திங்கள், 22 பிப்ரவரி, 2016

அபிஜித் முகூர்த்த வழிபாடு


 கலியுகத்தில் மனிதர்களுக்காக நல்ல காலங்களைக் கண்டு அறிந்து நற்பலன்களைக் கண்டிட மொத்தம் 28 நட்சத்திரங்கள் இருந்தன என்பதை யாரேனும் அறிந்திருக்கிறீர்களா? அஸ்வதி முதல் ரேவதி வரை மட்டுமே நம் பயன்பாட்டில் இருப்பவை தெரியும்.

ஆனால் முதல் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டது அபிஜித் நட்சத்திரம் ஜீலியன் காலண்டர் குறிப்புகளிலேயே அபிஜித் என்ற நட்சத்திரம் முகூர்த்த காலமாக மாற்றப்பட்டு அங்கங்கே இடக்குறிகளாக எழுதப்பட்டிருந்தன.

கடவுள் வழிபாட்டுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் தினமும் காலை வேளையில் திதி- வாரம்- நட்சத்திரம்-யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கணக்கிட்டு பஞ்சாங்கக் குறிப்புகளுடன் முகூர்த்த நேரங்கள் சொல்லப்பட்டன.

வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் முகூர்த்த காலத்தைப் பயன்படுத்தலாம். தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும் தேதிகளின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் என்று சொல்லலாம்.

அபிஜித் நேரம் என்பது என்னப நட்சத்திரக் கூட்டத்தின் முன்பாக முதல் நட்சத்திரமாக நின்றபோது இதற்கு சக்தி அதிகமாக இருக்கவில்லை. இது தனியே பிரிந்து வெற்றிக்கான நேரம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஜோதிடர்களும் ஆன்மீக அருளாளர்களும் இந்த காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி தங்கள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ளவே வழக்கக் சொல்லில் உச்சி வேளை என்று வந்து விட்டது.

ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள நேரமே அபிஜித் நேரம். பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும்.


ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும்.
அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம்.


காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறுமணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் இக்காலம். உத்திராடம் மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம், 1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைத்து வெற்றி பெற்று அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

பரமேஸ்வரன் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிகளைத் தோற்கடித்து ஓடச் செய்தார். இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது இக்காலத்தைப் பயன்படுத்தினார். மனிதர்களாகிய நாமும் நம்முடைய தேவைகளை இறைவனிடம் கோரிக்கையாக வைத்து எந்த கடவுளை வழிபடப் போகிறோமோ அதன் முக்கிய மூலத்தை அறிந்து கொண்டு இக்காலத்தில் வழிபட அவர்களும் நண்பர்களாகி விடுவர்.

அபிஜித் உருவம் என்ன?


27 நட்சத்திரங்களுக்கும் உருவம் உள்ளதைப் போல இதற்கும் ஓர் வடிவம் இருக்கிறது. நான்கு தெருக்கள் சந்திக்கின்ற நாற்சந்தியே இதன் வடிவமாக உள்ளது. இதன் பொருள் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களாகிய வாழ்வியல் தர்மத்தின் வழியே நாம் சென்று கொண்டிருந்தால் பார்போற்றும் நட்சத்திரங்களைப் போன்று வாழலாம் என்பதே இதன் ரகசியச் சொல் குறியீடு ஆகும்.

இதைத் தான் மனிதன் நான்கையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். இதன் உருவ அமைப்பில் முதல் பகுதி - ஜ, புகழைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி- ஜி வெற்றியைக் குறிக்கிறது. மூன்றாம் பகுதி -ஜீ. இறையருளைக் குறிப்பது. 4-ம் பகுதி-ஐ-ஐஸ்வர்யத்தைச் சொல்கிறது.

நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு கிழமைகளிலும் இதற்கு ஒரு சக்தி பிறந்து கொண்டே இருக்கிறது என்று வான சாஸ்திரிகள் கருத்து கூறுகின்றனர். உத்திராடம், திருவோண நட்சத்திர நாட்களில் மட்டும் கிழக்கு வானத்தில் அதிகாலையில் ஒரு கேள்விக்குறி போன்ற சிறு நட்சத்திரக் கூட்டம் தெரியும்.

இதன் தலை பாகத்தில் தனியாக அபிஜித் தெரியும் என்றும் இதை காண போதிய பயிற்சி தேவை என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறப்பான இந்த அபிஜித் நட்சத்திரத்தைக் கண்டு விட்டால், எல்லா செயல்களுமே வெற்றியாக முடியும்.
அபிஜித் காலத்தில் செய்யப்படும் வழிபாடு  இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன. நமக்குக் குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால் அவை விலக  அபிஜித் முகூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற சமய சஞ்சீவனமாக வுள்ளன.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக