சனி, 28 ஜனவரி, 2017

மாட்டுப்பொங்கல்!

பல விதங்களிலும் நமக்கு உதவி புரிந்து, நம்மை வாழ வைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தி, அவற்றைப் பெருமைப் படுத்துவதே மாட்டுப் பொங்கல். 
                        
மாட்டுப் பொங்கல் அன்று மாடு களைக் குளிப்பாட்டி அவற்றுக்கு சந்தனம்-குங்குமம் வைத்து, மாலை யிட்டு அலங்காரம் செய்து கோ பூஜை செய்வார்கள்.
                        
ஒரு தலைவாழை இலையில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்புத் துண்டங்கள், வாழைப் பழங்கள் முதலியவற்றை வைத்து மாடுகளுக்கு விசேஷ விருந்து படைப் பார்கள். 

இது வரை பார்த்து வந்த மாட்டுப் பொங்கல் வைபவத்தில் இருந்து மாறுபட்டது இது. பல பேருக்குத் தெரியாது. நாம் தெரிந்து கொள்வதற்காகவும் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகவும் விசேஷமான இந்த ‘மாட் டுப் பொங்கல்’ இங்கே படைக்கப்படுகிறது.
                        
மாட்டுப் பொங்கல் அன்று மாலையில், ஊரி லுள்ள மாடுகள் எல்லாம் ஒரு மந்தையில் கூடும்.

ஊரில் இருக்கும் பெரியவர்கள் வீடு வீடாகப் போய், ஒரு வீடு கூட விட்டுப்போகாமல் வெல்லம், அரிசி, தேங்காய், தயிர், பழம், சீயக்காய், எண்ணெய் முதலானவற்றை வாங்கிச் சேகரித்துக் கொண்டு வருவார்கள்.
                        
சேகரிக்கப்பட்ட அரிசியை (மந்தையிலேயே ஓர் ஒதுக்குப் புறமாக) மிச்சம் மீதி வைக்காமல், பிரமாண்டமான பாத்திரங்களில் போட்டுப் பொங்கல் செய்வார்கள்.
                        
மந்தையின் மேற்புறத்தில் மண் ணால் செய்யப்பட்ட பெரும் மேடை ஒன்று இருக்கும். அதில் வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் நீள நீளமான, நுனியுடன் கூடிய வாழை இலைகளை வரிசையாக விரித்து வைப்பார்கள். அந்த வாழை இலை களில், அங்கேயே தயார் செய்யப்பட்ட பொங்கலைப் பரப்பி வைப்பார்கள்.
                        
பிறகு தயிர், உரித்த வாழைப்பழங்கள், தேங்காய் பத்தைகள், வெல்லம் ஆகியவற்றைப் பொங்கலுடன் சேர்த்துக் கலக்கு வார்கள். கலவையான அந்தப் பொங்கல் ஒரு மலையாகக் குவிக்கப்பட்டு, சிவலிங்கம் போல் காட்சி தரும். இந்தச் செயல்களை எல்லாம் வாயில் துணி கட்டி மறைத்தபடியே செய்வார்கள். தவறிப் போய் வாயில் இருந்து எச்சில் தெறித்து, புனிதம் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது.
பொங்கல் குவிக்கப்பட்ட அந்தப் பெரிய மண்மேடைக்குத் ‘திட்டாணி’ என்று பெயர். அதற்கு நேராக, கீழ்த் திசையில் ‘கள்ளி வட்டம்’ என்பது இருக்கும்.
                        
அங்கே கிளை கிளையாகப் படர்ந்திருக்கும் திருகுக் கள்ளியை ஒடித்துக் கொண்டு வந்து, அவற்றில்- எண்ணெயில் நனைக்கப்பட்ட ஏராளமான திரிகளைச் சர விளக்குகளைப் போலச் செருகி வைத்திருப்பார்கள். இங்கே ஒரு பெரிய சட்டியில் சாம்பிராணியும் புகைந்து கொண்டிருக்கும். இவற் றுக்குப் பாதுகாவலாக ‘திட்டாணிக் காவலர்’ என்று ஒருவர் அங்கேயே அமர்ந்து இருப்பார்.

பொங்கல் கொட்டி வைத்திருக் கும் பெரிய மண் மேடைக்கும் (சற்று முன் பார்த்த) கள்ளி வட்டத் துக்கும் நடுவே மாடுகள் எல்லாம் கொண்டு வரப்படும்.
                        
‘வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாகி விட்டதா?’ என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு ‘மாட் டுப் பொங்கல்’ வைபவம் ஆரம்ப மாகும்.
                        
முதலில் மாடுகளுக்கு முடி (சவரம்) எடுப்பார்கள். அதாவது மாடுகளின் வாலில் இருந்து சிறி தளவு முடி, நறுக்கி எடுக்கப்படும். அதன்பின் அவற் றின் முதுகில் கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் தடவி, சீயக்காய்த் தூளைத் தேய்ப்பார்கள். பிறகு தண்ணீர் நிரம்பிய சொம்புகளில் மாவிலையை நனைத்து மாடுகளை நோக்கி வீசுவார்கள். இது குளிப்பாட்டும் நிகழ்ச்சி.
                        
இது முடிந்ததும்... வாயைக் கட்டியபடி இருக்கும் பெரியவர் ஒருவர், மலை போன்ற பொங்கல் குவியலில் இருந்து பொங்கலை எடுத்து, அங்குள்ளவர்களிடம் கொடுப்பார். வாங்கியவர்கள் அதை மாடுகளுக்கு ஊட்டுவார்கள். பிறகு, ‘‘மாலை கட்டலாம்’’ என அறிவிப்பு வரும். மாவிலை, ஆவாரம் கொத்து, பிரண்டை, பீளைப் பழம் ஆகியவற்றைக் கோரையில் மாலையாகக் கட்டி மாடுகளுக்கு அணிவிப்பார்கள்.                        
வண்ண மயமான நெட்டி மாலைகளும் போடப்படும். கற் றாழை நாரால் ஆன வண்ணக் குஞ்சங்களை சிறுவர்கள் மாடுகளின் கொம்புகள், கழுத்து, கால்கள் ஆகியவற்றில் கட்டுவார்கள். அவ் வப்போது ஆரவாரம் எழும்.
                        
அடுத்ததாக, அங்கிருப்பவர்கள் வரிசையாக நிற்க, ஒருவர் கையில் தீச்சட்டி இருக்கும். மற்றொருவர் சேகண்டியை (வெண்கலத்தால் ஆன தட்டையான, நூல் கட்டப் பட்ட இசைக் கருவி) பிடித்து இருப்பார். இன்னொருவர் கையில் சங்கு இருக்கும். ஒருவர் நீர் நிறைந்த சொம்பில் மாவிலையைப் போட்டு வைத்திருப்பார். நல்ல குரல் வளம் மிக்க ஒருவர் ‘மாட்டுப் பொங்கலை’ வாழ்த்திப் பாடுவார். அதை அப் படியே பின்பற்றி மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்திசையாகப் பாடுவார்கள்.
                      
வரிசையாக அணி வகுத்து நின்றவர்கள் மாட்டு மந்தையைச் சுற்றி வட்டமாக வலம் வரு வார்கள். சேகண்டி ஒலி எழுப்பும். சங்கு முழங்கும். தண்ணீர்ச் சொம்பில் இருந்து மாவிலையால் தண்ணீர் எடுத்து, மாடுகளின் மீது தெளிக் கப்படும்.                         
இந்த ஊர்வலம்- கள்ளிவட்டம், பொங்கல் கொட்டி வைக்கப் பட்டிருந்த பெரிய திட்டாணி என்னும் பள்ளயம் ஆகியவற்றை மூன்று முறை வலம் வரும்.
                        
அப்போது ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவுவார்கள்.
                        
இந்தச் சத்தம் வீட்டில் இருக்கும் பெண்களின் காதுகளில் விழுந் ததும், (இந்த வைப வத்தின்போது பெண்கள் மந்தைக்கு வருவதில்லை) அவர்கள் பலகாரங்கள் பலவற்றுடன் கூடிய படையலை, வீட்டில் தெய்வத்துக்குப் படைப்பார்கள். இது நடைபெறும்போது இரவு மணி இரண்டு, மூன்று கூட ஆக லாம். அதுவரை பெண்கள் தூங்க மாட்டார்கள்.
                        
இதன் பிறகே மாடுகள் மந்தையில் இருந்து வீடு திரும்பும். அப்போதும், மந்தையில் இருந்து அனைவரும் வீடு திரும்ப மாட்டார்கள். வீட்டுக்கு ஒருவர் என்று, மந் தையிலேயே இருப்பார்கள். ஒவ் வொருவர் கையிலும் ஒரு பாத்திரம் இருக்கும்.
                        
திட்டாணியில் இருக்கும் பொங்கல் கவளங்களாக உருட்டப்பட்டு, பாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு ஒவ் வொரு கவளம் தரப்படும். அனைவருக்கும் தந்த பிறகு மீதி இருக்கும் பொங்கலை அங்கு இருக்கும் மற்றவர்களுக்கும் சிறு சிறு உருண்டைகளாகக் கொடுப் பார்கள்.
                        
‘பெருமாள் சோறு’ என்று சொல்லி, அதை எல்லோரும் அங்கேயே சாப்பிடுவார்கள். மந்தையில் இருந்து, விழா முடிந்து மாடுகள் வீடு திரும்பும்போது, பெண்கள் தங்கள் வீட்டின் எல் லையில் சிறிதளவு வைக்கோலைப் போட்டுக் கொளுத்தி, ஓர் உலக்கையையும் குறுக்காகப் போட்டு வைப்பார்கள். மாட்டுக்கு திருஷ்டி படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. வியாதிகள் வராமல் இருக்கவும், நல்ல விளைச்சல் கிட்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இவ்வாறு செய்யப்படுகிறது.

நமக்கெல்லாம் நன்கு பழக்கப்பட்ட மாட்டுப் பொங்கலில் இருந்து மாறு பட்ட ‘மாட்டுப் பொங்கல் விழா’ இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக