புதன், 23 அக்டோபர், 2019

பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்!

பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்!

மூல மந்திரம் :-
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் பரமேஸ்வர்யை நமஹ!

இம்மந்திரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் சக்தியும்,அவற்றின் விளக்கமும்:-
ஐம் - இது வாக் பீஜம் என்றும் வாக்பவ பீஜம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பீஜ மந்திரத்தின் அதிதேவதைகள் ப்ரம்மா,சரஸ்வதி.இந்த பீஜ மந்திரம் வாக்குவன்மை, நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி தரும்.

க்லீம் - இது காமராஜ பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் விஷ்ணு ,லக்ஷ்மி,ரதி,மன்மதன்,காளி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,வசீகர சக்தி, செல்வம், செல்வாக்கு,கௌரவம் தரும்.

சௌம் - இது பரா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் ருத்ரன்,பார்வதி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,தைர்யம்,சௌபாக்கியம் தரும்.சௌபாக்கியம் என்ற சொல் இந்த பீஜ மந்திரத்தில் இருந்து தோன்றியதாக மந்திர சாஸ்திரம் சொல்கிறது.

ஹ்ரீம் - இது மாயா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் மகேஸ்வரன்,மஹேஸ்வரி ,புவனேஸ்வரி.இந்த பீஜ மந்திரம் எல்லா நன்மைகளையும் தரவல்லது.இந்த ஒன்றை ஜெபித்தே நலமும்,வளமும் கொண்ட அடைந்தவர்கள் பலர்.

ஸ்ரீம் - இது லக்ஷ்மி பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் சதாசிவன்,மனோண்மணி,லட்சுமி.இந்த பீஜ மந்திரம் ஐஸ்வர்யம்,மரியாதை,தேஜஸ்,கவர்ச்சி தரும்.
இவை ஐந்தும் பஞ்ச மஹா பீஜங்கள் எனப்படும்.

இதை வளர்பிறைத் திங்கள் அன்று அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வாருங்கள்.ஆரம்பம் செய்யும் அன்று அதிகாலையில் சிவாலயம் சென்று அங்குள்ள அம்மன் சன்னதிக்குச் சென்று அம்மனை மந்திரம் பலிக்க வேண்டி வணங்கி அங்கிருந்து குறைந்தது 108 எண்ணிக்கையாவது ஜெபித்துப் பின்வரும் நாட்களில் வீட்டில் வைத்து ஜெபித்து வருதல் சிறப்பு.

 வளமும்,நலமும் கூடிய நல்வாழ்விற்கு இம்மந்திரம் வழிசெய்யும்.எனவே,பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பராசக்தி திருப்பாதத்தை.


வாழ்கவளமுடன் !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக