ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம்!


மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் தசாவதாரங்களுக்கு முன்பே மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர். அதனால் பரிமுகன் என அழைக்கப்படுகிறார்.


ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பவுர்ணமி திதியில் அழகான நீண்ட தீர்க்கமான நாசியுடன் (மூக்கு), இரண்டு பெரிய மிளிரும் காதுகளுடன், குதிரை முகத்துடன் சூரிய ஒளிக்கதிர்கள் பிடரி கேசங்களாக அமைய, பூமி நெற்றியாய் அமைய, கங்கை, சரஸ்வதி இரு புருவங்களாக அமைய, சந்திர, சூரியர்கள் தாமரைக்கண்களாக, சந்தியா தேவதைகள் நாசித்துவாரங்களாக, பித்ருதேவதைகள் பற்களாக, பிரம்ம லோகங்கள் இரண்டு உதடுகளாக, காளராத்ரி கழுத்தாக அமைய திவ்யதேஜஸ் உடன் அவதரித்தார். அனைத்து வித்தைகளின் ஆதார தெய்வமாக விளங்குபவர் அவர்.

ஒருமுறை பிரம்மா உறக்கத்தில் இருந்தபோது மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங் களை திருடிச் சென்று அதல பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்து எழுந்தபோது வேதங்களைக் காணாது பிரம்மா திடுக் கிட்டார். மகா விஷ்ணு விடம் முறையிட்ட தால் அவர் எப்படியும் மீட்டுத்தருவதாக உறுதி அளித்தார். அதற்காக மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உருவாக்கி அதன் வழியே வந்த அரக்கர்களை போரிட்டு அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.இதன்மூலம் கல்வி, கலை, ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குருவாக ஹயக்ரீவர் விளங்குவது உறுதியாகி உள்ளது. எனவே இவரை வழிபட்டால் கல்வி, கேள்வி, ஞானம் பெறலாம் என்பது ஐதீகம்.

அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும். அவர் லட்சுமி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பலவித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்ரி மந்திரம் முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.

கல்வியில் நல்ல உயர்நிலை பெறவும், உழைத்த உழைப்பு வீணா காமல் இருக்கவும், ஞாபகசக்தி வேண்டும். இதனை அருளுபவர் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர். இந்த நிலைபெற்ற ஐஸ்வர்யமான கல்விச் செல்வத்தைப் பெற செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியத் தில் உள்ள லஷ்மி ஹயக்ரீவரை வழிபடலாம்.அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக விளங்குபவர் ஹயக்ரீவர்,


கல்விக் கடவுளான சரஸ்வதிக்கே ஞானத்தை அருளியவர் (சரஸ்வதிக்கு ஒரே கோயில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது)கல்விச் செல்வத்துடன் பொருட் செல்வத்தையும் வழங்கும் விதமாக தனது மடியில் லட்சுமி தேவியுடன் அருள்பாலிக்கும் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட யோக தெய்வம் ஹயக்ரீவருக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இதில் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திரபுரம் (திருவந்திபுரம்) லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உலகப்புகழ் பெற்றது.


ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம்!

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத
 

 ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களை, பாவங்களானது.... தரிதிரம் வாய்ந்த மனிதனை பணத்தில் ஆசைகொண்ட ஸ்திரீகள் விடுவதுபோல் விட்டுவிடும்.



ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத்
தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹுகன்யாப்ரவாஹவத்
 

ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களுக்கு, கங்கை பிரவாகம் போன்று வாக்குவன்மை ஏற்படும்.



ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி
விசோபதே ஸ வைகுண்டகவாடோத்காடனக்ஷம
 


ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்ற திருநாமம் வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் தகுதி உள்ளதாக திகழ்கிறது.


ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்
வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்



ஸ்ரீவாதிராஜயதியால் அருளப்பட்டதும் ஹயக்ரீவ எனும் திருநாமத்துடனும் சேர்ந்த இந்தப் புண்ணியமான ஸ்லோகங்களைப் படிப்பவர்கள், சகல வளங்களையும் பெறுவார்கள்.



 இதை அனுதினமும் படித்து ஹயக்ரீவரை வழிபட கல்வி ஞானம் ஸித்திக்கும்.























 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக