வியாழன், 31 டிசம்பர், 2015

ஸ்ரீ வேங்கடவர் துதிப்பாடல்



அலர்மேல் மங்கை யுறைமார்பனே அமரர்க்கு அரசே
நிலமேல் மாமலை யில் நின்று எல்லோர்க்கும் அருள்பவனே

பல கல்வியையளித்து புலவராய் ஆக் குபவனே
கலியு கவரத வாழ்க நீ வேங்க டவா எம்மானே.

அமர ரும்நர ரும்முனி வரும் வணங்குபவரே
இமயோ ரும் புவி யோரும் வந்தென்றும் வணங்குபவரே
யமன்அசன் வந்துன்னை என்றும் மலரால் போற்றுபவரே
சமம்தரும் விருடகி ரீசவேங் கடவா எம்மானே.

உண்ணும் சோறும் பருகும் நீரும் எல்லார்க்கும் தருவோனே
கண்ணும் கருத்துமாய் யாவரும் மனதால் போற்றுவோனே
மண்ணுல கத்தால் வாழவந்து நின்ற அமரர்கோவே
பண்பரு ணாம்நீல மலைக்கரசே வாழ்க எம்மானே

பஞ்ச மாபாத கம்யாவும் பறந்தோடச் செய்பவனே
வஞ்ச கர்யாவ ரும்விலகி ஓடஓடச் செய்வோனே
தஞ்ச மடைந்தோ ரைதயங்கா துநித்தம் காப்பவனே
அஞ்ச னாத்ரீச வாழ்க வேங்கடவா அருட்கடலே.

கலைமக ளும்மலை மகளும் இருவரும் உன்னுடை
மலையில் வந்து உன்னை மலரால் அர்சனை செய்பவரே
விலையிலா மாணிக்கமே மாமலை தணில் வாழ்பவனே
தலையால் பணிவேன் கருடாத் ரீசனே வேங்கடேசேன

கொடையாய் பாயாய் விதாநமாய் விசிரியாய் விளங்கிடும்
படைநடுங் கும்பணி அரசன் பணிசெய் திருவோனே
வடையழுது செய்வதி லே பிரிய முடையவனே
தடைநீக் கும்சேசாத்ரீசவாழ்க என்றும் வேங்கடேசனே

நலந்தரும் நராணன் நாமம்கொண்டமலை யரசனே
வலம்வந்து உன்னை பணிவோர்க் குவாழ்வு தருபவனே
பலமனைத் தைதந்து பவநா சத்தை தருபவனே
மலையில் நாராய ணாத்ரீச வாழ்கநீ வேங்கடேசனே.

மனிதர் களின் பாவம் போக்
கும் மாமலை யாம் திருமலை
கணிகளும் பூக்களும் பூத்துக் குலுங்கும் மலையரசே
பனிப்பட லம்மே கமும் சூழ்ந்தமாமலை யரசனே
தனிப்பெ ருமையாம் வேங்கடாத் ரீநாத என்றும் வாழ்கவே.

பாவம் அகற்ற தவமிருப் பவர்க்கு அருள்பவனே
தவமுனி வர்களெல் லாரும் உன் மலையில் வாழ்பவரே
அவமிலா அரசர் களெல்லாம் உன்பாதம் பணிவாரே
கவிபோற் றும் கருணாகர வாழ்கநீ வேங்கடேசனே.

அவதா ரம் பத்து எடுத்து அவனியை காத்தவனே
உவமானம் இல்லாத உருபெறும் தேவர் தலைவனே
எவரும் உன்னைத் தவிர வேறெவரை தொழாதவரே
அவனியில் அனைவரை யும் வேங் கடவா காத்தருளே.

வேங்கடேசன் திருவடிகளே சரணம்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக