பெயரே வரலக்ஷ்மி பூஜை. கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் பூஜை.
மகாலட்சுமி, பாற்கடலில் அவதரித்தவள். மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.
வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கநகை ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும். கொழுக்கட்டை நைவேத்யம் செய்ய வேண்டும். பின்பு பூஜை செய்ய வேண்டும்.
அப்போது, அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது.
ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும். பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையிலும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள். வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள்.
பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம்.
மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.
வரலக்ஷ்மி அம்மன் பூஜையின் விபரம்
தாமரச் சொம்பிலோ, அல்லது வெள்ளிச் சொம்பிலோ சுண்ணாம்பு பூசி, ஸ்ரீ தேவியின் முகத்தை செங்காவியினால் எழுதி கலசத்திற்குள் சோபனத்திரவ்யம் (அரிசி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, ஸ்வர்னம்) போட்டு:
ஓலை, கருகமணி போட்டு; கண்ணாடி, சீப்பு, வைத்து கலசத்தில் மாவிலை தேங்காய் வைத்து, ஆபரணம் பூமாலை இவைகளால் அலங்கரிக்க வேண்டும். ரேழியில் மாவு கோலம் போட்டு அங்கே தீபம் ஏற்றிவைத்து பலகை மீது கலசத்தை வைத்து தீபாராதனை செய்து மங்களம் பாடி ஹாரத்தி எடுத்து இருசுமங்கலிகள் கைபிடித்து லக்ஷ்மி! ராவேமாயிண்டிகு என்று பாடி உள்ளே கொண்டு போய் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவில் வைத்து நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதன் நடுவில் கலசத்தை வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
சுவற்றில் சுண்ணாம்பு அடித்து மண்டபம் போல் எழுதி நடுவில் தேவி உருவத்தையும் எழுத வேண்டும். மாலை வேளையே லக்ஷ்மி பூஜைக்கேற்ற காலமாகும். காலத்திற்கேற்றபடி சிலர் காலையிலேயே அனுஷ்டிக்கிறார்கள். ஸ்ரீ குருவை நமஸ்கரித்து ஆசி பெற்று சந்தோஷமான மனதுடன் அம்மனைக் கொண்டாடி பூசித்து நிவேதனம் செய்து மங்களங்கள் பாடினால் லக்ஷ்மி நாராயணனுமாக நம் இல்லத்தில் வாஸம் செய்து சர்வமங்களங்களையும் அளிக்க வல்ல ஸ்ரீ ருக்மணி காந்தனுடைய அருள் ஏற்படும் என்பது திண்ணம்.
ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:
ஓம் ஸ்ரீ ஸத் குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ பாலா திருபுர ஸூந்தர்யை நம:
லக்ஷ்மி ராவே மா இண்டிகி
ஸ்ரீ ராஜபுத்ரி வரலக்ஷ்மி ராவேமா இண்டிகி
அனுபல்லவி
லக்ஷ்மி ராவே மா இண்டிகி லாலிதமுகநேலாகொந்த
சுப்ரஸன்ன சுந்தரி பிருந்தாவன
தேவதாரி - லக்ஷ்மி ராவே மா இண்டிகி
சரணம்
குங்கம பச்ச கஸ்தூரி கோர்க்ய தோன
கோர ஜவ்வாஜூ அங்கித முகனே
சுல கந்தம் சந்தமுக சாம்பிராணி தூபம்
மாதாநீகு ப்ரீ திகா பிரக்யா திகா
சமாபிந்து நம்மா
குண்டுமல்ய லமரகானு தண்டிக சாமந்தியா
பூலு மேலைன பாரிஜாதமு மாதாமீகு
ப்ரீதிகா ப்ரக்யாதிகா சமர்ப்பிந்து நம்மா
அந்தனமனா அன்னி பண்டுலு கதலீ
நிம்மாதிபலமுலு ஸததமு கல்ஜூரபலமு
மேலைன தாளிம்பலமு பண்டு வெந்நலா
ஸெள பத்மாக்ஷி நின்னே பூஜந்து - லக்ஷ்மி
பூஜா சேதா முராரே மன கௌரிகி
பூஜா சேதா முராரே த்ரேஜா முகா நேடு
ராஜீவாக்ஷிலு மேமு ஜாஜி பூலா (பூஜா சேஸ்தா முராரே)
பங்காரு தட்டலதோ பொங்குக புஷ்பமுலு
மங்கள வாத்யமுதோ மனகௌரிகு
பூஜா சேஸ்தாமுராரே - கெந்த குங்கும ஆனந்த மூகானு தெச்சி
இந்துவதனலார இந்திரக்ஷிகி (பூஜா சேஸ்தா முராரே)
குண்டு முல்யாபூலு நிண்டு முகிலுபூலு தண்டீக
கட்டி ஜடநிண்டா சுட்டி
பங்கஜபாணிகி பரம கல்யாணிகி சங்கரி
ராணிகி சிவ வேணிகி (பூஜா சேஸ்தா முராரே)
கௌரீ கல்யாணமே - வைபோகமே
ரம்மி முத்துலகம்மா ரம்மி மாயம்மா ராவம்மா
ஜானகி ரமணீய ரத்னம்மா
சில கல குலுகிரோ சிருங்கார கௌரீ
தலகனி நிரு பூலத் ரோய ஜகந்தி
வேகரா மஹாலக்ஷ்மிவேக ராவம்மா
வேண்டி கொடுகு நீட வேகரா ராவம்மா
பக்திதோ கொலிசன பண தூலபால வெளிசி
னாவு நித்ய கல்யாண முகனு
ஜகதீச்வரி நின்ன அடிகின வரமுலு
இச்சே தல்லி வரலக்ஷ்மிக்கு வஜ்ரால
ஹாரதிலு எத்திதரே சாலபூவுலு
சுட்டி சர்வாபரணமுலு தொடிகி சந்தோஷ
முகநீவு ஒச்சே தல்லி
வஜ்ராலபிடமுல வெலகு சுன்ன தல்லி
கலிகே இண்டிகி ஒச்சே லக்ஷ்மி ஜய மங்களம்
பூஷணா நினு கொலுது புஷ்பானுநினு கொலுது
கெந்தானினு கொலுது சந்தானலு எப்புடு
நின்னு கொலுசி ஏகசித்த மமேனனு பாயக நீன
கொலுது பரமேச்வரி
சங்கரீ ஜகதம்ப ஜகந் நித்யகல்யாணி
பங்கஜ தள நேத்ரீ பாவன பாஹிமாம்
கான்தோசிரோன்மணி கமலதள நேத்ரீ
மந்தர புஷ்பம் பெட்டி மங்களலக்ஷ்மிகி
1. வரலெக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட
ச்ருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு
தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும் (ஜெய)
2. கைலாஸந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேச்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)
3. சொல்பொரியே ஈசுவரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விருதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)
4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)
5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியாளாம் (ஜெய)
6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லாமலே (ஜெய)
7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)
8. என்னை நீபூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)
9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டு உகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)
10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் எனறு
