கணேச ஜெயந்தி அல்லது மகா சுக்கில சதுர்த்தி என்பது
இந்துக் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைக் குறிக்கும் தினமாகும். இது தில்குந்த
சதுர்த்தி என்றும் வரத சதுர்த்தி எனவும் அழைக்கப்படுகின்றது. கணேச ஜெயந்தி
விரதமாகவும் பண்டிகையாகவும் அனுட்டிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு வருடத்திலும் மாசி மாதத்தில்
வரும் சுக்கில பட்ச சதுர்த்தியில் கணேச ஜெயந்தி அனுட்டிக்கப்படுகின்றது. இது
இந்திய மாநிலங்களானமகாராஷ்டிரா விலும், கோவாவிலும், பெரும்பாலும் பண்டிகையாகக்
கொண்டாடப்படுகின்றது. பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட விநாயக சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாளாகவே கொண்டாடப்படுகிறது.
கணேச ஜெயந்தி மாசி மாதத்தில் கொண்டாடப்படுவதும் , விநாயக சதுர்த்தி ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுவதுமே இவ்விரண்டு
விழாக்களுக்குமான வேறுபாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக