சனி, 30 ஏப்ரல், 2016

ஸ்ரீரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு ஆனித்திருமஞ்சன அபிஷேகம்.

ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாத ருக்குத் திருமஞ்சனம் மிகச்சிறப்பாக நடைபெறும். இதனை ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றுவர்.

இத்திருமஞ்சனத்தின்போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை சேவிப்பது மிகவும் விசேஷம். இதனை பெரிய திருமஞ்சனம் என்பர். ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோவில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும்  திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள்.

திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள்.

திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோவிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பின் பக்தர்களுக்கு அளிப்பார்கள். ஆனித் திருமஞ் சன அபிஷேகத்தின்போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதில் ஐயமில்லை!

ஆடல் வல்லானின் அற்புத தாண்டவங்கள்!


ருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மட்டும் காணும் ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்ட வங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன.


திருநெல்வேலியில் தாமிர சபையில் இறைவன் ஆடும் தாண்டவம் படைத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இதனை காளிகா தாண்டவம் என்பர்; முனி தாண்டவம் என்றும் சொல்வர். மதுரை மற்றும் திருப்பத்தூரில் ஆடும் தாண்டவம் கவுரி தாண்டவம் மற்றும் சந்தியா தாண்டவமாகும். இது காத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இருண்ட நள்ளிரவில் சிவபெருமான் ஆடும் சங்கார தாண்டவம் அழித்தல் தொழிலைக் காட்டக்கூடியது. மறைத்தல் தொழிலை திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் ஆடினார். இதை திரிபுர தாண்டவம் என்பர். சிதம்பரத்தில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம். இவை ஐந்து தொழில்களைக் காட்டக் கூடியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

சிவபெருமான் தாண்டவ மாடும் முதன்மைச் சபைகள் ஐந்து. பதஞ்சலி, வியாக்ரபாத ருக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இது சிதம்பரம் திருத்தலத்தில் நடந்தது- இது பொன்னம்பலம் ஆகும்.

மதுரை மீனாட்சி திருக் கல்யாணத்திற்கு வந்த பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் வேண்டிக் கொண்டதால், சிவபெருமான் திருமண விருந்திற்கு முன் ஆடிக்காட்டிய நடனம் மதுரை வெள்ளியம் பலத்தில் நடைபெற்றது. இங்கு ராஜசேகரபாண்டியன் என் னும் மன்னனின் வேண்டு தலுக்கிணங்க சிவபெருமான் கால் மாறி- வலது காலைத் தூக்கி ஆடினார். இதேபோல்- திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கீழ்வேளுர் திருத்தலத்தில் அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமணக் காட்சியைக் கொடுத்தபோது, அகத்தி யரின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினார். இறைவனின் வலது பாத தரிசனத்தை அகத்தியர் கண்டார்.

சிவபெருமான் வலக்காலை உடலோடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம். இந்த நிகழ்ச்சி திருவாலங்காட்டில் நடந்தது. இத்தலத்தில் ரத்தின சபை அமைந்துள்ளது.

வேணுவனமாகிய நெல்லையில் தாமிரபரணி ஆற்றங் கரையில் இறைவன் தாமிரசபையில் நடனமாடுகிறார்.

திரிகூடமலைக்கு வந்து திருமாலும், பிரம்மாவும், தேவர்களும் தவம் செய்ய, அவர்களுக்காக இறைவன் திருக்கூத்து தரிசனம் தந்தார். திரிகூடமலையான திருக்குற்றாலத் தில் உள்ளது சித்திரசபை. இங்கு இறைவன் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளது.

திருவெண்காடு சுவேதாரண்யர் திருக்கோவிலில் உள்ள நடன சபையை ஆதிசபை என்று போற்றுவர். இங்கு சுவேதகேது என்ற மன்னன் இறைவனை வேண்டியதால் நவதாண்டவங்களை ஆடி மகிழ்வித்தார். இதற்குப் பிறகுதான் இறைவன் சிதம்பரத்தில் ஆடினார் என்று புராணம் கூறுகிறது.

திருவாரூரில் திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கு  ஏற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப் படுகிறது.

திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்காறாயிலில், நடராஜரின் அம்சமாகிய ஆதி விடங்கர் குக்குட நடனம் ஆடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்று ஆடினார்.

தேனடையில் வண்டு ஒலித்துக் கொண்டே முன்னும் பின்னும் மேலும் கீழுமாக ஆடுவதைப் போன்று ஆடும் இறைவனின் பிரமர தாண்ட வத்தை திருக்குவளையில் தரிசிக்கலாம்.

திருநள்ளாற்றுத் தலத்தில் பித்தேறியவனைப்போல்- மனம் போனபடியெல்லாம் இறைவன் ஆடிய நடனத்தை உன் மத்த நடனம் என்பர்.

நாகை வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம் எனப் படுகிறது. அன்னப்பறவை அடிமேல் அடியெடுத்து வைத்து அழகாக நடப்பது போன்ற தோற்றமாகும்.

திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம் கமல நடனமாகும்.

இறைவன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக் கடையூர் தலத்தில் தரிசிக்கலாம்.

ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில், சித்ரா பௌர்ணமி யன்று பரத்வாஜ முனிவருக்காக இறைவன் ஆடிய நடனத்தை சித்திர நடனம் என்று போற்றுவர்.

ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் உச்சிக் காலத்திலும், ஆனித் திருமஞ்சனம் உத்திர நட்சத்திரத்தில் பிரதோஷ காலத்திலும், ஆவணி மாதம் சதுர்த்தசி திதியன்று சாயரட்சை காலத்திலும், புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் அர்த்த ஜாமத்திலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தன்று நள்ளிரவி லும், மாசி மாதம் சதுர்த்தசி திதியில் கால சந்தியிலும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.

இதில் ஆனி மாதம் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை "ஆனித் திருமஞ்சனம்' என்று போற்றுவர்.
தாண்டவங்கள் பல ஆடிய இறைவ னான ஸ்ரீநடராஜப் பெருமான் சில திருத் தலங்களில் வித்தியாசமான திருக்கோலத் திலும் அருள்புரிகிறார்.

திருச்சியை அடுத்துள்ள திருவாச்சி என்னும் திருத்தலத்தில் விரிந்த செஞ்சடை யின்றி, முயலகனுமின்றி ஒரு சர்ப்பத்தின் மேல் ஆடும் கோலத்தில் உள்ளார்.

திருச்சிக்கு அருகிலுள்ள வயலூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜர் திருமேனி விக்கிரகத்தில் திருவாச்சி இல்லை. திரிசடை ஜடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் அணிந்துள்ளார். இடது மேல் கையில் அக்னியும், வலது மேல் கையில் உடுக்கை யும், வலது கீழ்க்கரம் அபயம் தரும் நிலையிலும், இடது கீழ்க்கரம் வலது பாதத்தைக் காண்பிக்கும் நிலையில் தொங்கவிட்டும் எழுந்தருளியுள்ளார். மேலும் இவரது காலடியில் முயலகன் மிதிபட வில்லை. முயலகன் இல்லாத அற்புதத்திருமேனி என்று போற்றுவர். கால்தூக்கி ஆடாமல் நடனக் கோலத்தில் சற்று நளினமாகக் காட்சி தரும் இத்திருமேனியை சுந்தரத் தாண்டவத் திருமேனி என்றும் உமாநடன வடிவம் என்றும் போற்றுவர்.

சிவாலயங்களில் பஞ்சலோகத் திருமேனியில் காட்சிதரும் ஸ்ரீநடராஜப் பெருமான், ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் மரகதக் கல் (பச்சைக் கல்) திருவுருவில் எழுந்தருளி யுள்ளார். இத்திருமேனிக்கு சந்தனக்கலவை பூசியிருப் பார்கள்.

"அன்ன சிவன்' வழிபாடு!



 காசியில் கங்கைக் கரையிலுள்ள  மீராகாட் என்னும் படித்துறையில் தீபாவளி (அமாவாசை) அன்று காலையில் "அன்ன சிவன்' வழிபாடு நடைபெற்று வருகிறது.



அகன்ற நடைபாதையில் தரையைத் தூய்மை செய்து கங்கை நீரால் நன்கு கழுவி, மிகப்பெரிய
  மாக்கோலமிட்டு, பெரிய வாழை இலைகளை தரையில் விரித்து, சுமார் நான்கு சதுர அடி பரப்பளவிலும் இரண்டடி உயரத்திலும் அன்னத் தினாலேயே லிங்கம் ஸ்தாபித்து. அதில் காசி விஸ்வநாதரை எழுந்தருளச் செய்து, அந்த அன்னலிங்கத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமமிட்டு, மலர் மாலை, ருத்ராட்ச மாலை சாற்றி, அன்னலிங்கத்தைச் சுற்றி லட்டு, வடைகளை சமர்ப்பித்து, பெரிய தட்டுகளில் இனிப்பு களையும் பழங்களையும் படைப்பார்கள்.



ஒரு சிறு நந்தியின் உருவத்தை அன்னத் தினால் உருவாக்கி, பச்சை மிளகாயினால் காது, வால் வைத்து, புளியங்கொட்டையினால் கண்கள் வைத்து அலங்கரித்து அன்னலிங்கத்தின்முன் வைப்பார்கள்.




காலை சுமார் பத்து மணியளவில், அங்கு கூடியுள்ள பக்தர்கள் மற்றும் காசிக்கு வந்திருக்கும் யாத்திரிகர்கள் முன்னிலையில், வேதம் அறிந்த அந்தணர்கள் கணபதி பூஜையில் ஆரம்பித்து அன்ன சிவனுக்குப் பூஜை செய்வார்கள். பிறகு, அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் பூஜை செய்தபின் தேங்காய் உடைத்து, அன்னதானத்திற்காக தயார் செய்திருக்கும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயசம், இனிப்பு வகைகள் முதலியவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிப்பார்கள். மீண்டும் அனைவரும் பூஜை செய்தபின்,
  அந்த அன்னலிங்கத் திலிருந்து சிறிதளவு அன்னத்தையும் இனிப்பு மற்றும் காய்கறிப் பதார்த்தங் களையும் இலையில் வைத்து, எதிரில் ஓடிக் கொண்டிருக்கும் கங்கை நதிக்கு சமர்ப்பித்து வழிபடுவார்கள்.



அதற்குப்பின் பூஜை செய்த இடத்திற்கு அருகிலேயே பக்தர்கள் வரிசையாக அமர்ந்த தும், இலை போடப் பட்டு அன்ன சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவர்களுக்கு வழங்கி, மற்ற பொருட்களையும் பரிமாறுவார்கள்.

கங்கை நதியில் நீராடிவிட்டு அந்தப் பாதை வழியாக மகான்கள், புனிதர்கள், பக்தர்கள் நடந்து சென்றிருப்பதால், அவர்கள் பாதங்கள் பட்ட புண்ணிய இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதை உயர்வாகவே நினைக்கிறார்கள். இதுபோல் அன்னம் உண்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டும் என்பதால் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அனைவருக்கும் அன்னசிவன் பிரசாதம் கிடைக்கும் என்பது சிறப்பாகும்.




ஒவ்வொரு அன்னத்திலும் சிவலிங்கம் காட்சி தருவதாக ஐதீகம் என்பதால் அன்னத்தை சிறிதளவுகூட வீணாக்காமல் உண்பார்கள். இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும். அதற்குப்பின் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவது வழக்கம். இந்த வைபவத்தை காசியிலுள்ள மகாலட்சுமி யாத்ரா சர்வீஸ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், காசி விஸ்வநாதரையும் அன்னை விசாலாட்சி யையும் தரிசித்தபின் அன்னபூரணி ஆலயத்திற்குச்
  சென்று, தங்கத்தாலான அன்னபூரணியை தரிசிப்பார்கள். பிறகு லட்டு தேரில் அன்னபூரணி பவனி வருவதைக் கண்டுகளித்து, அந்த லட்டுகளையே பிரசாதமாகவும் பெற்று மகிழ்வர். அதன்பின் தங்க பைரவர் விக்கிரகத்தை தரிசித்து, தீபாவளி தினத்தை புனிதம் மிக்க வகையில் கழிக்கிறார்கள்.

மாலை ஆறு மணிக்குமேல் கங்கை நதிக்கு நடைபெறும் ஆரத்தி மிகவும் ஜெகஜோதியாய்த் திகழும். அங்கு கங்காதேவியின் தங்க விக்கிரகத்தை பஞ்ச கங்கா படித்துறையில் எழுந்தருளச் செய்து, சப்தரிஷிகள் பூஜையாக ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும்


 

கல்வி, செல்வம், வீரம் மூன்றும் தரும் மூகாம்பிகை!




ர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த- பசுஞ்சோலைகள்   நிறைந்த ஊர் கொல்லூர். இக்கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது மூகாம்பிகை ஆலயம். இங்கு    அம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்தபடி கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கி றாள். காளி, மகாலட்சுமி, சரசுவதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். இந்த அம்மன் வேண்டியதை வேண்டியபடி தருபவள் என்னும் பெயர் பெற்றவள்.

தவம் பல புரிந்து சிவனிடம் வரங்கள் பெற்றவன் மூகாசுரன். வரங்களின் பயனாக வந்த செருக்கால் யாவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான். முனிவர்களும் தேவர்களும் கூட இவனது தொந்தரவு தாளாமல் கயிலாயம் வந்து முறையிடும்படி நடந்து கொண்டான். அவர்களது குறைகளைக் கேட்டுக் கொண்ட ஈசன், ""மூகாசுரனுக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சற்று பொறுங்கள்'' என நம்பிக்கையூட்டி அனுப்பி னார்.

மூகாசுரனை அழிக்க விசேஷ சக்திகள் வேண்டும் என்று கோல மகரிஷி கூறிய ஆலோசனை யின்படி, முப்பெருந்தேவியரின் சக்திகளை ஒன்றிணைத்து  ஒரு  அம்பிகை உருவாக்கப்பட்டாள். அம்பிகையின் தீரம் அசுரனை அழித்தொழித்தது. தன் மரணத் தருணத்தில் மூகாசுரன் வேண்டிக்கொண்டபடி அம்பிகை, அசுரனின் பெயராலேயே- மூகாம்பிகை என்ற பெயரில் அழைக்கப்படலானாள்.

இத்தலம் உருவானது குறித்து இரண்டு விதமான கதைகள் கூறப்படுகின்றன. முதல் கதையின்படி, ஆதிசங்கரர் முதன்முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத் தில் இருந்ததாம். அங்கிருந்த மேடையில் அமர்ந்து சங்கரர் தியானம் செய்தபோது, லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப் பதை உணர்ந்தார். தியானத் தின்போது  அம்பாள் மூகாம்பிகையாக அவருக்கு காட்சியளித்தாள். அந்த உருவத்திலேயே மூகாம் பிகை சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட் டது.

மற்றொரு கதையின் படி, ஆதிசங்கரர் நாற்திசைகளிலும் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களி டம் ஒப்படைத்து விட்டு இந்தியா எங்கும் பயணம் செய்து வந்தார். ஒருமுறை அவர் கர்நாடகாவில் பயணம் செய்தபோது கொரிசோல் மலையில் தியானத்திலிருந்தார். அப்போது அம்பாள் அவர்முன் தோன்றி அருளாசி வழங்கினாள். அம்பாளின் எழிலில் அகமகிழ்ந்த சங்கரர், ""தங்களது உருவத்தை நான் நாள்தோறும் வணங்க விரும்புகிறேன். எனவே கேரளாவிலுள்ள காலடியில் உங்களது உருவத்தை பிரதிஷ்டை செய்ய அருளவேண்டும்'' எனக் கேட்டார்.

அம்பாளுக்கோ அந்த இடம்விட்டு நீங்க மனமில்லை. என்றாலும் பக்தனின் மனம் கோணக்கூடாதல்லவா! எனவே சங்கரரிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்தாள். ""என்னுடைய உருவத்தை நீ காலடிக்குக் கொண்டு செல்லலாம். ஆனால் இடையில் எங்கும் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படித் திரும்பிப் பார்க்க நேர்ந்தால் அந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்துவிட வேண்டும்.''

ஆதிசங்கரரும் அதை ஏற்றுக்கொண்டு  அந்த மலையிலிருந்து அம்பாளின் உருவத்துடன் கீழிறங்கினார். அவர் மலையடிவாரத்தை அடைந்ததும், அம்பாள் தனது கொலுசை அசைக்க, ஒரு மதுரமான ஒலி கேட்கிறது. இதில் தன்னை மறந்து திரும்பிப் பார்த்துவிட்டார் ஆதிசங்கரர். எனவே அம்பாளிடம் வாக்களித்தபடி அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தார். அந்த இடமே கொல்லப்புரா என்ற கொல்லூராகும்.

இங்குள்ள அம்மன் மூன்று கண்களுடன் காணக் கிடைக்காத கோலத்தில் காட்சியளிக்கிறாள். மூகாம்பிகையின்  இருபுறத்திலும் ஐம்பொன்னாலான காளி, சரசுவதி சிலைகள் உள்ளன.


கோவிலுக்கு மேற்கே காலபைரவர், உமாமகேஸ்வரி சந்நிதிக்கு இடையே சௌபர்னிகா ஆறு ஓடுகிறது. இந்த ஆறு அருகிலுள்ள மலை உச்சியில் இரு கணவாய் வழியாக உருவாகி, கொல்லூரை வந்தடைகிறது. கொல்லூரை எட்டும்போது, இந்த ஆறு சம்பாரா என்று அழைக்கப்படுகிறது. 64 வகை மூலிகைத் தாவரங்களின் சக்தி இவ்வாற்று நீரில் காணப்படுவதால், அதிகாலை நேரத்தில் இதில் நீராடினால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமைதோறும் கோவில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீப மரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் கருவறையைச் சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டு, தீப ஒளியால் கருவறை பிரகாசிக்கிறது. இரவு பிராகாரம் மூடப்படுவதற்குமுன், அம்பாள் கோவிலினுள் தங்க ரதத்தில் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். அம்பாளின் பிராகார வலத்தை தேவர்களும் கண்டு வணங்குகிறார்கள் என்பது ஐதீகம்.

தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்குநீர் வழங்கப் படுகிறது. அதை அருந்துபவர்களை நோய் அண்டாது. மேலும் அவர்கள் மனத்தெம்பும், புத்திர பாக்கியமும் பெறுவார்கள். ஆதிசங்கரருக்கு உடல்நலமின்றிப் போனபோது அம்பாளே சுக்குநீர் வைத்துத்  தந்ததாகவும், அந்த ஐதீகத்தின் தொடர்ச்சியாகவே இது வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்கள் நடை திறப்ப தில்லை. ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் கோவில் திறந்திருப் பதோடு பூஜைகளும் நடைபெறும்.

பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூல நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா நடக்கும். இந்தத் திருவிழாவின்போது, அம்ம னுக்கு மட்டுமின்றி மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி, சரசுவதி பூஜையன்று மூகாம்பிகை சந்நிதியில் உள்ள சரஸ்வதிதேவி பக்தர்களின் தரிசனத் திற்காக வெளியே பவனி வருகிறாள்.

சென்னையிலிருந்து மங்களூருக்கு  ரயில் மூலம் சென்றால், அங்கிருந்து கொல்லூ ருக்கு பேருந்து வசதி இருக்கிறது. கோவை யிலிருந்து நேரடியாக கொல்லூருக்கு பேருந்துகள் உள்ளன. வசதிக்கு ஏற்றாற்போல் தங்கும் விடுதிகள் கிடைக்கின்றன. முப்பெருந்தேவியின்

அம்சமான மூகாம்பிகையை தரிசித்தால் கல்வி, செல்வம், வீரம் என எல்லாமே சித்திக்கும்!

 

வேண்டுவன எல்லாம் தரும் கந்தனின் 16 நாமங்கள்!

 வியாசர் ஸ்கந்த புராணத்தை ஆரம்பிக்கும் போதே, கந்தனின் உன்னதமான 16 பெயர்களைக் கூறி, அதற்கு பலஸ்ருதியும் கூறுகிறார்.

"ஸுப்ரமண்யம் ப்ரணமாம்யஹம்
ஸர்வக்ஞம் ஸர்வகம் ஸதா
அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம்
நாம ஷோடஸ ப்ரதமோ ஞான சக்த்யாத்மா
த்விதியோ ஸ்கந்த ஏவச
அக்னிபூஸ்ச த்ருதீயஸ்யாத்
பாஹுலேய: சதுர்த்தக:
காங்கேய: பஞ்சமோ வித்யாத்
ஷஷ்ட: சரவணோத்பவ:
ஸப்தம: கார்த்திகேய: ஸ்யாத்
குமாரஸ்யாத் அத அஷ்டக:
நவம: ஷண்முகஸ்சைவ
தஸம: குக்குடத்வஜ:
ஏகாதச: சக்திதர:
குஹோ த்வாதச ஏவச
த்ரயோதஸோ ப்ரம்மசாரி
ஷாண்மாதுர: சதுர்தச:
க்ரௌஞ்சபித் பஞ்சதசக:
ஷோடஸ: சிகிவாஹன:'

முருகனின் 16 நாமங்களைக் கூறுவதற்கு முன்பும் பின்பும் பலஸ்ருதி கூறுகிறார்.

கோரிய பொருட்களை அடைவதற்காக, எல்லாம் அறிந்தவனும் எங்கும் உள்ளவனுமான சுப்ரமண்யனை நமஸ்கரித்து முருகனின் 16 நாமங்களைக் கூறுகிறேன்.

1. ஞானசக்த்யாத்மா- ஞானம், சக்தி ஆகியவற்றின் உருவாக இருப்பவன்.

2. ஸ்கந்தன்- சத்ருக்களை அழிப்பவன்; (ஆறு குழந்தைகளையும் பார்வதி அணைக்க ஒன்றானவன்); ஆதாரமாக- பற்றுக்கோடாக இருப்பவன்; சிவஜோதியாக வெளிப்பட்டவன்.

3. அக்னி பூ- அக்னியில் உண்டானவன்; அக்னியால் ஏந்தப்பட்டவன்;அக்னி ஜோதியாக எழுந்தவன்.

4. பாஹுலேயன்- வாயு, அக்னியால் ஏந்தப்பட்டவன்.

5. காங்கேயன்- கங்கை நதியில் உண்டானவன்.

6. சரவணோத்பவன்- நாணற்காட்டில் பிறந்தவன். (அம்பிகையின் மறுவுருவம் சரவண மடுவாம்- அதனில் தோன்றியவன்).

7. கார்த்திகேயன்- கிருத்திகை நட்சத்திரத்தின் புதல்வன்.

8. குமாரன்- குழந்தையாக இருப்பவன்; (ஐந்து வயதுக்கு உட்பட்டவன்) இளைஞன்; யுத்தத்திற்கு அதிபதி; நிந்திப்பவரை அழிப்பவன்; மன்மதனைப் போல் அழகானவன்; லக்ஷ்மி கடாக்ஷம் அளிப்பவன்; அஞ்ஞானம் அழித்து ஞானம் ஈபவன்.

9. ஷண்முகன்- ஆறு முகம் உடைய வன்; கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த, விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன்.

(அருணகிரியின் திருப்புகழ் பாடல் களைப் படித்தால் இது உண்மையென்று விளங்கும்).

10. குக்குடத்வஜன்- கோழியைக் கொடி யாகக் கொண்டவன்; சூரஸம்ஹாரத்திற்கு அக்னியே கோழிக் கொடியானான். சூர ஸம்ஹாரத் திற்கு பிறகு ஒரு பாதி கோழிக் கொடியானது.

11. சக்திதரன்- வேலை உடையவன்; சூரஸம்ஹாரத்திற்கு பராசக்தி வேலாக மாறிட, அதனை ஏந்தியவன். (11 ருத்ரர்களே முருகனுக்கு ஆயுதமாயினர்).

12. குஹன்- பக்தர்களின் இதயக் குகையில் வசிப்பவன்; முருகனுக்கே உகந்த ரகஸ்ய திருநாமம். இந்த குஹப்ரம்மத்தை லய குஹன், யோக குஹன், அதிகார குஹன் என்பர்.

(லய குஹன்- உயிரை ஒழிவில் ஒடுக்கி "ஒழிவில் ஒடுக்கம்' என்ற பதவி தருபவன்.

யோக குஹன்- ஒடுங்கிய உயிரை விரியச் செய்து யோக சக்தியை அளிப்பவன்.

அதிகார குஹன்- பஞ்சக்ருத்யங்கள் நடத்தி, அதிகாரம் அளிப்பவன்.)

13. ப்ரம்மசாரி- வேதஸ்வரூபன்; பரப்ரம்ம ஸ்வரூபன்; ப்ரம்மத்திலேயே லயித்திருப்பவன்.

14. ஷாண்மாதுரன்- ஆறு கிருத்திகா நட்சத்திர தேவிகளைத் தாயாக உடையவன்.

15. க்ரௌஞ்சபித்- க்ரௌஞ்ச மலையை வேல்கொண்டு பிளந்தவன்; அஞ்ஞானம் என்கிற மலையை- இருளை ஞானம் என்கிற வாளால் தகர்ப்பவன்.

16. சிகிவாஹனன்- மயிலை வாகனமாக உடையவன், சூரபத்ம சம்ஹாரத்திற்கு முன்பு இந்திரனே மயில் வாகனமானான். சூரசம்ஹாரம் முடிந்ததும் மாமரப் பாதி சூரனே மயில் வாகனமானான்.

மேலும் இந்த 16 நாமங்களை உச்சரிப்பதால் வரும் பலன்களை வியாசர் கூறுகிறார்.

"ஏதத் ஷோடஸ நாமானி
ஜபேத் ஸம்யக் ஸதாதரம்
விவாஹே துர்கமே மார்கே
துர்ஜயே சததைவ ச
கவித்வே ச மஹாஸாஸ்த்ரே
விக்ஞானார்த்தி பலம் லபேத்
கன்யார்த்தி லபதே கன்யாம்
ஜயார்த்தி லபதே ஜயம்
புத்ரார்த்தி புத்ரலாபம் ச
தனார்த்தி லபதே தனம்
ஆயு: ஆரோக்ய வஸ்யம் ச
தன தான்ய ஸுகாவஹம்'

அன்புடன் எப்போதும் இந்த 16 நாமங்களை ஜெபித்தால், திருமணத்திலும், செல்ல முடியாத வழியில் செல்லும்போதும், வெல்ல முடியாத கடினமான காரியத்திலும், கவிஞன் ஆவதிலும், மகத்தான உயர்ந்த சாஸ்திரங்களிலும் வேண்டிய பலனை அடையலாம். கன்னிகை வேண்டுபவன் கன்னிகையையும்; வெற்றியை வேண்டுபவன் வெற்றியையும்; பிள்ளைப் பேறு வேண்டுபவன் புத்திரர்களையும்; பொருள், தனம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், யாவரையும் வசீகரிக்கும் தன்மை, பொருள், தான்யம், சுகம், யாவும் பெற்று இன்புறுவான்..

பிரம்ம- நாரத சம்வாதமாக சுப்ரமண்ய ஸஹஸ்ர (1,000) நாமங்களுக்கு பலஸ்ருதி யாது கூறப்படுகிறது?

"இதிதாம்னாம் ஸஹஸ்ராணி
ஷண்முகஸ்ய ச நாரத
ய: படேத் ஸ்ருணுயாத் வாபி
பக்தி யுக்தேன சேதஸா
ஸஸத்யோ முச்யதே பாபை:
மனோ வாக்காய ஸம்பவை:
ஆயுர் வ்ருத்திகாம் பும்ஸாம்
ஸ்தைர்ய வீர்ய விவர்தனம்
வாக்யேன ஏகேன வக்ஷ்யாமி
வாஞ்சிதார்த்தம் ப்ரயச்சதி
தஸ்மாத் ஸர்வ ஆத்மனா ப்ரம்மன்
நியமேன ஜபத் ஸுதி:'

அன்புடன் இந்த 1,000 பேர்களைப் படித் தாலோ கேட்டாலோ மனம், வாக்கு  இவற்றால் உண்டான பாவங்கள் அழியும். வாழ்நாள் அதிகரிக்கும். உடல் பலம் அதிகரிக்கும். ஒரு நாமம் சொன்னாலும் கேட்ட பொருள் அடைய லாம். ஆக, யாவரும் நியமத்துடன் இதனை ஜெபம் செய்ய வேண்டும்.

16 நாமங்கள் சொல்வதன் பலன், 1,000 நாமங்கள் சொல்வதைவிட அதிகமாக உள்ளதே! ஆக 16 நாமங்களே மிக உன்னதம் போலும்!
                                        
                                                                                                 

பகை விலக்கி மங்களம் தரும் ஸ்ரீ சுதர்சனர்!

மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் முதன்மையானதும் சிறப்பு பெற்றதுமாகத் திகழ்வது சக்கராயுதம். சக்கராயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் என்று போற்றப்படுகிறார். வைணவர்கள் சுதர்சனரை சக்கரத்தாழ் வார் என்று வழிபடுவார்கள். விஷ்ணுவின் சக்கர அம்சத்திற்கு சக்கரராயர், திருவாழி ஆழ்வான், சக்கரராஜன், ஹேதிராஜன், யந்திர மூர்த்தி, மந்திரமூர்த்தி என்று பல சிறப் புப் பெயர்கள் உள்ளன.

திருமால், தன் சங்கல்பத்தினால் சக்கராயுதத்தை தனக்கு நிகராக உருவாக்கி, தன்னுடைய உருவத்தையும் சக்தியையும் அளித்திருக்கிறார். திருமாலின் சேனாதிபதியான ஸ்ரீசக்கரத்தினை பருதி, நேமி, எஃகம்,  வளை, ஆழி, திகிரி என்றெல்லாம் அழைக்கின்றனர்.

பெருமாளின் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர் யாமி, அர்ச்சை ஆகியவற்றில் சக்கரத்தாழ்வார் உடனிருக்கிறார். மகாவிஷ்ணு பூமியில் அவதரிக் கும்போதெல்லாம் சக்கரத்தாழ் வாரும் சில அவதாரங்களில் வெளிப்பட்டும், சில அவதாரங் களில் மறைந்தும் தன் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். காக்கும் தொழில் புரிபவர் திருமால். அவர் தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

சக்கராயுதம்- அதாவது சுதர்சனம் என்பது மகா சக்கரம். நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான "உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்' என்ற சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது.

பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ் வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதைக் காண்கிறோம். காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப் பான தலங்கள் என்பர். காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப் படுகிறார். குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார். மேலும், மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் என்னும் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார். பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதை கள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங் கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளி யுள்ளார். இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடை முறையில் உள்ளது. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால்  நவகிரகங் களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம' என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது; தீராத நோய்களைத் தீர்க்கும்; போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். சுருங்கக்கூறின், எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. சிறந்த சுதர்சன உபாசியாக விளங்கிய சுவாமி தேசிகர் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார் என்பதை இவ்வரலாறுகள் உணர்த்துகின்றன.

பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. இதேபோல் திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்; சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பர்.

 

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஆனித் திருமஞ்சனம்!

இரவு நடராஜர் அபிஷேகம்
காலை நடராஜர் தரிசனம்

           தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம்; காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை; மாலைப்பொழுது ஆனி; இரவு ஆவணி; அர்த்த சாமம் புரட்டாசி என்பர்.

வைகறை பூஜை மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும்; காலைச்சந்தி பூஜை மாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; உச்சிக்கால பூஜை சித்திரை திருவோணத்திலும்; மாலை (சாயரட்சை) பூஜை ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும்; இரண்டாம் கால பூஜை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; அர்த்தஜாம பூஜை புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சில ஆலயங்களில் இந்த ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.

இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலம். இந்தக் காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறான். அடுத்து வருவது தட்சிணாயன காலம். அப்போது தன் பாதையை சூரியன் மாற்றிக்கொள்கிறான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம். இதையே "ஆனி இலை அசங்க' என்பார்கள். கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி.

சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பொன்னம்பலமான சிதம்பரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்காக சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். வெள்ளியம்பலமான மதுரையில் சுந்தரத் தாண்டவம் ஆடினார். இங்கு ராஜசேகர பாண்டியன் வேண்டிக் கொண்டதால், கால் மாறி வலதுகாலைத் தூக்கி ஆடியதாக வரலாறு சொல்கிறது. தாமிரசபையான திருநெல்வேலியில் இறைவன் ஆடியது சங்காரத் தாண்டவம்.

சித்திர சபையான குற்றாலத்தில் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளதால், இத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரிந்தார் என்பர். ரத்தின சபையான திருவாலங்காட்டில் வலக்காலை உச்சந்தலை வரைத் தூக்கி அனைவரும் வியக்கும் வண்ணம் ஊர்த்துவத் தாண்டவம் ஆடினார்.

திருவெண்காடு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நடனசபை ஆதி சித்சபை என்று போற்றப்படுகிறது. இங்கே சுவாத கேது என்ற மன்னன் வேண்டிக்கொண்ட வண்ணம் இறைவன் நவ தாண்டவங்கள் ஆடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இதற்குப் பிறகுதான் சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடினாராம். அதனால் இத்தலத்தினை ஆதிசிதம்பரம் என்று சொல்வர்.

இதேபோல் பல திருத்தலங்களில் சிவபெருமான் திருநடனம் ஆடியதாகப் புராணம் கூறுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர். திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர். திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.

இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.

ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்; எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்; மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்; நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்; பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்; இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்; தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்; பால் அளித்தால் ஆயுள் வளரும்; தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்; கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்; சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்; பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது; பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

பொதுவாக சிவபெருமானை வழிபட்டால் நமக்கு நல்லறிவு கிட்டும். இதனால் எது நல்லது- எது தவறு என்பதைப் பகுத்தறியலாம். உடலில் பதட்டம் இருக்காது. அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்வர். 

 

மங்கள வைபவங்கள் அருளும் வைபவலட்சுமி!

புதிதாகத் திருமணமான மணமக்களை, "பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என வாழ்த்துகிறோம். அந்தப் பதினாறு பேறுகளோடு அஷ்டலட்சுமிகள் தரும் எட்டு ஐஸ்வரியங்களையும் சேர்த்து, தன்னை வணங்குபவர்களுக்கு அருள்பவள்தான் வைபவலட்சுமி.

ஒரு சமயம் வைகுண்டத்தில் செந்தாமரை மலர்மீது அமர்ந்திருந்த மகாலட்சுமியை கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் தங்கள் தீர்த்தத்தால் நீராட்டின. எட்டுத் திக்குகளிலுள்ள அஷ்ட கஜங்கள் (யானைகள்) தங்கள் துதிக்கையால் நீரை முகர்ந்து லட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. பாற்கடல் ஆண் உருவம் எடுத்து லட்சுமி தேவிக்கு தாமரை மாலைகளையும் திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது. கந்தவர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

லட்சுமிதேவிக்கு நடக்கும் இந்த வைபவத்தைப் பார்த்து மகாவிஷ்ணு மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது சூரியனின் மகனான ரேவந்தன் பாற்கடலில் தோன்றிய உச்சிஸ்ரவஸ் என்ற குதிரைமீது அமர்ந்து வைகுண்டம் வந்தான். அந்த அழகான குதிரையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அப்போது லட்சுமிதேவியைப் பார்த்து, ""இவன் யார்?'' என்று கேட்டார் விஷ்ணு. குதிரையின் நினைவில் இருந்ததால் கணவர் கேட்டதை லட்சுமிதேவி கவனிக்கவில்லை. இதனால் கோபமடைந்த விஷ்ணு பெண் குதிரையாகப் பிறக்கும்படி லட்சுமியைச் சபித்தார்.

அதன்படி காளந்தி, தமசா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பெண் குதிரையாகத் தோன்றி வாழ்ந்து வந்தாள் மகாலட்சுமி.

தேவி இல்லாத வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு மகிழ்ச்சியில்லை. அதனால் அவளை அழைத்துப் போக ஆண் குதிரை வடிவமெடுத்து வந்த விஷ்ணு, பெண் குதிரையாகிய தேவியிடம் இன்பம் சுகித்தார். அதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


அக்குழந்தையை பிள்ளை வரம் வேண்டித் தவமிருக்கும் யயாதியின் மகன் துர்வசுவுக்கு தானமாகக் கொடுக்க விரும்பினார் மகாவிஷ்ணு. இதற்கு மகாலட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது விஷ்ணு, ""தேவி! நீ இந்த ஆண் குழந்தையை துர்வசுவுக்குக் கொடுத்தால் உனக்கு எல்லா வைபவங்களையும் வழங்கும் ஆற்றல் கிடைக்கும். அதைக் கொண்டு பூலோகத்தில் வாழும் மக்களுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் வழங்கலாம். அதனால் உன்னை வைபவலட்சுமி என்று போற்றித் துதிப்பார்கள். நான் உன்னைத் தேடி வந்ததுபோல் உன்னை வணங்கும் பெண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும்; இணைபிரியாமல் கணவனோடு சேர்ந்து வாழும் மகிழ்வையும் நீ கொடுக்கலாம். வைபவலட்சுமியாகிய உன் பெருமை உலகெங்கும் தெரியும்'' என்றார்.

மேலும், ""நான் உன்னோடு கூடியிருந்து பக்தர்கள் வேண்டும் எல்லா வரங்களையும் கொடுப்பேன்'' என்றும் உறுதி கூறி, லட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது, ""நான் அருளிய இந்த சுலோகத்தை தினமும் திருவிளக்குமுன் அமர்ந்து ஒன்பது முறை சொல்லும் பக்தைகளின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதோடு, மாங்கல்ய பலம் பெற்று புத்திரப் பேறுகளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்'' என்றாள் லட்சுமிதேவி.

அந்த சுலோகம்:

"மங்களே மங்களதாரே
மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

இத்துடன் ஸ்ரீசூக்தம் மற்றும் விருப்பப்பட்ட லட்சுமி சம்பந்தப்பட்ட சுலோகங்களையும் சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.

வியாழன், 28 ஏப்ரல், 2016

வாழைப்பந்தல் பச்சையம்மன் அருளாட்சி!

அகில உலகங்களையும் காத்திடும் அன்னை பார்வதி தேவி பரமனின் இடப்பாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தாள். வழியில் ஓரிடத்தில் வாழை இலையினால் பந்தல் அமைத்து, அங்கு மணலினால் லிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள்.

அதற்கு நீர் தேவைப்படுவதால் விநாயகரையும், முருகனையும் அழைத்து நீர் கொண்டு வருமாறு அனுப்பினாள். இருவரும் நீர் எடுத்து வரச் சென்று வெகு நேரமாகவே அன்னையே தனது கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி ஓர் நீரூற்றை ஏற்படுத்தி மணல் லிங்கம் பிடித்து முடித்தாள். பின்னரே விநாயகரும் முருகரும் ஆளுக்கொரு நதியோடு அங்குவந்து சேர்ந்தனர். ஆக அன்னை ஏற்படுத்திய நதியோடு சேர்ந்து அங்கே  மூன்று நதிகள் ஆயின. மூன்று நதிகளும் கூடும் அவ்விடத்தை முக்கூட்டு நதி என்று அழைக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து அன்னை சிவ பூஜை செய்யும் வேளையில் அருகிலுள்ள கதலி வனத்தில் இருந்த அரக்கன் ஒருவன் பல இடையூறுகளைச் செய்து வந்தான். இதையறிந்த சிவனும், விஷ்ணுவும் வாமுனி, செம் முனியாக அவதாரம் எடுத்து அவ்வரக்கனை வதம் செய்தனர். பின்னர், அன்னை சிவ வழிபாட்டை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றாள்.

அம்பிகை முதலில் வந்த ஊர் பின்னர் முணுகப்பட்டு என்றும், பின்னர் கடைசியாக தங்கி பிரயாணப் பட்ட இடம் பிரயாணப்பட்டு என்றாகி, பின்னர் பெலாம்பட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.  மூன்று நதிகளும் கூடி இருக்கும் இத்தலத்தில் அன்னை பிடித்த மணல் லிங்கம் தற்போது கல் லிங்கமாக மாறியதோடு, வளர்ந்துகொண்டே போவதாகவும் கூறுகிறார்கள். முதலில் 2 அடி உயரமே அந்த லிங்கம் இருந்ததாம்.

இங்கு துவார பாலகர்கள் வலப்பக்கத்தில் சிவ வடிவமாகவும், இடப்பக்கத்தில் விஷ்ணு வடிவமாகவும் காட்சியளிக்கின்றனர். ஈசன், மன்னார் சுவாமியாக அம்மனுக்கு வலப்புறம் தனியாக அமர்ந்து அருள்புரிகின்றார். நடுவில் சுதை வடிவில் அம்பிகை. வெளியே விநாயகரும் முருகனும் சுதை வடிவில் அருட்காட்சி அளிக்கின்றனர்.

வாகன மண்டபத்தில் யானை, சிம்மம் மற்றும் மயில் வாகனங்கள் உள்ளன. ஆலயத்தைச் சுற்றிலும் ஜமதக்னி முனிவர், அஷ்ட விநாயகர்கள், நவவீரர்கள், சப்தரிஷிகள் ஆகியோர் அம்பாளை நோக்கி தவம் புரிந்துகொண்டிருக்கின்றனர். இத்தலத்தில் வில்வ மரமும் வேம்பு மரமும் இணைந்து அவற்றினடியில் நாகராஜர் சிலை வடிவில் காட்சி தருகின்றார்.

3 நிலைகள், 3 கலசங்களுடன் சிறிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் காட்சியளிக்கின்றது. அதில் துவார சக்தியாக கண்டன், முண்டன். உள்ளே துவார கணபதியும் தேவேந்திரனும் வீற்றிருக்கின்றனர். பிராகாரத்தில் மிகப்பெரிய சுதை வடிவில் ஜடா முனி உள்ளார். விசேஷ காலங்களில் இவருக்கு வழிபாடு செய்த பின்னரே அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

ஆலயத்தின் வெளியே வலப் புறமாக சாலையையொட்டி செங்கல் சந்நதிகளில் வாமுனி, செம்முனி இருவரும் வரப்பிரசாதிகளாக சுதை வடிவில் அருள்புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆலயத்திற்குள் நவகிரகங்களுக்கும், அனுமனுக் கும் சந்நதிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் பிரசாதமாக பச்சைநிற குங்குமம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அங்கு ஆடிமாத திங்கட்கிழமைகளே விசேஷமாகும். நாடெங்கிலுமுள்ள பல பெருமக்களின் குலதெய்வமாக இந்த அம்மன் திகழ்கிறாள். ஆலயம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். வெளியூர் பக்தர்கள் காது குத்துதல், திருமணம், பொங்கல் வழிபாடு ஆகியவற்றை இங்கே நடத்துகிறார்கள்.

பச்சையம்மனை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்து சிறந்த பலன்களைக் காண்கிறார்கள்.

மகிமை மிகுந்த இந்தத் தலம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆரணி, வேலூர், செய்யார் போன்ற இடங்களிலிருந்து  இங்கு வருவதற்கு பேருந்து வசதியுள்ளது.

 

பெருமை நிறைந்த புருஷோத்தம மாதம்!

புருஷோத்தமன்  என்றால்  ஒருவரே, அவரே  நம்  கிருஷ்ணன். அவர் பெயரில் ஒரு மாதம் உண்டு.  புருஷோத்தம மாதம்.  நமது பஞ்சாங்கம் சந்திரனின் கதியை அடிப்படையாக கொண்டது. அவர் பெயரில் எப்படி ஒரு  மாதம்  அதிகமாக  உருவானது? அப்படி இருந்தால்  புருஷோத்தம மாதம் அதி உன்னதமானது என்று சொல்லவே வேண்டாமே. 

 
வருஷத்தில் ஒரு மாதம்  அதிகமாசம் என்று  பஞ்சாங்கக்காரர்கள் தீர்மானித்து   சொல்கிறார்கள்.  கிருஷ்ணன்  அதை எடுத்து அதற்கு தனிப் பெருமை கொடுப்போம் என்று எற்றுக்கொண்டுவிட்டான்.​


​சின்னதாக  மண்டையைக்  குழப்பும் ஒரு கணக்கு போடலாமா?   பூமியை சுற்ற சந்திரன் 27.3 நாள் எடுத்துகொள்கிறான்.  சூர்யனைச் சுற்ற 365.2422 days (= பூமியின் சுற்று வேகம்  29.79 km ஒருவினாடிக்கு ). எனவே பூமியும்  சந்திரனும்  27.3 நாள் நகர்வதால் சூரியனை சுற்றுவதில்  1/12 மாசம்  என்று ஆகிறது. அதாவது ஒரு பௌர்ணமியிலிருந்து மற்றொரு பௌர்ணமி வரை. சந்திரன் இன்னும் 2. 2  நாள்  சுற்றினால் தான் அது முழுமை பெரும் அல்லவா. இது பூமி சூரியனை கொஞ்சம்  வளைந்து சுற்றுவதால் ஏற்படும் வித்யாசம். சந்திரனோ  தனது சுற்றை  27.3 நாளில் முடிக்கிறான்.  ஆனால்  பூமி, சூரிய,  கதியை  சார்ந்து பௌர்ணமியாக   சந்திரனுக்கு  29.531நாள் தேவை.  ஒரு சந்திர  வருஷ கணக்கில்   29.531 நாள்  சந்திர மாதங்கள்  = 354.372 நாட்கள் ஒரு சந்திர  வருஷத்தில்.  நமது கணக்கில்  (365.2422 - 354.372) =10.87 நாள்  வித்தியாசம் வருகிறது.   வசிஷ்ட சித்தாந்தம்  ஒவ்வொரு  32 மாதம் 16நாள்  8 கடி  க்கும் (1 கடி: 24 நிமிஷம்)   ஒருமுறை  அதிக மாசம்  இவ்வாறு ஏற்படுகிறது. `--  உங்களுக்கு  புரிகிறதா?   எது சுற்றுகிறது, பூமியா,  சந்திரனா, தலையா? 

பரிமேலழகர் போலவோ  நக்கீரர் போலவோ  பேசாமல்  கொஞ்சம் சாதாரணமாக சொன்னால்   நமது சந்திரமான  வருஷத்தில்  ஒரு பிரதமை முதல் அடுத்த அமாவாசை  வரை ஒரு சந்திரமான மாசம்.  ஒரு சௌரமான (சூரிய) வருஷத்தில் 13 அமாவாசை வந்தால்  சந்திரமான  மாசங்கள் 13 ஆகிவிடாதா?  எந்த மாசத்தில்  2 அமாவாசை வருகிறதோ  அந்த முதல் அமாவாசை வரும் மாதத்திற்கு அடுத்த மாதம் ''அதிக'' மாசம்!!!  இந்த வருஷம் ஆணிமாசத்தில் 2 அமாவாசை.   முதலாவது அமாவாசைக்கு அப்புறம் பிரதமையிலிருந்து ஆரம்பிக்கும் மாசம்  ஆஷாட அதிக மாசம்.


இந்த மாதத்தில் கிருஷ்ணன் தனது கருணையை, அனுக்ரஹத்தை அதிகரித்து  அளிக்கிறார் என்று நம்பிக்கை.

எப்படி  அஷ்டமி,  நவமி  போன்றவைலௌகீகத்தில் ஏற்றவை அல்ல என்று புறக்கணிக்கப்பட்டாலும்  ராமனும்  கிருஷ்ணனும் அவற்றை ஏற்று புனித நாளாகச் செய்தார்களோ அதுபோல்   ஒரு  மாதத்தை பீடை மாதம் என்று வைக்கப்பட்டது. அதை கிருஷ்ணன் தனதாக ஏற்றுக்கொண்டு அதை மிகச்சிறந்த மாதமாக  செய்துவிட்டான்.  புருஷோத்தம மாதத்திற்கு ஒரு முன்னோடி மார்கழியே.

புருஷோத்தம மாதத்தின் நன்மைகள்:-

பத்ம புராணம் மற்றும் கந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது.


1 . பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்:  ” அனைத்து சக்தியும் வாய்ந்த” புருஷோத்தம மாதத்தினை” எவர் பின் பற்றுகிறாரோ  அவரை நான் ஆசிர்வதிக்கிறேன். எவரொருவர் புருஷோத்தம விரதத்தினைப் பின்பற்றுகிறாரோ, அவர்களது கடந்த கால பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.  புருஷோத்தம விரதத்தினை , பின்பற்றாமல் எவராலும் உண்மையான “பக்தி தொண்டு “செய்ய முடியாது.  வேதங்களில் குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான சாதனைகளையும், வேத காரியங்களைக் காட்டிலும், புருஷோத்தம மாதத்தில் எடுக்கப்படும் விரதமானது அதிக பலனுள்ளது ஆகும். எவரொருவர், புருஷோத்தம விரதத்தினை எடுக்கின்றனரோ, அவர்கள், தங்களது வாழ்க்கையின் கடைசிக் காலத்திற்கு பிறகு எனது “நித்திய உலகமான கோலோகத்திற்கு” வந்தடைவர்.

2.”துர்வாஷ முனிவர் ”  :- புருஷோத்தம மாதத்தில் எவரொருவர் புனித நதியில் நீராடுகிறார்களோ, அவர்களது பாவங்கள் தொலைக்கப்படும். மற்ற மாதங்களின் பெருமைகள் எவையும், இந்த புருஷோத்தம மாத  மகிமையின் ஒரு பகுதிக்கு  கூட நிகராகாது.  இந்த புருஷோத்தம மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலினாலும்,தான தர்மங்கள் வழங்குவதினாலும் , “ஹரே கிருஷ்ணா” மகா மந்திரத்தை உச்சாடனம் செய்தலினாலும், ஒருவரது அனைத்து துன்பங்களும் அழிந்து விடும். இதன் மூலம் ஒருவர்   எல்லாவிதமான பூரணத்துவமும் பெற்று, அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறார்.

3. ஒரு “புருஷோத்தம விரதமானது” “ஆயிரம் மடங்கு கார்த்திகை விரதத்திற்கு” சமமாகும்.

4. வால்மீகி முனிவர்:- புருஷோத்தம மாத விரதத்தினை ஒருவர் எடுப்பதன் மூலம், ஒருவருக்கு 100″அஷ்வ மேத யாகத்தினை” செய்வதினால் உண்டாகும் பலன் கிடைக்கும்.  அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், புருஷோத்தம மாதத்தின் உடலில் தான் சங்கமமாகின்றது.  எவரொருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனரோ, அவர்கள் ” கோலோக” விருந்தாவனத்திற்கு செல்வது உறுதி. 

5.  இம்மாதத்தின் போது “புனித தாமில்” வசிப்பவர்களுக்கு, 1000 மடங்கு பலன்கள் கிட்டும்.

6. “நைமி சாரண்யா” முனிவர்கள்:-  “கருணை மிகுந்த புருஷோத்தம மாதமானது, பக்தர்கள் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றும் “கல்ப விருட்ச மரமாகும்”

7.  எவரொருவர், இந்த புருஷோத்தம மாதத்தில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் விக்ரஹங்களை வழிபடுகின்றனரோ அவர்களுக்கு அனைத்தும் கிடைக்கப் பெரும்.

8. எவரொருவர் புருஷோத்தம விரதத்தினை பின் பற்றுகிறார்களோ, அவர்களின் “கெட்ட கர்ம வினைகள் அனைத்தும் எரிந்து அவர்கள், ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணருக்கு நேரிடையாக சேவை செய்யும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

9.  புருஷோத்தம மாதமே,ஆன்மீக வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாகும், ஏனெனில்,பகவான்  ஸ்ரீ கிருஷ்ணரே நேரிடையாக ஒருவர் செய்த தவறினை மன்னித்து விடுகிறார்.

10. நாரத முனிவர் :- “புருஷோத்தம மாதமே!  மற்ற அனைத்து மாதங்களிலும்  பின்பற்றும் விரதங்கள் மற்றும் சாதனைகளைக் காட்டிலும் மிகச் சிறந்தது ஆகும். ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இம்மாதத்தின் பெருமைகளைக் கேட்டாலே, அவருக்கு உடனடியாக கிருஷ்ண-பக்தி கிடைக்கப் பெற்று , அவரது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபெருகின்றனர். எவரொருவர், இப்புருஷோத்தம விரதத்தினை, முறையாகப் பின் பற்றுகின்றனரோ, அவர்களுக்கு கணக்கிலடங்கா “சுக்ருதியும்” ஆன்மீக உலகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இந்த புருஷோத்தம விரதம் எப்படி  பண்ணுவது?

சாத்வீகமாக இரு. பிரம்மச்சர்யம் அனுஷ்டி .  தரையில் படுக்கமுடிந்தால்  படுக்கலாம்.
) சூர்யோதயத்துக்கு முன்  குளிக்கலாம்.  முடிந்தால்  எங்காவது ஒரு புனித  க்ஷேத்ரத்தில், குறைந்தது  இந்த மாதத்தில் 3 நாளாவது.
 கிருஷ்ணனை நினை. அவன் சேஷ்டிதங்களை மனதில் அனுபவி. கேள். அவன் நாமங்களை சொல், ஹரே கிருஷ்ணா  மூல மந்திரம்  கொஞ்சம் சொல்.  (24, 32, 64  என்ற எண்ணிக்கையில்).
 ராதா கிருஷ்ணா  படத்துக்கு  சிறிய  நெய்  தீபம்.  ரோஜா, தாமரை மலர். துளசி மாலை  சூட்டலாம்.
தினமும்  ஸ்ரீமத் பாகவதம்  சிறிது பாராயணம், படிக்கலாம்.  (10 வது காண்டம், 14வது அத்தியாயம், பிரம்மா கிருஷ்ணனை பிரார்த்திப்பது விசேஷமானது). பகவத் கீதையில்  15வது அத்தியாயம்.

 பூஜை அறையில் இருக்கும் புத்தகங்களில்   ஸ்ரீ  ஜகன்னாதாஷ்டகம், ஸ்ரீ  நந்தனந்தனாஷ்டகம்,




​ கண்ணில் ​தென்பட்டால் நீங்கள் பாக்ய சாலிகள். அவற்றை படிக்கலாம்.  ராதா க்ருஷ்ண பஜனையோ  பிரார்த்தனையோ  அதி விசேஷம்.
 ரொம்ப பெரிய விஷயம் என்னவென்றால்  ''இந்த மாதம்  எல்லோரிடமும் அமைதியாக இருப்பேன்.  பொய்  பேசமாட்டேன்''  --   இது முடியுமா???
​முடிகிற  ஒன்று வேண்டுமானால் சொல்கிறேன்.   எவர் சில்வர் தட்டு வேண்டாம். இந்த ஒரு மாதம் மட்டும்  வாழை இலையில் சாப்பிடுவோம்.(முடிந்தால் தரையில் அமர்ந்து).  
பசுவுக்கு கீரையாவது தானம் கொடுப்போம்.  முடிந்தால் பிராமணர்களுக்கு கொஞ்சம் தக்ஷிணை.
இந்த ஒரு மாதம்  முடி திருத்தும் நிலையம் அணுகாமல் வேறுபக்கம் திரும்பி நடப்போம். நகத்தை வெட்டக்கூடாது.
 ஒருமாதத்தில் யாரும்  ஹிப்பியாக முடியாதே. 
கடுகு எண்ணெய்  வேண்டாம். ஒரு வேளை  ஆகாரம்.  மத்யானமோ  சூர்யாஸ்தமனத்துக்கு பிறகோ.  பால்  பழங்கள், சாதுர்மாச்யத்தில்  உபயோகிக்கும் காய் கறிகள் மட்டும் உபயோகிக்கலாம்.
கௌண்டின்ய முனி ஒரு மந்திரம் சொல்லிக்கொடுக்கிறார். அதைச் சொல்வோமே: 

 
கோவர்தன தரம்  வந்தே,
கோபாலம் கோப ரூபினம்
​கோகுலோத்சவம் ஈசானம் 
​கோவிந்தம் கோபிகா ப்ரியம் 

​கிருஷ்ணனை நினைக்க  இப்படியும் ஒரு வசதி இருக்கும்போது அதை கையகப் படுத்திக் கொள்வோமே.

ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஷடாக்க்ஷர ஸ்தோதிரம்!

 
 
அதாதஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும்கேட்பவர்களுக்கும்,இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியதுவிரோதிகளைவெற்றி கொள்ளவும்நோய் நொடிகள் அண்டாமல்அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும்உலகிலுள்ளோர்அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமானமூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
சரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும்ஸ்கந்தனும்தன்னைசரணமடைந்தவர்களை காப்பவருமானதாங்களை சரணடையூம்எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
ரதீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும்,தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும்கோடிமன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகலசெல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்யவல்லீந்த்ராணி ஸுதாபதே!
வரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும்வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும்தன்னை அண்டியவர்களின்விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும்அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
நவவீரைபூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும்சித்தர்கள்-கந்தர்வர்களாலும்வணங்கப்பட்டவரும்வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால்பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன்.எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
பவத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனேபக்தர்களின் கவலைகளைப்போக்குகின்றவனேதங்களுடைய பாத கமலங்களில் குறைவற்றபக்தியையும்அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்கவேண்டும்.

வஸுதான்யம் யசகீர்திம் அவிச்சேதம்  ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம்தான்யம்அளவற்ற புகழ்மகன்-பேரன் என்று வம்ச விருத்தி,விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து,செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பதசிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தைஎப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும்மேலாக செல்வங்கள் கிடைக்கும்.
 
 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

விஷ்ணு சஹஸ்ரநாமம்!


விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: || 1

பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச || 2

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம: || 3

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர: || 4

ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || 5

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: |
விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: || 6

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் || 7

ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || 8

ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்|| 9

ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: || 10

அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமே யாத்மா ஸர்வயோக விநிஸ்ருத: || 11

வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: || 12

ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: || 13

ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || 14

லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: || 15

ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: || 16

உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: || 17

வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || 18

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் || 19

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || 20

மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || 21

அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா || 22

குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || 23

அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: |
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: || 25

ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: || 26

அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: || 27

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: || 28

ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: || 29

ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: || 30

அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |
ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: || 31

பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: || 32

யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்|| 33

இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: || 34

அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: || 35

ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: || 36

அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: |
அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: || 37

பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || 38

அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: || 39

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: || 40

உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: || 41

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநோதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேக்ஷண: || 42

ராமோ விராமோ விரஜோ மார்கோ நேயோ நயோநய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: || 43

வைகுண்ட: புருஷ ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயு ரதோக்ஷஜ: || 44

ருதுஸ் ஸுதர்ஸந: கால: பரமேஷ்டி பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண: || 45

விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்|
அர்த்தோ நர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: || 46

அநிர்விண்ணஸ் ஸ்தவிஷ்டோபூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷாம: க்ஷாமஸ் ஸமீஹந: || 47

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்|| 48

ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷ்ம ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: || 49

ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்ப்போ தநேஸ்வர: || 50

தர்மக்ருத் தர்மகுப் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம்|
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராமஸூர் விதாதா க்ருதலக்ஷண: || 51

கபஸ்தநேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு: || 52

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந: |
ஸரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || 53

ஸோமபோம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி: || 54

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமிதவிக்ரம: |
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததி ஸயோந்தக: || 55

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || 56

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷோ மஹாஸ்ருங்க: க்ருதாந்த க்ருத்|| 57

மஹாவராஹோ கோவிந்தஸ் ஸுஷேண: கநகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: || 58

வேதாஸ் ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || 59

பகவாந் பகஹா நந்தி வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிர் ஆதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதிஸத்தம: || 60

ஸுதந்வா கண்ட பரஸுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: || 61

த்ரிஸமா ஸாமகஸ்ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்|
ஸந்யாஸக்ருச் சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி: பராயணம்|| 62

ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரேஷ்டா குமுத: குவலேஸய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷ ப்ரிய: || 63

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ: ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர: || 64

ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: || 65

ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: |
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்நஸம்ஸய: || 66
உதீர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷு ரநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர: |
பூஸயோ பூஷணோ பூதிர் விஸோக: ஸோகநாஸந: || 67

அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதந: |
அநிருத்தோ ப்ரதிரத: ப்ரத்யும்நோ அமித விக்ரம: || 68

காலநேமி நிஹா வீரஸ் ஸௌரி ஸூர ஜநேஸ்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ கேஸிஹா ஹரி: || 69

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேஸ்யவபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: || 70

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || 71

மஹாக்ரமோ மஹாக்ரமா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: || 72

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய: || 73

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநாஹவி: || 74

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: |
ஸூரஸேநோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸ் ஸுயாமுந: || 75

பூதாவாஸோ வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோ நல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்தரோ தாபராஜித: || 76

விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்தி ரமூர்த்திமாந்|
அநேகமூர்த்தி ரவ்யக்தஸ் ஸதமூர்த்திஸ் ஸதாதந: || 77

ஏகோ நைகஸ் ஸவ: க:கிம் யத்தத் பதமநுத்தமம்|
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 78

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங்கதீ|
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீ ரசலஸ்சல: || 79

அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமி த்ரலோக த்ருத்|
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: || 80

தேஜோ வ்ருக்ஷோ த்யுதிதரஸ் ஸர்வஸ் ஸத்ர ப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ: || 81

சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹும் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவஸ் சதுர்வேத விதேகபாத்|| 82

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா|| 83

ஸுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ் தந்துவர்த்ந: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: || 84

உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ|| 85

ஸுவர்ணபிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வவாகீஸ்வரேஸ்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி|| 86

குமுத: குந்தர: குந்த: பர்ஜந்ய: பாவநோ நில: |
அம்ருதாம் ஸோம்ருதவபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: || 87

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ருதாபந: |
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: || 88

ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: |
அமூர்த்தி ரநகோசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: || 89

அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந்|
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந: || 90

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத: |
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: || 91

தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாதம: |
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோயம: || 92

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரயார்ஹோர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தந: || 93

விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு: |
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: || 94

அநந்தஹூதபுக் போக்தா ஸுகதோ நைகதோக்ரஜ: |
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத: || 95

ஸநாத் ஸநாத நதம: கபில: கபி ரவ்யய: |
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || 96

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: |
ஸப்தாதிகஸ் ஸப்தஸஹ: ஸிஸிரஸ் ஸர்வரீகர: || 97

அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்த்தந: || 98

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸவப்ந நாஸந: |
வீரஹா ரக்ஷணஸ்ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: || 99

அநந்தரூபோ நந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ: |
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: || 100

அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: |
ஜநநோ ஜநஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம: | | 101

ஆதாரநிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || 102

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்மம்ருத்யு ஜராதிக: || 103

பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹந: || 104

யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதந: |
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்ய மந்நமந்நாத ஏவ ச || 105

ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந: |
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபநாஸந: || 106

ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: || 107

வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ|
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது|| …………….108



நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் ஜபிக்கவும். வாழ்வில் அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள்.

அஸ்விணி 1-4
பரணி 5-8
கார்த்திகை 9-12
ரோஹிணி 13-16
மிருகசீரிடம் 17-20
திருவாதிரை 21-24
புனர்பூசம் 25-28
பூசம் 29-32
ஆயில்யம் 33-36
மகம் 37-40
பூரம் 41-44
உத்திரம் 45-48
ஹஸ்தம் 49-52
சித்திரை 53-56
சுவாதி 57-60
விசாகம் 61-64
அனுசம் 65-68
கேட்டை 69-72
மூலம் 73-76
பூராடம் 77-80
உத்திராடம் 81-84
திருவோணம் 85-88
அவிட்டம் 89-92
சதயம் 93-96
பூரட்டாதி 97-100
உத்திரட்டாதி 101-104
ரேவதி 105-108



 

வியாழன், 21 ஏப்ரல், 2016

சுகம் வழங்கும் அசோகாஷ்டமி விரதம்!

Distanced tragedy and to providing thrills for ashokastami fasting

இந்து மதத்தில் ஒரு சில புனித மரங்களையும் தாவரங்களையும் பெருமைப்படுத்தும் வகையில் அவற்றின் பெயரால் விரதங்களும் வழிபாடுகளும் அமைந்துள்ளன. உதாரணமாக அமாசோமவார விரதம். அமாவாசையும் சோமவாரமும் (திங்கள் கிழமை) சேர்ந்து வரும்போது அன்று அரச மரத்திற்கு பூஜைகள் செய்து 108 முறை வலம் வரும் ஒரு விரதம். மேலும் வடசாவித்ரி விரதம் (வடம்=ஆலமரம்), ஆமலக ஏகாதசி (நெல்லி மரம்), பகுள அமாவாசை (வகுளம்=மகிழ மரம்), கதலீ (வாழை மரம்) விரதம் போன்று பல விரதங்கள் உள்ளன. இந்த வரிசையில் அசோக மரத்தைப் பெருமைப் படுத்தி பூஜிக்கும் விரதம், அசோகாஷ்டமி ஆகும்.
 

 

பல அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த அசோக மரத்தைப் பெண்கள் வழிபடுவதாகிய இந்த அசோகாஷ்டமி விரதம் வட மாநிலங்களில் பாத்ரபத (புரட்டாசி) மாதத்திலும் தென் மாநிலங்களில் சித்திரை மாதம் (சைத்ர மாதம்) வளர்பிறை அஷ்டமி நாளன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் இதை அஷ்டமிக்கு முந்தைய நாளான சித்திரை மாதம் வளர்பிறை சப்தமி அன்று அசோக சப்தமி என்றும் கொண்டாடுகின்றனர்.  

பிரிந்து தவித்த ஸ்ரீராமபிரான் மற்றும் சீதாதேவியின் சோகத்தை சிவபெருமானும், பார்வதிதேவியும் நீக்கி அருளிய நன்நாளாக இந்த அசோகாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்த அஷ்டமி நாளுக்கு அடுத்த நாள் - ஸ்ரீராமநவமிப் பெருவிழா. மேலும் பார்வதிதேவி தவம் இயற்றி சிவபெருமானை இந்த அசோகாஷ்டமி நாளன்று மணந்ததாக இன்னொரு புராணக் கதை தெரிவிக்கிறது. பார்வதி தேவியின் சோகத்தை நீக்கி (சோகம், அசோகமானது) சிவபெருமானோடு இணைத்ததால் இந்நாள் அசோகாஷ்டமி நாள் என்றானது. இதேநாளில் பார்வதிதேவியையும் பக்தர்கள் வழிபடுவதால் இது பவானி அஷ்டமி என்றும் கூறப்படுகிறது.


 
அன்றுசுத்தமானஇடங்களில்மருதாணிமரங்களைபயிர்செய்விக்கலாம். மருதாணிமரம்இருக்கும்இடத்திற்குசென்றுஅதற்குதண்ணீர்ஊற்றலாம். மூன்றுமுறைவலம்வரலாம். முட்கள்இல்லாமல்ஏழுமருதாணிஇலைகளைபறித்துஅதைகீழ்கண்டஸ்லோகம்சொல்லிக்கொண்டேவாயில்போட்டுமென்றுசாப்பிடலாம்.

த்வாமசோக நராபீஷ்ட மதுமாஸ ஸமுத்பவ;
பிபாமி சோக ஸந்தப்தோமாம் அசோகம் ஸதாகுரு.


ஓமருதாணிமரமேஉனக்குஅசோகம் (துன்பத்தைபோக்குபவன்) எனப்பெயர்அல்லவா. மதுஎன்னும்வஸந்தகாலத்தில்நீஉண்டாகிஇருக்கிறாய். நான் உனது அருளை பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன்.
நீ , பலவிததுன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும்எனது துன்பங்களை விலக்கி வஸந்தகாலம் போல் எவ்வித துன்பம் இல்லாமல் என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.. என்பதுஇதன்பொருள்.

இதைசொல்லிமருதாணிஇலைகளைசாப்பிடவேண்டும். இதனால் நம் உடலில்தங்கிஇருக்கும்பற்பலநோய்கள், துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்கபுராணம்.

ஒடிஸா மாநிலத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்திற்கு அடுத்து மிகப் பிரபலமானதும், அம்மாநிலத்திலேயே மிகப் பெரிய ஆலயமுமான லிங்கராஜ் ஆலயத்தின் ருக்முனா (ருக்மிணி) ரத யாத்திரையும், திரிபுரா மாநிலத்தில் பாறைகளில் மிகப் பிரமாண்டமான அளவில் வடிக்கப்பட்டுள்ள பல்வேறு தெய்வங்களின் திருஉருவங்களைக் கொண்ட உனகோடி என்ற இடத்தில் ஜாத்ரா வைபவமும் இந்த அசோகாஷ்டமி நாளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வட மாநிலங்களில் அசோகாஷ்டமி நாளன்று பக்தர்கள் அசோக மரத்தின் கீழ் சிவ-பார்வதி மற்றும் ராமர்-சீதை திருஉருவங்களை வைத்து பூஜைகள் செய்து மரத்தை வலம் வந்து வழிபடுகின்றனர். விரத நாளான அன்று காலை புனித நீராடி, அசோக மரத்திற்கு அதே மரத்தின் மலர்கள், கொழுந்துகளால் பூஜை செய்கின்றனர். இதனால் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

 

சீதாதேவியை ராவணன் இலங்கையில் தன் மாளிகையில் இருந்த அசோக வாடிகா என்ற அசோக வனத்தில் சிறை வைத்திருந்ததாகவும், மீண்டும் ஸ்ரீராமரோடு சேரும் பொருட்டு சீதாதேவி இந்த அசோகாஷ்டமி நோன்பை அனுஷ்டித்ததாகவும் ஐதீகம். இந்த நாளில் திருமாலுக்குரிய புதன்கிழமையும் ராமபிரானின் புனர்பூச நட்சத்திரமும் ஒன்று கூடினால் மிகவும் புனிதமானது என்பது மக்களின் நம்பிக்கை.  

ஒடிஸா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் ஆலயத்தையடுத்து மிகப் பிரபலமானது, மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ஸ்ரீலிங்கராஜ் ஆலயம். இங்கு அசோகாஷ்டமி நாளன்று நடைபெறும் ரதயாத்திரை பூரி ரத யாத்திரை போன்றே மிகச் சிறப்பானது. இதன் பின்னணி என்ன?

காளியின் அருளைப் பெற்ற ராவணனை யுத்தம் செய்து வதைக்க வழி தெரியாது ராமர் திகைத்து நின்றார். விபீஷணனின் அறிவுரைப்படி  அவர் சைத்ர மாதம் சுக்ல பட்சத்தில்  ஏழு நாட்கள் புவனேஷ்வர், லிங்கராஜ் மற்றும் காளி தேவியை நோக்கி மனதாற வழிபட்டு எட்டாவது நாள் தேவியின் அருளால் தனக்குக் கிடைத்த பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தி, அசோகாஷ்டமி நாளன்று  அவனை வதம் செய்தார். இவ்வாறு தனக்கு உதவிய சிவபெருமானை ராமபிரான் தேரில் வைத்து ரதோற்சவம் நடத்திக் கொண்டாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாகவே அசோகாஷ்டமி நாளில் இங்கு ரத யாத்திரை நடைபெறுகிறது என்கிறார்கள். பிரத்தியேகமாக, நான்கு சக்கரங்களுடன் மரச் சட்டங்களால் வடிக்கப்பட்ட 35 அடி உயர ரதத்தில் லிங்கராஜ் என்ற சந்திரசேகரர், ருக்மிணி, வாசுதேவர் ஆகியோரின் பஞ்சலோக விக்கிரகங்களை எழுந்தருளச் செய்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஷ்வர் மௌசிமா ஆலயத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இந்த யாத்திரையில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

ருக்மிணி எழுந்தருளுவதால் இது ருகுணா ஜாத்ரா  என்றும் அழைக்கப்படுகிறது. நான்கு நாட்கள் ராமேஷ்வரில் இருந்த பின்னர் மீண்டும் ரதத்தை லிங்கராஜ் ஆலயத்திற்கு திரும்ப இழுத்து வருகின்றனர். பூரி ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரையின் போது பயன்படும் மூன்று ரதங்களும் (ஜகந்நாதர், பலபத்திரர், சுபத்ரா) பூரி ஆலயத்தைக் கட்டியதாகக் கருதப்படும் இந்திரத்யும்னன் என்ற மன்னனின் மனைவியான குந்திசா ஆலயத்திற்குச் செல்கின்றன. அங்கு ஏழு நாட்கள் இருந்த பின்னர் மீண்டும் பூரி ஆலயத்திற்கு அங்கிருந்து திரும்ப வந்த வழியில் இழுத்து வரப்படுகின்றன. ஆனால் லிங்கராஜ் ஆலய ரதத்தை திருப்பாது, அப்படியே பின்னோக்கி இழுத்து வருவது இந்த யாத்திரையின் சிறப்பு அம்சமாகும். எனவே இந்த ரதம் ஒடிஸா மொழியில் “அனலூத்தா ரதம்’’ (திருப்பப்படாத) என்று அழைக்கப்படுகிறது. ரதத்தில் எழுந்தருளியிருக்கும் மூன்று விக்கிரகங்களைக் கொண்ட பீடம் மட்டும் முன் நோக்கி திருப்பிவைக்கப்படுகிறது.

திரிபுரா மாநிலத்தில், தலைநகரான அகர்த்தலாவிலிருந்து சுமார் 145 கி.மீ. தொலைவில் கைலாஷஹர் என்ற இடத்தில் அமைந்துள்ள உனகோடி குன்றுகள் பாறைகளில் மலைவாழ் மக்களால்  பிரமாண்டமாக வடிக்கப்பட்ட தெய்வச் சிலைகளுக்குப் பெயர் பெற்றவை. இச்சிலைகளின் பின்னணியில் ஒரு புராணக் கதை கூறப்படுகிறது - ஒரு முறை சிவபெருமான் தன்னையும் சேர்த்து ஒரு கோடி தேவர்களுடன் கைலாயத்திலிருந்து காசிக்குப் புறப்பட்டு வந்தபோது ஒரு நாள் இரவு இந்த உன கோடியில் தங்க நேர்ந்ததாம். இரவு நன்கு உறங்கவிட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே அனைவரும் எழுந்து யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று சிவபெருமான் ஆணையிட்டாராம். ஆனால், மறுநாள் காலை சிவபெருமானைத் தவிர யாரும் துயில் எழாததால் அவர்கள் அனைவரும் கல்லாக மாறுமாறு சபித்து விட்டு தன் யாத்திரையைத் தொடர்ந்தாராம். அந்த தேவர்களின் சிலைகளே இவை என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

கோடிக்கு ஒன்று குறைவு என்பதால் இதற்கு உனகோடி என்ற பெயர் ஏற்பட்டதாம்! மேலும் மலைவாசியான கல்லுக்குமார் என்ற சிற்பி தன்னை கைலாயத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சிவபிரானையும் பார்வதி தேவியையும் நோக்கி தவம் செய்ய, சிவபெருமான் அவனிடம் ஓர் இரவில் ஒரு கோடி தேவர்களின் சிலைகளை வடித்து முடிக்குமாறு ஆணையிட்டாராம். சிற்பியும் அன்றிரவு முழுவதும் கண் விழித்து சிற்பங்களைச் செதுக்கியும் கூட மறுநாள் அதிகாலை ஒரு சிற்பம் குறையவே சிவபெருமான் சிற்பியை விட்டுவிட்டு கைலாயம் திரும்பியதாக இன்னொரு கதை கூறுகிறது. இங்கு பாறையில் வடிக்கப்பட்டுள்ள நாயுடன் காணப்படும் உனகோடீஸ்வரர் காலபைரவர் சிற்பம் 30 அடி உயரம் கொண்டது. அவருக்கு அருகில் துர்க்கை சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

ஏழு-ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பாறைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த உனகோடியில் அசோகாஷ்டமி நாளன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும்  ஜாத்ரா உற்சவம் நடைபெறுகிறது. பக்தர்கள் இங்குள்ள அஷ்டமி  குண்ட் என்ற குளத்தில் புனித நீராடி சிவபெருமான், பார்வதிதேவியை வழிபட்டுச் செல்கின்றனர். இங்குள்ள சிற்பங்கள் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. உனகோடியில் சிவபெருமான் கால பைரவராகவும், காளிதேவி துர்க்கையின் அம்சமாகவும் எழுந்தருளியிருப்பதால் ராமபிரான் வழிபட்ட இவர்களை ராமர் ராவணனை வதம் செய்த அசோகாஷ்டமி நாளன்று ஜாத்ரா உற்சவத்தில் சிறப்பித்துக் கொண்டாடுவது வழக்கத்தில் வந்துள்ளது.