சனி, 28 ஜனவரி, 2017

காணும் பொங்கல்!

          
தை மாதம் மூன்றா வது நாளன்று ‘கன் னிப் பொங்கல்’ கொண் டாடப்படும். இதை ‘கன்றுப் பொங்கல்’ என் றும் சொல்வார்கள். இரண்டுக்கும் பெயர்க் காரணங்கள் உண்டு.
                        
கல்யாணம் ஆகாத பெண்களுக்கு உரியது இது. ஆகையால் இது ‘கன்னிப் பொங்கல்’.
கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு(ம்) உரியது இது. ஆதலால் இது ‘கன்றுப் பொங்கல்’ எனவும் அழைக்கப்படுகிறது.
                        
கல்யாணம் ஆகாத இளம்வயதுப் பெண்கள் எல்லோரும், வெள்ளைத் துணியால் மூடப்பெற்ற தாம்பாளங்களை எடுத்துக் கொண்டு மாலை நேரத்தில் ஓரிடத்தில் கூடுவார்கள். ஒவ்வொருவர் தாம் பாளத்திலும் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவை இருக்கும்.
எல்லோரும் கும்மியடித்துப் பாடல்களைப் பாடியபடியே ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளக் கரை, ஏரிக்கரை (ஏதாவது ஒன்றை) நோக்கிச் செல்வார்கள். பக்க வாத்தியமாக மேளமும் போகும்.
தண்ணீர்க் கரையை அடைந்த வுடன் அங்கே ஒரு சிறிய மண் மேடை அமைப்பார்கள். இது திட்டாணி எனப்படும். கொண்டு வரப்பட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பாளங்களை, அந்த மண் மேடையின் மீது வரிசை யாக அடுக்கி வைப்பார்கள்.
                        
தாம்பாளங்கள் கொண்ட அந்த மண் மேடையைச் சுற்றி வட்டமாக நின்றபடி கும்மியடித்துப் பாட்டுப் பாடுவார்கள். பாடல்கள் பாடி முடிந்ததும், அவரவர் தாம்பாளங்களில் இருக்கும் பச்சரிசியில் சர்க்கரையைச் சேர்த்து, நீர் வார்த்துக் கலந்து வைப்பார்கள்.
                        
கற்பூரம் ஏற்றிக் கடவுள் வழிபாடு செய்வார்கள். ‘‘சீக்கி ரம் திருமணம் நடக்க வேண்டும்’’ என்று வேண்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு அந்த வருடத்திலேயே கல்யாணம் நடந்து விடும் என்றும் சொல்வார்கள்.
                        
சர்க்கரை கலந்த பச்சரிசி, அங்கு வேடிக்கை பார்க்க வந்திருக்கும் எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படும்.
                        

‘கன்றுப் பொங்கல்’!
                        
கட்டிளங் காளை ஒருவன் காளையை அடக்கித் தன் வீரத்தை வெளிப்படுத்துவான். காளையைக் கன்று என்று கூறுவதும் உண்டு. இதை முன்னிட்டு இவ்விழா ‘கன்றுப் பொங்கல்’ எனக் கூறப் படுகிறது.

                        
கன்னிப் பொங்கல் - 2:
                        
இளம் வயதுப் பெண்கள் கூட்டமாகக் கூடிக் கும்மியடித்துப் பாட்டுப் பாடியபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். அங்கே, இஷ்டப்படி ஆடல், பாடல் என விளை யாடி விட்டுக் கூட்டாஞ்சோறு சமைப்பார்கள்.
                        
அதை ஆற்றுக்குப் படைத்துப் பூஜை செய்வார்கள். ஆற்றுக்குக் ‘கன்னி’ என்று பெயரும் உண்டு. ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ என்று பெருமை பெற்று, வான் மழை பொய்த்து விட்டாலும் தன்னுடைய ஊற்று நீரால் அனைவரையும் வாழ வைக்கும் ஆற்றை, கன்னி அம்மனாகவே நினைத்துப் பூஜை செய்வார்கள்.
                        
நதிகளுக்கு, நவ கன்னிகைகள் வடிவில்-கங்கை, யமுனை, சரஸ் வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, நர்மதா, துங்கபத்ரா, சரயூ என்னும் ஒன்பது திருநாமங்களில் வழிபாடு நடக்கும்.
                        
இந்த நவ கன்னிகைகளின் அழகிய விக்கிரகங்களைக் கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையில் இருக்கும் விஸ்வநாதஸ்வாமி கோயிலில் தரிசிக்கலாம்.
                        
வழிபாடு முடிந்ததும் கூட்டாஞ்சோறை அங்கேயே சாப்பிட்டு விட்டுக் குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள் பெண்கள்.
                        
கன்னிகள், கன்னிக் (ஆற்றங்) கரையில், கன்னியை (ஆற்றை)க் குறித்துச் செய்யும் கன்னிப் பொங் கல் இது.
                        
காணும் பொங்கல்: நெருங்கிய நண் பர்களையும் உறவினர்களையும் பார்த்து, நலம் விசாரித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பண்டிகை இது.
                        
சென்னை முத லான கடற்கரை உள்ள பகுதிகளில், குடும்பத்துடன் கடற் கரைக்குப் போய்க் கூட் டத்தோடு கூட்டமாக மகிழ்ச்சியோடு பொழு தைக் கழிப்பதும் உண்டு.
                        
இதைவிட விசே ஷமான நிகழ்ச்சி!

உழைப் பாளர்களும், இசை மற்றும் நாடகக் கலைஞர்களும், ஜமீன் தார்கள், பிரபுக்கள் முதலான பெருந்தனக்காரர்களைப் போய்ப் பார்ப்பார்கள்.
                        
‘வாழ்நாள் எல்லாம் நமக்காகப் பல விதங்களிலும் உழைப்பவர்கள் இவர்கள்’ என்ற எண் ணத்துடன் வேட்டி, சேலை, அரிசி, பணம் முதலானவற்றைக் கொடுத்து அவர் களை மகிழ்வுறச் செய்வார்கள் பணக்காரர்கள். தெருக்கூத்துக் கலை ஞர்கள் கௌரவிக்கப் படுவார்கள்.
                        
இவ்வாறு அடுத்தவர்கள் மனமும் முகமும் மகிழ்ச்சியில் மலர்வதைக் காண்பதே உண்மையான ‘காணும் பொங்கல்’.



 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக