வெள்ளி, 10 ஜூலை, 2015

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்!



 
க்ருத யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார் இவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார். பின்னர் ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு

1. விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.

2. இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.

3. எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.

4. இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம்.
 
இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.


ராவணனை விடப் பலம் பொருந்தியவர். ஒரு சமயம் ராவணணைக் கட்டி இழுத்துச் சிறைப் பிடித்தார் பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி ராவணனை விடுதலை செய்தார்.

இவரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.
 
 
ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்
 
ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே
மஹா சூஷ்மாய தீமஹி
தந்நோ அர்ஜுநஹ் ப்ரசோதயாத்!
 


இவரது மந்திரம் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க, இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெற, அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட, கடன் தீர போன்ற நன்மைகளை நிறைவாய் அருள வல்லது.

தொலைந்து போன நபர்  அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |

ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம| 
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
(........... )கதம் நஷ்டம் சலப்யதே  || 
கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்.
 
கார்த்த வீர்யார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள். இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்பதால் தன்  ஆயிரம் கைகளால் நஷ்டம் வராமல், காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்க உதவ  உதவிக்கழைக்கும் சுலோகம் இது
 
 
இழந்த செல்வ நிலையைத் திரும்பபெற, அடகுவைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட  கீழ்க்கண்ட இரண்டு மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.:-

மந்திரம் 1.

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||

மந்திரம் 2.

க்ருத வீர்ய சுதோ ராஜா சஹஸ்ர புஜமண்டலஹ |
அவதாரோ ஹரே சாக்ஷாத் பாவயேத் சகலம் மம|
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரன மாத்ரேன நஷ்டத்ரவ்யம் ச லப்யதே  || 

செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இவரை வழிபடச் சிறப்பு.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக