் வாயில் வைத்தது’ என்று தெரியாமல் பதற்றம் அடைந்தார். இது பற்றி ஊர் முழுவதும் தெரியவந்தது. பின்னர் இந்த பிரச்சினையை அரசரிடம் கொண்டு சென்றனர்.

அவர்கள் கூறியதை கேட்ட அரசருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை, மாறாக ஆச்சரியம் ஏற்பட்டது. ஏனெனில் முன்தினம் இரவு அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நீ தினமும் எனக்கு படைக்கும் உணவை விட, இன்று சேந்தனார் என்ற தொண்டன் கொடுத்த களி, அமிர்தம் போல் இருந்தது’ என்று கூறியது அரசனுக்கு நினைவுக்கு வந்தது. அதுவரை ஏதோ கனவு என்று நினைத்திருந்த அரசன் இப்போது, அது நிஜம் என்பதை உணர்ந்து கொண்டான். உடனடியாக சேந்தனார்
       யார் என்றும், அவரை தேடி கண்டுபிடிக்கும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான்.

ராஜாங்க பணியாளர்கள், சேந்தனாரை தேடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சிதம்பர நடராஜ பெருமானுக்கு தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் அரசரும், மக்களும் கலந்துகொண்டனர். சேந்தனாரும் அந்த விழாவில் கலந்துகொண்டிருந்தார் மக்களோடு மக்களாக. ஆனால் அவர்தான் சேந்தனார் என்பது யாருக்கும் தெரியாது. அப்போது முன்தினம் பெய்திருந்த மழையின் காரணமாக தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து கொண்டது.

பல்லாண்டு பாடினார்

அனைவருக்கும் இது அபசகுனமாக தென்பட்டது. ஆனால் இறைவன் நடத்தும் விளையாட்டு யாருக்கும் புரியாது. எவ்வளவு முயன்றும் தேர் சக்கரத்தை மண்ணில் இருந்து விடுவிக்க இயலவில்லை. யானைகள் முட்டித் தள்ளிய போதும், தேரானது கடுகளவும் முன்னேறவில்லை. இதனால் அரசரும், மக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அந்த நேரத்தில், ‘சேந்தனாரே! நீர்  பல்லாண்டு பாடுக ’ என்று ஒரு அசரீரி கேட்டது. அது இறைவனின் ஒலி என்று அனைவரும் அறிந்து கொண்டனர். அந்த குரலைக் கேட்ட சேந்தனாரோ, ‘இறைவா! அடியேன் என்ன பாடுவது? எனக்கு பதிகம் பாடத் தெரியாதே!’ என்ற பொருளில் தன்னை அறியாமலே பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
 
மேலும், ‘மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல’ என்று தொடங்கி, ‘பல்லாண்டு கூறுதுமே’ என்று பதிமூன்று பாடல்களை பாடி முடித்தார். அந்த பாடல்களை கேட்டு மனமகிழ்ந்த இறைவன், மண்ணில் புதைந்திருந்த தேர் சக்கரத்தை விடுவித்தார். தேர் நகரத் தொடங்கியது; வெகு சுலபமாக நகரத் தொடங்கியது. தேரை பஞ்சு மூட்டையை இழுத்துச் செல்வது போல் இழுத்துச் சென்றனர் பக்தர்கள்.

ஈசன் திருவிளையாடல்

அதுவரை நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், சேந்தனாரிடம் நேராக சென்று, ‘தங்கள் வீட்டில் விருந்துண்டது அந்த ஈசன்தான். என் கனவில் தோன்றிய இறைவன், நீங்கள் கொடுத்த களி அமிர்தத்தை விட சுவையாக இருந்ததாக கூறினார். நீங்கள் தான் சேந்தனார் என்பதையும் இறைவன் எனக்கு காண்பித்து கொடுத்து விட்டார்’ என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இறைவனே தன் வீட்டிற்கு வந்து களியை உண்டது கேட்டு சேந்தனாரின் உள்ளம் பூரித்துப் போய் இருந்தது.

சேந்தனாரின் வீட்டிற்கு சிவதொண்டராக சென்று சிவபெருமான் முதன் முதலில் களி சாப்பிட்ட தினம் ‘திருவாதிரை திருநாள்’ ஆகும். ஆகையால் தான் திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
 
 
 

திருவாதிரை களி




வாணலியில் பச்சரிசியை ஒரு தவாவில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். ஒரு ஆளாக்கு அரிசிக்கு இரண்டரை தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும். கொதித்த தண்ணீரில் அரைத்து வைத்திருந்த பச்சரிசிமாவை சிறிது சிறிதாக போட்டு கிளர வேண்டும்கட்டி ஆகாத படி கிளறவும். வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும். பாகு பதத்திற்கு வரும் வரை  கிளறவும்.

பிறகு அந்த வெல்லம் பாகுவை எடுத்து கொதித்த கொண்டு இருக்கும் மாவில் ஊற்றி கிளற  வேண்டும். வாணலியில் 10 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போட்டு வதக்கி அதை, செய்து வைத்திருந்த வெல்ல மாவில் போட்டு கிளறினால் திருவாதிரை களி ரெடி.

திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. விரதம் இருக்க முடியாதவர்கள் ஈசனை நினைத்து, ஈசனுக்கு பிடித்த திருவாதிரை களி படைத்து அதை பிரசாதமாக சாப்பிடலாம். அருகில் உள்ள சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும். ஆருத்திரா நடனத்தையும் காண வேண்டும்.

ஈசன் திருவருளால் பஞ்ச பூதங்களால்எந்த ஆபத்தும் வராது. பூமியோகம் ஏற்படும். ஆடல் வல்லான் அருளால்  சகல நன்மைகளும் உண்டாகும்.
 
 
 
 

ஆருத்ரா தரிசனம்!

 
 
மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜரின், ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப்பெரும் பேறு ஆகும்.
 
சிறப்பு மிக்க திருவாதிரை நட்சத்திரம், சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்.

ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன்
     மடங்காகும். அதேபோன்றுதான் சிறப்பான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பன்மடங்கு பலன்களையும், வளங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும் வழிபாடாக திகழ்கிறது.
 
நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமைந்தது. அதன் பொருட்டே கோவில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.
 
சிதம்பரம் ஈசனின் பஞ்சபூத தலங்களில் ஆகாய க்ஷேத்திரம்.  மாணிக்க வாசகர் திருவாசகத்தை அருளச் செய்த சமயத்தில் அதனை எழுதுதுருவில் மாற்ற வேண்டுமென பலர் பிரார்த்தித்தனராம். என்னே விந்தை, மறுநாள் காலையில் தில்லை நடராஜன் சன்னதியில் அவன் காலடியில் திருவாசகம் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் இருந்ததாம்.
 
 
இவ்வாறாக அம்பல கூத்தன் திருவாசகத்திற்கு படி எடுக்கும் பெருமானாக அமைந்தது ஒரு மார்கழி மாத திருவாதிரை தினமாம். இந்த நிகழ்ச்சியின் காரணமாக இன்றும் திருவாதிரை தினத்தில் சிதம்பரத்தில் மாணிக்க வாசகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு இறைவன் முன்னால் திருவாசகம் ஓதப்படுகிறதாம்.
 
 நந்தனார் நடராஜனடி சேர்ந்ததும் திருவாதிரைத் திருநாள் தான்.

சிதம்பரத்தில் நடராஜபிரானுக்கு வருடத்தில் ஆறு முறை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெருகிறது. அந்த ஆறுநாட்களில் ஒரு நாள் தான் ஆருத்திரா தரிசனம் நடக்கும் திருவாதிரைக்கு முந்தைய தின இரவு.
 
இந்த இரவில் ஆயிரக்கால் மண்டபத்தில் இந்த அபிஷேகம் நடைபெறுவதை காண கண் கோடி வேண்டும். அபிஷேகப் பிரியனுக்கு பால், தேன், இளநீர் எல்லாம் குடம் குடமாக அபிஷேகிக்கப்படும். பின்னர் விடியலில் ஆருத்திரா தரிசன வைபவமாக நாதஸ்வர இசைக்கேற்ப அசைந்தாடி வரும் ஆனந்த் கூத்தனைப் பார்க்க சலிக்காது.
 
 
களி என்றால் ஆனந்தம் என்று பொருள். ஈசனின் இயல்பே ஆனந்தம் தானே?. அரிசியில் வெல்லத்தை குழைத்து களி செய்வதுபோல் அறிவில் அருளைக் குழைத்து பெருவதே ஆண்டவன். ஏழு காய்கள், பயறு வகைகள் சேர்த்து வைக்கும் கதம்ப கூட்டானது ஆண்டவன் அளித்துள்ள இயற்கை வளங்களை திரட்டி அவனுக்கு அர்ப்பணிப்பதாகும்.
 
 
இந்த விழா தமிழ் நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் கொண்டாடப்படுகிறது. நமது கோலாட்டம், கும்மி போல கேரளத்து பெண்கள் இந்நன்னாளில் "ஸ்வாஞ்சலிட்டு" என்பதான ஒரு நடனம் ஆடுகிறார்கள். இந்த நடனம் ஆடாவிடில் பாவம் என்று எண்ணும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
 
 
 

 
 
இராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோச மங்கையில் முழுவதும் மரகதக் கல்லால் ஆன நடராஜர். திருவாதிரையன்று மட்டுமே இவரது சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும். திருவாதிரை காலையில் மீண்டும் சந்தனம் பூசப்பட்டுவிடும்.