வெண்மையான வாசனை மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சித்து வழிபட சரஸ்வதி கடாட்சம் நிச்சயம் கிட்டும்.. சகலகலாவல்லி மாலை சொல்லி இந்த வழிபாட்டைச் செய்யலாம். நெய்ப்பாயசம் வடை வெண்பொங்கல் ஆகியவற்றில் ஏதேனும் நைவேத்தியம் செய்வது சிறப்பு.
48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டைச் செய்தபிறகு வெள்ளிக்கிழமைதோறும் தொடர்ந்து வழிபட உங்கள் நாவில் சரஸ்வதி தேவி தாண்டவமாடுவாள்.
துளசி மற்றும் தாமரையால் ஸ்ரீ சக்ரத்தை வழிபட லட்சுமி கடாட்சம் பெருகும். சர்க்கரைப் பொங்கல் கற்கண்டு சாதம் மற்றும் தேன் நைவேத்தியம் செய்வது நல்லது.
சிவப்பு மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் தொழில் விருத்தி உத்தியோகத்தில் உயர்வு அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப்பெறுவர்.
மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும். எதிர்ப்புக்கள் நீதி மன்ற வழக்குகள் சாதமாகும். ஸ்ரீ சக்ரத்தில் ஸ்ரீபாலா என்னும் குழந்தை வடிவாக தேவியை தியானித்து பாலன்னம் தயிர் சாதம் படைத்து வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வளர்பிறை பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால் துன்பங்கள் தீரும். மகிழ்ச்சி பெருகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக