செவ்வாய், 3 டிசம்பர், 2019

ம்ருத ஸஞ்ஜீவன கவசம்!

ம்ருத ஸஞ்ஜீவன கவசம்!

 

தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்!

தினமும் காலையில் எழுந்ததும் இந்த கவசத்தை பாராயணம் செய்பவர்கள் இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
இப்படி பலமுறை பாராயணம் செய்பவர்கள், எந்த வியாதியும் இன்றி மார்க்கண்டேயன் போல வாழ்வதோடு ‘அணிமா சித்தி’ போன்ற அஷ்ட சித்திகளையும் அடைவார்கள். 


 

தேவர்களுக்கு கிடைப்பதற்குக்கூட அரிதான இந்த கவசத்தைப் படித்தாலோ, பிறர் சொல்லக் கேட்டாலோ அல்லது பிறருக்கு எடுத்துரைத்தாலோ நீண்ட ஆயுள் நிச்சயம்!


மரணத்தை வென்ற ‘ம்ருத்யுஞ்ஜெயர்’ சிவபெருமானின் இந்த கவசமானது இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்கச் செய்யும் வல்லமையுடையது.


Sri கணேசாய நம
ஏவமாராத்ய கெளரீஷம் தேவம்
ம்ருத்யும்ஜயேஷ்வரம்!
ம்ருதஸஞ்ஜீவனம் நாம்னா கவசம் ப்ரஜபேத் ஸதா!

ஸாராத் ஸாரதரம் புண்யம் குஹ்யதரம்
சுபம்!
மஹாதேவஸ்ய கவசம் ம்ருதஸஞ்ஜீவ நாமகம்!

ஸமாஹிதமனோபூத்வா ச்ருணுஷ்வ கவசம் சுபம்!
ஊருத்வாஏதது திவ்யகவசம் ரஹஸ்யம் குரு
ஸர்வதா!

வராபய கரோயஜ்வா ஸர்வதே வ நிஷேவித:!
ம்ருத்யும்ஜயோ மஹாதேவ: ப்ராச்யாம் மாம் பாது ஸர்வதா!

ததான: சக்திம் அபயாம் த்ரிமுக: ஷட்புஜ: ப்ரபு:!
ஸதாசிவ: அக்னிரூபி மாம் ஆக்னேய்யாம் பாது ஸர்வதா!


அஷ்டாதச புஜோ பேதோ தண்டாபய கரோவிபு:!
யமரூபி மஹாதேவ: தட்சிணஸ்யாம் ஸதா அவது!

கட்கா அபய கரோ தீரோ ரசேஷாகண நிஷேவித:!
ரசேஷா ரூபி மஹாஷோ மாம் நைர்ருத்யாம்
ஸர்வதா அவது!

பாசாபய புஜ: ஸர்வ ரத்னாகர நிஷேவித:!
வருணாத்மா மஹாதேவ: பச்சிம் மே மாம்பாது
ஸதா அவது!

கதாபயஹர: ப்ராணநாயககா: ஸர்வதா கதி:!
வாயவ்யாம் மாருதாத்மா மாம் சங்கர:
பாது ஸர்வதா!

சங்காபய ஹரஸ்தோ மாம் நாயக: பரமேஸ்வர:!
ஸர்வாத்மான்தர திக்பாகே பாதுமாம் சங்கர: ப்ரபு:!

சூலாபயஹர: ஸர்வ வித்யானாம் அதிநாயக:!
ஈசானாத்மா ததா ஈசான்யாம் மாம் பாது
பரமேஸ்வர:!

ஊர்த்வபாகே ப்ருஹ்ரூபி விஷ்வாத்மா அத: ஸதா
அவது!
சிரோ மே சங்கர: பாது லலாடம் சந்திரசேகர:!

ப்ரூமத்யம் ஸர்வலோகேச: த்ரிநேத்ரோ லோசேன
அவது!
ப்ரூயுக்மம் கிரிச: பாது கர்ணே பாது மஹேச்வர!
நாஸிகாம் மே மஹோதேவ ஓஷ்டெள பாது
வ்ருஷத்வஜ:!
ஜிஹ்வாம் மே தட்சிணாமூர்த்தி: தந்தான் மே
கிரிஷோ அவது!

ம்ருத்யும்ஜயோ முகம் பாது கண்டம் மே
நாகபூஷண:!
பினாகி மத்கரோ பாது த்ரிசூலி ஹ்ருதயம் மம!

பஞ்சவக்த்ர: ஸ்தனெள பாது உதரம் ஜகதீஷ்வர:!
நாபிம் பாது விருபாசஷ: பார்ச்வெள மே பார்வதிபதி:!

கடித்வயம் கிரிஷோமே ப்ருஷ்டம் மே ப்ரமதாதி ப:!
குஹ்யம் மஹேஷ்வர: பாது மமோரு பாது பைரவ:!

ஜானுனீ மே ஜகத்தர்த்தா ஜங்கே மே ஜகதாம்பிகா!
பாதெள மே ஸததம் பாது லோகவந்த்ய: ஸ்தாசிவ:!

கிரீச: பாது மே பார்யாம் பவ: பாது ஸீதான் மம
ம்ருத்யும்ஜயோ: மம ஆயுஷ்யம் சித்தம் மே கணநா
யக:!

ஸர்வாங்கே ஹி மே ஸதா பாது காலகால:
ஸதாசிவ:!
யேததுதே கவசம் புண்யம் தேவதானாம்ச துர்லபம்!

ம்ருதஸஞ்ஜீவன நாம்னா மஹாதேவ்யேன
கீர்த்திதம்!
ஸஹஸ்ர ஆவர்தனம் ச அஸ்ய புரச்சரணமீரிதம்!

ய: படேச் ச்ருணுயான் நித்யம் ச்ராவயேத்
ஸீஸமாஹித:!
ஸ கால ம்ருத்யும் நிர்ஜித்ய ஸதா ஆயுஷ்யம்
ஸமஸ்னுதே:!

ஹஸ்தேனவா யதா ஸ்ப்ருஷ்ட்வா ம்ருதம் ஸஞ்ஜீவ
யத்யசெள!
ஆதயோ வ்யாதய: தஸ்ய ந பவந்தி கதாசன:!

காலம்ருத்யுமபி ப்ராப்த அஸெள ஜயதி ஸர்வதா!
அணிமாதி குணை: ஐஸ்வர்யம் லபதே
மானவோத்தம:!

சுத்தாரம்பே படித்வேதது அஷ்டாவிம்சதி வாரகம்!
யுத்தமத்யே ஸ்தித: ஸத்ரு: சத்ய: ஸர்வைர் ந த்ருச்
யதே!

ந ப்ருஹ்மாதினி ச அஸ்த்ராணி சஷயம் குர்வந்தி
தஸ்யவை!
விஜயம் லபதே தேவயுத்த மத்யேபி ஸர்வதா!

ப்ராதருத்தாய ஸததம் ய: படேத் கவசம் சுபம்!
அசஷய்யம் லபதே ஸெளக்யம் இஹ லோகே பரத்ரச!

ஸர்வவ்யாதி விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித:!
அஜராமரணோ பூத்வா ஸதா ஷோடச வார்ஷிக:!

விசரந்தி அகிலானு லோகானு ப்ராப்ய போகாம்ச
துர்லபான்!
தஸ்மாது இதம் மஹாகோப்யம் கவசம் ஸமுதாஹ்ரு தம்!

ம்ருதஸஞ்ஜீவன நாம்னா தேவதைரபி துர்லபம்!
ம்ருதஸஞ்ஜீவன கவசம் ஸம்பூர்ணம்!

 

 

 

திங்கள், 18 நவம்பர், 2019

பத்ரகாளி சபை!

போர், பூகம்பம் சூறாவெளி, வெள்ளம் இவற்றின் அச்சங்களைப் போக்குபவள். காலரூபினி கரியநிறமுள்ளவள். காலரூபத்தில் நியதிக்கு அடங்கி வெளி உருவை அழிக்கும் பிராணசக்தி. தீயவர்களுக்கு அச்சம்தரும் விதமாக வாளும் துண்டித்த தலையும் கரத்தில் தாங்கி இருகைகள் அபயவரதத்துடன். நோய்களைத் தீர்ப்பவள். 

ஸ்ரீசக்ர அஷ்டகாளிகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீமகாகாளி, ஸ்ரீகாளாராத்திரி, ஸ்ரீசர்வமயாமுண்டி, ஸ்ரீசாமுண்டி, ஸ்ரீசரசண்டிகை, ஸ்ரீபைரவி. .

ஸ்ரீதக்ஷிணகாளியின் தாத்பர்யம்- பரந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு கோரைப்பற்கள், கருத்த திருமேனியில் பருத்த தனங்கள், 51 கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட பல கரங்கள் கொண்டு புனையப்பட்ட சிற்றாடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறுகரத்தில் குருதி கொட்டும் அசுரனின் தலையுடன் சடலமாக தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன் இரு கால்களைப் பதித்து விசித்திர தரிசனம்.

இத் தோற்றத்திற்கான அற்புத தத்துவங்கள்- உயிர்கள் அவளிடமே தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவள் மாலையிலுள்ள கபாலங்கள் உணர்த்தும். மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் அவள் என்பதை உடைந்த கரங்கள் கொண்ட உடை அறிவிக்கும். ஆணவத்துடன் மனிதன் செய்யுமற்ப காரியங்களை காலக்கிரமத்தில் அவள் வெட்டி வீழ்த்துகின்றாள் என்பதை வலது மேற்கரத்திலுள்ள வாள் தெரிவிக்கும். இயற்கை நடை முறைகளுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் மனிதன் இறுதியில் தாயின் வாளுக்கு பலியாகி விடுவான் என்பதை வெட்டுண்ட சிரம் விவரிக்கும். காளியை ஆராதிப்பன் வீரனாக இருக்க வேண்டும். பயம் கொண்டவர்களுக்கு அவள் அருள் கிட்டாது. மரண ஸ்வரூபிணியான் அவள் அனுதினமும் சம்ஹாரத் தொழிலை செய்கின்றாள். என்பதை செந்நிற நாக்கு தெரிவிக்கும். காளின் கோரத்தாண்டவம் ஆடும் இடம் சுடுகாடு. ஆசை, காமம், வெகுளி எல்லாம் பஸ்பமாகும் இடமான சுடுகாடாக நம் மனம் மாற வேண்டும் என்பதை தாண்டவம் குறிக்கும்.

தாருகனை வதம் செய்த பின்னரும் காளின் கோபம் தணியாததால் உலக உயிர்களைக் காப்பாற்ற சிவனார் தரையில் சடலம்போல் படுத்திருக்க அவர் மார்பில் ஏறி ஊழிக்கூத்தாடினாள் காளி. உடன் சிவனார் கைக்குழைந்தையாக மாறி அழுக காளியின் கவனம் குழந்தைமீது திரும்ப தாய்ப்பாசம் பீறிட குழந்தையை வாரி எடுத்து ஸ்தன்ய பானம் கொடுத்தாள். குழந்தையான சிவன் காளியின் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த கோபத்தையும் சேர்த்து பாலாக உறிஞ்சி விடவே காளி சாந்தமடைந்தாள். இதனால் சிவனுக்கு சேத்திரபாலன் என்ற பெயர் உண்டானது. அப்போது அந்த கோபசக்தியினால் சிவனிடமிருந்து அஷ்டசேத்ரபாலர்கள் தோன்றினர்.

உக்கிரம் தனியத் தனிய அழகிய நங்கையானாள். அவளை மேலும் சாந்தப் படுத்த மகேசன் நர்த்தனம் புரிந்தார். அதனால் கவரப்பட்ட காளியும் நடனம் ஆடினாள். அன்று முதல் சந்தியா நேரத்தில் ஈசனும் காளியும் சந்தியா தாண்டவம் ஆடலானார்கள்

ஸ்ரீகாளியின் மூல மந்திரத்தால் யாகம் செய்தால் அதிதீயான தைரியம், வாக்குவன்மை, முன்கூட்டியே அறியும் தன்மை, நிலையான செல்வம், நோயற்ற வாழ்வு கிட்டும்.

கிராமங்களில் இந்த எழுவரையும் கன்னிமாராக 1.பட்டரிகா, 2.தேவகன்னிகா, 3.பத்ம கன்னிகா, 4.சிந்து கன்னிகா, 5.அகஜா கன்னிகா, 6.வன கன்னிகா, 7.சுமதி கன்னிகா எனப் போற்றி வழிபடுகின்றனர்

இரண்யன் வம்சத்தில் பிறந்த சும்பன், நிகம்பன் அசுரர்கள் பிரம்மனிடம் பெண்களைத்தவிர மற்ற எவராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று பெற்ற வரத்தினால் ஆணவம் கொண்டு அனைவரையும் துன்புறுத்த தேவர்கள் தேவியை சரணடைய நீராடிக்கொண்டிருந்த தேவி தன் உடம்பிலிருந்து ஒர் சக்தியை தோற்றுவித்து- கௌசிகி அனுப்பியதால் தேவி நீல நிறமானாள். சும்ப நிகம்பர்கள் தேவியைப் பற்றி உளவு பார்க்க அனுப்பியவர்கள் தேவியின் சேனைப் பற்றிச் சொல்லாமல் அவரின் அழகு பற்றிச் சொல்ல சுக்ரீவன் எனும் தூதுவன் மூலம் மணம் புரிய தூது விடுத்தனர். தேவி போரில் என்னை யார் வெல்லப் போகின்றார்களோ அவர்களையே தான் மணமுடிப்பதாகச் சொன்னார். தூம்ரலோசனன் என்ற சேனாபதி தேவியால் எரித்துக் கொல்லப்பட சண்டன் முண்டன் என்ற இரு சேனாதிபதிகள் வர அவர்களையும் சம்ஹரித்தாள் தேவி. அதனால் அன்னை அவளுக்கு சாமுண்டா எனப்பெயர் சூட்டினாள்.

தன் சேனாபதிகள் இறந்ததனால் சும்பன், நிகம்பன் இருவருமே சேனாபதி ரத்த பிந்துவுடன் போருக்கு வந்தனர். ரத்த பிந்து உடம்பிலிருந்து கீழே விழுந்த ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அசுரர்கள் தோன்றிவே அன்னையிடமிருந்து அஷ்ட மாத்ருகா- அஷ்ட துர்க்கைகள்: 1.வசினி, 2.காமெசி, 3.மோதினி, 4.விமலா, 5.அருணா, 6.ஜயினி, 7.சர்வேஸ்வரி, 8.கௌலினி தோன்றினர்.

அன்னையின் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலிருந்து 64 பேரைத் தோற்றுவித்தாள். எட்டு பேராக பிரித்து அவர்களுக்கு ஒரு தலைவியாக இந்த எட்டு பேரையும் தோற்றுவித்தாள். அஷ்டமாசித்தி பெற்ற அந்த தெய்வங்கள் ஒவ்வொரு தலைவிக்கும் தங்கள் திவ்ய சக்திகளை வழங்கினார்கள். இந்த 64 பேரும் யோகினிகள் எனப்பட்டனர். ஒவ்வொரு யோகினிக்குள்ளும் ஒரு கோடி யோகினிகள். மொத்தம் 64 கோடி யோகினிகள். இவர்கள் இரத்த பீஜனின் உடலிலிருந்து ரத்தம் கீழே சிந்தி உயிர் பெறுவதற்கு முன்பே இரத்தம் நிலத்தில் வீழாமல் குடிக்க ரத்தபீஜன், சும்பன், நிகம்பன் அசுரர்களை வதம் செய்தாள். இவர்கள் உலக இயக்கங்களுக்கு காரணமாகிறார்கள். சாக்தம் எனப்படும் சக்தி வழிபாட்டின் முக்கிய பரிவாரங்கள் இந்த யோகினிகள்தாம்.

துர்க்கா பூஜை ஆஸ்வின் மாதம்-புரட்டாசி கிருஷ்ணபட்சத்தில் நவமியன்று தொடங்கி பதினைந்து தினங்கள் பூஜை செய்து சுக்லபட்ச தசமியன்று நீரில் சேர்க்க வேண்டும். மிருக பலி யில்லாமல் செய்யும் பூஜை வைஷ்ணவி பூஜை-சாத்வீகபூஜை. விலங்குகளை பலிகொடுத்து செய்யும் பூஜை துர்கா பூஜை. பலிகளை சப்தமி, நவமி திதிகளில் செய்யலாம். அஷ்டமியில் செய்யக்கூடாது.

சிவபெருமானின் மனைவி என்பதால் சிவை. விஷ்ணுவின் அம்சம் வைஷ்ணவி/ விஷ்ணுவின் மாயை, நாராயணின் சக்தியைப் பெற்றிருப்பதால் நாராயணி. மேலும் இஷானி, சத்யை, நித்யை, சனாதனி, பகவதி, சர்வானி, சர்வமங்களா, கௌரி, பார்வதி, அம்பிகை என்று பல பெயர்கள் கொண்டவள்.

நரம்பின் அதிபதியான இவள் சினம் கொண்டாள் ஊரில் கலகம் உண்டாகும். தயிர் அபிஷேகம், அவல், சேமியா நிவேதனங்கள் படைத்து விநியோகம் நலன். பக்தர்களின் துன்பங்களை நீக்குபவள்.

“ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ, சாமுண்டா ப்ரசோதயாத்.

துக்கங்களை போக்குவதால் துர்க்கா என்றழைக்கப்படும் துர்க்காவின் மற்ற திருநாமங்கள்!
வனதுர்க்கா-கொற்றவை. மகாவித்யாவே வனதுர்க்கையாவாள். வனம்-காடு. தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய காட்டிலிருந்து காப்பவள். - கதிராமங்கலம், தருமபுரம் (மயிலாடுதுறை)

சூலினிதுர்க்கா- சரபேஸ்வரின் இறக்கை ஒன்றில் இருப்பவள். சிவனின் உக்ரவடிவானவள். முத்தலை சூலத்தினை கையில் வைத்திருப்பதால் சூலினி துர்க்கா. - அம்பர்மாகாளம்

ஜாதவேதோ துர்க்கா- சிவனின் நெற்றிக் கண்னிலிருந்து உருவான தீப்பொறிகளை கங்கையில் சேர்த்ததால் ஜாதவேதோ எனப்பெயர்.

சாந்தி துர்க்கா- தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவ வழி செய்பவள்.

சபரி துர்க்கா- சிவன் வேடுவ உருவம் எடுத்தபோது வேடுவச்சி உருவம் எடுத்த பார்வதியார் சபரிதுர்க்கா.

ஜ்வால துர்க்கா-ஆதிபராசக்தி பாண்டாசுரன் போரில் எதிரிகள் அருகில் வராமல் இருக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தவள் இந்த ஜ்வாலாதுர்க்கா.

லவணதுர்க்கா- லவணாசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் வெற்றி கிடைக்க வழிபட்ட துர்க்கை லவண துர்க்கா

தீபதுர்க்கா -பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்ற அக இருளை நீக்கி மெய்ஞாசமான ஒளியை வழங்குவது தீபதுர்க்கா.

ஆசுரி துர்க்கா-பக்தர்களிடையே உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்பவள். ஆசுரி துர்க்கா.


சப்த கன்னியர் -சப்த மங்கையர்-சப்த மாதர்
சப்த மங்கையரும் காளிதேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்லுமுன் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்தனர். சக்கரப்பள்ளி- சக்ரமங்கை, ஹரிமங்கை- அரிமங்கை, சூலமங்கலம்- சூலமங்கை, நல்லிச்சேரி- நந்திமங்கை, பசுபதிகோவில்- பசுமங்கை, பசுபதிகோவில் -தாழமங்கை, பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை இந்த எழு தலங்களிலும் மங்கைப் பருவ தேவியர் சிவ பூஜை செய்து சிவதரிசனம் பெற்ற ஏழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. ஏழு தலங்களும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள தலங்கள்.

அந்த தலங்களில் உள்ள அம்மன் பெண்களின் ஏழு பருவங்களையும் காட்சியாக ஒவ்வொரு தலத்தில் காசி தம்பதியினருக்கு அளித்துள்ளனர். சப்த மங்கைகள் தரிசித்த இந்த ஏழு தலங்களுக்கும் பார்வதி வந்தபோது இறைவன் சிறப்பு காட்சி தந்ததால் இத்தலங்களின் தரிசனம் 1.நெற்றிக்கண் தரிசனம், 2.கங்காதேவி தரிசனம், 3. திரிசூல தரிசனம், 4.பாத தரிசனம், 5.உடுக்கை தரிசனம், 6.மூன்றாம்பிறை தரிசனம், 7.நாக தரிசனம் எனப்படும்.

சப்த கன்னியர், மங்கையர், மாதர் !

1. பிராம்மி- - பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சக்கரப்பள்ளி-சக்ரமங்கை- தேவாரப் பாடல் பெற்ற தலம். பிராம்மி வழிபட்டதால் சக்கரவாகீஸ்வரர் எனும் திருப்பெயருடன் மங்கை சேர்ந்து சக்கரமங்கை என அழைக்கப் படுகின்றது. இந்த அம்பிகை தேவநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் முதலாவதான பேதைப் பருவ சிறுமியாக காட்சி. பிராம்மி-பிரம்மாவின் படைப்புக்கு துணை, அன்னவாகனம். நான்கு கரங்கள். குண்டம், அட்சயப் பாத்திரம், ஜெபமாலை, ஓமக் கரண்டி ஏந்தியிருப்பாள்.

2. மகேஸ்வரி-- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். ஹரிமங்கை- அரிமங்கை. நெல்லிவனமாக இருந்த இந்த இடத்தில் நெல்லிக்கனியை உண்டு சத்ய கங்கை தீர்த்தத்தில் நீராடி ஹரிமுக்தீசுவரரை வழிபட்டு மகாலட்சுமி, திருமாலை ஒருகாலும் பிரியா வரம் பெற்ற தலம். இந்த அம்பிகை ஞானம்பிகை, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் இரண்டாவதான பெதும்பை (பள்ளி) பருவ சிறுமியாக காட்சி. மகேஸ்வரி- ஈசனின் இடப்பக்கம் இருந்து தீமைகளை ஒழிப்பதில் உறுதுணை,

3. நாராயணி-(வைணவிதேவி) பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். நல்லிச்சேரி- நந்திமங்கை. நந்திகேசுவரர் ஈசனை பூஜித்து நடராஜர் பாத தரிசனம் கண்ட தலம். ஈசன் ஜம்புகேஸ்வரர். இந்த அம்பிகை அலங்காரவல்லி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் நான்காவதான கன்னிகை வடிவில் காட்சி. நாராயணி-அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவி.

4. வாராகி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில்- பசுமங்கை. பசுபதி நாதரின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்தைக் கேட்டு அதிலிருந்து பிரபஞ்சங்கள் உற்பத்தி ஆவதை அறிந்தாள் அம்பிகை. ஈசன்- பசுபதீஸ்வரர். பால்வளைநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஐந்தாவதான அரிவை எனப்படும் தாய்ப் பருவத்தினளாக காட்சி.

பரந்தாமனின் வராஹ வடிவுடன் இனைந்தவள், மேக நிறம். வராஹ-பன்றி முகம். கலப்பை, உலக்கை, வாள், கேடயம், சங்கு, சக்கரம், அபய வரத முத்திரையுடன் காட்சி தருபவள்.. காட்டுப்பன்றிகள் இழுக்கும் கிரி சக்ர ரதம் இவரது வாகனம். எப்பொழுதும் அம்பிகையை விட்டு நீங்காமல் இருக்கும் இரு சக்திகள் சியாமளா என்கிற மந்த்ரிணி, மற்றும் வாராஹி என்கிற தண்டினி ஆவர். இராஜராஜேஸ்வரியின் சேனாநாயகி. பயம் நீக்கி ஜயம் அருள்பவள். குற்றம் புரிந்தோரை தண்டிப்பதில் திட சித்தமும் தீர்க்கமான அறிவும், தீரமும், வீர்யமும் கொண்டவள். ‘வீர்யவதி” பிரளயத்தின்போது பூமியை வெளிக்கொணர விஷ்ணுவிற்கு துணையாகி பூமித்தாயானவள். நம் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்தியில் உறைபவள். காசி நகரை இரவில் உலாவந்து காப்பவள் வராஹியே!

ஆஷாட நவராத்திரி வராஹிக்கு உரியதாகப் கருதப் படுவதால் ஆனிமாத அமாவாசை முதல் ஒன்பதுநாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

காட்சி தலம்: திருமால்பூர் அருகில் உள்ள பள்ளூர், தஞ்சை பெரிய கோவில் அக்னிதிசையில். காசியில்.

வராஹி உபாசனை உள்ளவர்களிடம் வாதாடக்கூடாது என்பதற்கேற்ப வழக்குகளிலிருந்து விடுபட அருள். எலும்பிற்கு அதிதேவதையான வராஹி கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். பொதுவாக வெள்ளரிக்காயும், முறுக்கும் நிவேதனம். பஞ்சமி தினத்தன்று கிழங்கு வகைகள் சமைத்து விநியோகம் செய்தால் முன் வினைகள் அகலும். 5 பஞ்சமி / ஞாயிறு தினங்களில் நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால் நற்பலன்.

“ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”

5. இந்திராணி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –தாழமங்கை. தட்சன் சாபத்தால் தேய்ந்த சந்திரன் வழிபட்டத்தலம். தாழம் புதரில் தோன்றியவர் சந்திரமௌளீச்வரர். இந்த அம்பிகை ராஜராஜேஸ்வரி,, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஆறாவதான தெரிவை வடிவில் காட்சி. இந்திராணி -இந்திரனுக்கு உதவி, ஐந்தீரி எனப்படுபவள். நான்கு தந்தங்களுடைய வெள்ளயானையை வாகனமாகக் கொண்டவள். இந்திர நீலக்கல்லின் நிறம். 1000 கண்களுடைய இவள் கரத்தில் வஜ்ராயுதம், பாசம், அங்குசம், தாமரை, அபயவரத முத்திரையுடன் காட்சி தருபவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள்.

விரும்பும் ஆடவரை மணக்க அருள் புரிவாள். சிவனை நோக்கித் தவமிருந்து இந்திரனை கணவனாய் அடைந்தாள். சதியின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டாள் அம்மை நோய் பெருகும். வேப்பிலையால் விசிறி சந்தனம் பூசி, பலாச்சுளை நிவேதனம் நலம்.
‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்”

6. கௌமாரி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சூலமங்கலம்- சூலமங்கை- சூலதேவர் இங்குள்ள கிருத்திவாஸேஸ்வரிடம் எப்போதும் காவல் காக்கும் வரம் பெற்றார். இந்த அம்பிகை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் மூன்றாவதான மங்கை பருவத்தினளாக காட்சி. கௌமாரி-முருகனின் சக்தி, வாகனம் மயில். இரண்டு கைகள் ஒன்றில் ஈட்டி ஏந்தியிருப்பாள்.

7. சாமுண்டி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை. அஷ்ட நாகங்களுடன் வந்து வழிபட்டதால் நாகதோஷம் நீக்கும் தலம். பிரம்மன் தவம்செய்து வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர். இந்த அம்பிகை அல்லியங்கோதை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஏழாவதான பேரிளம் பருவத்தினளாக காட்சி மஹிஷாசுரமர்த்தினி, சிவகாளி, பத்ரகாளி எனப்படுபவள். ரத்த சாமுண்டா, ப்ரம்ம சாமுண்டா எனவும் துதிக்கப்படுபவள். சிவசக்தியின் அம்சம். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றிபெற அருள் புரிபவள். மனித உடல் ஒன்றின் மீது அழுந்திய பாதம். ஈட்டி, மண்டைஓடு, சூலம், வாள்கள் ஏந்தியிருப்பாள்.

இந்த சப்தகன்னியர் -சப்த மங்கையர்-சப்தமாதர் ஏழு பேரும் தனித்தனியாகவோ அல்லது ஒன்று கூடி செல்லியம்மனாக பக்தர்களின் துயர் நீக்கி அருள்புரிய அருள் புரிந்தார் ஈசன்,

காளியின் பிரமஹத்தி!
அம்பன், அம்பாசூரன் அசுரர்களை கொன்றபாவம் தீர காளி வழி பட்டது.-அப்பர் மாகாளம்

அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம்!

ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.

பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

சிலைகளுக்கு ஏன் இப்படி வித விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்?

ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.

இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

எள் எண்ணெய்
பஞ்ச கவ்வியம்
மாவு வகைகள்
மஞ்சள் பொடி
பசும்பால்
தயிர்
தேன்
நெய்
நெல்லி முள்ளிப்பொடி
கரும்புச்சாறு
பன்னீர்
அன்னம்
வாசனை திரவிய தீர்த்தம்

அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.

சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் பல ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.

ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.

தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்

1. கந்த தைலம் - இன்பம்
2. மாப்பொடி - கடன் நீக்கம்
3. மஞ்சட்பொடி - அரசவசியம்
4. நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்
5. திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்
6. ரசபஞ்சாமிர்தம் - முக்தி
7. பழபஞ்சாமிர்தம் - முக்தி
8. பால் - ஆயுள் விருத்தி
9. பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்
10. இளவெந்நீர் - முக்தி
11. தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
12. இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்
13. சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்
14. கரும்புச்சாறு - ஆரோக்கியம்
15. தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
16. எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்
17. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்
18. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்
19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
20. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்
21. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
22. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
23. பன்னீர் - குளிர்ச்சி தரும்
24. விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்
25. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
26. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
27. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
28. கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
29. ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
30. புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
31. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
32. குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
33. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
34. சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்
35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்

ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் கண்ணார அபிஷேகத்தை பார்த்தும் பிறந்த பிறவியின் பயனை அடையலாம்.

 

 

அபிஷேக நீரின் மகிமைகள்!

தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கின்ற கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களில் தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;அபிஷேகம் மூலஸ்தானமாகிய கருவறையில் இருந்து வெளிவரும் பாதைக்கு கோமுகம் என்று பெயர்; பெண்ணின் பிறப்பு உறுப்பு போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் கோமுகம் வழியாக வெளிவரும் இடத்தில் பிரம்மா கோஷ்டமாக (பக்கவாட்டு தெய்வம்) அருள்புரிந்து வருகின்றார்;

சைவத்தின் தலைநகரமாக விளங்கும் திருவண்ணாமலை (விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது)யில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே உள்பிரகாரத்தில் உள்ள கோமுகத் தொட்டியில் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் இடைக்காட்டு சித்தரும்,மலப்புழு சித்தரும் தோன்றினார்கள்;

இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீரில் சந்தனம்,இளநீர்,பால்,தண்ணீர் என்று எது வந்தாலும் அதை நமது தலையில் தெளிக்கும் பழக்கம் இன்றும் இருக்கின்றது;இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீர் தொட்டிக்குள் விழும் முன்பாக நமது கைகளால் பிடித்து நமது தலையில் தெளித்தால் 200% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த 90 நிமிடங்களுக்குள் எடுத்து அதை நமது தலையில் தெளித்தால் 100% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் தெளித்தால் 50% பலனையும் பெறலாம்;(ஏனெனில்,இந்த அபிஷேக நீரானது கங்கை நீரை விடவும் 100 கோடி மடங்கு உயர்வானது)

ஒரு வேளை இன்று அனுஷம் நட்சத்திர நேரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை சிறிது பயன்படுத்தினாலும்,பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலும் மீதிநீரை வீட்டில்/வீட்டுக்கு அருகில் இருக்கும் துளசிச் செடி மீது ஊற்றி விட வேண்டும்;அல்லது வில்வ மரத்தின் மீது ஊற்ற வேண்டும்; அல்லது வேறு ஏதாவது ஒரு செடியின் மீது ஊற்றிவிடலாம்;

ஒவ்வொரு நட்சத்திரம் நிற்கும் அன்றும் இந்த அபிஷேகத் தண்ணீரை எப்படி,எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அகத்திய மகரிஷி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துவிட்டார்;அவரது வம்சாவழியைச் சேர்ந்த இடியாப்ப சித்தர், தமது சீடராகிய சத்குரு வேங்கடராம சுவாமிகளுக்கு 1950 களில் தமிழ்நாட்டில் அண்ணாமலையில் நேரடியாக உபதேசம் செய்திருக்கின்றார்;

நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகள் நமக்கு உபதேசம் செய்ததை இங்கே உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளுக்கு இக்கணத்தில் நாம் நன்றிகள் தெரிவித்துவிட்டு இந்த ஆன்மீக உபதேசத்தை பின்பற்றிட ஆரம்பிப்பதுதான் முறை!

இன்று விளம்பி வருடம்,வைகாசி மாதம்,பவுர்ணமி திதி, அனுஷம் நட்சத்திரம் இருக்கின்றது;இந்த அனுஷம் நட்சத்திரம் நேற்று இரவு 12.02 முதல் இன்று இரவு 1.38 வரை இருக்கின்றது;எனவே,இன்று கோவிலில் அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடிக்க வேண்டும்;இன்று எப்போது பிடித்தாலும் இன்று இரவு 1.38க்குள் பயன்படுத்தினால் மட்டுமே அதற்குரிய தெய்வீகப் பலனை அது தரும்;

பரணி நட்சத்திரம்,மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிடிக்கும் அபிஷேகத்தண்ணீர் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,அதன் தெய்வீகத் தன்மையை இழக்காமல் இருக்கும்;

வீட்டில் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடுவதன் மூலமாக அவர்கள் இப்பிறவியில் எவ்வளவு பெரும் பாவம் செய்திருந்தாலும் அது இந்த ஒரு சிறு செயலால் மன்னிக்கப்பட்டு,அவர்கள் புண்ணிய ஆத்மாவாகி விடுகின்றார்கள்;ஒருவேளை,வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்துவிட்டால்,இறந்த 6 மணி நேரத்திற்குள் இவ்வாறு செய்யலாம்;அப்படி இறந்த பின்னர் கூட,அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடலாம்;

இவை அனைத்தும் சித்தர் பெருமக்களால் ஆராய்ந்து நமக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியம் ஆகும்;

அசுபதி நட்சத்திரம்; கடுமையான கண்திருஷ்டி விலகிவிடும்;கெட்ட கனவுகள் வராது;கனவில் புலம்புபவர்கள் இனிமேல் புலம்பமாட்டார்கள்;தூக்கத்தில் உளறுபவர்களின் உளறல்கள் நின்று விடும்;

பரணி நட்சத்திரம்: மரண பயம் நீங்கும்;

கார்த்திகை நட்சத்திரம்:பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவர்;பிரிந்திருக்கும் ரத்த உறவுகள் ஒன்றாக வாழ வழிமுறை கிடைக்கும்;

ரோகிணி;குழந்தைகளின் பயம் நீங்கும்;அனுசுயா தேவி இந்த நட்சத்திரத்தில் பிடித்த அபிஷேக நீரைக் கொண்டு பல யுகங்கள் முறைப்படி பூஜை செய்து வந்தாள்;அதனாலேயே,மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீதத்தாத்தரேயரை மகனாகப் பெற்றாள்;

மிருகசீரிடம்:பேய்/கருப்பு சேஷ்டைகள் நீங்கும்;

திருவாதிரை:இறப்பதற்கு முன்பு இந்த நட்சத்திரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை அருந்தினால் சிவப்பதவி நிச்சயமாக கிடைக்கும்;

புனர்பூசம்:திருமணத் தடங்கல் விலகிவிடும் ;மாங்கல்ய பலம் மேம்படும்;திருமணம் செய்யும் போது(தாலி கட்டும் சுபவேளையில்) தம்பதி மீது தெளிப்பது மிகவும் நன்று;

பூசம்:பசுவின் மீது தெளித்தால் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும்;

ஆயில்யம்:ஆயுதங்கள்,பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;

மகம்:இயற்கையான முறையில் உயிர் பிரியும்;விபத்தினால் உயிர் பிரியாது;ஆக,வாழும் போது ஒவ்வொரு மகம் நட்சத்திர தினத்தன்றும் நம் மீது தெளிக்க விபத்தில் இருந்து தப்பிவிடுவோம்;

பூரம்:வைத்தியர்கள் செய்யும் தொழில் இடையூறு வராமல் இருக்க உதவும்;நாக தோஷம் விலகிவிடும்;

உத்திரம்:கடன்கார்களின் தொல்லை படிப்படியாக நீங்கும்;

அஸ்தம்;ருது தோஷங்கள் விலகிவிடும்;எதிர்பாராத உதவி,சிக்கலான நேரத்தில் கிடைக்கும்;

சித்திரை:அறுவடைக்கு முன்பு,இந்த நட்சத்திர நாளன்று பிடித்த அபிஷேக நீரை வயல்களில் தெளிக்க வேண்டும்;

சுவாதி:புதிய புடவை,ஆடைகள் மீது தெளித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்;உறவுகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;அதன் பிறகு,எப்போது வேண்டுமானாலும் அன்பளிப்பாக தரலாம்;

விசாகம்;கடைகள்,நிறுவனங்களில் இருக்கும் கஜானாவில் தெளிக்க வேண்டும்;தொழில் அமோகமாக இருக்கும்;

அனுஷம்:திருமணத் தடை நீங்கும்;நிச்சயித்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தமது தலையில் தெளிக்க வேண்டும்;

கேட்டை:பரிட்சை காய்ச்சல்,போட்டி காய்ச்சல் என்று அவதிப்படும் குழந்தைகளுக்கு தெளிக்க அவர்கள் அளவற்ற மனோதைரியம் பெறுவார்கள்;

மூலம் :வாகனங்களின் சாவி மீது தெளிக்க விபத்தை தடுக்கலாம்;

பூராடம்:கஜானாக்களிலும்,எழுதுகோல்களிலும் தெளிக்க நன்மை உண்டாகும்;பேனா,பென்சில் மீது தெளிக்க துன்பம் இல்லாத வாழ்க்கை உண்டு;

உத்திராடம்:விஷகடிகள் இராது;தூக்கத்தில் பயந்து அலறவோ,கீழே விழவோ மாட்டார்கள்;

திருவோணம்;உணவுப்பஞ்சம் வராது;

அவிட்டம்:கல்லூரி/அலுவலகம் போன்ற இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடம் கிடைக்கும்;பதவிக்கு ஆபத்து வராது;

சதயம்:எதிரிகளின் கூட்டத்தில் சிக்கவே மாட்டோம்;எதிரிகளின் துன்பம் குறையும்;

பூரட்டாதி:விமானப் பயணமோ,வெளியூர்/தொலைதூரப்பயணமோ துன்பம் தராது;விமானப் பயணம் செல்வோர் இதை தம்முடன் கொண்டு செல்லலாம்;

உத்திரட்டாதி:சிவில்,ஆர்கிடெக்,சிவில் காண்டிராக்டர்கள் தெளிக்க நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்;

ரேவதி;தினசரி வாழ்க்கையில் தீ விபத்தில் சிக்க மாட்டார்கள்;

குறிப்பு:விநாயர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹா பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
சிவபெருமானின் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அங்காள பரமேஸ்வரி ஆலயமாக இருந்தாலும் சரி;
பழமையான ஆலயமாக இருந்தால் உடனடியான பலனைப் பெறலாம்;புதிய (100 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆலயமாக இருந்தால்) சிறிது மெதுவான பலனைப் பெறலாம்;

உங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து,உங்களுக்கு தேவையான நட்சத்திரம் வரும் நாளன்று அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து,அந்த நட்சத்திரம் மறையும் முன்பு (நட்சத்திர நேரம் முடியும் முன்பு) வீட்டில் உள்ள அனைவரும் தமது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறிது அருந்தலாம்;

இது முடியாதவர்கள்,தினமும் காலையில் குளித்துவிட்டு,அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அபிஷேகத் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு,வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம்;

கோமுகத்தின் முன்பாக நின்றாலே அவரது உடலுக்குள் ஈசன் புகுந்துவிடுகின்றார்;பிறகு,ஒரு போதும் பிரிவதில்லை;இதையே,ஸ்ரீமாணிக்க வாசகர்,திருவெம்பாவையில் ‘புகுந்து கலந்து பிரியாமல் இருக்கும் ரகசியம்’ என்று பாடியிருக்கின்றார்.

 நன்றி:  ஆன்மீக களஞ்சியம்.

 

 

 

 

 

புதன், 6 நவம்பர், 2019

கேட்டதை கொடுக்கும் தன தாரை!

கேட்டதை கொடுக்கும் தான தாரை!

சம்பத்து நட்சத்திரம் என்பது  ஜென்ம நட்சத்திரத்திற்கு 2, 11, 20 வது நட்சத்திரம்!

உதாரணமாக உத்திராடம் என்பது உங்கள் ஜென்ம நட்சத்திரம் என்றால் திருவோணம், ரோகிணி, ஹஸ்தம் ஆகியவை தனம் தரும் நட்சத்திரம். 

அந்த நட்சத்திரங்களின் அதிபதி  கிரகம் சந்திரன் ஆகும்.  ஒவ்வொரு நாளும் சந்திர ஹோரையில் வழிபாடு செய்ய அபரிமித செல்வம் பெருகும்.  இதுவே தன ஓரை குறிப்பாக வெள்ளி கிழமையில் வழிபட வேண்டும்.

27 நட்சத்திரங்களுக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்!

சம்பத்து நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 2, 11, 20 வது நட்சத்திரம்
பரம மித்தர நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 9, 18, 27 வது நட்சத்திரம்
சாதக நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 6, 15, 24 வது நட்சத்திரம்

27 நட்சத்திரங்களுக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்!


பொருளாதார வளர்ச்சிக்கு தனம் எனும் பணவரவு மிக மிக முக்கியம். இந்த தன ஸ்தானத்தைக் குறிப்பிடும் இடம் இரண்டாமிடம்!
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்த ஸ்தானமே தன ஸ்தானம் ஆகும்.

இந்த தன ஸ்தானம் பாப கர்த்தாரியாக இருந்தாலும், தன ஸ்தானத்தின் அதிபதி பாபகர்த்தாரியாக இருந்தாலும், பண வரவில் தடைகளும், தாமதமும் ஏற்படும். அப்படியே பணம் நிறைவாக வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாமல் ஏதாவதொரு செலவு வந்து பணத்தைக் கரைக்கும். இது பலருக்கும் உள்ள பிரச்சினை.
என்ன செய்தால் தன வரவை அதிகரிக்கச் செய்யலாம்? வந்த செல்வத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

பாபகர்த்தாரியாகவே இருந்தாலும், நாம் சில விஷயங்களை கவனித்து முறைப்படுத்திக் கொண்டாலே செல்வ வளத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இதோ... இந்த நட்சத்திரத் தகவலை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் படி செயல்படுங்கள். பணமும் வந்து கொண்டே இருக்கும். சொத்துக்களும் சேரும்.

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதற்கு அடுத்த நட்சத்திரம் வரும் நாட்களிலும், அந்த நட்சத்திரத்தின் அனு ஜென்ம மற்றும் திரி ஜென்ம நட்சத்திர நாளிலும், உங்களுக்கு பணம் வரும் விஷயங்கள் எதுவானாலும் முழுமையான வெற்றியைத் தரும்.

''என்னாங்க சார், ஏதோ அனு ஜன்மம், திரி ஜென்மம்னு சொல்றீங்க? எதுவுமே புரியலீங்களே?'' என்று ஒரு சிலர் சொல்லலாம்.
அதற்காகத்தான் அட்டவணை.. இதோ!

உங்கள் நட்சத்திரம் அஸ்வினி என்றால் ,
டுத்த அதாவது இரண்டாவது நட்சத்திரம் "பரணி."
இந்த பரணியின் அனு ஜென்ம நட்சத்திரம் "பூரம்" நட்சத்திரம்.
திரி ஜென்ம நட்சத்திரம் "பூராடம்."
ஆக இந்த பரணி பூரம் பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரக்கார்ர்களுக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும்.

மேலும் இந்த பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரத்திற்கான அதிதேவதையை வணங்கிவந்தால், இன்னும் செல்வ வளம் பெருகும்.

பணம் பல வழியிலும் வரும். செல்வவளம் குறையாமல் பார்த்துக்கொள்ளும். மன நிறைவான வாழ்க்கையைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாமல் வைத்துக்கொள்ளும்.

இனி மற்ற நட்சத்திரங்களுக்கு உண்டான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை? அதன் அதன் அதிதேவதை யார் என்பதை பார்ப்போம்.


அஸ்வினி :-
பரணி (துர்கை), பூரம் (பார்வதி), பூராடம் (வருணன், ஜம்புகேஸ்வரர்)

பரணி :- கார்த்திகை (அக்னி) உத்திரம் (சூரியன்), உத்திராடம்( கணபதி),

கார்த்திகை :- ரோகிணி (பிரம்மா), அஸ்தம்: (சாஸ்தா),திருவோணம்(விஷ்ணு),

ரோகிணி :- மிருகசீரிடம்(சந்திரன்), சித்திரை(விஷ்வகர்மா), அவிட்டம்(அஷ்டவசுக்கள்)

மிருகசீரிடம் :- திருவாதிரை(நடராஜர்),சுவாதி(வாயு), சதயம்(எமதர்மன்),


திருவாதிரை :- புனர்பூசம்(அதிதி), விசாகம்(முருகர்), பூரட்டாதி(குபேரன்),

புனர்பூசம் :- பூசம்(குரு), அனுசம்(லட்சுமி), உத்திரட்டாதி(காமதேனு)

பூசம் :- ஆயில்யம்(ஆதிசேஷன்), கேட்டை(இந்திரன்),ரேவதி(சனி)

ஆயில்யம் :- மகம்(பித்ருக்கள்,சுக்ரன்), மூலம்(நிருதி வாயு) அஸ்வினி(சரஸ்வதி)

மகம் :- பூரம்( பார்வதி) பூராடம்( வருணன்), பரணி(துர்கை)

பூரம் :- உத்திரம் ( சூரியன்), உத்திராடம் ( கணபதி), கார்த்திகை
(அக்னி)

உத்திரம் :- அஸ்தம் (சாஸ்தா), திருவோணம்( விஷ்ணு),ரோகிணி
(பிரம்மா),

அஸ்தம் :- சித்திரை (விஷ்வகர்மா), அவிட்டம் (அஷ்ட வசுக்கள்),
மிருகசீரிடம் (சந்திரன்),

சித்திரை :- சுவாதி(வாயு), சதயம்(எமதர்மன்), திருவாதிரை(நடராஜர்),

சுவாதி :- விசாகம் (முருகர்), பூரட்டாதி (குபேரன்),புனர்பூசம் (அதிதி)

விசாகம் :- அனுசம் (லட்சுமி), உத்திரட்டாதி (காமதேனு), பூசம் (குரு),

அனுசம் :- கேட்டை (இந்திரன்), ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்),

கேட்டை :- மூலம் (நிருதி), அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்),

மூலம் :- பூராடம் (வருணன்), பரணி (துர்கை),பூரம் (பார்வதி),

பூராடம் :- உத்திராடம் (கணபதி), கார்த்திகை (அக்னி), உத்திரம் (சூரியன்),

உத்திராடம் :- திருவோணம் (விஷ்ணு), ரோகிணி (பிரம்மா), அஸ்தம்( சாஸ்தா),

திருவோணம் :- அவிட்டம் (அஷ்டவசுக்கள்), மிருகசீரிடம் (சந்திரன்), சித்திரை (விஷ்வகர்மா),

அவிட்டம் :- சதயம் (எமதர்மன்), திருவாதிரை (நடராஜர்), சுவாதி (வாயு),

சதயம் :- பூரட்டாதி (குபேரன்), புனர்பூசம் (அதிதி),விசாகம் (முருகர்),

பூரட்டாதி :- உத்திரட்டாதி (காமதேனு),பூசம் (குரு), அனுசம் (லட்சுமி),

உத்திரட்டாதி :- ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்),கேட்டை (இந்திரன்),

ரேவதி :- அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்), மூலம் (நிருதி)

இப்படி இந்த சம்பத்து நட்சத்திரங்களையும், அதன் அதிதேவதைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற தலங்களில் வழிபாடுகள் செய்து வந்து, தன வரவையும், சேமிப்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.


 

புதன், 23 அக்டோபர், 2019

ஸ்ரீ மஹாலட்சுமி அஷ்டோத்திரம்!

இது வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான ரகசியம்!

அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்
ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்

 1. ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
2. ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
3. ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
4. ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
5. ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
6. ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
7. ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
8. ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
9. ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 10. ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
11. ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
12. ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
13. ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
14. ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
15. ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
16. ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
17. ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
18. ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
19. ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
20. ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
21. ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
22. ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
23. ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
24. ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
25. ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
26. ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
27. ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
28. ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
29. ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
30. ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
31. ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
32. ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
33. ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
34. ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
35. ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
36. ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
37. ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
38. ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
39. ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
40. ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
41. ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
42. ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
43. ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
44. ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
45. ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
46. ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
47. ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
48. ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
49. ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
50. ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
51. ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
52. ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
53. ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
54. ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
55. ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
56. ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
57. ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
58. ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
59. ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
60. ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
61. ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
62. ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
63. ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
64. ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
65. ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
66. ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
67. ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
68. ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
69. ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
70. ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
71. ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
72. ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
73. ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
74. ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
75. ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
76. ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
77. ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
78. ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
79. ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
80. ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
81. ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
82. ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
83. ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
84. ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
85. ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
86. ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
87. ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
88. ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
89. ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
90. ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
91. ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
92. ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
93. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
94. ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
95. ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
96. ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
97. ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
98. ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
99. ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
100. ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
101. ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
102. ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
103. ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
104. ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
105. ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி
நமோஸ்துதே
106. ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!
107. ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
108. ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
109. ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 110. ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
111. ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
112. ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
113. ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
114. ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
115. ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
116. ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
117. ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
118. ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
119. ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

 120. ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
121. ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
122. ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
123. ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
124. ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
125. ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
126. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
127. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி!



பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்!

பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்!

மூல மந்திரம் :-
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் பரமேஸ்வர்யை நமஹ!

இம்மந்திரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் சக்தியும்,அவற்றின் விளக்கமும்:-
ஐம் - இது வாக் பீஜம் என்றும் வாக்பவ பீஜம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பீஜ மந்திரத்தின் அதிதேவதைகள் ப்ரம்மா,சரஸ்வதி.இந்த பீஜ மந்திரம் வாக்குவன்மை, நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி தரும்.

க்லீம் - இது காமராஜ பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் விஷ்ணு ,லக்ஷ்மி,ரதி,மன்மதன்,காளி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,வசீகர சக்தி, செல்வம், செல்வாக்கு,கௌரவம் தரும்.

சௌம் - இது பரா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் ருத்ரன்,பார்வதி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,தைர்யம்,சௌபாக்கியம் தரும்.சௌபாக்கியம் என்ற சொல் இந்த பீஜ மந்திரத்தில் இருந்து தோன்றியதாக மந்திர சாஸ்திரம் சொல்கிறது.

ஹ்ரீம் - இது மாயா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் மகேஸ்வரன்,மஹேஸ்வரி ,புவனேஸ்வரி.இந்த பீஜ மந்திரம் எல்லா நன்மைகளையும் தரவல்லது.இந்த ஒன்றை ஜெபித்தே நலமும்,வளமும் கொண்ட அடைந்தவர்கள் பலர்.

ஸ்ரீம் - இது லக்ஷ்மி பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் சதாசிவன்,மனோண்மணி,லட்சுமி.இந்த பீஜ மந்திரம் ஐஸ்வர்யம்,மரியாதை,தேஜஸ்,கவர்ச்சி தரும்.
இவை ஐந்தும் பஞ்ச மஹா பீஜங்கள் எனப்படும்.

இதை வளர்பிறைத் திங்கள் அன்று அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வாருங்கள்.ஆரம்பம் செய்யும் அன்று அதிகாலையில் சிவாலயம் சென்று அங்குள்ள அம்மன் சன்னதிக்குச் சென்று அம்மனை மந்திரம் பலிக்க வேண்டி வணங்கி அங்கிருந்து குறைந்தது 108 எண்ணிக்கையாவது ஜெபித்துப் பின்வரும் நாட்களில் வீட்டில் வைத்து ஜெபித்து வருதல் சிறப்பு.

 வளமும்,நலமும் கூடிய நல்வாழ்விற்கு இம்மந்திரம் வழிசெய்யும்.எனவே,பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பராசக்தி திருப்பாதத்தை.


வாழ்கவளமுடன் !!



ஒரு நாள் குளித்தால், கங்கையில் ஆயிரம் ஆண்டு நீராடிய பலன்!

ஒரு நாள் குளித்தால்.. கங்கையில் ஆயிரம் ஆண்டு நீராடிய பலன் !

துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறை:
 உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேஸ்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும்."

மாயவரம் ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ கௌரி மாயூர நாதர் திருவடிகள் சரணம்!
காவிரி தாயே திருவடிகள் போற்றி போற்றி போற்றி !

காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம்(நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்குப் புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |

கங்கையின் பாபம் போக்கிய காவிரி
காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம்(நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்குப் புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புராண இதிகாசங்களில் போற்றப்படுகின்றது.

துலா காவேரி ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோகிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துகொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைக் கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

"கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"
"கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே
தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "

துலா ஸ்நானம்:
காவிரியில் ஒரு நாள் குளித்தால்.. கங்கையில் ஆயிரம் ஆண்டு நீராடிய பலன் !

காவிரி உருவான கதை
காவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனைப் பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லாப் பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்குச் சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன.

மாயவரம் ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ கௌரி மாயூர நாதர் திருவடிகள் சரணம் !

காவிரி தாயே திருவடிகள் போற்றி போற்றி போற்றி!


ஸ்ரீ வராஹி அன்னை!

பக்தர்கள் வேண்டும் வரத்தை தரும் வராஹி அம்மன் வராஹி. மனித உடலும், வராஹ முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும் .

 ஸ்ரீ வராஹிஅன்னை திருவடிகளே சரணம்

ஸ்ரீ வராஹிஅன்னைக்கு பல நாமங்கள் உள்ளன :
சேனநாதா ,
தண்டநாதா,
வராஹி,
பஞ்சமீ,
கைவல்யரூபி ,
வீரநாரி,
கிரியா தேவி,
வார்த்தாளி,
தூமாவதி(வடிவம்),
பலிதேவதா ,
ஸங்கேதா ,
ஸமயேஸ்வரி ,
மகாசேனா ,
அரிக்னீ,

பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி ன் நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.
இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான வராஹி அம்மன் பக்தர்கள் வேண்டிக் கொள்வதை வழங்கக் கூடியவள். விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை அருள்பவள். பயிர்களை விளைவிப்பதும், பலன்தருவதும் கடமையாக கொண்டவள். அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம்.

வராஹி காயத்திரி :
ஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தலே அவளை அடையும் உபாயம் எளிய வழி அன்னையின் பக்தனுக்கு மட்டுமே

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி :
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

தியான சுலோகம் :
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி மூல மந்திரம் :
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
4) செல்வம் பெருக
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II
காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!

 பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!

 1.ஓம் கேசவாய நமஹ!
2.ஓம் சங்கர்ஷனாய நமஹ!
3.ஓம் நாராயணாய நமஹ!
4.ஓம் வாசு தேவாய நமஹ!
5.ஓம் மாதவாய நமஹ!
6.ஓம் ப்ரத்யும்னாய நமஹ!
7.ஓம் கோவிந்தாய நமஹ!
8.ஓம் அனிருத்தாய நமஹ!
9.ஓம் விஷ்ணவே நமஹ!
10.ஓம் புருஷோத்தமாய நமஹ!
11.ஓம் மதுசூதனாய நமஹ!
12.ஓம் அதோஷஜாய நமஹ!
13.ஓம் த்ரிவிக்மாய நமஹ!
14.ஓம் லஷ்மி நரசிம்ஹாய
நமஹ!
15.ஓம் வாமனாய நமஹ!
16.ஓம் அச்சுதாய நமஹ!
17.ஓம் ஸ்ரீதராய நமஹ!
18.ஓம் ஜனார்தனாய நமஹ!
19.ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!
20.ஓம் உபேந்த்ராய நமஹ!
21.ஓம் பத்மநாபாய நமஹ!
22.ஓம் ஹரயே நமஹ!
23.ஓம் தாமோதராய நமஹ!
24.ஓம் கிருஷ்ணாய நமஹ!

யார் ஒருவர் தினமும் மேற்கண்ட ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்.

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு!

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு!
1.பஞ்ச பூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
2. பஞ்சாட்சரம்
நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
சி - மகா காரண பஞ்சாட்சரம்
3.சிவமூர்த்தங்கள்
1.பைரவர் -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி
4.நடராசர் -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி
4.பஞ்சலிங்க சேத்திரங்கள்
1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம் -நேபாளம்
3.போகலிங்கம் -சிருங்கேரி
4.ஏகலிங்கம் -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்
5.பஞ்சவனதலங்கள்
1.முல்லை வனம் -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -அவளிவணல்லூர்
3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி
4.பூளை வனம் -திருஇரும்பூளை
5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர்
6.பஞ்ச ஆரண்ய தலங்கள்
1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு -திருப்பாசூர்
3.ஈக்காடு -திருவேப்பூர்
4.ஆலங்காடு -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு -திருவிற்குடி
7.பஞ்ச சபைகள்
1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம் -பொன் சபை
3.மதுரை -வெள்ளி சபை
4.திருநெல்வேலி -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை
8.ஐந்து முகங்கள்
1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு
9.ஐந்தொழில்கள்
1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்
10.ஐந்து தாண்டவங்கள்
1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்
11.பஞ்சபூத தலங்கள்
1.நிலம் -திருவாரூர்
2.நீர் -திருவானைக்கா
3.நெருப்பு -திருவண்ணாமலை
4.காற்று -திருக்காளத்தி
5.ஆகாயம் -தில்லை
12.இறைவனும் பஞ்சபூதமும்
1.நிலம் - 5 வகை பண்புகளையுடையது
(மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர் - 4 வகை பண்புகளையுடையது
(சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது
(ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று - 2 வகை பண்புகளையுடையது
(ஊறு ,ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
(ஓசை )
13.ஆன் ஐந்து
பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்
14.ஐங்கலைகள்
1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை
15.பஞ்ச வில்வம்
1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்
16. ஐந்து நிறங்கள்
1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு - வெண்மை நிறம்
17.பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்
18.இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து
1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்
19.பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்.
*நம பார்வதி பதயே
ஹரஹர மகாதேவா*
#தென்னாட்டுடைய சிவமே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!



வியாழன், 15 ஆகஸ்ட், 2019

சகல நன்மைகளும் தரும் சரஸ்வதி அந்தாதி!

சரஸ்வதி அந்தாதி!

கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியை நித்தமும் அல்லது சரஸ்வதி பூஜையன்றோ பாராயணம் செய்பவர் வாழ்வில் சகல விதமான ஞானங்களும், செல்வமும் நிறையும்.

#காப்பு
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி. நூல்.

கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல்
தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1

வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல்
சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால்
உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2

உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லர் மெண்ணில் உன்னையன்றித்
தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை
வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3

இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்தமூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலாவிடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4

அருக்கோதயத்தினும் சந்திரோதயமொத்து அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப்பாவை திசைமுகத்தான்
இருக்கோது நாதனும் தானுமெப்போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே. .. 5

மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூரிருட் கோர்
வெயிலே நிலவெழுமேனி மின்னே யினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே. .. 6

பாதாம்புயத்தில் பணிவார் தமக்குப் பல கலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறலரிதாவது எனக்கினியே. .. 7

இனி நான் உணர்வது எண்ணெண் கலையாளை இலகு தொண்டைக்
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமல அயன்
தனிநாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப்
பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே. .. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பாளிடம் விதியின் முதிய
நாவும் பகர்ந்த தொல்வேதங்கள் நான்கும் நறுங்கமலப்
 பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே. .. 9

புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ
அந்தியில் தோன்றிய தீபமென்கோ நல அருமறையோர்
சந்தியில் தோன்றும் தபமென்கோ மணித்தாமமென்கோ
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே. .. 10

ஒருத்தியை ஒன்றும் இலாளன் மனத்தின் உவந்து தன்னை
இருத்தியை வெண்கமலத்திருப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தையெல்லாம்
திருத்தியை யான்மறவேன் திசைநான்முகன் தேவியையே. .. 11

தேவரும் தெய்வப்பெருமானும் நான்மறை செப்புகின்ற
மூவரும் தானவர் ஆகியுள்ளோரும் முனிவரரும்
யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த
பூவரும் மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே. .. 12

புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே. .. 13

வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போத உருவாகி ஏங்கும் பொதிந்த விந்து
நாதமும் நாத வண்டார்க்கும் வெண்டாமரை நாயகியே. .. 14

நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞான இன்பச்
சேயகம் ஆன மலரகம் ஆவதும் தீவினையா
லே அகம் மாறிவிடும் அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும்
தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே. .. 15

சரோருகமே திருக்கோயிலும் கைகளும் தாளிணையும்
உரோருகமும் திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்
ஒரோருகம் ஈரரை மாத்திரையான உரை மகட்கே. .. 16

கருந்தாமரை மலர் கண்தாமரை மலர் காமருதாள்
அருந்தாமரை மலர் செந்தாமரை மலர் ஆலயமாத்
தருந்தாமரை மலர் வெண்டாமரை மலர் தாவிலெழில்
பெருந்தாமரை மணக்குங் கலை கூட்டப் பிணை தனக்கே. .. 17

தனக்கே துணிபொருள் என்னும் தொல் வேதம் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும் இமையவர் தாம்
மனக்கே தம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான்
கணக்கேச பந்திக் கலை மங்கை பாத கமலங்களே. .. 18

கமலந்தனிலிருப்பாள் விருப்போடங் கரங்குவித்துக்
கமலங் கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந் தனைக் கொண்டு கண்டொருகால் தம் கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே. .. 19

காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும் ஓர் நான் மருப்பு
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே. .. 20

அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே தவன முளரிமின்னே முடியா இரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21

வேறிலை என்றுன் அடியாரிற் கூடி விளங்கு நின்பேர்
கூறிலையானும் குறித்து நின்றேன் ஐம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்கால் நின் மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள் வெண்டாமரை மலர்ச் சேயிழையே. .. 22

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலாமுறப் போதிக்கலாம் சொன்னதே துணிந்து
சாதிக்கலாமிகப் பேதிக்கலாம் முத்தி தானெய்தலாம்
ஆதிக்கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவரே. .. 23

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றிலர் யாரைத் தொழுவதுவே. .. 24

தொழுவார் வலம் வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து
விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகித்து
அழுவார் இனுங் கண்ணீர் மல்குவார் என் கண்ணின் ஆவதென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே. .. 25

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
 உய்க்கும் பொருளும் கலைமாது உணர்த்தும் உரைப்பொருளே. .. 26

பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ
மருளாத சொற்கலைவான் பொருளோ பொருள் வந்து வந்தித்து
அருளாய் விளங்குமவர்க்கு ஒளியாய் அறியாதவருக்கு
இருளாய் விளங்கு நலங்கிளர்மேனி இலங்கிழையே. .. 27

இலங்கும் திருமுகம் மெய்யிற்புளகம் எழும் விழிநீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே
துலங்கும் முறுவல் செயக்களிகூரும் சுழல்புனல் போல்
கலங்கும் பொழுது தெளியுஞ்சொல்மானைக் கருதினர்க்கே. .. 28

கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும்
புரியார்ந்த தாமரையும் திருமேனியும் பூண்பனவும்
பிரியாவென் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. .. 29

பெருந்திருவும் சயமங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளருளும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ் சீர் தருமே. .. 30

சரசுவதி அந்தாதி முற்றுப்பெற்றது.


திங்கள், 12 ஆகஸ்ட், 2019

சம்பத்து நட்சத்திரங்கள்!

  1. உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள்.

    அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான்இருக்கும்.


    வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.

    புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம்.

    புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை. வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா!

    சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்மை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தானே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.

    சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

    இதை எப்படி அறிந்துகொள்வது?

    உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

    அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்

    பரணி, பூரம், பூராடம்

    பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்

    கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    ரோகிணி, அஸ்தம்,திருவோணம்

    ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்

    மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

    மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    திருவாதிரை, சுவாதி,சதயம்

    திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

    புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    பூசம், அனுசம்,உத்திரட்டாதி

    பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    ஆயில்யம்,கேட்டை,ரேவதி

    ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    மகம், மூலம்,அசுவினி

    மகம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    பூரம்,பூராடம்,பரணி

    பூரம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

    உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

    அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்

    சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    சுவாதி,சதயம்,திருவாதிரை

    சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

    விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

    அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    கேட்டை,ரேவதி,ஆயில்யம்

    கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    மூலம், அசுவினி,மகம்

    மூலம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    பூராடம்,பரணி,பூரம்

    பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

    உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    திருவோணம், ரோகிணி,அஸ்தம்

    திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை

    அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    சதயம்,திருவாதிரை,சுவாதி

    சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்

    பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    உத்திரட்டாதி, பூசம், அனுசம்

    உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    ரேவதி,ஆயில்யம்,கேட்டை

    ரேவதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    அசுவினி,மகம்,மூலம்

    இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ... அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.

    இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.

    இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன்.

    நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்தநட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... சம்பத்து நட்சத்திரங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும்!

    உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்.

    சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர்.

    இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை” பயன்படுத்தி அழியாப் புகழுடன்இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையைஅமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும்சிறப்புமாக்குவோம்!

புதன், 31 ஜூலை, 2019

shri vaaraahi!


ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ்வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங்களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.

அவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.

வாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.

வாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்
வாராகி உதித்த திதி:- பஞ்சமி (வளர்பிறை)
வாராகி உதித்த மாதம்:-ஆடி
வாராகிக்கு உகந்த நிறம் :- நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ் திரமே முதன்மையானது.
வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
வாராகிக்கு வலிமை கூடும் நாள்:- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம்:- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு
பிடித்த அமுது:- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.

பூர்வபுண்ணிய படி யாரெல்லாம் வாராகியை நாடுவார்கள்?....

ஒருவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள். பிறக்கும் போதே ஜாதகத்தில் (சனி+கேது) அல்லது சனிக்கு(1,5,9) எனும் திருகோண ஸ்தானங்கள் கேது அமர்ந் தாலும் அன்னையின் அருள் எளிமையாக கிட்டும். மேலும் பனிரெண்டாம் இடத்தில் ராகு அமைய பெற்றவரும் (சுக்ரன்+புதன்+ ராகு) சேர்க்கை பெற்று பாவத்தில் அமைந்தவர் அன்னை பிறக்கும் போதே தேடி வருவாள், ராகு என்பவனே ஜோதிடத்தில் மாந்திரீக சக்தி, சித்திக்கு அதிபதி. அவர் மோட்ச ஸ்தானம் எனும் 12-ம் இடத்தில் அமரும் போது நிச்சயம் இப்பிறப்பில் அவன் ‘வாராகி’-யை நாடியே தீர வேண்டும் அவள் அருள் பெற வேண்டும் என்பதே நியதி,

வாராகி எனும் நாமமே இனி நம்மை கரை சேர்க்க இருக்கின்றது. சிங்கத்தின் மீதேறி அண்டமெல்லாம் அஞ்சிநடுங்க அதர்மங்கள் ஒடுங்கி ஓட, சத்ருக்கள் குடலை பிடுங்கி வீச வருகிறாள் வாராகி.

இனி உங்கள் வாழ்வில் வசந்தமே. வரம் தர வாழ்வு தர வர இருக்கிறாள் வாரம் தோறும், இனி உங்கள் வாழ்வில் அனைத் தும் சுகமே, நிம்மதியே. செல்கின்ற இடமெல்லாம் அன்னையால் வெகுமதியே

யார் கையில் எல்லாம் யார் இல்லங்களில் எல்லாம் இந்த மலர் செல்கின்றதோ அங்கெல்லாம் அவள் அமர்ந்து ஆட்சி செய்ய இருக்கிறாள் என்று அர்த்தம்...