திங்கள், 26 அக்டோபர், 2015

செல்வம் பெருக குபேர வழிபாடு!


சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாள் அல்லது தேய்பிறை பிரதமை திதி வரும் நாள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதும் சிறப்பானது.

தீபாவளித் திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்புவாய்ந்தது.

வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாள் மேலும் சிறப்புவாய்ந்தது. பூச நட்சத்திர நாளும் வழி படத்தக்கதே. அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்க்கவும்.

லட்சுமி குபேர விரதத்தைக் கடைப்பிடிப்பதற்கு முதல் நாளே சில பூஜைப் பொருட் களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். லட்சுமி குபேரன் படம், யந்திரம் போன்றவற்றை தூய்மைசெய்து வைத்துக்கொள்ளவும், என்ன இருக்கி
றதோ அதுபோதும்.

மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதானியம், தலை வாழையிலை போன்றவற்றை முடிந்த அளவு வாங்கிவைத்துக் கொள்ளவும்.

விரத நாளன்று காலை எழுந்து நீராடி, தூய்மையான ஆடையணிந்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம், யந்திரம் (இருந்தால்) ஆகியவற்றை எடுத்து மஞ்சள், குங்குமம் வைத்து பூஜையறையில் வைக்கவும்.

குபேரன் படம், யந்திரம் மட்டும் இருந்தால் வடக்கு நோக்கி வைக்க
லாம். படத்துக்கு முன்னால் வாழையிலையை வைத்து, அதன் நடுவில் ஒரு கலசம் வைக்கவும். கலசத்தில் தூய்மையான நீரை நிறைத்து சிறிது மஞ்சள்தூள் போடவும். கலசத்தின்மீது மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை வைத்து சுற்றிலும் மாவிலை வைக்கவும். அந்த கலசத்தைச் சுற்றி நவதானியங்களை (ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தனித்தனியே) வைக்கவும். வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றுடன் உங்களால் முடிந்த தட்சிணையையும் எதிரே வைக்கவும்.

கொஞ்சம் மஞ்சள்தூளை எடுத்து சிறிது தண்ணீர்விட்டு பிள்ளையார்போல பிடித்து வாழையிலையின் வலப்பக்கம் வைக்கவும். அதற்கு குங்குமப் பொட்டிட வேண்டும். லட்சுமி
குபேரன் படம், யந்திரம், கலசம், மஞ்சள் பிள்ளையார் அனைத்திற்கும் மலர்களை சாற்றி ஊதுவர்த்தி ஏற்றவேண்டும்.பூஜையறை கிழக்குநோக்கி இருந்தால் நீங்கள் வடக்குநோக்கி அமருங்கள். பூஜையறை வடக்குநோக்கி இருந்தால் கிழக்குநோக்கி அமரவும். உங்களுக்குத் தெரிந்த பிள்ளையார் மந்திரம் அல்லது சுலோகங்களை முதலில் கூறவேண்டும். பின் லட்சுமி சுலோகம், துதியைக் கூறவும்.
 

அதையடுத்து குபேர மந்திரம் கூறலாம். எதுவும் தெரிய வில்லையென்றால் மனதுக்குள் "விநாயகா போற்றி, லட்சுமி தேவியே போற்றி, குபேரா போற்றி' என்று கூறி வழிபடலாம்.

"நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான செல்வத்தையும், நிலையான மகிழ்ச்சியையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் அனைவருக்கும் தரவேண்டும்' என்று மனமுருகி வேண்டுங்கள். பின்பு தூபதீபம் காட்டி, சர்க்கரை போட்டுக் காய்ச்சிய பசும்பால், வாழைப்பழம், பாயசம் போன்றவற்றை நிவேதனமாகப் படைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிப் பெண்களுக்கும், தட்சிணையை ஏழைகளுக்கும் கொடுக்கவும். இவ்வாறு வழிபட்டால் உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள், இன்னல்கள் எல்லாம் விலகும். வளமும் நலமும் உங்களை வந்தடைய லட்சுமியும் குபேரனும் நிச்சயம் அருளுவார்கள்.

இந்த விரதத்தை ஆண்- பெண், சிறுவர்கள்
என யார் வேண்டுமானாலும் மேற்கொள்ள லாம்.
குபேர காயத்ரி
"ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே
அளகாதீசாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்.'



செல்வம் பெருக..


"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை
கமல தாரின்யை தனாகர்ஷிண்யை ஸ்வாஹா'

என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வணங்கிவந்தால் செல்வம் பெருகும்.
எளிய குபேர பூஜைஒரு தூய்மையான மரப்பலகையில் அரிசி மாவினால் ஒன்பது கட்டங்கள் போட்டுக்கொள்ளவும். அதற்குள் அரிசி மாவினாலேயே (இங்கு காட்டியுள்ளபடி) எண்களை எழுதவேண்டும். ஒவ்வொரு எண்ணின்மீதும்  ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் எண் 1 என்பது மேலே இருக்கவேண்டும். நாணயத்தின்மீது மஞ்சள் குங்குமம் வைக்கவும். பலகைக்கு முன் லட்சுமி குபேரர் படம் வைக்கவும். பின்னர் கீழுள்ள சுலோகத்தை 11 முறை கூறவும்.

"ஓம் யக்ஷாய குபேராய
வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
தனதான்ய ஸ்ம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா.'

ஒவ்வொரு முறை கூறும்போதும் ஒரு செந்நிற மலரை ஒவ்வொரு கட்டமாக வைத்துக்கொண்டு வரவும். மீதி இரண்டு மலர்களை லட்சுமி குபேரன் படத்திற்கு சமர்ப்
பிக்கவும். இந்த பூஜையை தினமும் செய்யலாம்.

அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

ஆனால் தடைப்படக்கூடாது. அப்படி நேர்ந்தால் மனதினாலாவது வழிபடவேண்டும். பூஜையில் வைக்கும் நாணயத்தை பலகையைக் கழுவும்போது மட்டும் எடுக்கவும். நம்பிக்கை யுடன்  இந்த பூஜையைச் செய்தால் குறைவற்ற செல்வம் வந்தடையும்.


குபேர சிந்தாமணி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக
கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி

ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே
ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே
தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா!


மேற்கண்ட மந்திரத்தை சொல்லி குபேர முத்திரையுடன் வணங்க செல்வ வளம் பெருகும்.




1 கருத்து: