திங்கள், 18 ஜூலை, 2016

மகிமை பொருந்திய காயத்திரி மந்திரம்!

காயத்திரி மந்திரம் : 

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத் ... !!! 


காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.

பொருள்:

'பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந் தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். 

அந்தப் பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும்' 

என்பது தான் காயத்ரி மந்திரத்தின் பொருள். 

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். 

இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். 

வைராக்கியம் உண்டாகும். 

காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். 

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: 

யோ -எவர் 
ந -நம்முடைய 
தியோ -புத்தியை 
தத் -அப்படிப்பட்ட 
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ 
தேவஸ்ய -ஒளிமிக்கவராக 
ஸவிது -உலகைப் படைத்த 
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான 
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்.


தமிழ் காயந்திரி மந்தரம்:

ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
 தத்துவ வித்துக்கள் அரணாகுக! 
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்! 
தீயே யோகப் பரஞ்சோதியாகும்!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக