மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி
துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே.
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ: ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை: ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம் ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே
சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள்.
அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம்,
ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும்
ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அன்னையை ஜபித்து பிரார்த்தித்தால் இக பர சௌபாக்கியங்களை அடையலாம் ...
ஆந்திர தேசத்தில் சுமங்கலிப் பெண்கள் நவராத்திரி தினங்களில் ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள்.
மிகவும் சிரத்தையுடன் ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை மட்டும் உணவு. அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி என்று இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள்.
ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அன்னையை ஜபித்து பிரார்த்தித்தால் இக பர சௌபாக்கியங்களை அடையலாம் ...
ஆந்திர தேசத்தில் சுமங்கலிப் பெண்கள் நவராத்திரி தினங்களில் ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள்.
மிகவும் சிரத்தையுடன் ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை மட்டும் உணவு. அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி என்று இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள்.
சிறப்பாக …, “ஒக்க லக்ஷ பசுப்பு..” அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது இரு கைகளின் முழங்கை வரை மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள்.
அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்…அள்ளி அள்ளித் தருவார்கள்.
நவராத்திரி ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம் மஞ்சள்கிழங்குகள் வரை கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர்.
இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும்.
இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும் பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும்.
இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்
விடியற்காலையில் நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரை கூட நீண்ட வரிசையில் மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே “லலிதா சஹஸ்ரநாமம்” பாராயணம் செய்து கொண்டே இருக்கும் சுகமான அனுபவம் கிடைப்பதை பெரும் பேறு பெற்ற வரமாகவே சுமங்கலிப் பெண்கள் மகிழ்வார்கள்...
ஆந்திராவில் “லட்சப் பசுப்பு”என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் திரண்டு அலைமோதும் கண்கொள்ளாக் கட்சியைப் பக்திப் பரவத்துடன் கண்டு களிக்கலாம்.
தமிழகத்தில் எப்படி “கொலு” வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று “கொலு பார்க்க வந்திருக்கோம்” என்று சென்று கொலுவைப் பார்த்துவிட்டு தாம்பூலமும் சுண்டலும் வாங்கிச் செல்வார்களோ…அதே போல ஆந்திராவிலும் “லட்சப் பசுப்பு” என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் அலைமோதும்.
Bhimavaram Sri Padmavathi Ammavaru receiving Poojas with 1 Lakh Turmeric Sticks (Pasupu Kommulu)
சுமங்கலி பிரார்த்தனை!
ஐந்து சுமங்கலி பெண்களை வரசொல்லி அவர்களுக்கு கால்களில் நலங்கு இட்டு, வெற்றிலை. பாக்கு பழம், புஷ்பம், தக்க்ஷினை, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் கொடுத்து, ரவிக்கை துண்டு, கண்மை, மருதாணி பவுடர் கொடுத்து சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும்.
லக்ஷம் மஞ்சள் கிழங்குகளை நூறு நூறாக ஆயிரம் பாக்கட்டுகளில் அல்லது ஐநூறு ஐநூறாக இரு நூறூ பாக்கட்டுகள் செய்து கொண்டு 45 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும். கொடுக்கும் போது ஒவ்வொருவருக்கும், குங்குமம், வெர்றீலை பாக்கு, தக்ஷிணை, பழம், புஷ்பம் மஞ்சள் பாக்கட்டுடன் கொடுக்க வேண்டும்.
தீர்க்க சௌமாங்கல்யம் பெற
ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.
ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;
உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.
தீர்க்க சௌமாங்கல்யம் பெற:
ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமேபதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே
மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக”
கொஞ்சும் தமிழே வருக .கோடான கோடி தருக ..
மஞ்சள் எனில் மங்களம். .. மஞ்சள் பண்டிகைகளில் சிறப்பிடம் பெறுகிறது ...
மங்கள நிகழ்ச்சிகள் துவங்கும்போதும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர் வழக்கம்... இதற்கு விஞ்ஞான காரணமும் இருக்கிறது ...
இல்லத்தில் பூஜைப்பொருள்களோ , மளிகைப்பொருட்களோ வாங்குவதற்கு பிள்ளயார் சுழியிட்டு மஞ்சள் , குங்குமம , உப்பு என்றே ஆரம்பிக்கும் வழக்கம் உண்டு ..
திருமண்த்திற்கு முதலில் பொருட்கள் எடுத்துவைப்பதில் மஞ்சள் , மஞ்சள் குங்குமம் முதலிடம் பெறுகிறது ..
புத்தாடைகளை நுனியில் மஞ்சள் துளி தடவியே அணிவது வழக்கம் .
கைலாச கௌரி பூஜை : utube view:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக