செவ்வாய், 8 செப்டம்பர், 2015

ஐஸ்வர்ய மகுடம் சூடிய ஐஸ்வர்ய மஹாலட்சுமி!


முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. அங்கு மூலவர் திருக்காமேஸ்வரர் உடன் அமர் சிவகாமசுந்தரியுடன்  பக்தர்களுக்கு அருளுகிறார். இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் இன்முகம் மலர அருள்பாலிக்கிறாள். 

அம்மனுக்கு எதிரே உத்தரத்தில் போகர் ஸ்தாபித்த சிவபோக சக்கரத்தைக் காணலாம். 

கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் அருட்பிரகாசமாய் விளங்குகிறார்.

இந்த ஆலயத்தின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாய் ஐஸ்வர்ய மகாலட்சுமி  சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு அமர்ந்த திருக்கோலத்தில் மஹாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

திருமாலின் தேவி, திருமகளாக ஐஸ்வர்ய மகுடத்தை சூடிக்கொண்ட இந்தச் சம்பவம் நடந்த தலம் வௌ்ளூர். சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. மேலும் ஆதிசேஷன், சூரியன், முசுகுந்தன் ஆகியோரும் இத்தலத்தில் சிவபூஜை செய்துள்ளனர். முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான்.

ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.

மூலவர் திருக்காமேஸ்வரரை அக்காலத்தில் மன்னர்கள் மட்டும் வணங்கி பேறு பெற்றதாகவும், போர் மற்றும் மன்னராக முடிசூட்டிக் கொள்ளும் முன்னதாக  தங்களுடைய மகுடம், ஆயுதங்கள் ஆகியவற்றை வைத்து வணங்கிய பின்பு தான் எந்த செயலையும் மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டதாகவும்  கூறப்படுகிறது.
 
 
அட்சய திருதியை மகா லட்சுமிக்கு சிறப்பு வழிபாடு !
 
தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  இத் தளம் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியும், குபேரன், சுக்கிரன் அருளும் ஒன்று சேர்ந்து செல்வமகா யோகத்தை பக்தர்களுக்கு அள்ளி வழங்குகிறது.
 
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலி பீடமும், நந்திகேஸ்வரரும் இருக்க, அடுத்துள்ளது மகாமண்டபம். மகாமண்டபத்தின் வலதுபுறம் பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை திருமேனிகளும், வடக்கு திசையில் ஞான பைரவர், கால பைரவர் திருமேனிகளும் அருள்பாலிக்கின்றனர்.
 
 மகாலட்சுமி ஐஸ்வர்யமகாலட்சுமி என அழைக்கப்படுகிறாள். என்ன காரணம்?
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார்.

அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார்.
இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள்.

பூஜையில் மகிழ்ந்த ஈசன் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.
 
வில்வமரமாகத் தோன்றி வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை ஐஸ்வர்யத்திற்கு அதிதேவதையாக மாற்றினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடனேயே திருவருட்பாலிக்கிறாள்.
மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. 
 
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள முசிறியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. 
 

 
 

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

 
 

ஹோமத்தில் பயன்படுத்தும் பொருட்களும், பயனும்!

 வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது

அருகம் புல் : விநாயகருக்கும் ராகுவுக்கும் பிடித்தது

மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி என்பார்கள்.

தாமரை புஷ்பம் : லக்ஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது

மாதுளை மரம் : வசீகரம் கிடைக்கும். தேஜஸ் பெறலாம்.

அத்திக் குச்சி : மக்கட்பேறு.

நாயுருவி குச்சி : மகாலக்ஷ்மி கடாட்சம்

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை

அரசங் குச்சி : அரசாங்க நன்மை

கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி சூனியம் அகலும்.

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.

புரசங் குச்சி : குழந்தைகள் கல்வியும் ஞானமும் பெறுவர்.

வில்வக் குச்சி : செல்வம் சேரும்

அருகம்புல் : விஷபயம் நீங்கும்.

ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்.

வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சகல செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து 'சோமாம்ருதம்' ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் பிரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.

அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும்.

பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.

தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.
 
 

 

கணபதி மூல மந்திரம்!

 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா!!!


இம் மந்திரத்தை நாள் தோறும் துதி பாடுவோர்கு எந்த வித குறைகளும் இல்லாமல் என்றும் எப்போதும் இன்பகரமான வாழ்க்கையை மூல நாதன் கணபதி பகவான் அருள்வான் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை
 

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்


1. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற

2.
வில்வம் - இன்பம் அடைய

3.
அரசு - உயர் பதவி கௌரவம் அடைய

4.
மாவிலை - அறம், நீதி காக்க

5.
துளசி - கூர்மையான அறிவினை பெற

6.
மாதுளை - பெரும் புகழ் அடைய

7.
அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற

8.
நாயுருவி - வசீகரம் உண்டாக

9.
கண்டங்கத்திரி - வீரம் உண்டாக

10.
தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட

11.
மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற


12.
ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற

13.
நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக

14.
இலந்தை - கல்வி ஞானம் பெற

15.
ஊமத்தை - பெருந்தன்மை உயர

16.
தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற

17. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க

18.
எருக்கு - வம்ச விருத்தி அடைய

19.
மருதம் - குழந்தை பேறு அடைய

20.
அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட

21.
வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய


விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.


விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் அர்ச்சனைக்கு துளசி பயன்படுத்தலாம். மற்ற நாட்களில் விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தக் கூடாது.





 

வியாழன், 3 செப்டம்பர், 2015

சௌபாக்ய அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்





தியானம்
ஓம் வந்தே காமகலாம் திவ்யாம் கருணாமய விக்ரஹாம்
மஹா காமேஸ மஹிஷீம் மஹா த்ரிபுர ஸுந்தரீம்

ஸ்தோத்திரம்

ஓம் காமேஸ்வரி காமஸக்தி: காம ஸெளபாக்ய தாயிநீ
காமரூபா காமகலா காமிநீ கமலாஸநா

கமலா கல்பநாஹீநா கமநீய கலாவதீ
கமலா பாரதீ ஸேவ்யா கல்பிதாஸேஷ ஸம்ஸ்ருதி:

அநுத்தராநகா அநந்தா அத்புதரூபா அநலோத்பவா
அதிலோக சரித்ராதி ஸுந்தரீ அதிஸுபப்ரதா

அகஹந்த்ரீ அதிவிஸ்தாரா அர்ச்சந துஷ்ட்டா அமிதப்ரபா
ஏகரூபா ஏகவீரா ஏக நாதா ஏகாந்தார்ச்சந ப்ரியா

ஏகைக பாவதுஷ்டா ஏக ரஸா ஏகாந்த ஜநப்ரியா
ஏதமாந-ப்ரபாவைதத் பக்த-பாதக நாஸிநீ

ஏலாமோத ஸுகா ஏநோத்ரி ஸக்ராயுத ஸமஸ்திதி:
ஈஹாஸூந்யா ஈப்த்ஸிதேஸாதி ஸேவ்யா ஈஸாந வராங்கநா

ஈஸ்வராஜ்ஞாபிகா ஈகார பாவ்யேப்ஸித பலப்ரதா
ஈஸாநேதிஹரே÷க்ஷஷத் அருணாக்ஷீஸ்வரேஸ்வரீ

லலிதா லலநாரூபா லயஹீநா லஸத்தது:
லய ஸர்வா லய÷க்ஷõணி; லயகர்த்ரீ லயாத்மிகா

லகிமா லகுமத்யாட்யா லலமாநா லகுத்ருதா
ஹயாரூடா ஹதாமித்ர ஹரகாந்தா ஹரிஸ்துதா

ஹயக்ரீவேஷ்டதா ஹாலா ப்ரியா ஹர்ஷஸமுத்பவா
ஹர்ஷணா ஹல்லகாபாங்கீ ஹஸ்த்யந்தைஸ்வர்ய தாயிநீ

ஹலஹஸ்தார்ச்சித-பதா ஹவிர்தாந ப்ரஸாதிநீ
ராமா ராமார்ச்சிதா ராஜ்ஞீ ரம்யா ரவமயீ ரதி:

ரக்ஷிணீ ரமணீ ராகா ரமணீ மண்டல ப்ரியா
ரக்ஷிதாகில லோகேஸா ர÷க்ஷõ கண நிஷூதி நீ

அம்பாந்தகாரிண்யம் போஜ ப்ரியாந்தக பயங்கரீ
அம்புரூபாம் புஜகராம் புஜ ஜாத வரப்ரதா

அந்த: பூஜா ப்ரியாந்தஸ்த ரூபிண்யந்தர்-வசோமயீ
அந்தகாராதி வாமாங்க ஸ்திதாந்த: ஸுக-ரூபிணீ

ஸர்வஜ்ஞா ஸர்வகா ஸாரா ஸமா ஸம ஸுகா ஸதீ
ஸந்ததி: ஸந்ததா ஸோமா ஸர்வா ஸாங்க்யா ஸநாதநீ

ஸெளபாக்ய அஷ்டோத்தர ஸத நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.


 

சந்தான கணேச ஸ்தோத்ரம்

 



நமோஸ்து கணநாதாய ஸித்திபுத்தி யுதாய ச
ஸர்வ ப்ரதாய தேவாய புத்ரவ்ருத்தி ப்ரதாய ச

குரூதராய குரவே கோப்த்ரே குஹ்ய வதிதாயதே
கோப்யாய கோபிதாசேஷ புவனாய சிதாத்மநே

விச்வமூலாய பவ்யாய விச்வத்ருஷ்டி கராயதே
நமோ நமஸ்தே ஸத்யாய ஸத்யபூர்ணாய கண்டினே

ஏகதந்தாய சுத்தாய ஸுமுகாய நமோ நம:
ப்ரபன்ன ஜன பாலாய ப்ரணதார்த்தி விநாசினே

சரணம்பவ தேவேச ஸந்ததிம் ஸுத்ருடம் குரு
பவிஷ்யந்தி யே புத்ரா மத்குலே கணநாயகம்

தே ஸர்வே தவபூஜார்த்தம் நிரதாஸ்யுர் வரோ மத:
புத்ர ப்ரதம் இதம் ஸ்தோத்ரம் ஸர்வ ஆஸ்தி ப்ரதாயகம்!


புத்திர பாக்கியம் பெற தினசரி பாராயணம் செய்யவும்.



 

ஸ்ரீ சத்யநாராயண அஷ்டோத்திர சதநாமாவளி





ஓம் ஸத்ய தேவாய நம
ஓம் ஸத்யாத்மனே நம
ஓம் ஸத்ய பூதாய நம
ஓம் ஸத்ய புருஷாய நம
ஓம் ஸத்ய நாதாய நம
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
ஓம் ஸத்ய யோகாய நம
ஓம் ஸத்ய ஜ்ஞானாய நம
ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நம
ஓம் ஸத்யநிதயே நம

ஓம் ஸத்ய ஸம்பவாய நம
ஓம் ஸத்ய ப்ரபவே நம
ஓம் ஸத்யேஸ்வராய நம
ஓம் ஸத்ய காமினே நம
ஓம் ஸத்ய பவித்ராய நம
ஓம் ஸத்ய மங்களாய நம
ஓம் ஸத்ய கல்பாய நம
ஓம் ஸத்ய ப்ரஜாபதயே நம
ஓம் ஸத்ய விக்ரமாய நம
ஓம் ஸத்ய ஸித்தாய நம

ஓம் ஸத்ய அச்யுதாய நம
ஓம் ஸத்ய வீராய நம
ஓம் ஸத்ய போகாய நம
ஓம் ஸத்ய தர்மாய நம
ஓம் ஸத்ய க்ரஜாய நம
ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நம
ஓம் ஸத்ய வராஹாய நம
ஓம் ஸத்ய பாராயணாய நம
ஓம் ஸத்ய பூர்ணாய நம
ஓம் ஸத்ய ஒளஷதாய நம

ஓம் ஸத்ய சாஸ்வதாய நம
ஓம் ஸத்ய ப்ரவர்தனாய நம
ஓம் ஸத்ய விபவே நம
ஓம் ஸத்ய ஜேஷ்டாய நம
ஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நம
ஓம் ஸத்ய விக்ரமினே நம
ஓம் ஸத்ய தன்வினே நம
ஓம் ஸத்ய மேதாய நம
ஓம் ஸத்ய தீராய நம
ஓம் ஸத்ய க்ரதுவே நம

ஓம் ஸத்ய கலாய நம
ஓம் ஸத்ய வத்ஸலாய நம
ஓம் ஸத்ய வாஸவே நம
ஓம் ஸத்ய மோகாய நம
ஓம் ஸத்ய ருத்ராய நம
ஓம் ஸத்ய ப்ரும்ஹணே நம
ஓம் ஸத்ய அம்ருதாய நம
ஓம் ஸத்ய வேதாங்காய நம
ஓம் ஸத்ய சதுராத்மனே நம
ஓம்  ஸத்ய போக்த்ரே நம

ஓம் ஸத்ய ஸுசாய நம
ஓம் ஸத்ய அர்சிதாய நம
ஓம் ஸத்யேந்திராய நம
ஓம் ஸத்ய ஸங்காய நம
ஓம் ஸத்ய ஸ்வர்காய நம
ஓம் ஸத்ய நியமாய நம
ஓம் ஸத்ய வேதாய நம
ஓம் ஸத்யவேத்யாய நம
ஓம் ஸத்ய பீயூஷாய நம
ஓம் ஸத்ய மாயாய நம

ஓம் ஸத்ய மோஹாய நம
ஓம் ஸத்ய ஸுரநந்தாய நம
ஓம் ஸத்ய ஸாகராய நம
ஓம் ஸத்ய தபஸே நம
ஓம் ஸத்ய ஸிம்ஹாய நம
ஓம் ஸத்ய ம்ருகாய நம
ஓம் ஸத்ய லோக பாலகாய நம
ஓம் ஸத்ய ஸ்திராய நம
ஓம் ஸத்யௌஷதாய நம
ஓம் ஸத்ய திக்பாலகாய நம

ஓம் ஸத்ய தனுர்தராய நம
ஓம் ஸத்ய புஜாய நம
ஓம் ஸத்ய வாக்யாய நம
ஓம் ஸத்ய குரவே நம
ஓம் ஸத்ய ந்யாயாய நம
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
ஓம் ஸத்ய ஸம்விருதாய நம
ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நம
ஓம் ஸத்ய வஹ்னயே நம
ஓம் ஸத்ய வாயவே நம

ஓம் ஸத்ய சிக்ஷராய நம
ஓம் ஸத்யானந்தாய நம
ஓம் ஸத்ய நீரஜாய நம
ஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நம
ஓம் ஸத்ய குஹ்யாய நம
ஓம் ஸத்யோதராய நம
ஓம் ஸத்ய ஹ்ருதயாய நம
ஓம் ஸத்ய கமலாய நம
ஓம் ஸத்ய நாலாய நம
ஓம் ஸத்ய ஹஸ்தாய நம

ஓம் ஸத்ய பாஹவே நம
ஓம் ஸத்ய ஜிஹ்வாய நம
ஓம் ஸத்ய முக்காய நம
ஓம் ஸத்ய தம்ஷ்டராய நம
ஓம் ஸத்ய நாஸிகாய நம
ஓம் ஸத்ய ஸ்ரோத்ரே நம
ஓம் ஸத்ய சக்ஷுஷே நம
ஓம் ஸத்ய ஸிரஸே நம
ஓம் ஸத்ய மகுடாய நம
ஓம் ஸத்யாம்பராய நம

ஓம் ஸத்ய ஆபரணாய நம
ஓம் ஸத்ய ஆயுதாய நம
ஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய நம
ஓம் ஸத்ய குப்தாய நம
ஓம் ஸத்ய த்ருதாய நம
ஓம் ஸத்யபாமா ரதாய நம
ஓம் ஸத்ய கரஹரூபிணே நம
ஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நம.



 

முத்தாலம்மன் போற்றி


ஓம் அம்மையே முத்தால பரமேஸ்வரியே போற்றி
ஓம் ஆதிமுதற் சக்தியே போற்றி
ஓம் இதய இருள் நீக்குபவளே போற்றி
ஓம் ஈகையுடையோளே போற்றி
ஓம் உமையாம்பிகையே போற்றி
ஓம் ஊரைக் காப்பவளே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் நிறைந்தவளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை தருபவளே போற்றி

ஓம் ஓங்கார நாயகியே போற்றி
ஓம் ஒளடதத்து நாயகியே போற்றி
ஓம் கல்வி தந்தவளே போற்றி
ஓம் காத்து அருள்பவளே போற்றி
ஓம் கிழமையானவளே போற்றி
ஓம் கீர்த்தி தருபவளே போற்றி
ஓம் குறைகள் பொறுப்பவளே போற்றி
ஓம் கூட்டம் நிறைப்பவளே போற்றி
ஓம் கெங்கா தேவியே போற்றி
ஓம் கேள்வி ஞானமே போற்றி

ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கொடுத்து அருள்பவளே போற்றி
ஓம் கோமாதாவே போற்றி
ஓம் கௌரி அம்பிகையே போற்றி
ஓம் சக்தி தேவியே போற்றி
ஓம் சங்கடம்  ஒழிப்பவளே போற்றி
ஓம் சித்தி உடையவளே போற்றி
ஓம் சீர்மை நாயகியே போற்றி
ஓம் சுகம் தருபவளே போற்றி
ஓம் சூதை அளிப்பவளே போற்றி

ஓம் செண்பகா தேவியே போற்றி
ஓம் செந்தமிழ் வாசகியே போற்றி
ஓம் சைகை புரிந்தவளே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சோகம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் சௌந்திர நாயகியே போற்றி
ஓம் அஞ்ஞானம் அழிப்பவளே போற்றி
ஓம் மெய்ஞ்ஞான ஒளியே போற்றி
ஓம் கண்ணின் ஒளியே போற்றி
ஓம் கண்ணாத்தாள் தாயே போற்றி

ஓம் அணிகலன் தருபவளே போற்றி
ஓம் அணிமணிகள் நாதமே போற்றி
ஓம் வீணையின் நாயகியே போற்றி
ஓம் வினைகள் நீக்குபவளே போற்றி
ஓம் அணுவின் அணுவே போற்றி
ஓம் அனாத ரக்ஷகியே போற்றி
ஓம் பிணியை ஒழிப்பவளே போற்றி
ஓம் பிழை பொறுத்தருள்பவளே போற்றி
ஓம் காணியாய் நிற்பவளே போற்றி
ஓம் காளிகா தேவியே போற்றி

ஓம் தினை தேன் தருபவளே போற்றி
ஓம் தித்திக்கும் மாவிளக்கே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தானம் தருபவளே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தங்க முத்துமாரியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை குணத்தாளே போற்றி
ஓம் தென்றலாய் ஆனவளே போற்றி

ஓம் தேசம் காப்பவளே போற்றி
ஓம் தைத் திங்கள் சங்கரியே போற்றி
ஓம் தொல்லை நீக்குபவளே போற்றி
ஓம் தொண்டர்க்கு அருள்பவளே போற்றி
ஓம் தோழமை உடையாளே போற்றி
ஓம் தோசம் அகற்றுபவளே போற்றி
ஓம் நன்மை தருபவளே போற்றி
ஓம் நர்த்தன நாயகியே போற்றி
ஓம் நாட்டிய தேவியே போற்றி
ஓம் நாக தேவியே போற்றி

ஓம் புனித அருளே போற்றி
ஓம் நித்திய கல்யாணியே போற்றி
ஓம் நேசம் அளிப்பவளே  போற்றி
ஓம் நீதி காப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொடுப்பவளே போற்றி
ஓம் நுண்ணறிவானவளே போற்றி
ஓம் நூலை கொடுத்தவளே போற்றி
ஓம் நூலாய் ஆனாய் போற்றி
ஓம் நெறி வகுத்தவளே போற்றி
ஓம் நெய்யாய் உறைபவளே போற்றி

ஓம் நெஞ்சம் நிறைபவளே  போற்றி
ஓம் நொடியில் அருள்பவளே  போற்றி
ஓம் நன்மை தருபவளே  போற்றி
ஓம் பரமன் தேவியே போற்றி
ஓம் பரமக்குடி காப்பவளே போற்றி
ஓம் பாடலின் இசையே போற்றி
ஓம் பிச்சியாய் ஆனவளே போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிறவா வரமருள்வாய் போற்றி
ஓம் பிள்ளைகளை காப்பவளே போற்றி

ஓம் புத்தொளி அருள்பவளே போற்றி
ஓம் புதுமை தருபவளே போற்றி
ஓம் புவனங்கள் ஆள்பவளே போற்றி
ஓம் பூமாதாவே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூமாரியே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூவாய் ஆனவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் பூமா தேவியே போற்றி

ஓம் முண்டக கண்ணியே  போற்றி
ஓம் முத்தொழில் புரிபவளே  போற்றி
ஓம் மங்கள விளக்கே போற்றி
ஓம் மகேசன் துணையே போற்றி
ஓம் மங்கள வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தவளே போற்றி
ஓம் மாமறை போற்றும் நிதியே போற்றி
ஓம் மூவுலகும் தொழும் முத்தால அம்மையே போற்றி போற்றி


 முத்துமாரி அம்மன் போற்றி!

ஓம் முத்துமாரி அம்மையே உமையவளே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி

ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உன்னத வாழ்வளிப்பாய்  போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி

ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி

ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி

ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிவரம்  தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி

ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி

 ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி

 ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் முத்து மாரி நாயகியே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் சோத்து கண்ணி  வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

 

நவமங்களி ஸ்தோத்திரம்!




அம்பாளின் அருளைப் பெற, எல்லா விருப்பங்களும் நிறைவேற

காத்யாயனி மஹாமாயே பவானி புவனேச்வரி
ஸம்ஸார ஸாகரே மக்நாத் உத்தர ஸ்ரீ க்ருபாமயி

தன்யோ(அ)அதிபாக்யோ (அ)ஹம் பாவிதோ(அ)ஹமஹாத்மபி:
யத்ப்ருஷ்டம்ஸூமஹத் புண்யம்புராணம் வேதவித்ருதம்

நமோ தேவ்யைப்ரக்ருத்யை சவிதாத்ர்யை ஸததம் நம:
கல்யாண்யை காமதாயை சவ்ருத்யை ஸித்யை நமோ நம:

ஸச்சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரணயே நம:
பஞ்ச க்ருத்யை விதாத்ர்யைச புவனேச்வர்யை நமோ நம:

க்ரீடா தே லோகரசனா ஸகா தே சின்மய: சிவ:
ஆஹாரஸ் தே ஸதானந்த: வாஸஸ் தே ஹ்ருதயம் மம

நம: சிவாயை கல்யாண்யை சாந்த்யை புஷ்ட்யை நமோ நம:
பகவத்யை நமோ தேவ்யை ருத்ராயை ஸததம் நம:

ஜயஜய ஜயாதாரே ஜயசீலே ஜயப்ரதே
யஜ்ஞ ஸூகர ஜாயே த்வம் ஜயதேவி ஜயாவஹே

ஸூகதே மோக்ஷதே தேவி ப்ரஸன்னா பவ ஸூந்தரி
புஷ்பஸாரா நந்நீதீயா துளஸீ க்ருஷ்ண ஜீவனீ

நமஸ்தே துளஸீரூபே நமோ லக்ஷ்மீ ஸரஸ்வதீ
நமோ துர்க்கே பகவதி நமஸ்தே ஸர்வ ரூபிணி!




 

வரலட்சுமி விரதம்

 
 

பெயரே வரலக்ஷ்மி பூஜை.   கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் பூஜை.
மகாலட்சுமி, பாற்கடலில் அவதரித்தவள். மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.

வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கநகை ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும். கொழுக்கட்டை நைவேத்யம் செய்ய வேண்டும். பின்பு பூஜை செய்ய வேண்டும்.

அப்போது, அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது.

ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும். பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும்.

தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையிலும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள். வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள்.

பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம்.

மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.

வரலக்ஷ்மி அம்மன் பூஜையின் விபரம்

தாமரச் சொம்பிலோ, அல்லது வெள்ளிச் சொம்பிலோ சுண்ணாம்பு பூசி, ஸ்ரீ தேவியின் முகத்தை செங்காவியினால் எழுதி கலசத்திற்குள் சோபனத்திரவ்யம் (அரிசி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, ஸ்வர்னம்) போட்டு:

ஓலை, கருகமணி போட்டு; கண்ணாடி, சீப்பு, வைத்து கலசத்தில் மாவிலை தேங்காய் வைத்து, ஆபரணம் பூமாலை இவைகளால் அலங்கரிக்க வேண்டும். ரேழியில் மாவு கோலம் போட்டு அங்கே தீபம் ஏற்றிவைத்து பலகை மீது கலசத்தை வைத்து தீபாராதனை செய்து மங்களம் பாடி ஹாரத்தி எடுத்து இருசுமங்கலிகள் கைபிடித்து லக்ஷ்மி! ராவேமாயிண்டிகு என்று பாடி உள்ளே கொண்டு போய் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவில் வைத்து நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதன் நடுவில் கலசத்தை வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.

சுவற்றில் சுண்ணாம்பு அடித்து மண்டபம் போல் எழுதி நடுவில் தேவி உருவத்தையும் எழுத வேண்டும். மாலை வேளையே லக்ஷ்மி பூஜைக்கேற்ற காலமாகும். காலத்திற்கேற்றபடி சிலர் காலையிலேயே அனுஷ்டிக்கிறார்கள். ஸ்ரீ குருவை நமஸ்கரித்து ஆசி பெற்று சந்தோஷமான மனதுடன் அம்மனைக் கொண்டாடி பூசித்து நிவேதனம் செய்து மங்களங்கள் பாடினால் லக்ஷ்மி நாராயணனுமாக நம் இல்லத்தில் வாஸம் செய்து சர்வமங்களங்களையும் அளிக்க வல்ல ஸ்ரீ ருக்மணி காந்தனுடைய அருள் ஏற்படும் என்பது திண்ணம்.

ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:
ஓம் ஸ்ரீ ஸத் குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ பாலா திருபுர ஸூந்தர்யை நம:

லக்ஷ்மி ராவே மா இண்டிகி
ஸ்ரீ ராஜபுத்ரி வரலக்ஷ்மி ராவேமா இண்டிகி

அனுபல்லவி

லக்ஷ்மி ராவே மா இண்டிகி லாலிதமுகநேலாகொந்த
சுப்ரஸன்ன சுந்தரி பிருந்தாவன
தேவதாரி - லக்ஷ்மி ராவே மா இண்டிகி

சரணம்

குங்கம பச்ச கஸ்தூரி கோர்க்ய தோன
கோர ஜவ்வாஜூ அங்கித முகனே
சுல கந்தம் சந்தமுக சாம்பிராணி தூபம்
மாதாநீகு ப்ரீ திகா பிரக்யா திகா
சமாபிந்து நம்மா
குண்டுமல்ய லமரகானு தண்டிக சாமந்தியா
பூலு மேலைன பாரிஜாதமு மாதாமீகு
ப்ரீதிகா ப்ரக்யாதிகா சமர்ப்பிந்து நம்மா
அந்தனமனா அன்னி பண்டுலு கதலீ
நிம்மாதிபலமுலு ஸததமு கல்ஜூரபலமு
மேலைன தாளிம்பலமு பண்டு வெந்நலா
ஸெள பத்மாக்ஷி நின்னே பூஜந்து - லக்ஷ்மி
பூஜா சேதா முராரே மன கௌரிகி
பூஜா சேதா முராரே த்ரேஜா முகா நேடு
ராஜீவாக்ஷிலு மேமு ஜாஜி பூலா (பூஜா சேஸ்தா முராரே)

பங்காரு தட்டலதோ பொங்குக புஷ்பமுலு
மங்கள வாத்யமுதோ மனகௌரிகு
பூஜா சேஸ்தாமுராரே - கெந்த குங்கும ஆனந்த மூகானு தெச்சி
இந்துவதனலார இந்திரக்ஷிகி (பூஜா சேஸ்தா முராரே)

குண்டு முல்யாபூலு நிண்டு முகிலுபூலு தண்டீக
கட்டி ஜடநிண்டா சுட்டி
பங்கஜபாணிகி பரம கல்யாணிகி சங்கரி
ராணிகி சிவ வேணிகி (பூஜா சேஸ்தா முராரே)

கௌரீ கல்யாணமே - வைபோகமே
ரம்மி முத்துலகம்மா ரம்மி மாயம்மா ராவம்மா
ஜானகி ரமணீய ரத்னம்மா
சில கல குலுகிரோ சிருங்கார கௌரீ

தலகனி நிரு பூலத் ரோய ஜகந்தி
வேகரா மஹாலக்ஷ்மிவேக ராவம்மா
வேண்டி கொடுகு நீட வேகரா ராவம்மா
பக்திதோ கொலிசன பண தூலபால வெளிசி

னாவு நித்ய கல்யாண முகனு
ஜகதீச்வரி நின்ன அடிகின வரமுலு
இச்சே தல்லி வரலக்ஷ்மிக்கு வஜ்ரால
ஹாரதிலு எத்திதரே சாலபூவுலு

சுட்டி சர்வாபரணமுலு தொடிகி சந்தோஷ
முகநீவு ஒச்சே தல்லி
வஜ்ராலபிடமுல வெலகு சுன்ன தல்லி
கலிகே இண்டிகி ஒச்சே லக்ஷ்மி ஜய மங்களம்

பூஷணா நினு கொலுது புஷ்பானுநினு கொலுது
கெந்தானினு கொலுது சந்தானலு எப்புடு
நின்னு கொலுசி ஏகசித்த மமேனனு பாயக நீன
கொலுது பரமேச்வரி

சங்கரீ ஜகதம்ப ஜகந் நித்யகல்யாணி
பங்கஜ தள நேத்ரீ பாவன பாஹிமாம்
கான்தோசிரோன்மணி கமலதள நேத்ரீ
மந்தர புஷ்பம் பெட்டி மங்களலக்ஷ்மிகி

1. வரலெக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட
ச்ருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு
தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும் (ஜெய)

2. கைலாஸந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேச்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)

3. சொல்பொரியே ஈசுவரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விருதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)

4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)

5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியாளாம் (ஜெய)

6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லாமலே (ஜெய)

7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)

8. என்னை நீபூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)

9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டு உகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)

10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் எனறு
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள் (ஜயசுப)

11. நித்யமா வரலெக்ஷிமி முக்தி தரும் நாயகி சித்தத்திலே மறைஞ்சு
செல்வமாக்கும் சித்திரம் எழுதியே சிறப்பாக கிரகந்தனில்
முத்திடித்து கோலம்போட்டு முஹூர்த்தம் பார்த்து

12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும் (கட்டின பூப்பந்தல்)
கல்யாணிக்கு ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு

13. ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள் (ஜய)
நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜய)

14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி ஸகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள் (ஜய)

15. வரலெக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்
மாணிக்க சிம்மாஸனங்கள் போட்டு கற்பூரஹாரத்தி
காக்ஷியுடனே எடுத்து கைபிடித்து கிரகந்தனிலே
அழைத்து வந்தார் (ஜய)

16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிரொதரி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு

17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜய)

18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார் (ஜய)

19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமங்கலியம் புது பவழமாலைகளும்
மட்டில்லா பூ ஷணங்கள் எடுத்து நிறைத்தாள் (ஜய)

20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல நத்து மூக்குத்தியும் நல்ல
முத்து புல்லாக்கு அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள்

21.மல்லிகை ஜெண்பகம்மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் கொட மல்லிகை
சித்தாக செந்தாழை சிறுமடலைமாலை கட்டிவைத்து
மலர் சொரிந்தாள் வரலெக்ஷிமிக்கு (ஜய)

22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலெக்ஷிமி
புகழ்ந்து கொண்டாள் (ஜயமங்களம்)

23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும் (ஜய)

24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறைத்தார்
கொத்து மாஇலை தேங்காய் கொண்டாடியே
எடுத்து பிராணப்ரதிஷ்டை பண்ணினாள் (ஜய)

25. மங்கையர் கங்காஜல மெடுத்து வந்து
சிங்கார வரலெக்ஷிமி திருக்கைகளை
சம்பிரமாக பொடி பூசி சதுராகவே நிறுத்தி
அன்புடன் ராஜ உபசாரம் செய்தாள் (ஜயமங்க)

26. பேரியோடு மத்தாளம் பெரிய தொரு நாதசுரம்
தவுல் ஜால்ரா ஸாரஸங்கள் ஊத
அங்கவங்க தவளரஸம் அம்மனுக்கு வேணுமென்று
இன்பமாகவே பொற்குடத்தில் இருந்து கொண்டாள் (ஜய)

27. தும்புரு நாரதர் சுப வீணை வாசிக்க ரம்பை
திலோத்தமை நாட்டியமாட சந்ததம் பக்தர்கள்
ஸ்ந்நிதியில் ஸதோத்தரித்து இந்த விருதம்போல
உலகத்தில் இல்லை என்றார் (ஜய)

28. வாத்தியாரை வரவைத்து வரிசையாய் மணை
மகிமையுள்ள லக்ஷ்மிகதை மறவாதீர் நீர் போட்டு
எந்தனுக்கு சொல்லுமென்று இஷ்டமான மங்கையர்கள்
சட்டமாக பூஜிக்க வந்திருந்தார் (ஜய)

29. மங்கையர் சொன்னபடி மகிழ்ந்த வாத்தியார்
அன்புடனே அம்மன் சொன்ன சொப்பனத்தை
சம்பிரமமாக கல்பமாய் சகல கதை உண்டாக்கி
லக்ஷ்மிகதை சொல்லவே வந்திருந்தார் (ஜய)

30. பூவினால் பூஜீத்து பூலோக நாயகியை
அக்ஷதையால் அர்ச்சித்து ஆனந்தமாய்
பக்ஷமாய் வரலெக்ஷ்மி பரதேவதை என்று
இஷ்டமான நிவெத்தியங்கள் எடுத்து நிறைந்தார் (ஜய)

31. வடையுடனே அதிரஸம் வகையான பணியாரம்
கதல ஜம்பூபலம் கனத்த தேங்காய், பானகம் வடப் பருப்பு
பஞ்சாமிருதம் தேனும், இளநீரும் செங்கரும்பும்
எடுத்து நிறைந்தார்

32. அப்பமொடு இட்லி ஆனதொரு மோதகம்
சக்கரைப் பொங்கலுடன் சிருபருப்பு பொங்கல்
கருச்சிக்காய் தேங்குழல் கட்டித்தயிர் சால்யன்னம்
பரிபூர்ணமாய் நிவேத்யம் செய்தாள் பாக்கிய லெக்ஷ்மிக்கு
பரிபூர்ணமாய் பூஜித்தாள் பாக்யலெக்ஷிமியை (ஜய)

33. அகில தேவர்களே நீர்வந்தது சுபமாச்சு என
சொல்லி போஜன உபசாரங்கள் செய்தார்
வந்தவர் எல்லோரும் ஆனந்தமாகவே
அந்தக்ஷணம் மேளம் அமர்த்தி கையினால் (ஜய)

34. பந்தானத்தோட பரதேவதை சந்நிதிக்கு
வந்தாளே மங்கள ஹாரத்தி எடுக்க
பொன்னான இருபுறமும் புகழ்ந்து ஜோதிவைத்து
நன்றாக வெளுத்த திரி நனைத்துப் போட்டு (ஜய)

35. அற்புதமான பசுவின்நெய்யை அழகு அழகாய் வார்த்து
திருவிளக்கை சேர்த்து பிடித்தார்
பொன்னான அந்த நல்ல தாம்பளம் கைபிடித்து
நன்றாகவே சிரஸைவணங்கிக்கொண்டு (ஜய)

36. கல்யாண லக்ஷ்மியைக் காண வேண்டுமென்று
சொன்னாளே மங்கள ஸ்தோத்ர கதையை
அன்னலக்ஷிமி அம்மன் ஆதிலெக்ஷி அம்மன்
பொன்னுலக்ஷிமி அம்மன் புகழும் லெக்ஷிமி அம்மன் (ஜய)

37. தான்யலக்ஷ்மி அம்மன் தனலக்ஷ்மி அம்மன்
சந்தான லெக்ஷிமி சகல லக்ஷிமி அஷ்டலெக்ஷிமி
அம்மன் எல்லோரும் வந்திருந்து கஷ்டமெல்லாம்
தீர்த்து கண்டவுடனே (ஜய)

38. பரிமள மணக்கவே பாவையர்கள் பல்லாக்கு
எடுத்து சிம்மாசனத்தில் இளைப்பாரி பின்
வெள்ளெலையும்வெடக்காயும்வெளுத்ததொரு சுண்ணாம்பும்
பல்லையொத்த பச்சக் கற்பூரம் வைத்து (ஜய)

39. அளளி வெண்ணை திருடி ஆனந்தமாய் புஜிக்கும்
கள்ள கிருஷ்ணன் தேவியார்க்கு கட்டி கொடுத்தாள்
மடிப்பு டனே வெற்றிலையும் மணக்க நல்ல களிப்பாக்கு
எடுத்து வெள்ளித்தட்டில் வைத்தாள் இன்பமாக (ஜய)

40. படித்த வேதம் சொல்லும் பக்தியுள்ள ஜனங்களுக்கு
கொடுத்தாளே தாம்பூலம் வகையுடனெ
முதலாக வாத்தியாருக்கு பலகாரம் தக்ஷிணை
வரிசையாய் தாம்பூலம் வைத்துகொடுத்தாள் (ஜய)

41. மட்டில்லா சந்தோஷம் மானிடருக்கு உண்டாக்க
அஷ்டலெக்ஷிமியுடனேகிரகத்திலிருப்பாளென்று
முத்யால ஹாரத்தி வஜ்ராள ஹாரத்தி பவழஹாரத்தி
பரதேவதைக்கு (ஜய)

42. மாணிக்க ஹாரத்தி வரலெக்ஷிமி அம்மனுக்கு வரிசையாய்
பூமிதனில் இரக்கிகொண்டு இருக்கவேவரலெக்ஷ்மி
இஷ்டமாய் கிரகந்தனில் பரிபூர்ணமாகவே
இருந்து கொண்டாள் (ஜய)

43. பட்டணத்தோட பாவையர்கள் வந்திருக்க
குணமான ஜனங்களெல்லாம் கூடித்தெருவில்
எஜமானர் முகம்பார்ப்பார் இஷ்டமாக ஸ்தோத்தரிப்பார்
உம்மைப்போல் குணமுடையவர் உலகத்திலில்லை (ஜய)

44. சாருமதி அம்மனுக்கும் சகல குணசீலர்க்கும்
ஜய ஜய என்று சொல்லி ஜனங்களெல்லாம் சந்தோஷிக்க
வந்தவர்கள் எல்லோரும் மாளிகைக்குபோன பின்
அண்டையில் இருந்து வந்து ஜனங்கள் (ஜய)

45. சட்டமாய் பலகாரம் தாம்பூலம்தான் தரிச்சு
லக்ஷிமியின் சந்நிதியில் இளைப்பாறினர்
குன்றெடுத்து காத்தவருக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு
கோபிகளை மயங்கவைத்த கோவிந்தருக்கும் (ஜய)

46. ஈரேழு விஷ்ணுவிற்கும் எடுத்தப்பட்டம் தரிச்சவருக்கும்
எங்கள் குருநாதருக்கும் ஸ்ரீ பாலா தேவிக்கும்
கலியாண ராமருக்கும் ஜெயமங்களம் (ஜெயசுப)

சோபானை

1. மதுராலவெலசின மகிமாதலதல்லி நீவே
மாமித்ய உனிசினம்மு ரக்ஷிஞ்சவம்மா
ஒச்சினவாரிகி வரமுலிச்சே தல்லி
இச்சி ரெக்ஷிஞ்சலம்மா ஈசுவரி மீனாக்ஷிகி ப்ரோவவே (சோபானே)

2. அந்தன மனசேதனு அமரின சேகக்ஷ்க்ஷி
பந்துக கம்மலு பளபள நிறையக
முக்குண முந்தக முமெலா வெலுக்க
முந்துலாகுசூசி உளிதோ கொலுவையுண்டே மீனாக்ஷி (சோபானே)

3. சுக்ரவார பூசேர்வ சூடவேடுகலாய
எக்குண நீ சேர்வா என்னாடே தொரகுனு
ஸக்கக மொக்கேடி தண்டாலுக துல்க
ஸல்லாபக்ருபாஜூடிதல்லி ஜகன்மோகினி (சோபானை)

4. ப்ரோவே மாமித சோடு முலெஞ்ச கபாலிம்புட
மம்முவார முகாதேவி ப்ரோவவே (சோபானை)

பூஜை முடித்து மறுதினம் ஹாரத்தி எடுத்து கலசத்துடன், பாலும் பழமும் அரிசிவைக்கும் பெட்டியிலோ அல்லது அவரவர்களுக்கு உண்டான அரிசி நிறைந்திருக்கும் பாத்திரத்திற்குள் கலசத்தை வைக்கவேண்டும்.

அம்மனை அனுப்புகிற பாட்டு

க்ஷீராப்தி நாதருடன் ஸ்ரீ வரலெக்ஷிமியுடன் சேர பள்ளியறைக்குச் சென்றாள், அம்மன் சியாமள வர்ணனைக் கண்டாள். வந்தோர் வரலெக்ஷ்மியை வாஸூ தேவரும் கண்டு வஸூந்தரர் ஸகோதரி வாவென்றார் இரு கையாலும் சேர்த்து அனைத்துக்கொண்டார். சுந்தரவதன முக சுந்தரி உந்தன் மேல் சாந்தமும் காதல் கொண்டேனடி இத்தனை தாமதங்கள் ஏனடி....

பங்கஜ தயணியைக் கொஞ்சி மடியில் வைத்துக்கொண்டார். இன்பமாய் சேதிகளை கேளுங்ககோ என்று அம்மன் சந்தோஷமாக உரைத்தாள். பிராண நாயகரே நான் போகுமுன் அன்பர்கள் நன்றாய் வீதிகளெல்லாம் அலங்கரித்து சேர்வை எப்போது காண்போம் என்று காத்து பிரார்த்தித்தார்கள். (சோபானை)

சந்திரன் கண்ட சாகரம்போல் என்னை கண்டவுடன் பூரித்தார்கள். மங்களவாத்தியங்கள் கோஷித்தார். சந்தன பரிமள வெகுவித புஷ்பங்களால் எந்தனை பூஜை செய்தார்கள். பலவித பழவகைகள் வெகுவித நிவேத்தியங்கள் கனக தட்டில் முன்கொண்டு வைத்தாள். கற்பூர ஹாரத்தி எடுத்து பூஜித்த பெண்களுக்கு அபீஷ்டவரம் கொடுத்து உம்மைக் காணவந்தேன். நாம் இருவரும் அவர்கள் இல்லத்தில் ஆனந்தமாக இருக்க அருள்புரியும் நாதா. (சோபானை)

பார்வதி உள்ளத்தில் பரிபூர்ணமாய் இருந்துமே
மங்காத செல்வமும் அருளும் தந்து அஷ்ட
லெக்ஷ்மியுடன் நாமும் ஆனந்தமாகவே
மங்கள கரமாகவே மகிழடைவோம் (சோபாநை)

ஜயமங்களம் சுபமங்களம் ஸ்ரீ வரலக்ஷிமிக்கு
ஜயமங்களம் சுபமங்களம்.