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள் (ஜயசுப)
11. நித்யமா வரலெக்ஷிமி முக்தி தரும் நாயகி சித்தத்திலே மறைஞ்சு
செல்வமாக்கும் சித்திரம் எழுதியே சிறப்பாக கிரகந்தனில்
முத்திடித்து கோலம்போட்டு முஹூர்த்தம் பார்த்து
12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும் (கட்டின பூப்பந்தல்)
கல்யாணிக்கு ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு
13. ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள் (ஜய)
நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜய)
14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி ஸகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள் (ஜய)
15. வரலெக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்
மாணிக்க சிம்மாஸனங்கள் போட்டு கற்பூரஹாரத்தி
காக்ஷியுடனே எடுத்து கைபிடித்து கிரகந்தனிலே
அழைத்து வந்தார் (ஜய)
16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிரொதரி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு
17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜய)
18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார் (ஜய)
19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமங்கலியம் புது பவழமாலைகளும்
மட்டில்லா பூ ஷணங்கள் எடுத்து நிறைத்தாள் (ஜய)
20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல நத்து மூக்குத்தியும் நல்ல
முத்து புல்லாக்கு அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள்
21.மல்லிகை ஜெண்பகம்மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் கொட மல்லிகை
சித்தாக செந்தாழை சிறுமடலைமாலை கட்டிவைத்து
மலர் சொரிந்தாள் வரலெக்ஷிமிக்கு (ஜய)
22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலெக்ஷிமி
புகழ்ந்து கொண்டாள் (ஜயமங்களம்)
23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும் (ஜய)
24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறைத்தார்
கொத்து மாஇலை தேங்காய் கொண்டாடியே
எடுத்து பிராணப்ரதிஷ்டை பண்ணினாள் (ஜய)
25. மங்கையர் கங்காஜல மெடுத்து வந்து
சிங்கார வரலெக்ஷிமி திருக்கைகளை
சம்பிரமாக பொடி பூசி சதுராகவே நிறுத்தி
அன்புடன் ராஜ உபசாரம் செய்தாள் (ஜயமங்க)
26. பேரியோடு மத்தாளம் பெரிய தொரு நாதசுரம்
தவுல் ஜால்ரா ஸாரஸங்கள் ஊத
அங்கவங்க தவளரஸம் அம்மனுக்கு வேணுமென்று
இன்பமாகவே பொற்குடத்தில் இருந்து கொண்டாள் (ஜய)
27. தும்புரு நாரதர் சுப வீணை வாசிக்க ரம்பை
திலோத்தமை நாட்டியமாட சந்ததம் பக்தர்கள்
ஸ்ந்நிதியில் ஸதோத்தரித்து இந்த விருதம்போல
உலகத்தில் இல்லை என்றார் (ஜய)
28. வாத்தியாரை வரவைத்து வரிசையாய் மணை
மகிமையுள்ள லக்ஷ்மிகதை மறவாதீர் நீர் போட்டு
எந்தனுக்கு சொல்லுமென்று இஷ்டமான மங்கையர்கள்
சட்டமாக பூஜிக்க வந்திருந்தார் (ஜய)
29. மங்கையர் சொன்னபடி மகிழ்ந்த வாத்தியார்
அன்புடனே அம்மன் சொன்ன சொப்பனத்தை
சம்பிரமமாக கல்பமாய் சகல கதை உண்டாக்கி
லக்ஷ்மிகதை சொல்லவே வந்திருந்தார் (ஜய)
30. பூவினால் பூஜீத்து பூலோக நாயகியை
அக்ஷதையால் அர்ச்சித்து ஆனந்தமாய்
பக்ஷமாய் வரலெக்ஷ்மி பரதேவதை என்று
இஷ்டமான நிவெத்தியங்கள் எடுத்து நிறைந்தார் (ஜய)
31. வடையுடனே அதிரஸம் வகையான பணியாரம்
கதல ஜம்பூபலம் கனத்த தேங்காய், பானகம் வடப் பருப்பு
பஞ்சாமிருதம் தேனும், இளநீரும் செங்கரும்பும்
எடுத்து நிறைந்தார்
32. அப்பமொடு இட்லி ஆனதொரு மோதகம்
சக்கரைப் பொங்கலுடன் சிருபருப்பு பொங்கல்
கருச்சிக்காய் தேங்குழல் கட்டித்தயிர் சால்யன்னம்
பரிபூர்ணமாய் நிவேத்யம் செய்தாள் பாக்கிய லெக்ஷ்மிக்கு
பரிபூர்ணமாய் பூஜித்தாள் பாக்யலெக்ஷிமியை (ஜய)
33. அகில தேவர்களே நீர்வந்தது சுபமாச்சு என
சொல்லி போஜன உபசாரங்கள் செய்தார்
வந்தவர் எல்லோரும் ஆனந்தமாகவே
அந்தக்ஷணம் மேளம் அமர்த்தி கையினால் (ஜய)
34. பந்தானத்தோட பரதேவதை சந்நிதிக்கு
வந்தாளே மங்கள ஹாரத்தி எடுக்க
பொன்னான இருபுறமும் புகழ்ந்து ஜோதிவைத்து
நன்றாக வெளுத்த திரி நனைத்துப் போட்டு (ஜய)
35. அற்புதமான பசுவின்நெய்யை அழகு அழகாய் வார்த்து
திருவிளக்கை சேர்த்து பிடித்தார்
பொன்னான அந்த நல்ல தாம்பளம் கைபிடித்து
நன்றாகவே சிரஸைவணங்கிக்கொண்டு (ஜய)
36. கல்யாண லக்ஷ்மியைக் காண வேண்டுமென்று
சொன்னாளே மங்கள ஸ்தோத்ர கதையை
அன்னலக்ஷிமி அம்மன் ஆதிலெக்ஷி அம்மன்
பொன்னுலக்ஷிமி அம்மன் புகழும் லெக்ஷிமி அம்மன் (ஜய)
37. தான்யலக்ஷ்மி அம்மன் தனலக்ஷ்மி அம்மன்
சந்தான லெக்ஷிமி சகல லக்ஷிமி அஷ்டலெக்ஷிமி
அம்மன் எல்லோரும் வந்திருந்து கஷ்டமெல்லாம்
தீர்த்து கண்டவுடனே (ஜய)
38. பரிமள மணக்கவே பாவையர்கள் பல்லாக்கு
எடுத்து சிம்மாசனத்தில் இளைப்பாரி பின்
வெள்ளெலையும்வெடக்காயும்வெளுத்ததொரு சுண்ணாம்பும்
பல்லையொத்த பச்சக் கற்பூரம் வைத்து (ஜய)
39. அளளி வெண்ணை திருடி ஆனந்தமாய் புஜிக்கும்
கள்ள கிருஷ்ணன் தேவியார்க்கு கட்டி கொடுத்தாள்
மடிப்பு டனே வெற்றிலையும் மணக்க நல்ல களிப்பாக்கு
எடுத்து வெள்ளித்தட்டில் வைத்தாள் இன்பமாக (ஜய)
40. படித்த வேதம் சொல்லும் பக்தியுள்ள ஜனங்களுக்கு
கொடுத்தாளே தாம்பூலம் வகையுடனெ
முதலாக வாத்தியாருக்கு பலகாரம் தக்ஷிணை
வரிசையாய் தாம்பூலம் வைத்துகொடுத்தாள் (ஜய)
41. மட்டில்லா சந்தோஷம் மானிடருக்கு உண்டாக்க
அஷ்டலெக்ஷிமியுடனேகிரகத்திலிருப்பாளென்று
முத்யால ஹாரத்தி வஜ்ராள ஹாரத்தி பவழஹாரத்தி
பரதேவதைக்கு (ஜய)
42. மாணிக்க ஹாரத்தி வரலெக்ஷிமி அம்மனுக்கு வரிசையாய்
பூமிதனில் இரக்கிகொண்டு இருக்கவேவரலெக்ஷ்மி
இஷ்டமாய் கிரகந்தனில் பரிபூர்ணமாகவே
இருந்து கொண்டாள் (ஜய)
43. பட்டணத்தோட பாவையர்கள் வந்திருக்க
குணமான ஜனங்களெல்லாம் கூடித்தெருவில்
எஜமானர் முகம்பார்ப்பார் இஷ்டமாக ஸ்தோத்தரிப்பார்
உம்மைப்போல் குணமுடையவர் உலகத்திலில்லை (ஜய)
44. சாருமதி அம்மனுக்கும் சகல குணசீலர்க்கும்
ஜய ஜய என்று சொல்லி ஜனங்களெல்லாம் சந்தோஷிக்க
வந்தவர்கள் எல்லோரும் மாளிகைக்குபோன பின்
அண்டையில் இருந்து வந்து ஜனங்கள் (ஜய)
45. சட்டமாய் பலகாரம் தாம்பூலம்தான் தரிச்சு
லக்ஷிமியின் சந்நிதியில் இளைப்பாறினர்
குன்றெடுத்து காத்தவருக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு
கோபிகளை மயங்கவைத்த கோவிந்தருக்கும் (ஜய)
46. ஈரேழு விஷ்ணுவிற்கும் எடுத்தப்பட்டம் தரிச்சவருக்கும்
எங்கள் குருநாதருக்கும் ஸ்ரீ பாலா தேவிக்கும்
கலியாண ராமருக்கும் ஜெயமங்களம் (ஜெயசுப)
சோபானை
1. மதுராலவெலசின மகிமாதலதல்லி நீவே
மாமித்ய உனிசினம்மு ரக்ஷிஞ்சவம்மா
ஒச்சினவாரிகி வரமுலிச்சே தல்லி
இச்சி ரெக்ஷிஞ்சலம்மா ஈசுவரி மீனாக்ஷிகி ப்ரோவவே (சோபானே)
2. அந்தன மனசேதனு அமரின சேகக்ஷ்க்ஷி
பந்துக கம்மலு பளபள நிறையக
முக்குண முந்தக முமெலா வெலுக்க
முந்துலாகுசூசி உளிதோ கொலுவையுண்டே மீனாக்ஷி (சோபானே)
3. சுக்ரவார பூசேர்வ சூடவேடுகலாய
எக்குண நீ சேர்வா என்னாடே தொரகுனு
ஸக்கக மொக்கேடி தண்டாலுக துல்க
ஸல்லாபக்ருபாஜூடிதல்லி ஜகன்மோகினி (சோபானை)
4. ப்ரோவே மாமித சோடு முலெஞ்ச கபாலிம்புட
மம்முவார முகாதேவி ப்ரோவவே (சோபானை)
பூஜை முடித்து மறுதினம் ஹாரத்தி எடுத்து கலசத்துடன், பாலும் பழமும் அரிசிவைக்கும் பெட்டியிலோ அல்லது அவரவர்களுக்கு உண்டான அரிசி நிறைந்திருக்கும் பாத்திரத்திற்குள் கலசத்தை வைக்கவேண்டும்.
அம்மனை அனுப்புகிற பாட்டு
க்ஷீராப்தி நாதருடன் ஸ்ரீ வரலெக்ஷிமியுடன் சேர பள்ளியறைக்குச் சென்றாள், அம்மன் சியாமள வர்ணனைக் கண்டாள். வந்தோர் வரலெக்ஷ்மியை வாஸூ தேவரும் கண்டு வஸூந்தரர் ஸகோதரி வாவென்றார் இரு கையாலும் சேர்த்து அனைத்துக்கொண்டார். சுந்தரவதன முக சுந்தரி உந்தன் மேல் சாந்தமும் காதல் கொண்டேனடி இத்தனை தாமதங்கள் ஏனடி....
பங்கஜ தயணியைக் கொஞ்சி மடியில் வைத்துக்கொண்டார். இன்பமாய் சேதிகளை கேளுங்ககோ என்று அம்மன் சந்தோஷமாக உரைத்தாள். பிராண நாயகரே நான் போகுமுன் அன்பர்கள் நன்றாய் வீதிகளெல்லாம் அலங்கரித்து சேர்வை எப்போது காண்போம் என்று காத்து பிரார்த்தித்தார்கள். (சோபானை)
சந்திரன் கண்ட சாகரம்போல் என்னை கண்டவுடன் பூரித்தார்கள். மங்களவாத்தியங்கள் கோஷித்தார். சந்தன பரிமள வெகுவித புஷ்பங்களால் எந்தனை பூஜை செய்தார்கள். பலவித பழவகைகள் வெகுவித நிவேத்தியங்கள் கனக தட்டில் முன்கொண்டு வைத்தாள். கற்பூர ஹாரத்தி எடுத்து பூஜித்த பெண்களுக்கு அபீஷ்டவரம் கொடுத்து உம்மைக் காணவந்தேன். நாம் இருவரும் அவர்கள் இல்லத்தில் ஆனந்தமாக இருக்க அருள்புரியும் நாதா. (சோபானை)
பார்வதி உள்ளத்தில் பரிபூர்ணமாய் இருந்துமே
மங்காத செல்வமும் அருளும் தந்து அஷ்ட
லெக்ஷ்மியுடன் நாமும் ஆனந்தமாகவே
மங்கள கரமாகவே மகிழடைவோம் (சோபாநை)
ஜயமங்களம் சுபமங்களம் ஸ்ரீ வரலக்ஷிமிக்கு
ஜயமங்களம் சுபமங்களம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக