வெள்ளி, 20 ஜனவரி, 2017

தை மாத தேய்பிறை ஸபலா ஏகாதசி!

ஸபலா ஏகாதசி!

ச ம்பாவதீ நகர மன்னர் மாஹிஷ்மதனுக்கு ஐந்து பிள்ளை கள். லும்பகன் என்பவன் மூத்த வன்; பாவங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆனவன் அவன். தந்தையின் பெரும்பாலான செல்வத்தை மது, மங்கையரிடம் கொண்ட ஆசைக்காகவே செலவு செய்தான் லும்பகன்.
                        
‘‘தெய்வமாவது ஒன்றாவது? ஸ்வாமிக்குப் பூஜை செய்கிறேன், அது இது என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்!’’ என்று வாய்போன போக்கில் தெய்வத்தையும் அடியார்களையும் திட்டுவதே, லும்பக னின் தினசரி நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருந்தது.
                        
குடிமக்களை எல்லாம் குறையின்றிக் காத்து வந்த மன் னர், மைந்தனின் நடவடிக்கைகளால் மனம் நொந்தார். வேறு வழியற்ற நிலையில் காவலாளிகளை அழைத்து, ‘‘லும்பகனைக் கொண்டு போய்க் காட்டில் விட்டுவிடுங்கள்!’’ என்று உத்தரவிட்டார் மன்னர்.
                        
காட்டுக்குப் போயும் லும்பகன் திருந்தவில்லை. காட்டில் இருந்த படியே அவ்வப்போது நகரத்துக்குள் நுழைந்து திருட ஆரம்பித்தான். திருடுவதும் தப்புவதும் அவனுக்குக் கைவந்த கலையாகிவிட்டது.

ஒரு நாள்... தன் வழக்கப்படி திருடிக் கொண்டு லும்பகன் திரும்பும் நேரம். காவலர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவனை அடித்துத் துவைத்தார்கள் காவலர்கள்.
                        
‘‘அடிக்காதீர்கள்! அடிக்காதீர் கள்! நான் மாஹிஷ்மத மன்னனின் மகன். என் பெயர் லும்பகன்!’’ எனக் கதறினான். அரசன் மகன் என்பதால் கருணையுடன் லும்பகனை விட்டுவிட்டனர் காவ லர்கள்.

அடிபட்ட லும்பகன் திருந்தி னான். ‘நல்லவேளை! அரசன் மகன் என்பதால் விட்டார்கள். இல்லா விட்டால்? நம்மைக் கொன் றிருப்பார்கள். இனிமேல் திருடக் கூடாது’ எனத் தீர்மானித்தான்.
மனம் திருந்திய லும்பகன் மரத்தடியிலேயே வசித்தான். காட் டில் கிடைத்த கனிகளையும், கிழங்குகளையும் உணவாகக் கொண்டான்.
                        
அடுத்தவர்களை அல்லல்படுத்தி வாழ்ந்து வந்தவனுக்கு, அந்த உணவு போதுமானதாக இல்லை. உடல் மெலியத் தொடங்கியது. குளிர் காலம் வந்தது. நன்கு வெயில் ஏறி, குளிர்போன பிறகே, வெளியே கிளம்பி உணவு தேடுவதை வழக்க மாகக் கொண்டான்.
                        
ஒரு நாள்... லும்பகனுக்கு ஏதும் கிடைக்கவில்லை. அந்தி சாயும் வரை அலைந்து திரிந்தும் ஒரு சில பழங்கள்தான் கிடைத்தன. மரத்தடிக்குத் திரும்பிய லும்பகன், இரவு முழுவதும் குளிராலும் பசியாலும் வாடினான். தூக்கம் வரவில்லை. கிடைத்த ஒரு சில பழங்களையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்தான்.

பொழுது விடிந்தது. ஆகா யத்தில் ஓர் அசரீரி ஒலித்து,
                        
‘‘லும்பகா! நேற்று ஸபலா ஏகாதசி. நீ தங்கியிருந்தது அரச மரத்தின் அடியில். இரவு முழுவதும் நீ தூங்கவில்லை. கிடைத்த பழங்களையும், பசி யோடு இருந்தும் நீ உண்ணவில்லை. பகவானுக்கு அர்ப் பணம் செய்தாய்! உன் பாவங்கள் அனைத்தும் பறந்தோடின. காட்டை விடு. நாடு திரும்பு. அரச பதவி உனக்குத்தான்!’’ என்றது.
                        
அசரீரி சொன்னது போல், லும்பகனின் எதிரில் அவன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பட்டத்து யானையுடன் வந்தனர்.
                        
‘‘மன்னர் மறைந்து விட்டார். தாங்கள் வந்து தரணி ஆள வேண்டும்!’’ என்று வேண்டி, லும்பகனை பட்டத்து யானையின் மேல் ஏற்றிப் பரிவோடு அழைத்துப்போய், பட்டாபிஷேகம் நடத்தி வைத் தார்கள்.
நல்ல முறையில் நாட்டை நிர்வாகம் செய்த லும்பகன் எதிர்காலத்தில் பிள்ளையிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வைகுண்டம் அடைந்தான்.
                  
தை மாதம் வரும் தேய்பிறை ஏகாதசியின் மகிமையை விளக்கும் லும்பகன் சரிதம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக