வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

துர்கா சூக்தம்!


துர்கா சூக்தம் தமிழில்!

oஅக்னி வடிவில் விளங்கும் சக்திக்கு சோமரசத்தை பிழிந்து கொடுப்போம். அனைத்துமாக விளங்கும் அந்தஜோதி எதிரிகளைப் பொசுக்கட்டும். அந்தசக்தி எங்களின் எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும். கப்பலால் கடலைக் கடப்பது போல், ‘பவ’ சாகரத்திலிருந்து (பிறவி கடலிருந்து) அந்த அக்னி சக்தி எம்மைக் கரை சேர்க்கட்டும்!

oசெந்தீ வண்ண முடையவள். தனது ஒளியால் பகைவர்களை எரிப்பவள். ஞானக்கண்ணால் அறியப்படுபவள், கர்மபலனை கூட்டி வைப்பவள். நம் புண்ணிய பாவங்களுக்கு உரிய பலனை அனுபவிக்கச் செய்பவள், பிறவிக் கடலை எளிதில் கடக்க உதவுபவள். அத்தகைய துர்க்காதேவியே உனக்கு நமஸ்காரம்!

oஅக்னி சக்தியே! நீ எடுக்கும் நல்ல உபாயங்கள் மிகவும் போற்றத் தக்கவை. அவை எங்களை சகல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றட்டும். எங்களுக்கு வாழும் இடங்களும் வளமான பூமியும் கிடைக்க வகை செய்ய வேண்டும். எங்களுடைய சந்ததியான பிள்ளை குட்டிகளும் பேரன் பேத்திகளும் உன்னருளால் பயன் பெற்று ஒளிர வேண்டும்!

oஆபத்தை போக்கும் அக்னி சக்தியே! நாவாய்- கப்பலால் கடலை கடப்பது போல சம்சார கடலை கடக்க எங்களுக்கு அனுகிரஹிக்க வேண்டும். எங்களை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்க வேண்டும். ஆதர்ஷ்ன தம்பதி அத்திரி மகரிஷி- அனுசூயா தேவியைப் போன்று அனைவரும் இன்பமுடன் வாழ அருளவேண்டும். அதேசமயம் எங்களுக்கு ஆரோக்கியமும் வேண்டும்!

oஎதிரிகளின் சேனைகளை வெல்லவும், அடக்கவும், பொசுக்கவும் செய்யக்கூடிய அக்கினி சக்தியை பரமபதமான விண்ணிலிருந்து வருமாறு அழைக்கிறோம். அந்த சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும். அக்னிதேவன், நமது பாவங்களை நீக்கி அருளட்டும்!

oஅக்னியே! வேள்விகளில் போற்றப்படும் ‘ஸ்வாஹா’ வான சக்தியே, நீ இன்பத்தை வளர்க்கிறாய். விணைப்பயனை அளிப்பதும், வேள்வி செய்வதும் துதிக்கப்படுவதும் அனைத்தும் நீயே. அக்னி சக்தியே, உனது உடலை நாங்கள் வேள்வியில் இடப்படும் பொருள்களால் உன் ஜோதி நன்கு எழுந்து இன்புறச் செய்யட்டும். எங்களுக்கு எல்ல சௌபாக்கியங்களையும் நீ அருள்வாயாக!

oஇந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தின் தோஷமே இல்லாமல், புனிதத்துடனேயே சதா தொடர்பு கொண்டு அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் நீக்கமற பரவி நிற்கும் சக்தியே! உன்னை சேவிக்கிறேன். சுவர்க்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள், விஷ்னு பக்தனான என்னை, இவ்வுலகில் வாழும்போதே எல்லா பேரின்பங்களிலும் திளைக்கும்படி வைக்க வேண்டும் அதற்கு நீயே அருள்வாயாக!

oகன்னியாகவும் தேவியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றேன். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி அவனையே அடைந்த அந்த அம்பிகையை வழிபடுகிறேன். அந்த துர்க்கா தேவி எங்களை வழிநடத்தி தர்மவழியில் செலுத்தி ஆட்கொள்ளட்டும்.


சித்தேஸ்வரி தந்திரம்!

இயற்கைச்சீற்றம், பகைவர்களால் ஆபத்து நீங்க! செவ்வாய்கிழமை
.
சுற்றிலும் சூழ நிற்கும் ஆபத்துகளைலிருந்து எமைக் காக்கும் துர்க்கை அன்னையே உனக்கு நமஸ்காரம்.

இயற்கை சீற்றங்கள் ஆகட்டும், காட்டிலே தனித்துச் செல்லும் பயணங்களாகட்டும், யுத்தத்தில் ஆகட்டும், எரிக்கும் அக்னியிலாகட்டும், ஆழ்கடலிலாகட்டும், எங்கும் எமைக் காத்தருளும் அன்னையே உனக்கு நமஸ்காரம்.

ந்தவகை ஆபத்திலிருந்தும் காக்கும் தேவியே, எம்மை வாழ்க்கை சாகரத்திலிருந்தும் காக்கும் ஓடமாக விளங்கும் அன்னையே! உனக்கு நமஸ்காரம்!



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக