ஸ்வயம்பு மனுவின் புதல்வன் பிரியவிரதன். அவன் தவத்தில் மூழ்கியிருந்ததால் மணம் செய்துகொள்ளவில்லை. பின்னர் பிரம்மாவின் வற்புறுத்தலால் மணம் செய்துகொண்டான். ஆனால் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அப்போது காசிப முனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். யாகப் பிரசாதத்தால் மனைவி மாலினி கருவுற்றாள். 12 வருடங்கள் கருவைச் சுமந்தவள் தங்க மயமான ஒரு குழந்தையைப் பெற்றாள். ஆனால் அது முழு வளர்ச்சியுடன் இல்லை. அதைக்கண்டு மிகவும் மனம் வருந்திய பிரியவிரதன், அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒரு காட்டுக்குள் சென்றான்.
அங்கே ஒரு ஒளிமயமான மண்டபம் தென்பட்டது. அதில் அழகிய ஒரு யோகினி தன் பக்தர்கள் புடைசூழ காணப்பட்டாள். அதிசயித்த பிரியவிரதன், ""தாயே- தாங்கள் யார்?'' என்றான்.""நான் தேவர்களுக்கு வெற்றி தரும் தேவசேனா தேவி. கந்தனின் மனைவி. பிரக்ருதியின் ஆறாவது அம்சம். தேவசேனை, ஈஸ்வரி, சஷ்டி என்கிற பிரபாவ நாமம் கொண்டவள். குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தையையும், மணமாகாதவர்களுக்கு கணவனையும் மனைவியையும், ஏழைகளுக்கு பணம், சுகம், சௌபாக்கியமும், நன்மை செய்பவர்களுக்கு மங்களமும் அளிப்பவள்'' என்றாள்.
ஸ்வயம்புவின் மகன் பிரியவிரதன் தன் குழந்தையைக் காண்பித்து வேண்ட, அவள் குழந்தையைத் தடவியதும் அது முழுஉருவத்துடன் மிளிர்ந்தது. சஷ்டி தேவி அவனிடம், ""மாதம்தோறும் வளர்பிறை சஷ்டி திதியில் என்னை இன்பமுடன் பூஜித்து வணங்கு. உன் மக்களிடமும் சொல். உன் குழந்தை ஸுவ்ரதன் என்று பெயர் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்வான். தான, தர்ம, யாகங்கள் செய்வான். வீரனாகவும் திகழ்வான். உன் நாடும் சிறப்புறும்'' என்று கூறி மறைந்தாள்.அன்றுமுதல் பிரியவிரதன் சஷ்டி விரதம் மேற்கொண்டான். அபிஷேக பூஜை, தூப, தீப, நிவேதன ஆராதனைகளுடன்,
என்னும் சஷ்டிதேவி அஷ்டாட்சர ஜெபத்தைக் கூறி வணங்கிவந்தான். மன்னனும் மக்களும் நலமடைந்தனர்.
(இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஓதினால் குழந்தைப் பேறு கிட்டும்.)
எல்லாவித நலன்களும் பெற சொல்லவேண்டிய துதிகளை சஷ்டி தேவியே அருளியுள்ளாள். அவை தனியே கொடுக்கப்பட்டுள்ளன. முருகன், அவனது வேல், மயில், சேவல் என எல்லாவற்றையும் பாடிய அருணகிரியார் தேவசேனை, வள்ளி தேவியை தனித்துப் பாடவில்லை. அதிசயமே! வள்ளி, தேவசேனைக்கு இரண்டு அஷ்டோத்ரங்கள், சகஸ்ரநாமங்களும் உள்ளன. கோவில்களிலும் அவை தனியே பூஜிக்கப்படுவதில்லை.
தேவசேனை சகஸ்ர நாமத்திலிருந்து ஒருசில உருக்கமான நூதன நாமாவளிகள் இங்கு தனியே தரப்பட்டுள்ளன. வேறெங்கி லும் காணப்படாத நாமங்களை ஜெபித்து நன்மை பெறலாம்.
குமாரசஷ்டியில் ஆரம்பித்து, ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியிலும் கந்தனுடன் சஷ்டி தேவியையும் (தேவசேனை) துதித்து பலன் பல பெற்று நலமுடன் வாழ்வோமே!
தேவசேனை சஸ்ரநாமத்திலிருந்து நூதன துதிகள்!
தயாமூர்த்தி தாரித்யதுக்க பயநாசினி
புஷ்கரா புஷ்கரக்ஷேத்ர தேவதா
மந்த்ரிணி மந்த்ர ஸாரக்ஞா
மாதவிஸுதா முக்தி தாயினி
ராதா லக்ஷ்மிபதிஸுதா
வாக்ப்ரதா சரஜன்மஸதி
ஷஷ்டி ஷஷ்டீஸ்வரி
ஷண்முகப்ரியா ஷடானன ப்ரீதிகர்த்ரீ
ஸங்கீதரஸிகா ஸ்கந்த உத்ஸாஹகரி
ஹரிநேத்ரஸமுத்பவா ஸ்வாமி மோஹினி
ஸ்வாமினி ஸ்வாமி அத்ரி நிலயா
க்ஷிப்ரஸித்திப்ரதா அம்ருதேஸ்வரி
அபார கருணா இஷ்டார்த்த தாயினி
உமாப்ரியா உமாஸுதப்ரியா
க்ருபாபூர்ணா க்ருத்திகா தனயப்ரியா
குஹ்யா குஹப்ரியா குஹ இஷ்டா
குஹஸ்ரீ குஹஉத்ஸுக சின்மயி
ஜயகரி ஞானதாத்ரி ஸர்வ அர்த்ததாத்ரி
ப்ரக்ருதி ஷஷ்டி அம்சா பரமேஸ்வரி பரதேவதா.

"ஓம் ஹ்ரீம் ஷஷ்டி தேவ்யை ஸ்வாஹா'

சஷ்டி தேவி அருளிய துதி!
"நமோ தேவ்யை மஹாதேவ்யை
ஸித்யை சாந்த்யை ச நமோ நம:
ஸுபாயை தேவஸேனாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:
வரதாயை புத்ரதாயை
தனதாயை நமோ நம:
ஸுகதாயை மோக்ஷதாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:
ஸ்ருஷ்ட்யை ஷஷ்டி அம்ச
ரூபாயை ஸித்தாயை நமோ நம:
மாயாயை ஸித்தயோகின்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:
ஸாராயை ஸாரதாயை ச
பரா தேவ்யை நமோ நம:
பால அதிஷ்டாத்ரு தேவ்யை ச
ஷஷ்டி தேவ்யை ச நமோ நம:
கல்யாணதாயை கல்யாண்யை
பலதாயை ச கர்மணாம்
ப்ரத்யக்ஷாயை ஸ்வபத்தானாம்
ஷஷ்டி தேவ்யை நமோ நம:
ஸுத்த ஸத்வ ஸ்வரூபாயை
வந்திதாயை ந்ருணாம்ஸதா
தேவரக்ஷண காரிண்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:
பூஜ்யாயை ஸ்கந்த காந்தாயை
ஸர்வேஷாம் ஸர்வகர்மஸி
ஹிம்ஸா கோடி வர்ஜிதாயை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:
தனம் தேஹி யசோ தேஹி
புத்ரம் தேஹி ஸுசரேஸ்வரி
மானம் தேஹி ஜயம் தேஹி
த்விஷோ ஜஹி மஹேஸ்வரி
தர்மம் தேஹி ஸுகம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம,
தேஹி பூமி ப்ரஜாம் தேஹி
வித்யாம் தேஹி ஸுபூஜிதே
கல்யாணம் ச ஜயம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம:
தயாமூர்த்தி தாரித்யதுக்க பயநாசினி
புஷ்கரா புஷ்கரக்ஷேத்ர தேவதா
மந்த்ரிணி மந்த்ர ஸாரக்ஞா
மாதவிஸுதா முக்தி தாயினி
ராதா லக்ஷ்மிபதிஸுதா
வாக்ப்ரதா சரஜன்மஸதி
ஷஷ்டி ஷஷ்டீஸ்வரி
ஷண்முகப்ரியா ஷடானன ப்ரீதிகர்த்ரீ
ஸங்கீதரஸிகா ஸ்கந்த உத்ஸாஹகரி
ஹரிநேத்ரஸமுத்பவா ஸ்வாமி மோஹினி
ஸ்வாமினி ஸ்வாமி அத்ரி நிலயா
க்ஷிப்ரஸித்திப்ரதா அம்ருதேஸ்வரி
அபார கருணா இஷ்டார்த்த தாயினி
உமாப்ரியா உமாஸுதப்ரியா
க்ருபாபூர்ணா க்ருத்திகா தனயப்ரியா
குஹ்யா குஹப்ரியா குஹ இஷ்டா
குஹஸ்ரீ குஹஉத்ஸுக சின்மயி
ஜயகரி ஞானதாத்ரி ஸர்வ அர்த்ததாத்ரி
ப்ரக்ருதி ஷஷ்டி அம்சா பரமேஸ்வரி பரதேவதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக