திங்கள், 26 செப்டம்பர், 2016

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!


 
 துவாரகாவும் கோமதி சக்கரமும்
 
நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை. இங்கு பஞ்ச துவாரகை உள்ளது. அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு. இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள். இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது. இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது.

கோமதி சக்கரம்! கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம்.
இந்த கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல்,
விஷ்ணு சக்ர கல், பிரதீக் கல், நாராயணக் கல், திருவல சுழி கல் என வேறு பெயர்களும் உண்டு. 


 
இந்த கோமதி சக்கர கல்லை வைத்து வணங்கினால் முக்தி தரும் ஷேத்திரங்கள் 7 ஆகும். அவை அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சிபுரம், அவந்திகா எனும் உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் உடன் கிட்டும். 
 
சொர்ணக்கல் சக்கரம் என்றும் கோமதி சக்கரத்தைக் கூறுவர். கோமதி ஆறு கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும்.
 
துவாரகையின் பரம பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலித்தன என புராணம் கூறுகிறது. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம் என புகழப்படுகிறது. இந்த கோமதி சக்கரத்தின் சக்தியே இதற்கு சாட்சியாகும். கோமதி சக்கரத்தை வைத்து வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமுடனும் வாழக் காரணம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
கோமதி சக்கர கல்லை வைத்து பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.
 
சங்கோதரா, ஸ்ரீ தீர்த்தா என்ற பெயரும் துவாரகைக்கு உண்டு. இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த தர்மசபை உள்ளது. அவர் கோமதி கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாக ஐதீகம். மேலும் ஸ்வர்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த கல்லை உருவாக்கியதாக ஐதீகம். இந்த கோமதி சக்கர கல் சொர்க்கம் + மோட்சம் இரண்டிற்கும் உதவுகிறது. விஷ்வ கர்மாவால் உருவாக்கப்பட்ட துவாரகையில் கிருஷ்ணன் மக்கள் சங்கடம் போக்கி கொள்ள கோமதி சுழியை பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு.


 
கோமதி ஆறின் பிறப்பிடம் அதன் சிறப்பு
 
லக்னோ நகரத்தில்  மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு ஓடுகிறது. இது கங்கை நதியின் கிளை ஆறு ஆகும். சுல்தான்பூர் நகரம் இங்குதான் பிரிகிறது. இது பைசாபாத் பிரிவின்கீழ் அமைந்துள்ளது. பைஜ்யனாத் என்னும் இடத்தில் கோமதி சரயு ஆறு சங்கமிக்கிறது. இங்கு பாண்டவர்கள் அம்பிகையை வழிபட்டு பராசக்தியின் கையால் கோமதி சக்கரத்தை பெற்ற ஐதீகம் உண்டு. கோமதி சக்கர கல் அபூர்வமாக இங்கும் கிடைக்கிறது. 
 
கோமதி ஆறு, சரயு நதி இரு நதிகளும் கலந்து சேரும் இடம் கூடிய இரு பாம்புகள் என சொல்லப்படுகிறது. இவ்விரு நதியும் கூடி வெளிவரும் நதி புனிதமான கௌசிகை என்னும் நதியாகும். இதில் தோன்றி வரக்கூடிய கல்லே கோமதி சக்கர கல்லாகும். இந்த கோமதி சக்கரம் கல்லை பயன்படுத்துவதால் பிறப்பு இறப்பால் உண்டாகக்கூடிய பாவங்கள் விலகுகின்றன. சரயு நதி கோமதி நதி இவை இரண்டும் ஒரே சக்தி வாய்ந்தது என்று கூறுவர். இவ்விரண்டிற்கும் அக்னி நதி என்றும் கூறுவர். லக்னோவில் கோமதி நதியும், அயோத்யாவில் சரயு நதியும் (ராமஜென்ம பூமி) உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் கூட அபூர்வமாக கோமதி சக்கரம் கிடைக்கிறது.

 கங்கை நதிக்கு யமுனா, கோமதி, ராப்தி, காந்தக், கோசி ஆகிய கிளை நதிகள் வடக்கிலிருந்தும், சாம்பல், சிந்த், பெட்வா, கென், சோன் ஆகிய கிளை நதிகள் தெற்கிலிருந்தும் கங்கை நதியில் கலக்கின்றன. இதில் வடக்கு நதிகள் சொர்க்கமாகவும், தெற்கு நதிகள் மோட்சமாகவும் கருதப்படுகிறது. இவ்விடத்தில் உள்ள அத்தனை நதிகளின் நீர் துளியில் உருவானதே கோமதி  திருவல சுழி சக்கரமாகும். இது இறைவனால் உற்பத்தி செய்யக்கூடியதாகும். சாலிகிராமம் எப்படியோ அதைப்போல பன்மடங்கு சக்தி பெற்றது கோமதி சக்கரமாகும். 
 
அதிஷ்டக் கற்கள் அனைத்திற்கும் முன்னோடியாகவும் நோய் தீர்க்கும் வைத்திய கற்களாகவும், அதிஷ்டங்களை ஈர்த்து கொடுக்கும் வசிய கற்களாகவும் கோமதி சக்கர கல் பயன்படுகிறது. இதை பூஜித்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன்னோடு கோமதி சக்கரத்தை வைத்துக்கொண்டிருந்தாலே போதும். அதிஷ்டம் தன்னால் வரும். ஆனால் அது கங்கை நீரை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
 
 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நைமி சாரண்யம் (லக்னோவில் உள்ளது) இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டி கொடுத்த இடம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் சக்ர தீர்த்தம் இன்றும் உள்ளது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது கூடவே கோமதி ஆறு நீர்துளிகளில் சக்ராயுதம் பட்ட நீர்துளிகள் கோமதி சக்கரமாக மாறியது என்றும் ஐதீகம் உண்டு.

 
ஒரு காலத்தில் இந்த கோமதி சக்கர வழிபாடு ஒஹோ வென வடமாநிலம் முழுவதும் பரவலாக கடைபிடிக்கப்பட்டது . கோமதி சக்கரம் கிடைப்பது அறிதாகி போனதால் பின்னால் வந்த சந்ததியினருக்கு இதை அறிய முடியாமல் போனது . இந்த வழி முறை பெற்றவர்கள் இறைபாக்கிய பலனை பெற்றதால் வெளியில் சொன்னால் தன் குடும்பத்திற்க்கு பலித்தமில்லாமல் போய்விடும் என தவறாக கருதி இந்த அதிசயத்தை மறைத்து கொண்டே வந்து இன்று பணக்கார ஒரு வகுப்பினர் மட்டுமே குல பூஜையாக பயன் படுத்துகின்றனர் .

 
இந்துமத வழி மன்னர்களுக்கு பின் சுல்தான்களும் இதை மோதிரமாகவும் டாலராகவும் வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர் .

 
மகிமைகள்!
கோமதி சக்கரம் ஸ்ரீவிநாயக பெருமானோடு  தொடர்புள்ளதாகும்.சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். எச்செயலை செய்ய துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு செயல்களை செய்ய துவங்கினால் லாபகரமாக முடிவு இருக்கும் என்பர். பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதி திருவல சுழியாகும். இதன் உட்பொருள் சுபம் லாபம் என்பதாகும்.
 
இந்த சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தை தொட்டதாகவும் முதற்கடவுளை வணங்கியதாகவும் அர்த்தமாகும். ஆதியில் எல்லா சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். பிள்ளையாரின் துதிகை சுழியை பார்த்தால் வெற்றியாகும். அதே போல் கோமதி சுழியை பார்த்தாலே வெற்றியாகும் என ரகு (சூரியவம்சம்) வம்சத்தினர் கையாண்டு வெற்றிபெற்று நிரூபித்துள்ளனர். சுதர்சன சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்த கோமதி சக்கரமாகும்.


 
கோமதி சக்கர மகிமைகளும் அற்புத பலனும்

 
கோமதி கல் உடல் போன்றது நம்மிடம் ஆத்மா உள்ளது . அந்த கோமதி சுழி உடலோடு நம் ஆத்மாவை இணைத்து கோரிக்கை என்னவோ அதற்கு செயல்படுத்தினால் போதும். அக்கோரிக்கை நிகழும். இதுதான் இந்த கோமதி சக்கரத்தின் செயலாகும்.

 
இறக்கும் புண்ணிய ஆத்மாக்கள் எரித்தப்பின் கங்கையை சார்ந்த நதிகளில் எவர் சாம்பல் கலந்தாலும் அது கோமதி சக்கரமாக மாறி அதிஷ்டம் உள்ளவனுக்கு அது கிடைத்து பலன் பெறட்டும் என ஸ்ரீ ஹரியால் உருவாக்கப்பட்டது . ஒரே ஒரு சக்கரம் இருந்தால்கூட  பலன் கொடுக்கும். ஆனால் கங்கை நீர் அருகில் இருக்க வேண்டும். இல்லையேல் பலன் கொடுக்காது

 
இதன் உள்ளடங்கிய சக்திகள் :

வலம்புரி சங்கிலும் மேல்புறத்தில் திருவல சுழி இருக்கும். இதற்க்கினையான இந்த கோமதி சக்கரத்தை வைத்து பூஜிக்கும் போது வலம்புரி சங்கின் பலனும் சேர்ந்து கிடைத்துவிடும்.

 
அடுத்து கோமாதா (பசு) வின் சக்தி, ஏனெனில் கோமதி சுழி பசுவிடமே நிறைந்துள்ளது . கண்களில், முதுகில், கால் குளம்பில், முதுகில், வால் மேல்பகுதியில், நெற்றியில், கழுத்தில், அடிவயிற்றில், குதத்தில் என பல சுழிகளை பசு மட்டுமே அதிகம் பெற்றிருக்கும். இது ஸ்ரீ ஹரியால் உருவாக்கப்பட்டது . அதனால் தான் பசுவிற்கு தனி இடம் கொடுக்கப்படுகிறது . இந்த கோமதி சுழி கல் ஒட்டுமொத்த பலனும் ஸ்ரீ ஹரிஹரனால் முக்தி பெற்ற ஆத்மா மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.
 
கோமதி சக்கரத்தை வலம்புரி சங்காக நினைத்தால் வலம்புரி சங்கின் பலனைத் தரும். பசு மாதாவாக நினைத்தால் பசுவின் பலனைத் தரும். உங்களுக்குப் பிடித்த தெய்வங்களாக நினைத்தும் வழிபாடுகள் செய்தால் அதனதன் பலனைக் கொடுக்கும். இதுதான் இக்கல்லின் அதிசயம். இதுதான் ஆதியில் தோன்றிய சக்கரமாகும்.

 
சாலி கிராமத்தை வைத்து பூஜிப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சாலி கிராமத்தின் உள் ரகசியமே இந்த திருவல சுழி சக்கரம் தான். இதை வைத்து பூஜிக்கும்போது பிரமிடு, மகாமேரு   ஸ்ரீ சக்கரம் தனியாக வைத்து பூஜித்து அடையும் சக்தியை இந்த கோமதி சக்கரம் ஒன்றிலேயே பெறலாம்.

 
இந்த உலகின் யந்திர வடிவமே சுழிதான். அந்த சுழியே கோமதி சுழியாகும். 12,000 ஆண்டுகளுக்கு மேலான மிக பழமை வாய்ந்த சக்கர முறையாகும் இது . பயண தொலைவும், போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால் இச்சுழி சக்கரம் நாட்டில் பரவ முடியாமலும், அருமை, பெருமை மறைந்தும் போயின.  ஸ்ரீ வாராகி அன்னையை இனம் கண்டு இப்போது மக்கள் எப்படி பல ஆண்டுகளுக்கு பின் வழிபட ஆரம்பித்திருக்கிறார்களோ அதைப்போல் இனி வருங்காலத்தில் கோமதி சக்கரத்தையும் வழிபாடு செய்வார்கள்.

 
 இந்த கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும். சிவபெருமான் சிரசு முடியின் உச்சி கங்கை சுழியும் நம் தலையில் விழும் சுழியும் இதே திருவல சுழிதான். இது தலைவிதி சக்கரமாகும். பசுவின் பார்வை வீட்டில் பட்டால் பல பாவங்கள் விலகும். பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். இஃது வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகும். நாகத்தின் சுழியும் இதுவேயாகும். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டுள்ளாள். எனவே நாகதோஷங்கள் விலகிவிடும்.
 
சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

 
ஒருவருடைய சகல தோஷமும் விலக இறைவனால் உண்டாக்கப்பட்ட கோமதி சக்கரத்தைக் கொண்டு 13 சங்கல்பம் அவரவரே செய்தால் எத்தோஷமும் அதன்பின் அவர்களிடம் இருப்பதாக கருத தேவையில்லை. எல்லாம் மறைந்துவிடும்.  பகவான் ஸ்ரீமன் நாராயணர் அளித்த திருவல சுழி சக்கரம் நம்மிடம் உள்ளவரை எத்தோஷமும் நெருங்குவதில்லை.
                          
தெறிந்து கொள்ளவேண்டியவை பயன்கள்

லிங்க வடிவமுள்ள சாலிகிராமத்தையும், ஸ்ரீ சக்கரத்தையும், வலம்புரி சங்கையும் சுத்தமற்றவர் பூஜித்தால் தரித்திரத்தில் தள்ளிவிடும். ஆனால் திருவல சுழி கொண்ட கோமதி சக்கரம் யார் வேண்டுமானாலும் பூஜிக்கலாம். ஆசாரம் ஒரு முக்கியமில்லை. மனமே முக்கியம்.

 
கோமதி சக்கரம் பயன்படுத்தும் போது நிமிர்த்தியே வைக்க வேண்டும். அதாவது சுழி  ஆகாயத்தை பார்த்தார் போல் வைக்க வேண்டும். பூஜைக்கு பின் எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம்.

 
பி(வி)ல்வம் 6 மாதம் வரை பலனளிக்கும். கோமதி சக்கரம் ஆண்டாண்டு காலமாக பலனளிக்கும். கோமதி சக்கரத்தை யார் தலையில் வைத்தும் ஆசிர்வாதம் செய்யலாம்.

 
ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதா தேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி (மோதிரம்) இந்த கோமதி சக்கரம் பதித்தது தான் .

 
கோமதி சக்கர வழிபாட்டை இருக்கும் இடத்தில் இருந்து ஒருமுறை செய்தாலோ அல்லது நினைவு கூர்ந்தாலோ சகல பாவமும் விலகுகிறது.

 
 கோமதி சக்கரத்தை வைத்து வழிபட்டாலே போதும். காசிக்கு செல்ல வேண்டிய கட்டாயமே இல்லை.  அக்கினியால் எல்லா பிரச்சனையும் தீர்க்க முடியாது. ஆனால் கங்கையாலும் கங்கையில் படைக்கப்பட்ட பொருளாலும் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கலாம்.

 
அன்னை கங்கா மாத கோமதி சுழி பூஜை செய்து நாடி வருவோர் துன்பத்தை போக்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம் உண்டு. புண்ணியம் செய்யும் மனிதருக்கே கோமதி சக்கரம் கையில் கிடைக்கும் எனவும் ஐதீகம் உண்டு.

 
புண்ணியம் செய்தவருக்கு தன்னால் சேர வேண்டும் என்ற காரணத்தினாலேயே இதை பற்றிய விமர்சனம் வெளியில் பிரபலமில்லாமல் போனது . பரத்வாஜ் மகரிஷிகள் இதற்கு விமோசனம் தந்தார் எவ்வாறெனில் கங்கை தீர்த்தம் உடன் கொண்டு எவர் பூஜித்தாலும் அவர்களின் குடும்பத்திலுள்ள பாவ சாபங்களை கங்கை நீர் ஈர்த்துக்கொள்ளும் என வழி கூறினார். கங்கை தீர்த்தம் பாவங்களை ஈர்த்துக்கொள்ளும் கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும். நிம்மதியைக் கொடுக்கும்.

 
இதை எவரும் ஆராதிக்கலாம். இதை வைத்திருந்தாலே நாகதோஷம் தன்னால் விலகுகிறது . பரிகார ஷேத்ரம் எங்கும் போக வேண்டியதில்லை. கோமதி சக்கரம் ஒரு உயிர்கல் வகையாகும். வளரக்கூடியதாகும். இது எல்லா அதிஷ்ட கற்களுக்கும் மேலானதாகும். இதன் சுழியை சற்று நேரம் உற்று பார்த்து கொண்டிருந்தாலே சில மாறுதல் மனத்திரையில் தெரிவதை உணர்வீர்கள்.

 
உங்கள் பெயர் மந்திரத்தை உயிர் பெறாமல் வைத்திருக்கிறீர்கள். இனி இந்த கோமதி சக்கர உதவியால் அந்த குறை அகன்று புகழுடனும் நிம்மதியுடனும் வாழ்வீர். (ரகுவம்சம் தழைத்தது இதனாலும் தான்) கோமதி சக்கரத்தில் பெயரை ஓதி செம்பு சொம்பில் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த நீரை விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் உங்கள் சக்தி பன்மடங்காக உயர்வதைக் காண்பீர்.
 
இந்த முறையில் தொழில் முன்னேற்றமும் குடும்ப மேன்மையும் அடையலாம்.
 
நீங்கள் பயன்படுத்தக்கூடியதை உங்கள் குடும்பத்தாருக்கு கொடுங்கள். வெளிநபருக்கு அதை கொடுக்காதீர்கள். வேண்டுமானால் வேறொன்றை வாங்கிக்கொண்டு அதன்மூலம் பலன்பெற சொல்லுங்கள். ஏனெனில் அவர்கள் என்னஅலைகள் உங்கள் என்ன அலைகளோடு ஒத்து போகாமல் இருக்கலாம். அதனால் உங்களின் சக்தி தடைபடலாம் கவனம்.

 
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை. இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள். விரட்டக்கூடியவளாக இருக்கமாட்டாள். கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் (பிரதீக்) உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகி தரித்திரம் விலகும். இந்த கற்களை வைத்து பூஜிக்கிறவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள்.
 
அதிஷ்ட தேவதை தேடிவர காரணம் இக்கோமதி சக்கரம் சுதர்சன சக்கரத்தால் உருவானதால் இது இருக்கும் இடம் தீயசக்தி விலகுவதால் அதிஷ்ட தேவதை தேடிவந்து குடிகொள்கிறாள். இச்சுழி இருக்கும் இடத்தில் குழப்பம் இருப்பதில்லை. தன்னால் ஒரு வழி பிறக்கிறது. நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் நாம் கண்ட கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.

 
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் கூடுதல் எனர்ஜி பெறுகிறது. அதனால் வாஸ்து குறைகள் யாவும் பாதிப்பதில்லை . தொழில் செய்யும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கோமதி சக்கரம் 13 ஐ கட்டி ஈசான்ய பாகத்தில் வைத்தால் அல்லது கல்லா பெட்டியில் வைத்தால் பணம் பெருகும். தொழில் பெருகும்.
 
இந்த கோமதி சக்கரம் உள்ள இடத்தில் வலம்புரி சங்கை சிரமப்பட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. கடின சுத்தமும் அவசியமில்லை. அசுரகுலம், தேவகுலம் இரண்டிற்கும் பொதுவானவள் அன்னை மகாலட்சுமி. அதைப்போல சுத்தத்திற்கும், அசுத்தத்திற்கும் பொதுவானது கோமதி சக்கரம். எனவே இதை வைத்திருந்தாலே போதும். நற்பலன் விளையும் . அசுத்த தீட்டு பாதிக்காது .

கோமதி சக்கரம் ஆத்மாக்கள் ஆகும். அது யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யும். அந்த ஆத்மா கற்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். 13 கட்டங்களில் உள்ள நாமாக்களை சொல்லி அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் அது உயிர்ப்புடன் அதனதனுடன் தொடர்புகொண்டு அது உயிர் பெறும்.
 
படைக்கப்பட்ட உயிர்கள் அத்தனையும் சுழியுடனே படைக்கப்பட்டது. காய்கறிகளை நறுக்கினாலும், மரங்களை அறுத்தாலும் கூட உள்ளே வல சுழி இருக்கும். உருண்டையான பூமியை இரண்டாக பங்கிட்டு அதன் மையத்தில் உயிர்களும் கீழே பாதாளமும் மேலே ஆகாயமும் உள்ளது. இதில் பாதாள சுழியும் ஆகாய சுழியும் உயிர்களின் சுழியும் ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கிறது.  சம்மந்தமும் ஏற்ப்படுகிறது . உற்பத்தி ஆவதும் அழிவதும் மாறி மாறி நடக்க இந்த சம்மந்தமும் ஒரு காரணமாகும். இதில் சுதர்சன சக்கரம்போல் காக்கக்கூடிய சுழி கோமதி சக்கரமாகும. புராண கதையில்கூட ஒரு அசுரன் கோமதி சக்கரம் வைத்து வழிபாடு செய்து தன் கையிலேயே வெற்றி சக்கரமாக வைத்திருந்ததால் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. பகவான் மகாவிஷ்ணு சூழ்ச்சியாக அந்த கோமதி சக்கரத்தை அசுரனிடம் இருந்து அப்புறப்படுத்திய பின்புதான் அவரால் வெற்றிகொள்ள முடிந்தது .

 
 
 
அறிவீராக :- சங்கிலும் சுழி, சக்கரத்திலும் சுழி, கைகளிலும் காலிலும் சுழி இருக்கும், உச்சி தலையிலும், முன் நெற்றியிலும் இந்த சுழி இருக்கும். உள்ளங்கை சந்திர மேட்டிலும், விரல்மேல் விரல் அங்குலாஸ்தியிலும், நம் தொப்புளிலும், மார்பு குழியிலும், தொண்டைக் குழியிலும், ஆசன வாயிலிலும், முதுகின் பின்புறமும், மச்சங்களிலும், கண் கருவிழியிலும், நடுநெற்றி கண்ணிலும் இந்த சுழி இருக்கும். உள்ளங்கையிலும், கை கால் முட்டியிலும் இந்த சுழி இருக்கும். மூக்கின் நுனி பகுதியிலும், உள் நாக்கிலும் இந்த  சுழி இருக்கும். நம் காதுகளும் திருவல சுழிதான். நாம் சுவாசிக்கும் காற்றும் திருவல சுழியாகத்தான் இயங்குகிறது. வீசுகின்ற சுழல் காற்றானாலும், கடல் அலையானலும் கோமதி சுழியாகத்தான் சுற்றும். தெய்வத்தை மூன்றுமுறை சுற்றி வலம் வந்தால் அது கோமதி சுற்றாகும். அதுவே செல்வ வளம் தரும். கிரிவலமாக இருந்தாலும் தொடர்ந்து மூன்று பௌர்ணமி தலா ஒரு சுற்று வீதம் மூன்று பௌர்ணமி சுற்றினால்தான் கோமதி வல பலன் கிட்டும். எலுமிச்சை கனி உட்பிரகாரமும், மரங்களின் உட்பிரகாரமும், பூமியின் உட்பிரகாரமும் கோமதி சுழி கொண்டதாகும். அசையும், ஆடும், சுற்றும் பொருளெல்லாம் பெரும்பாலும் வலது புறமாகவே சுற்றும். பூமி கூட கோமதிச் சுற்றாகவே உழல்கிறது. வலசுழி பொருள் எல்லாம் சுபமானது. சக்தி வாய்ந்தது என்பதால் தான் வலம்புரி சங்கு, வலம்புரி விநாயகர் என வலபக்க சக்தி அதிகமாக நேசிக்கப்படுகிறது. தெய்வவலமும் வலபக்கமே சுற்றக் கொண்டிருக்கிறோம்.

 
தமிழ் உயிர் எழுத்துக்களிலும் பிற மொழி எழுத்துக்களிலும் சுழியில்லாமல் இருக்காது. விலங்குகளின் உடலிலும், முகத்திலும், பாதங்களிலும் கோமதி வல சுழி உண்டு. கோள்கள் உழல்வதும் பிரிவதும் சேர்வதும் வலச்சுழியோடு தான். இடச்சுழியும் உண்டு. இது ஒரு சில கோள்களேயாகும் எனினும் வலச்சுழி இதிலிருந்து பாதுகாப்பு தரும்.
கோமதி எனும் விதிச்சுழியை நினைவில் பதிய வைத்தால் நினைவாற்றல் பெருகும். சுழியை நெற்றிக்கண்ணில் பதித்து வலபக்க மூளையில் வேண்டுதலை பதிக்க விரைவில் நிறைவேறும்.
 
நம்மை அண்ட சராசரங்களில் இருக்கின்ற கிரகங்களும் நட்சத்திரங்களும், நம் உடலில் ஆட்சி செய்கின்றன.  உங்கள் நாமம் (பெயர்), நட்சத்திரம், லக்கணம், ராசி இவைகளெல்லாம் நீங்களாவீர். உங்கள் நட்சத்திரம் உங்கள் உடல் பாகத்தில் ஒரு இடத்தில் தங்கியுள்ளது. அந்த பாகத்தை நினைவுகூர்ந்தோ அல்லது தொட்டு வணங்குவதோ மிக அவசியமாகும். அப்போதுதான் எந்த மந்திரமும் சக்கரமும் பலன் கிட்டும். மந்திர உரு ஏற்றினாலும் பிரபஞ்சத்தில் கலந்து நமக்கு நன்மை பெற உதவும். திருவல சுழியை நினைத்து ஏவிவிட்டால் தொடுத்தகனை நினைத்த பலனை பெற்றுத்தரும். நம் பூமியில் 27 நட்சத்திரங்கள் ஆளுகின்றன. அது ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு நட்சத்திரத்தை ஒதுக்கி ஆளுகைக்கு உட்படுத்தப்படுகிறது. அது மனிதனின் குறிப்பிட்ட பாகத்தில் நட்சத்திர சக்கரம் மறைந்து செயல்படுகிறது. அவ்விடத்தை கண்டு உணராத வரை ஒரு பரிகாரமும் பலன் தருவதில்லை. நம் நட்சத்திரம் மறைந்துள்ள இடத்தை நம்மை அறியாமலேயே தொட்டு வணங்கி உணர்வை கொடுத்து இருந்தால்கூட பலன் கிடைக்கும். ஏதேச்சையாக தொடுவதைவிட உணர்ந்து தொட்டால்தான் பலன் பெருகும். எனவே அவரவர் நட்சத்திரம் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள அட்டவணை பார்த்து அவரவர் நட்சத்திரம் உடலில் எந்த பாகத்தில் தங்கியுள்ளது என்பதை அறிக.

 
நட்சத்திரம்
அசுவினி, பரணி, கிருத்திகை - நெற்றி முழுவதும் உள்ள இடம்.
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை - நெற்றியை தவிர்த்து முகம் முழுவதும்.
புனர்பூசம், பூசம் - இரு தோள்களாகும்.
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் ஆகிய நட்சத்திரங்கள் - மார்பு பகுதியாகும்.
சித்திரை நட்சத்திரம் உள்ள இடம் வயிறு பகுதியாகும்.
சுவாதி, விசாகம் - புஜங்கள் இரண்டுமாகும்.
அனுசம் - பாலின உறுப்பாகும்.
கேட்டை, மூலம் - இரு கைகளாகும்.
பூராடம், உத்திராடம் - தொடைகள் இரண்டுமாகும்.
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ,ரேவதி ஆகிய நட்சத்திர ஆட்சி இடம் இரு கால்பாதங்களாகும்.

 
மேற்கண்டதில் ஒன்று தான் உங்கள் நட்சத்திரமாக இருக்கும். எனவே எங்கு வழிபாடு எத்தெய்வத்திற்கு செய்தாலும் உங்கள் நட்சத்திரத்தின் பாகம் எதுவோ அங்கு நினைவுகூர்ந்தோ தொட்டோ வணங்கினால் வேண்டுதல் நிறைவேறும்.

             
கோமதி சக்கரத்தால் பலன்பெரும் விதம்!
 
கோமதி யந்திரத்தை சாதாரணமாக கையில் வைத்திருந்தாலே நாம் கோரும் பலன் விரைவில் கிடைக்கும்,

வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும்.
 
வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து  பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
 
தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த விலை குறைந்த தீர்வே இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலம்.
 
வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும்.
 
இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும்.
 
வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் வாஸ்து தோஷம் விலகும்.
 
ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது.
 
பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போது இதை செயினாக அணிந்து நலம் பெற்றாராம். தற்போதும் அணிந்திருப்பதாக தகவல்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக