ஞாயிறு, 18 டிசம்பர், 2016

பந்தர்க்கவானா தேவி ஜகதாம்பா!

download

மகாராஷ்டிர மானிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள கேலாப்பூர் கிராமம். தேவி ஜகதாம்பா ஆலயத்தினால் பிரபலமடைந்துள்ளது. பந்தர்க்கவானா என்றும் அழைக்கப்படுகிற இத்தலத்துக்கு ஆந்திர மானிலத்திலிருந்தும் மக்கள் எராளமாகக் கூடுகிறார்கள்.

images (1)

வீர சிவாஜியின் அபிமான தேவியான துளஜாபூர் பவானியும் லோனவ்லாவில் உள்ள கார்லா குகை எகவீரா தேவியுமே இங்கு ஸ்ரீ ஜகதாம்பா தேவியாக வழிபடப் படுவதாகவும் இந்த இரு தேவிகளும் சுரங்க மார்க்கமாக இங்கு வந்து மா ஜகதாம்பா என்ற திரு நாமத்தோடு எழுந்தருளியிருப்பதாகவும் ஆலய அர்ச்சகர் தெரிவிக்கிறார். ஸ்ரீ ஜகதாம்பா தேவியின் கருவறையில் இந்தச் சுரங்கப்பாதையின் வாயில் உள்ளதாகக் கூறப்படுகிறது,

images (2)

ஸ்ரீ ஜகதாம்பா தேவியை பக்தர்கள் அம்பாஜி என்றும் அம்பா தேவி என்றும் அழைக்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு அம்பா தேவி ஆலயம் என்பதே பிரபலமான பெயராக அமைந்துள்ளது.

download (1)

ஆலயத்தைச் சுற்றிலும் சுமார் ஐம்பது கி மீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் வசிக்கின்ற மக்களுக்கு இந்த தேவியே குலதெய்வமாக விளங்குகிறாள். ஆந்திர மானிலம் அட்லாபாத்திலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக அம்பிகையைத் தரிசிக்கவும் குழந்தைப் பேறு அமையவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். விரதமிருந்து தரிசித்தால் விருப்பங்கள் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘கேலா’ என்ற சொல் வாழைப்பழத்தைக் குறிக்கும். இத்தலத்தில் தேவி வாழைப்பழ உருவத்தில் தோற்றமளிக்கும் சுயம்பு விக்கிரகத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே இத்தலம் கேலாப்பூர் எனப்படுகிறது.

images

நான்கு கால்களுடன் கூடிய வெள்ளியினாலான அழகிய மண்டபத்தில் ஸ்ரீ ஜகதாம்பா தேவி எழுந்தருளியிருக்கிறாள். நின்ற நிலையில் இரண்டு கரங்களையும் இருபுறங்களிலும் விரித்து காட்சி தரும் தேவியின் முகத்தில் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டுள்ளது.

கருவறைக்கு வெளியே கருங்கல்லினால் செய்யப்பட்ட பெரிய எருமை வாகனமும் பலி பீடமும் உள்ளன. இதற்கு அருகில் பக்தர்கள் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து தீபங்களை ஏற்றி வழிபடுகிறார்கள்.

download (2)

நவராத்திரி  மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அது சமயம் “ அகண்ட மனோ காம்னா ஜோதி” என்ற பெயரில் ஏராளமான விளக்குகள் ஆலய வளாகம் முழுவதும் ஏற்றி வைக்கப்படுகின்றன. “ மனோ காம்னா” என்பது மனதில் ஏற்படும் அனைத்து ஆசைகளையும் குறிக்கிறது.

இந்த தீபத்தை ஏற்றி வைத்தால் பக்தர்களின் நியாயமான ஆசைகளை தேவி நிறைவேற்றி வைப்பாள் என்ற நம்பிக்கை உள்ளது. நவராத்திரி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு அருள்வேண்டி வருகின்றனர்.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக