மகாலட்சுமி ஆலயம் என்றதும் நினைவுக்கு வருவது கோலாபூர் மகாலட்சுமி ஆலயம்தான்.
அதைப்போன்றே சிறப்புடையது கோவாவில் பண்டிவாடே என்ற பகுதியில் உள்ளது, கௌடசரஸ்வத் அந்தணர்களின் குல தேவதையாக ஸ்ரீ மகாலட்சுமி விளங்குகிறாள்.
பரசுராமரின் ஆணைக்கேற்ப கோவா பகுதியில் இவர்கள் குடியேறியபோது. தங்கள் குலதேவதையையும் எடுத்து வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் சில குடும்பத்தினர் கொலாவா என்ற இடத்தில் தங்கி ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தனர். அந்த தேவியின் சிலையை போர்ச்சுக்கீசியர் சேதப்படுத்தியதால் அங்கிருந்து உற்சவ விக்கிரகத்தை மட்டும் பண்டிவாடாவிற்கு எடுத்துவந்து அங்கு ஏற்கனவே இருந்த ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். இதனால் பண்டிவாடாவில் இரண்டு மகாலட்சுமி விக்கிரகங்கள் உள்ளன.
இந்த ஆலயம் 1413 ம் ஆண்டிலிருந்தே சிறப்புற்று திகழ்வதை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
கருவறையில் ஸ்ரீ மகாலட்சுமியையும் அருகே கொலாவாலிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ மகாலட்சுமியையும் ஒருசேர தரிசிக்கலாம். குதிரையின் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் மகாலட்சுமி. இரு புறங்களில் கருடனும் அனுமனும் அஞ்சலித்த வண்ணம் உள்ளனர். தேவியின் காலடியில் இரண்டு சர்ப்பங்கள உள்ளன. ஸ்ரீ மகாலட்சுமி தேவி தன சிரசில் சிவலிங்கத்தைத் தரித்து காட்சி தருவது அபூர்வ அமைப்பு.
மகா சிவராத்திரி நாள் பண்டிவாடா மகலட்சுமிக்கும் ஸ்ரீ ராம நவமி கோலாவா ஸ்ரீ மகா லட்சுமிக்கும் உரிய விழா நாட்களாக கொண்டாடப்படுகின்றன. கொலாவாலிலிருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ மகாலட்சுமி விக்கிரகத்தை ஸ்ரீ ராம நவமி நாளன்று பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
அதற்கு அடுத்த நாள் இரண்டு மகாலட்சுமி உற்சவர்களையும் ஒரு தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு வருகின்றனர். இந்த ஆலயத்தில் சௌக் எனப்படும் முன் மண்டபம் மிகப் பிரபலமானது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ ராவல்நாத் ஸ்ரீ பாலேஷ்வர் மற்றும் ஸ்ரீ நாராயண புருஷர் ஆகியோருக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன.
வெள்ளிக்கிழ மைகள் ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை சித்ரா பௌர்ணமி ஆடி மற்றும் கார்த்திகை சுத்த தசமி பாத்ரபத ஆனந்த சதுர்த்தசி கார்த்திகை வைகுண்ட சதுர்த்தசி போன்றவை விழா நாட்களாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படும்
பண்டிவாடா என்றும் பண்டோரா என்றும் அழைக்கப்படும் இந்த ஊர் பானாஜியிளிருந்து 22 கி மீ தூரத்தில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக