வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும்
சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு.
அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோக்ததை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி
1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:
தமிழாக்கம்
1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.
கிரகங்களை வழிபட்ட பலனை அளிப்பதாகக் கருதப்படும் முக்கிய விஷ்ணு அவதாரங்கள்.
மத்ஸ்ய அவதாரம் - கேது கல்கி அவதாரம் - புதன்
வராக அவதாரம் - ராகு நரசிம்மர் அவதாரம் - செவ்வாய்
கூர்ம அவதாரம் - சனி கிருஷ்ண அவதாரம் - சந்திரன்
பரசுராம அவதாரம் - சுக்ரன் ராம அவதாரம் - சூரியன்
வாமன அவதாரம் - குரு பலராமர் அவதாரம் - குளிகன்
நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.
சகலவிதமான பயங்களைப் போக்கும் ஸ்ரீந்ருஸிம்ஹ மந்திரம்!
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
ஸ்ரீந்ருஸிம்ஹ காயத்ரி மந்திரம்!
ஓம் வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி
தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக