முக்தா வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகை:
த்ரீக்ஷணை:யுக்தாமிந்து கலாநிபத்த ரத்ன மகுடாம்
தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாங்குச கசா: சுப்ரம் கபாலம் கதாம்
சங்கம் சக்ரமதாரவிந்த யுகளம் ஹஸ்தைர்வஹந்தீம் பஜே!
- காயத்ரி தேவியின் ஸமஷ்டி ரூப த்யானம்!
பொதுப்பொருள்:
முத்து, பவழம், ஸ்வர்ணம், கறுப்பு, வெளுப்பு ஆகிய வர்ணங்களுள்ள ஐந்து முகமுள்ளவளும்,
அந்த ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் உள்ளவளும், சந்திரகலையை தலைமீது அணிந்தவளும்,
தத்வார்த்தம் உள்ளதான எழுத்து ரூபமான வளும்,
வரதம், அபயம், அங்குசம், பாசம், வெளுப்பான கபாலம், கதை, சங்கம், சக்ரம், இரு தாமரை ஆகியனவற்றைத் தன் கரங்களில் ஏந்தியவளுமான காயத்ரி தேவியே நமஸ்காரம்.
அவர் ஆகாயத்தில் சூட்சுமஒலியாக தியான நிலையி லிருந்து இதைக்கண்டறிந்தார்.
காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.
ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.
காயத்ரி மந்திரம்!
ஓம் பூ: புவ: ஸ்வஹ:
தத் ஸவிதுர் வரேண்யம்ஓம் பூ: புவ: ஸ்வஹ:
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்!
இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.
அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ்அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச் சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக்கடவுளை நான் வணங்குகிறேன்’ என்பதே இதன் அர்த்தம் ஆகும்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரி மந்திரத்தின் ஸ்தூலவடிவமாக அமர்ந்திருக்கிறாள்.
அவளுக்கு 5 திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவு படுத்துகின்றன.
காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர் களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இந்த உலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.
மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.
இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி-க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி-க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதி-க்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப் படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக