க்ஷேமங்கள் கோரி விநாயகனை துதித்து சங்கரனையும் கெளரியையும் வர்ணித்து; ஸ்ரீ ராமனையும் ஜானகியுயும் வர்ணித்து
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
வாசுதேவ தவபால அசுர குல கால
வாசுதேவ தவபால அசுர குல கால
சஷிவதனா ரூபி சத்யபாமா லோல
சஷிவதனா ரூபி சத்யபாமா லோல
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி
கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
கல்யாண வைபோகமே
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
வைபோகமே
வைபோகமே
வளர்பிறையில் நாள் பார்த்து அதிகாலையில் வளை அடுக்குவார்கள்.
வளைகாப்பு காணும் வசந்தப் பெண்ணிற்கு வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள்.
தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைந்து. குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.
மல்லிகை, முல்லை போன்ற வாசனைப்பூக்கள் கொண்ட பூச்சரத்தைப் பெண்ணின் உச்சந்தலையில் இருந்து ஆரம்பித்து கடிகாரச்சுற்றாக ஒவ்வொருவரும் சுற்றிக்கொண்டே வந்து பின்னலின் நுனியில் முடிப்பார்கள்.
மஹாலட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார்.
முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும்.
வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.
முதல் வளையல்கள் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங்களுக்கும், பின்னர் நேர்ந்து கொண்ட தெய்வங்களுக்கும் எடுத்து வைப்பார்கள். ஒரு கையில் பனிரண்டு வளை அடுக்கினால் மறு கையில் பதினொன்று அல்லது பதின்மூன்று என ஒற்றைப்படையில் இருக்கவேண்டும். எத்தனை எண்கள் வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். கைகள் கொள்ளும்வரையில் அடுக்கிக் கொள்ளலாம். அரக்கு வளையைக் கங்கணமாகப் போடுவதுண்டு.
மல்லிகை, முல்லை போன்ற வாசனைப்பூக்கள் கொண்ட பூச்சரத்தைப் பெண்ணின் உச்சந்தலையில் இருந்து ஆரம்பித்து கடிகாரச்சுற்றாக ஒவ்வொருவரும் சுற்றிக்கொண்டே வந்து பின்னலின் நுனியில் முடிப்பார்கள்.
கர்ப்பிணிப் பெண்ணோடு கூடவே திருமணம் ஆகி இன்னும் கர்ப்பம் அடையாத ஒரு பெண்ணிற்குத் துணைக்காப்புப் போடுவார்கள். ஆரத்தி எடுப்பார்கள்...
வளை அடுக்குவதன் காரணம், கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்குத் தாயின் அசைவுகள், கைகளின் வளை ஓசை கேட்கும் என்பதாலேயே. அதுவும் தாயின் கைகளின் வளையல்களின் கலகலச் சப்தம் குழந்தைக்கு நன்கு கேட்கும்.
சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதமாய் புது உலகு காண சீரான வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும் தாயையும் வாழ்த்துவதால் பெண்ணுக்குள் இருக்கும் பயம் குறைந்து மிகவும் சந்தோசமும், மனத்தைரியமும் ஏற்படுவதுடன் அனைவரின் ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும், இறையருளும் கருவாக இருக்கும் சிசுவுக்கும், தாயாருக்கும் கிடைக்கப் பெறுவதனால் நல்வாழாவு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாய் சுபத்ரா வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், சக்கரவியூகம் பற்றி அறிந்தான் ..
..அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே சுதர்சன சக்கரத்தால் காப்பாற்றப்பட்ட. பாண்டவருக்கு மிஞ்சிய ஒரே வாரிசு...தான் கர்ப்பத்தில் இருக்கும்போது ஒளிமிகுந்த சுதர்சன சக்கரத்துடன் தன்னை காத்தது யார் என்று தான் பார்க்கும் ஒவ்வொருவரையும் இவரா இவரா என்று பரீட்சித்து பார்த்து , கிருஷ்ண பரமாத்மாவைக்கண்டதும் இவரே தன்னைக் காத்தவர் என்று உணர்ந்து கொண்டாரம் பரீட்சித் ...
இரண்யணின் மகன் பிரஹலாதன் அசுர வம்சமானாலும் தாய் லீலாவதியின் கருவில் இருக்கும் போது நாரதர் நாராயண நாமம் உபதேசம் கேட்டதால் நரசிம்ம அவதாரத்தால் காப்பாற்றப்படுகிறான் ..
இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் கருவிலுள்ள குழந்தைக்கு தாயின் மூலம் கற்றுத்தரமுடியும் என்று பயிற்சி வகுப்புகளும் ,ஒலிநாடாக்களின் மூலமும் நிரூபித்துவருகின்றன.
திருச்சி உறையூரில் ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீதான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அருளும் அம்பாளுக்கு, ஸ்ரீ வளைகாப்பு நாயகி எனும் திருநாமமும் உண்டு.
நவராத்திரியின்போது தினமும் மகா சண்டி ஹோமம் நடைபெறும். கர்ப்பிணிகளும், திருமண தடையால் தவிப்பவர்களும், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும் ஹோமத்தில் பங்கேற்று அம்மனை வணங்கினால் சுகப்பிரசவம் நிகழும், நல்ல வரன் அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக