பொங்கல் செய்முறை:
அடுப்பை சுத்தம் செய்து, குக்கரில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரைப் பொங்கல்:
தேவையான பொருட்கள்:பச்சரிசி 1.5 கப்
பாசிப்பருப்பு 1/2 கப் (அரிசியில் நான்கில் ஒரு பங்கு)
மண்டை வெல்லம் அல்லது அச்சு வெல்லம் 4.5 கப்(அரிசியைப் போல 2 பங்கு)
நெய் அரை கப் அல்லது முக்கால் கப்
முந்திரிப்பருப்பு 12
கிஸ்மிஸ் பழம்(ரெய்சின்) 1 ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி 1/4 டீஸ்பூன்
செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும்.
அரிசியைக் களைந்து, பாசிப்பருப்பை அத்துடன் சேர்த்து, நாலரை கப் அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில் 5 அல்லது 6 விசில் வர விடவும்.
(3 மடங்கு தண்ணீர் வைக்கவும். கூடுதலாக இரண்டு விசில் வர விடவும்.) குழைவாக வேக வேண்டும்.
வெல்லத்தை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, கல் மண் இல்லாமல் வடிகட்டி, வைக்கவும்.
குக்கர் ஆறியதும், திறந்து, வெந்த அரிசி பருப்பை, நன்றாக மசிக்கவும்.
வடிகட்டிய வெல்லத்தை, இதில் மெதுவாக ஊற்றி, கட்டிகளில்லாமல் கலந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, வெல்ல வாசனை போக, கொதிக்க விடவும்.
அடி பிடிக்காமல் இருக்க - நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி, பொங்கலை கிளறலாம்.
பொங்கல் பதமாக, கெட்டியானதும், நெய்யை ஊற்றவும்.
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களை - நெய்யில் வறுத்து, சேர்க்கவும்.
ஏலக்காய்ப் பொடியை கடைசியில் சேர்த்து, கிளறி விடவும்.
சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்!!!
வெண் பொங்கல்:
பச்சரிசி 1.5 கப்
பாசிப்பருப்பு 1/2 கப் (அரிசியில் நான்கில் ஒரு பங்கு)
நெய் அரை கப் அல்லது முக்கால் கப்
ரீஃபைண்ட் ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு 12
மிளகுப் பொடி அல்லது முழு மிளகு - 1 அல்லது 1.5 டீஸ்பூன்
சீரகம் 1 அல்லது 1.5 டீஸ்பூன்
உப்பு(டேபிள் சால்ட்) முக்கால் டீஸ்பூன்
இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது இஞ்சி விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்(விருப்பப் பட்டால்)
கருவேப்பிலை தாளிக்க
செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும்.
பச்சரிசியைக் களைந்து, அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 3 அல்லது 3.5 பங்கு தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4 அல்லது 5 விசில் வர விடவும்.
குக்கர் ஆறியதும் திறக்கவும்.
ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் முந்திரிப்பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து, பொங்கலில் போடவும்.
ரீஃபைண்ட் ஆயிலும் 1 டேபிள் ஸ்பூன் நெய்யும் கலந்து, வாணலியில் ஊற்றி, சூடு வந்ததும், மிளகு/மிளகுப் பொடி, மற்றும் சீரகத்தை அதில் போட்டு, பொரிய விடவும்.
கருகாமல் எடுத்து, உடனே பொங்கலில் சேர்க்கவும்.
இஞ்சி விழுது, மஞ்சள் பொடி, கருவேப்பிலையையும் பொரித்து, பொங்கலில் போடவும்.
உப்பும் சேர்த்து, நன்றாகக் கிளறவும். மீதமுள்ள நெய்யை மேலே ஊற்றி, கரண்டியால் சமப்படுத்தவும்.
சுவையான வெண் பொங்கல் தயார்.
மஹா நைவேத்தியம்:
2 கப் பச்சரிசியைக் களைந்து, மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக