சனி, 18 ஜூலை, 2015

திருப்பாற்கடல் மலர்ந்த ஐஸ்வர்ய மகாலட்சுமி!

லட்சுமி என்பதற்குப் பிரியாது, பொருத்தி இருப்பவள் என்பது பொருள். அவள் அனேக வடிவங்களில் உலகில் நிறைந்திருக்கிறாள். அவளை அஷ்ட லட்சுமிகளாகவும், ஷோடஸ லட்சுமிகளாகவும் கொண்டாடுகிறோம்.

செல்வமானது, வீடு, மாடு, மனை, படிப்பு, வீரம் என்ற பல நிலைகளில் இருந்தாலும், அது பொன்னாபரணங்களாலும், பொற்கட்டிகளாலும் இருக்கும்போதே முதன்மைச் சிறப்பைப் பெறுகிறது.

அதனால் மகாலட்சுமியை சுவர்ணலட்சுமி என்று கொண்டாடுகிறோம். பெரிய கூட்டத்தில் ஒருவர் தான் அணிந்திருக்கும்  பொன்னாபரணங்களுக்கு ஏற்பவே கூடுதல் மதிப்பைப் பெறுகிறார். செல்வங்களை அருளி சகல சௌபாக்கியங்களுடன் வாழவைக்கும் மகாலட்சுமியை சௌபாக்ய லட்சுமி என்று அழைக்கிறோம். சகல செல்வங்களையும்  தந்து அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் செல்வத் திருமகளை ஐஸ்வர்ய மகாலட்சுமி என்று போற்றுகிறோம்.


மகாலட்சுமியைத் திருமாலின் தேவியாகப் போற்றி வழிபடுவதே பொதுவான நிலையாகும். அவளை பாற்கடலில் இருந்து தோன்றிய கன்னிப் பெண்ணாக, மணமாலை ஏந்தி வரும் சுயம்வர லட்சுமியாக வழிபடுவது ஒருமுறையாகும். இவளைக் கன்யாலட்சுமி என்றும், சுயம்வர லட்சுமி என்றும் அழைக்கின்றனர். பாரத தேச சமய வழிபாட்டில் கன்னிப் பெண்கள் தனியிடம் பெறுகின்றனர். பெண் தெய்வங்களைக் கன்னிப் பெண் வடிவில் வைத்து வழிபட்டால் அதிகமான நன்மைகளைப் பெறலாம் என்று நம்புகின்றனர்.

செல்வத் திருமகளான மகாலட்சுமியைப் பாற்கடலில் இருந்து பிறந்து வரும் கன்னியாக வழிபடுவதே இந்த ஐஸ்வர்ய லட்சுமி வழிபாடாகும். இவளுடன் தோன்றிய கற்பகமரம், காமதேனு, உச்சைச்ரவஸ் என்னும் குதிரை, மணமாலை ஏந்திய அப்சரஸ், காவல் தேவியான விந்தியாவாசினி என்னும் துர்க்கை, இந்திரன் ஆகியோருடன் இவள் வடிவத்தையும் ஓவியமாக வரைந்து வழிபடுகின்றனர். இவள் திருமாலைக் கணவனாக வரித்து அவருக்கு மாலையிடும் கருத்தில் இருக்கின்றாள்.

பாற்கடலில் பிறந்த ஐஸ்வர்யங்களுடன் வீற்றிருப்பவளான  மகாலட்சுமியின் அருள் எல்லோருக்கும் கிடைத்து எல்லோரும் இன்பமுடன் வாழ வேண்டிப் பிரார்த்தித்து, பொதுவாக மகாலட்சுமி பூஜை நடைபெறுவதுண்டு. கார்த்திகை மாதத்து பஞ்சமிக்கு ஸ்ரீபஞ்சமி என்பது பெயர். ஐஸ்வர்யம் என்பதற்கு மேலான செல்வம் என்பது பொருள்.

ஒரு சமயம் சாகா நிலையைத் தரும் அமிர்தத்தைப் பெறுவதற்காக அசுரர்களும் தேவர்களும் கூடி  பாற்கடலைக்  கடைந்தபோது எட்டுக் கிளைகளுடன் கூடிய கற்பகவிருட்சம் தோன்றியது. அதில் காமவல்லி என்னும் கொடி படர்ந்திருந்தது. கிளைகளில் ஏராளமான பழங்களும், வண்ண வண்ணப் பூக்களும் இருந்தன.

அது தன் நிழலில் இருந்து கேட்பவர்களுக்குக் கேட்டதைக் கொடுக்கும் தெய்வீக மரமாக இருந்தது. அதற்குப் பிறகு ஐராவதம் என்னும் வெண்மை நிறம் கொண்ட யானை தோன்றியது. அதன் பிறகு காமதேனு என்னும் தெய்வீகப் பசு தோன்றியது. அதை அடுத்து வண்ணப் பட்டாடைகள் அணிந்து பலவிதமான ஆபரணங்களைப் பூண்ட 60,000 தேவமங்கையர் தோன்றினர். அவர்களை அடுத்து கௌஸ்துப மணி, பஞ்சவிருட்சங்கள் எனப் பல பொருட்கள் தோன்றின. அவற்றுடன் சந்திரன் தோன்றினான்.

இறுதியாக வண்ணப்பட்டாடை அணிந்து அனேக நவரத்தினங்கள் பதித்த அனேக அணிமணிகளைப் பூண்டவளாகப் பேரழகுப் பாவையாக மகாலட்சுமி தோன்றினாள். அவள் மணமாலையுடன் காணப்பட்டாள். அவளுக்கு அடுத்தபடியாக தேவவைத்தியனான தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டான். பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பொருட்களை தேவர்கள் எடுத்துக் கொண்டனர்.

மகாலட்சுமி திருமாலுக்கு மாலையிட்டு அவருக்குத் தேவியானாள். அமிர்தத்திற்குத் தேவர்களும் அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் மோகினி ஆரவாரத்துடன் தோன்றி, அனைவரையும் மாயையால் மயக்கி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை அளித்து விட்டு எஞ்சியதை பாதுகாப்பான இடத்தில் வைத்தார். பிறகு திருமகளுடன் தனது வைகுண்டத்தை அடைந்தார்.

மகாலட்சுமியுடன் பாற்கடலில் பிறந்த அனைத்துப் பொருட்களையும் எழுதி வைத்து வழிபட்டால் சகல செல்வங்களையும் அடைந்து சுகமாக வாழலாம் என்று நம்பப்படுகிறது. வெண்பட்டுத் துணியில் சிவப்பு அல்லது நீலவண்ணத்தில் இந்த உருவத்தை எழுதி வழிபடுவது வழக்கம். பாற்கடலில் பிறந்த அனைத்துப் பொருட்களையும் தீட்டி வழிபடுவது இயலாது என்பதால், சிறந்ததாகவும், தனிச்சிறப்பு கொண்டதாகவும் இருக்கும் சிலவற்றை மட்டும் வரைந்து வழிபடுகிறோம்.

இங்கேயுள்ள படத்தில் நடுவில் ஐராவதம் என்னும் யானை மீது மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். அவளது மேற்கரங்களில் தாமரை மலர்கள் இருக்க, முன்கரங்களில் அபய முத்திரையும், அமிர்த கலசத்தையும் தாங்கியுள்ளாள். அவளுக்கு மேலே கற்பக மரம் நிழல் பரப்புகிறது.

லட்சுமியின் வலது தோளுக்கு மேல் உச்சைச்ரவஸ் என்னும் குதிரையும், இடது தோளுக்கு மேல் காமதேனு என்னும் பெண் முகம் கொண்ட பசுவும் உள்ளன. தேவியின் வலப்புறம் விந்தியாவாசினி என்னும் துர்க்காதேவி வில்லேந்தி நிற்கிறாள். அவளுக்கு அருகில் சந்திரதேவன் நிற்கின்றான். தேவியின் இடதுபுறம் மணமாலையைத் தாங்கியவாறு அப்சரப் பெண் நிற்கிறாள். (இங்குள்ள மகாலட்சுமி திருமணமாகாதவள். அப்போது தான் பாற்கடலில் பிறந்தவள். அவள் தனக்கென மணாளனைக் காணக் காத்திருப்பவள். அதனால் கன்யாலட்சுமி என்று போற்றப்படுகிறாள். ஆகவே இங்கு இவளைக் கன்னிப்பெண் தெய்வமாகவே கொண்டாடுகிறோம். அவளை அடுத்து தேவ வைத்தியனான தன்வந்திரி சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி ஆகியவற்றுடன் நிற்கின்றார்.

வேண்டியதை விரும்பியவாறு தரும் காமதேனு, தனது நிழலில் இருப்பவர் விரும்பியதை அளிக்கும் கற்பகமரம், எங்கும் எளிதில் செல்ல உதவிடும் உச்சைச்ரவஸ், காவல் தரும் விந்தியாவாசினி, மன அமைதியைத் தரும் சந்திரன், அழகும் இளமையும் நல்கும் அப்சரஸ், நோய் நொடி அற்ற வாழ்வைத் தரும் தன்வந்திரி ஆகியோர் புடைசூழ சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வை அளிக்கும் தேவியாக வரதான மங்கையாக மகாலட்சுமி வீற்றிருக்கும்படியாக அமைந்ததே இதன் அமைப்பாகும்.

ஐஸ்வர்யங்களுடன் வீற்றிருப்பதால், இந்த லட்சுமியின் வடிவம் ஐஸ்வர்ய லட்சுமி என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய லட்சுமியை

 வாழ்வில் வளமான செல்வநலம் பெற வேண்டி ஆயிரம் வில்வ தலங்கள், தாமரை மலர் களைக் கொண்டு  வழிபடுபவர் சகல செல்வங்களையும் பெற்று இனிது வாழ்வர்..  ஐச்வர்ய மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் இன்பமான வாழ்வைப் பெறு வோம்.
 
 

ஜென்ம நட்சத்திர கிழமை பலன்!

பிறந்தநாளை தேதி அடிப்படையில் கொண்டாடுவது வெளிநாட்டு மரபு.
நாம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

அப்போது,  ஒவ்வொரு ஆண்டும்  கிழமைகள் மாறுபடும்.  அவ்வாறு மாறுபடும் கிழமைகளுக்கு ஏற்ப, அந்த ஆண்டிற்குரிய பலன்கள் அமையும் என்கிறது முகூர்த்த சிந்தாமணி என்ற நூல்.

ஞாயிறு - அவ்வப்போது நீண்ட தூர பயணம்.

திங்கள் -  விருந்து சாப்பாடு கிடைத்தல்

செவ்வாய் - சுறுசுறுப்பு குறைதல்

புதன் - கல்வி அபிவிருத்தி

வியாழன் -  நல்ல ஆடைகள் கிடைத்தல்

வெள்ளி - பெண்களின் ஆதரவு

சனி - தைரியக்குறைவு

சனிக்கிழமை ஜென்மநட்சத்திரம் வந்தால், சனி ஜென்ம நட்சத்திர சாந்தி செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரலாம்.
 
 

உங்கள் லக்னத்திற்குரிய தெய்வம் தெரியுமா?

 

ஒருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் ல/ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசிக்கட்டம் தான் லக்னம். உதாரணத்துக்கு இந்த படத்தைப் பாருங்கள். ல/ என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டத்தில் புதன் இருக்கிறது. அதாவது, கன்னியில் புதன் உள்ளது. இவர் கன்னி லக்னக்காரர். இவருக்குரிய தெய்வங்கள் பெருமாள், ராமன், கிருஷ்ணர்.

லக்னத்தில்

சூரியன் இருந்தால், சூரிய நாராயணர்,

சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் மகாலட்சுமி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர்,

 செவ்வாய் இருந்தால் முருகன், லட்சுமி நரசிம்மர், துர்க்கை,

புதன்  இருந்தால் பெருமாள், ராமன், கிருஷ்ணர்.

குரு இருந்தால் சிவன், தட்சிணாமூர்த்தி, பெருமாள்,

சுக்ரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர்,

சனி இருந்தால் வெங்கடாஜலபதி, சாஸ்தா (ஐயப்பன்), யோக நரசிம்மர், ஆஞ்சநேயர்,

ராகு இருந்தால் காளி 

கேது இருந்தால் விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்களைத் தரிசிக்க வேண்டும்.

இந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களைத் தினமும் ஜபிப்பது பலனை அதிகரிக்கும்.

 

 

27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கிரகங்கள்


 அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கார்த்திகை - சூரியன்
ரோகிணி - சந்திரன்

மிருகசீரிஷம் - செவ்வாய்
திருவாதிரை - ராகு
புனர்பூசம் - குரு (வியாழன்)
பூசம் - சனி

ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
சுவாதி - ராகு
விசாகம் - குரு (வியாழன்)
அனுஷம் - சனி

கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராகு
பூரட்டாதி - குரு (வியாழன்)
உத்திரட்டாதி - சனி

ரேவதி - புதன்



 

27 நட்சத்திரங்களுக்கும் உரிய ஆலயங்கள்


அசுபதி
சனீஸ்வரர், திருநள்ளாறு, காரைக்கால், பாண்டிச்சேரி

பரணி
மகாகாளி, திருவாலங்காடு (அரக்கோணம் அருகில்), வேலூர் மாவட்டம்

கிருத்திகை
ஆதிசேடன், நாகநாதர் கோவில், நாகப்பட்டினம், நாகை மாவட்டம்

ரோகிணி
நாகநாதசுவாமி, திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்டம்

மிருகசீரிஷம்
வனதூர்கா தேவி, கதிராமங்கலம், மயிலாடுதுறை, நாகை மாவட்டம்

திருவாதிரை
சனீஸ்வரர், திருகொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம்

புனர்பூசம்
குருபகவான், ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம்

பூசம்
சனீஸ்வரர், குச்சனுர் (தேனி அருகில்), மதுரை மாவட்டம்

ஆயில்பம்
சனீஸ்வரர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

மகம்
தில்லைக்காளி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்

பூரம்
உத்வாசநாதர் திருமணஞ்சேரி, (மாயவரம்), நாகை மாவட்டம், (வழி குத்தாளம்)

உத்திரம்
வாஞ்சியம்மன், மூலனூர், ஈரோடு மாவட்டம், (கரூர் வழி)

அஸ்தம்
ராஜதுர்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சித்திரை
ராஜதுர்க்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சுவாதி
சனீஸ்வரர், திருவானைக்கால் திருச்சி

விசாகம்
சனீஸ்வரர்,சோழவந்தான், மதுரை மாவட்டம்

அனுஷம்
மூகாம்பிகை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்

கேட்டை
அங்காள பரமேஸ்வரி, பல்லடம், (காங்கேயம் அருகில்) கோவை மாவட்டம்

மூலம்
குரு பகவான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மாவட்டம்

பூராடம்
குருபகவான், திருநாலூர் (பண்ருட்டி அருகில்), கடலூர் மாவட்டம்

உத்திராடம்
தட்சிணாமூர்த்தி, தருமபுரம்(திருநள்ளாரிலிருந்து 2 கி.மீ), காரைக்கால் மாவட்டம்

திருவோணம்
ராஜகாளியம்மன், தெத்துப்பட்டி (திண்டுக்கல் அருகில்), திண்டுக்கல் மாவட்டம்

அவிட்டம்
சனீஸ்வரன் கொடுமுடி (கரூர் வழி ), ஈரோடு மாவட்டம்

சதயம்
சனீஸ்வரன் மலைக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்

பூரட்டாதி
ஆதிசேஷன், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரட்டாதி
தெட்சிணாமூர்த்தி, திருவையாறு, அரியலூர் மாவட்டம்

ரேவதி
சனீஸ்வரர், ஓமாம்புலியூர், கடலூர் மாவட்டம், (சிதம்பரத்திலிருந்து 22 கி.மீ உள்ள காட்டு மன்னார்குடி சென்று அப்பால் 6 கி.மீ செல்லவும்)




 

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்


அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன்
ரோகிணிஸ்ரீ கிருஷ்ணன்
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர்
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன்
மகம் - ஸ்ரீ சூரிய பகவான்
பூரம் - ஸ்ரீ ஆண்டாள்
உத்திரம் - ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி
அஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
அனுசம் - ஸ்ரீ
க்ஷ்மி நாரயணர்.
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர்

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர்
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர்
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

வெள்ளி, 10 ஜூலை, 2015

ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்

 

நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர பாஹிமாம்!

நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர ரக்ஷமாம்!

வேத பாதா ப்ரம்ம ரூபா சிவத்யானா பாஹிமாம்!

துங்க சைலா தேவ தேவா சிவப்பிரியா ரக்ஷமாம்!

விஷ்ணு ரூபா ப்ருத்வி ரூபா நீதி ஈஸ்வர பாஹிமாம்!

வேதா சாரா மந்திர சாரா சாக்ஷாத் காரா ரக்ஷமாம்!

ஸோம சூர்யா அக்னி லோசன நந்திகேஸ்வர பாஹிமாம்!

பாபஹரணா பர்த்திவாசா சகல லோக ரக்ஷமாம்!

சதானந்த சித்ஸ்வரூபா சின்மயேசா பாஹிமாம்!

கைலாஸா கனகரூபா பண்டிதாயா ரக்ஷமாம்!

பிரதோஷ காலா பரமேஸ்வரா பக்தபாலா பாஹிமாம்!

நாடி போதக காலகண்டா கருணாகரா ரக்ஷமாம்!

சகல தோஷா சகல பீடா தஹண நாமா பாஹிமாம்!

சர்வ சத்ரு சர்வ ரோக நிவாரணா ரக்ஷமாம்!

சித்த புருஷா சித்த நாயகா சேவிதாதி பாஹிமாம்!

நடன ரூபா நாட்டியப் பிரியா ம்ருதங்க வாத்யா ரக்ஷமாம்!




 

அபூர்வ பலன்களை அள்ளித் தரும் மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

 
 




 அபூர்வ பலன்களை அள்ளித் தரும் மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

மஹாலக்ஷ்மி, பல ரூபங்களில் அருள் பாலிக்கக்கூடியவள். மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகங்களையும், சௌகரியங்களையும் வழங்கவல்லவள். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் லக்ஷ்மி துதி, அனைத்து ரூப லக்ஷ்மிகளையும் போற்றுவது. இந்தத் துதியினை வெள்ளிக்கிழமைகளில் சொல்லிவர, மனோதிடமும், உழைக்கும் ஆர்வமும் கூடி, வாய்ப்புகள் பெருகி, வருமானமும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, மழலை பாக்கியம் முதலான அனைத்து வளங்களையும் பெருக்கும். குறிப்பாக வரலக்ஷ்மி விரத நாளன்று நெய் விளக்கேற்றி வைத்து இத்துதியைப் பலமுறை படித்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற வாழ்த்துகிறோம்.


சுத்த லக்ஷ்ம்யை புத்தி லக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே ஸௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!



வசோ லக்ஷ்ம்யை காவ்ய லக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே ஸ்ருங்கார லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


தனலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


சாந்தி லக்ஷ்ம்யை தாந்தி லக்ஷ்ம்யை க்ஷாந்திலக்ஷ்ம்யை நமோ நம!
நமோ அஸ்த்வாத்மாநந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸௌபாக்யலக்ஷ்ம்யை நமோ நம!
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம!
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


த்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே விஞ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்யலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே ஸ்த்வௌதார்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


ஜயலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


ஸபாலலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


க்ஷேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம!
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!



அன்னலக்ஷ்ம்யை மனோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம!
விஷ்ணுவக்ஷோ பூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


புண்யலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை ச்ரத்தா லக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


பூலக்ஷ்ம்யை புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே த்ரையோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம!
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே வைகுண்டலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


நித்ய லக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


ப்ரக்ருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம!
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!


நமச்சக்ரராஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம!
நமோ ப்ரம்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம!