மார்கழி மாத முதல் புதன் கிழமை குசேலர் தினமாக குருவாயூரில் கொண்டாடப்படுகிறது.
குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க ஆவலுடன் அவல் கொண்டு சென்ற தினம் மார்கழி மாத முதல் புதன் கிழமை.
ஆகவே அன்றைய தினம் குருவாயூரப்பனுக்கு அவலும், அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது.
அன்றைய தினம் ஸ்ரீ கிருஷ்ணர் குசேலருக்கு அருள் செய்த தினமாதலால் பக்தர்கள் இலையில் அவலும், அச்சு வெல்லமும் கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.
அன்று பக்தர்கள் படிகணக்கில் அவல் தானம் செய்வார்கள்.
அன்றைய தினம் குருவாயூரப்பனுக்கு அவல் படைத்து வணங்குவதால் ஐஸ்வர்யம் பெருகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக