வாய்ந்த சென்னி யளவுபடா வதிகசவுந்
தரதேகம தோற்கடர்தா மமர்ந்து காக்க
விளரறநெற் றியையென்றும் விளங்கியகாசி பர்காக்க
புருவந்தம்மைத் தளர்வின் மகோ தரர்காக்க
தடவிழிகள் பாலசந் திரனார் காக்க
கவின்களருமதரம்கச முகர்காக்க தாலங்கணக்
கிரீடர்காக்க நவில்சிபுகங்கிரிசை சுதர்
காக்கநனிவாக்கை விநா யகர்தாங் காக்க
அவிர்நகை துன் முகர்காக்க அள்ளெழிற் செஞ்செவிபாச
பாணி காக்க தவிர்தலுறா திளங்கொடி போல்
வளர்மணி நாசியைச்சிந்தி தார்த்தர் காக்க
காமருபூமுகந்தன்னைக் குணேசர்நனிகாக்களங்
கணேசர் காக்க வாமமுறுமிருதோளும்
வயங்குகந்தபூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறுமணி முலைவிக் கினவி நாசன்காக்க
இதயந்தன்னைத் தோகலுங்கணநாதர்
காக்க அகட்டினைத்துலங்கு ஏரம்பர் காக்க
பக்கமிரண்டையுந்தரா தரர்காக்க பிருட்டத்தைப்
பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க
விளங்குலிங்கம்வியாளபூ டணர்தாங் காக்க
தக்ககுய்யந்தன்னைவக் கிரதுண்டர்காக்கசக
னத்தையல்லல் உக்கணபன்காக்க
ஊருவைமங்களமூர்த்தி உவந்து காக்க
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க இருபதம் ஏக
தந்தர் காக்க வாழ்கரங்கிப்பிரசா
தனர்காக்க முன்கையை வணங்குவார் நோய்
ஆழ்தரச் செய்யாசாபூ ரகர்காக்கவிரல் பதும
அத்தர் காக்க கேழ்கிளருநகங்கள் விநா
யகர்காக்க கிழக்கினிற்புத் தீசர் காக்க
அக்கினியிற் சித்தீசர் காக்க உமாபுத்திரர்தென்
னாசை காக்க மிக்கநிருதியிற்கணே
சுராகாக்கவிக்சினவர்த் தனர்மேற்கென்னுந்
திக்க தனிற்காக்கவா யுவிற்கசன்னன் காக்க
திகழுதீசி தக்கநிதிபன் காக்க
வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க
ஏகதந்தர்பகல்முழுதுங் காக்கஇரவினுஞ்சந்தி
யிரண்டன் மாட்டும் ஓ கையின் விக்கினகிருது
காக்க இராக்கதர்பூத முறுவேதாள
மோகினிபேயிவையாதி உயிர்த்திறத்தால்வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும்
விலக்குபுபாசாங்குசர்தாம் விரைந்து காக்க
மதிஞானந்தவந்தானம் மானமொளி புகழ்குலம்வண்
சரீரமுற்றும் பதிவானதனந்தானி
யங்கிரகமனைவிமைந்தர் பயில்நட்பாதிக்
கதியாவுங்கலந்துசர்வா யுதர்காக்க காமர்பவுத்
திரர்முன்னான விதியாருஞ்சுற்றமெலாம்
மயூரேசரெஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
வென்றசீவி தங்கபிலர் காக்ககரியாதியெலாம்
விகடர் காக்க என்று இவ்வாறு இதுதனைமுக்
காலமும் ஓதிடின் உம்பால் இடையூறு ஒன்றும்
ஒன்று றாமுனிவரர்காள் அறிமின்கள் யாரொருவர்
ஓதினாலும் அன்று ஆங்கு அவர் தேகம்
பிணியறவச்சிரதேக மாகிமன்னும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக