புதன், 26 அக்டோபர், 2016

ஐப்பசி அன்னாபிஷேகம்!

அன்னம். – உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம். வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன.

“அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம்” – அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே நானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.

தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக – தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.

இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.


|| சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம். ||

நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்துவரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன. சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.

அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவ வடிவம் தான். அண்டம் முழுக்க சிவ வடிவம் தான்.

சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.

சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள். சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.

வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.

சிதம்பரம் போன்ற ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அன்னாபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும்.

ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு. ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அவையாவன:

மாதம் – பொருள் – பலன்

சித்திரை பௌர்ணமி – மருக்கொழுந்து – புகழ்
வைகாசி பௌர்ணமி – சந்தனம்– மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி பௌர்ணமி – முக்கனி = மா, பலா, வாழை – கேட்ட வரம் கிட்டும்
ஆடி பௌர்ணமி – காராம் பசுவின் பால் – பயம் நீங்கும்
ஆவணி பௌர்ணமி – வெல்ல சர்க்கரை – சாபம் தோஷம் பாவம் நீங்கும்

புரட்டாசி பௌர்ணமி – கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் – அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி பௌர்ணமி – அன்னாபிஷேகம் – கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமி – பசு நெய், தாமரை நூல் தீபம் – பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பௌர்ணமி – பசு நெய்யுடன் நறுமண வென்னீர் – கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை பௌர்ணமி – கருப்பஞ்சாறு – நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பௌர்ணமி – பசுநெய்யில் நனைத்த கம்பளி – குழந்தை பாக்கியம்
பங்குனி பௌர்ணமி – பசுந்தயிர் – மனைவி, மக்கள், உறவினர் உதவி

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று தமிழ் திருமுறைகள் போற்றும் – சிதம்பரம் ஸ்ரீ ஆதி மூலநாதர் சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மேற்கண்ட முறையில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.


அதில் மிக முக்கியமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் எனும் பெரும் சிவ வடிவத்திற்கு நூற்றுக்கணக்கான மூட்டைகள் அரிசி கொண்டு, பெரும் வடிவமாகிய சிவபெருமான் முழுக்க நிறைந்திருக்கும்படி மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.

அன்னாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, அந்த அன்னம் முழுக்க அன்னதானம் செய்யப்படும். அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது.





 

தித்திக்கும் தீபாவளி திருநாள்!

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை ஒருநாள் மட்டும் கொண்டாடுவர். ஆனால் குஜராத் திலும் மகாராஷ்டிர மாநிலத்தி லும் நேபாள நாட்டிலும் தீபாவளிப் பண்டிகையை ஐந்து நாட்கள் கொண்டாடுவர்.

தீபாவளிப் பண்டிகையின் முதல் நாளான திரயோதசி அன்று மகாலட்சுமி தங்கள் இல்லங்களுக்கு வருவதாக நம்புகிறார்கள். அன்று தங்கள் இல்லத்தில் தீப அலங்காரங் கள் செய்து மகாலட்சுமி பூஜை செய்வார்கள்.

இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று (தீபாவளியன்று) அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, வீட்டின் வெளிப்புறங் களில் வரிசையாக விளக்குகள் ஏற்றி, தங்கள் குல வழக்கப்படி பூஜை செய்வார்கள். சில குடும்பங்களில் விரதம் கடைப்பிடித்து நோன்புத் திருநாளாகவும் கொண்டாடுவர்.

மூன்றாம் நாள் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி ஆகியோருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, வணிகர்கள் புதுக்கணக்கு எழுதுவார்கள். சில இடங்களில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையும் நடைபெறும்.


நான்காம் நாள் புதுவருடம் பிறந்ததாகக் கொண்டாடுவர். மேலும், கோகுலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் ஸ்ரீகிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றிய நாளாகவும் கொண்டாடுவர்.


ஐந்தாம் நாள்தான் யம துவிதியை. தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் துவிதியை நாளே "யமதுவிதியை'. இதனை "பால்பிஜி' என்றும்; "பையாதுஜ்' என்றும் சொல்வர். இது சகோதர- சகோதரிகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்று உடன்பிறந்த வர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்த்து பெறுவதுடன், பரிசுகளும் கொடுப்பார்கள்; பெறுவார்கள்.

இந்த ஐந்தாம் நாள் விழா தான் யமனுக்குப் பிடித்தமான விழா ஆகும். இது குறித்து புராணம் கூறும் தகவல்...

யமன், ஐப்பசி மாத துவிதியை அன்று தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். யமனின் சகோதரியான எமி, தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். தன் சகோதரியிடம் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் யமனுக்குப் பிடித்தமான நாளானது. அப்போது, யமன், "இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார் களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு யமவாதனை கிடையாது' என்று வரம் கொடுத்தாராம்.

இந்தப் புராணக்கதையின் அடிப்படையில் தான் வடநாட்டில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். அண்ணன்- தம்பி ஆகியோருக்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவார்கள். சகோதரப் பாசத்தை வளர்க்கும் விழாவாக இது திகழ்கிறது.

மேலும் மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற் குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம். இந்த நாள் திரயோதசி. இதனை தன திரயோதசி என்றும் சொல்வர். இந்நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றுவது வழக்கம். இந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இதனால் முன்னோர் கள் மட்டுமல்ல; யமனும் மகிழ்வானாம்.

யமதீபம் ஏற்றினால் விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமலும்; ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.



 

கோவர்த்தன பூஜை!


 வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர்.

 

குஜராத் மக்கள் பெரும் பாலானவர்கள் தீபாவளியின் நான்காவது நாளை பெஸ்ட் வர்ஷ் என்று பெயரிட்டு தங்களின் புத்தாண்டு எனக் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் இந்திரனின் கோபத்திலிருந்து பிருந்தாவன கன்னிப் பெண்களையும்(கோபியர்கள்) பசுக்களையும் ஶ்ரீகிருஷ்ண பகவான் காத்த நாள் எனக் கொண்டாடுகிறார்கள். இந்த பூஜை கோவர்த்தன பூஜை என்று அழைக்கிறார்கள்



மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது. பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கி அலங்கரிப்பர்.

அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை

ஆரோக்யம் அருளும் தன்வந்திரி ஜெயந்தி!

திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம். இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்.

"ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.'

பொருள்: ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்; அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங் களைப் போக்குபவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்; மூன்று உலகங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்; அனைத் துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கு பவருமான ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன். 
ல்லோரைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரங்களாகும்.
 
இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்து மக்களுக்கு நல்லுபதேசங் களைச் செய்துள்ளார். ஸ்ரீதன்வந் திரி அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாக வதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத் தில் குறிப்புகள் உள்ளன.

ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந் திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித மான பொருட்கள் வந்தன. பாற்கடலிலிருந்து கடைசி யில் திருமாலே தன்வந்திரி யாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந் தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான்.


திருமால் தன்வந்திரி யாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளா கும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ்' என்று வட மாநில மக்கள் அனுஷ் டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.

இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்திய வாறும் காட்டப்படுவது வழக்கம். அல்லது முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கை யில் அட்டைப் பூச்சியை ஏந்தியும் தன்வந்திரி காட்சி அளிப்பதும் உண்டு. அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது.

முக்கியமான வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனிச் சந்நிதி இருப்பதைக் காணலாம். திருவரங்கம் ஆலய தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது.

ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் (தன்வந்திரியின் அவதார தினமாக) ன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும், தன்திர யோதசி என்றும் கொண்டாடப் படுகிறது.
தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்து தயாரித்த அவலேகம் (அல்வா) முக்கிய நைவேத்தியமாகப் படைக்கப்படுவது வழக்கம். இதிலிருந்தே வீடுகளில் தீபாவளிக்கு அல்வா தயாரிக்கும் பழக்கம் வந்திருக்கலாம். தீபாவளி லேகியம் தயாரிக்கும் வழக்கமும் தன்வந்திரி வழிபாட்டிலிருந்தே தொடங்கிய தென்பர்.






 
 
 
 

தீபாவளி!

தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்தை அறிமுகம் செய்து வைத்தவர் திருமலைநாயக்கர். வாராணாசியில் தீபாவளியை ஐப்பசி(துவா) பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். மராட்டிய மன்னன் வீர சிவாஜிக்கு சத்ரபதி பட்டம், தீபாவளி நாளில்தான் வழங்கப்பட்டது. ஆந்திராவில் தீபாவளி குமுதினி மகோத்சவம் என்ற பெயரில் நடக்கிறது. அன்றைய தினம் எருமை மாட்டை குளிப்பாட்டி மகிழ்வர். பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசத்தில் வழங்கும் கதையின்படி, சீதையை ராவணனின் சிறையிலிருந்து மீட்டு ராமபிரான் அயோத்தி திரும்பிய தினமே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. 

வடமாநிலங்களில் சில பகுதிகளில் தீபாவளியின் போது பசுவின் சாணத்தில் குடை போன்ற உருவங்கள் செய்து அவற்றை பூக்களால் அலங்காரம் செய்து, தீபமேற்றிக் கொண்டாடுகின்றனர். குஜராத்தில் தீபாவளி அன்று தான் புது வருடப் பிறப்பு நாள். வியாபாரிகள் புதுத் கணக்கைத் தொடங்கும் நாள் இது.  கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னனின் கன்னட கல்வெட்டில், ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளி பரிசு தந்ததாகக் குறிப்பு உள்ளது. தென்னிந்திய தீபாவளி முதல் குறிப்பு இதுதான். ஹர்ஷரின் நாகானந்தம் நாடக நூலில் தீபாவளி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை வழங்கியதையும் அதில் கூறியுள்ளார்.
குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது. காளத்தி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜையும் மானியமும் தந்த செய்தி உள்ளது. மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார். சுவாமி ராம்பாத்ஹா என்ற ராம தீர்த்தர் தீபாவளியன்று சந்நியாசம் பெற்றார். பஞ்சாபில் தீபாவளி நசிகேதனுக்கு எமதர்மராஜன் உயிர்ப் பிச்சையும், சாவித்திரிக்கு புத்திர வரமும் அளித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. நரகாசுரனுடைய பட்டத்து யானையின் பெயர் சுப்பிரதீபம் என்கிறது பாகவத புராணம். தராசின் இருதட்டுகளும் சமநிலையில் இருப்பதுபோல தீபாவளி மாதமான ஐப்பசியில் மட்டும் இரவும் பகலும் சமஅளவில் இருப்பதால், அந்த மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. தீபாவளியன்று சிவன் பார்வதியுடன் தாயக்கட்டம் ஆடியதாக ஆதித்திய புராணம் கூறுகிறது. நரகாசுரனுடைய சேனாதிபதியான முரன் என்பவனை வதைத்தாலேயே கண்ணனுக்கு முராரி என்ற பெயர் வந்தது. இலங்கையில் தீபாவளியை சீதை விடுதலை பெற்ற நாளாக கருதி, அன்று லட்சுமி பூஜை செய்கிறார்கள். ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் தீபாவளியன்று பெருமாளுக்கு மட்டுமல்ல, ஆழ்வார்களுக்கும் புதிய வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது.
பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும்; காமசூத்ராவில் கூராத்ரி என்றும்; கால விவேகம், ராஜமார்த்தாண்டம் ஆகிய நூல்களில் சுக்ராத்ரி என்றும் தீபாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. இமாசல மக்கள் தீபாவளியன்று பசுக்களை அலங்கரித்து மகிழ்வர். மத்தியப் பிரதேச மக்கள் தீபாவளியன்று குபேர பூஜை செய்வர் தீபாவளியன்று ராஜஸ்தான் வேடுவர் வீர விளையாட்டு ஆடுவர். ராஜபுத்திரர்கள் ராம பட்டாபிஷேகம் கொண்டாடுகின்றனர். சௌராஷ்டிரத்தில் லட்சுமி பூஜையுடன் புது கணக்கு எழுதுவர். மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள் இதுதான். பஞ்சாப் பொற் கோவிலில் தீபமேற்றி அலங்காரம் செய்வர். இமாசலப் பிரதேசத்தில் பசுவிற்கு பூஜை செய்வர். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை செய்வர். வங்காளத்தில் காளி பூஜை செய்து கொண்டாடுவர்

கோவர்த்தன பூஜை
வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர். மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது. பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கி அலங்கரிப்பர். அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசத்தில் சாணம் அல்லது மாவினால் மகாபலியின் உருவம் செய்து வைத்து பூஜை செய்து அலாய பலாய தூர்ஹோ, ராஜா பலி ராஜ்ய லௌட்டோ(துன்பம் தொலையட்டும் நோய் நீங்கட்டும். ராஜா பலியின் ஆட்சி அகலட்டும்) எனக் கூறி வழிபடுகிறார்கள். வங்காளத்தில் கம்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த மகா துர்கையின் உக்ரத்தை சிவபெருமான் அடக்கிய நாளே தீபாவளி என்று கூறுகிறார்கள். மத்தியபிரதேசம், டில்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் மகாலக்ஷ்மி தன் கணவரான மகாவிஷ்ணுவுடன் பூலோகத்துக்கு வந்த நன்னாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஆகாச பைரவ ஜல்பம் என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.
சகோதரப் பாசத்தை விளக்கும் தீபாவளி
எமதர்மன் உயிர்களைக் பறிப்பவன் என்பதால் செல்லும் இடம் எங்கும் அவனை வெறுத்தார்கள். ஒருசமயம் எமன், தன் சகோதரி எமியைக் காண அவள் வீட்டிற்குச் சென்றான். சகோதரனைக் கண்ட எமி மனமெல்லாம் பூரிப்போடு அவனை வரவேற்று நெற்றியில் திலகமிட்டு பலவகையான இனிப்புகள் மற்றும் உணவுகளால் உபசரித்தாள். அன்று முழுவதும் அவள் வீட்டில் தங்கியிருந்து, அவளது அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டான் எமன். புறப்படும்போது சகோதரியை வாழ்த்திச் சென்றான். அன்றைய தினம் ஒரு தீபாவளிநாள் என்றும், தீபாவளியன்று எவர் தன் சகோதரியிடமிருந்து நெற்றிக் திலகம் பெறுகிறாரோ அவரை எமன் துன்புறுத்துவது இல்லை எனவும் சொல்கிறது, வடநாட்டுக் கதை ஒன்று. இன்றும் சகோதர சகோதரிகள் இனிப்பு வகைகளைப் பகிர்ந்து கொண்டு திலகமிட்டு மகிழ்வது அங்கே வழக்கமாக உள்ளது.
மகாபலிக்காக கொண்டாடும் தீபாவளி
மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் மூன்று அடி நிலம் தானமாகத் தருமாறு மகாபலிச் சக்கரவர்த்தியிடம் கேட்டார். மூன்றாவது அடிக்கு தனது தலையை தந்த மகாபலியை அழுத்தி  அவனை பாதாள உலகுக்கு அரசனாக பூமிக்கு அடியில் அமர்த்தினார் விஷ்ணு. தாயுள்ளம் படைத்த லட்சுமிதேவிக்கு அவன் பாதாள இருளிலே அடைந்து கிடப்பது கண்டு மனம் தாளவில்லை. மாபலிக்கு ஒளி தாருங்கள் என்று தன் கணவனான விஷ்ணுவிடம் வேண்டினாள். இதனால் ஆண்டுதோறும் ஆச்வின மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியன்று மகாபலி மண்ணுலகுக்கு வரட்டும்; அன்று அவனுக்காக பூவுலக மாந்தர் அனைவரும் தீபம் ஏற்றி ஒளி பரப்பட்டும் என்று அருளினார் பரந்தாமன். அந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என ஒரு கதை நிலவுகிறது.
தீபாவால் வந்த தீபாவளி
ராஜகுமாரி தீபா சத்தியமே உருவானவள். அவளது தந்தை, இந்த தேசத்தின் வளத்துக்குக் காரணம் என்ன? என்று கேட்டபோது, தீபாவின் மூத்த சகோதரிகள் இருவரும் மன்னராகிய தங்களது மாண்புதான் இதற்கு காரணம் என்று கூறினர். ஆனால் கடைசிப்பெண்ணான தீபாவோ, திருமகளின் அருளால் தான் இவ்வளவு சுபிட்சங்களும் கூடியுள்ளன என்றாள். மன்னனுக்கு சினம் மூண்டது. மகளை நாட்டை விட்டு காட்டுக்குத் துரத்தினான். தீபா நாட்டை விட்டுச் சென்றதிலிருந்து வளங்கள் யாவும் குறையத் தொடங்கின. மழையில்லாமல் பயிர்கள் கருகத் தொடங்கின. காட்டிற்குச் சென்ற மங்கை, லட்சுமிதேவியைக் குறித்து தவமிருந்தாள். மகாலட்சுமி அவள் முன் தோன்றி, நீ இன்றே உன் நாடு திரும்பு, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்றாள். தீபா தன் நாடு திரும்பியதும் நாடு பழைய நிலையை அடைந்தது. மகளின் பெருமையையும், திருமகளின் அருளையும் உணர்ந்த மன்னன் ஆலயம் முழுவதும் விளக்கேற்றி வைத்தான். இதை நினைவூட்டும் வகையில் தீபாவளி விழா கொண்டாடப்படுவதாக ஒரு ஐதீகம் உள்ளது.
சிவனை வழிபட்ட குபேரன்
தீபாவளி அன்று சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களைப் பெற்றார் குபேரன். இந்தப் புராண சம்பவம் கீழ்வேளூர் கேடிலியப்பர் ஆலயத்தில் நடைபெற்றதாக புராணம் சொல்கறது. எனவே இக்கோயிலில் தீபாவளியன்று பலவித பட்சணங்களுடன் குபேர பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தில்
வாமன புராணம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், துலா மாத மகாத்மியம் ஆகியன தீபாவளியை வெகுவாக சிறப்பிக்கின்றன. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச தேய்பிறை திரயோதசி முதல் வளர்பிறை பிரதமை வரையிலான நாட்கள் தீபாவளியுடன் தொடர்புடையன என்கின்றன புராணங்கள். தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது, முதலில் ஆலகாலம் தோன்றிய தினம்-திரயோதசி; மறுநாளான சதுர்த்தசி அன்று மகாலட்சுமி வெளிப்பட்டாள்; அமுதமும் கிடைத்தது. அதேபோல், நரகாசுரன் வதைக்கப்பட்டதும், மகாபலி பாதாளம் சென்றதும் இதே தினத்தில்தான்!
லட்சுமி தேவியை வரவேற்க ரங்கோலி
வட மாநிலங்களில் சில பகுதிகளில் ரங்கோலம் எனப்படும் வண்ணக் கோலமிட்டு தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இது வெள்ளை, மஞ்சள், கொக்கோ என்னும் மூன்று வண்ணங்களைக் கொண்டது. லட்சுமி தேவியை வரவேற்கவே இவ்வாறு வண்ணிக் கோலமிடுகின்றனர்.
திருஷ்டி கழிக்கும் வடை
ஒவ்வொரு ஊரிலும் தீபாவளி வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. குஜராத் பகுதியில் வசிப்பவர்கள் குடும்பத்திலுள்ள சண்டை சச்சரவு, நோய் நொடி, ஏவல், சூனியம் போன்றவை நீங்கும் பொருட்டு தீபாவளிக்கு மறுநாள் வீட்டில் உளுந்து வடை தயாரித்து அந்தி வேளையில் நான்கு தெருக்கள் கூடும் நாற்சந்தியில் அவற்றைக் எறிந்துவிட்டு திரும்பிப் பாராமல் வந்துவிடுவது வழக்கமாக உள்ளது.
கர்வசவுத் விரதம்!
தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் கேதார கவுரி விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். அதேபோல் வடமாநிலங்களில், நவராத்திரி பிறகு வரும் பவுர்ணமி தினத்தன்று கர்வசவுத் என்ற பெயரில் விரதம் மேற்கொள்வார்கள். அன்றைய தினம் கடும் உபவாசம் இருக்கும் பெண்கள், இரவில் மொட்டை மாடியில் நின்று ஜல்லடைத் தட்டு வழியாக பவுர்ணமி நிலவை தரிசித்துவிட்டு, கணவன் தரும் பழச்சாறு அருந்தி, தங்களது விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
வளமை சேர்க்கும் தீபாவளி
பீகார் பகுதியினர் தீபாவளி நாளில், பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டுக் கொளுத்துவர். இதனால், வறுமை விலகி வளமை சேரும் என்பது நம்பிக்கை. மூதேவியே விலகி ஸ்ரீதேவியை வருக! என வேண்டுவர்.
தங்க பைரவர்
காசியில் தங்கத்திலான கால பைரவர் உற்சவ விக்ரகம் உள்ளது. தீபாவளி நாளன்று மட்டுமே இந்த உற்சவர் பவனி வருகிறார். அன்று இவரை தரிசிப்பது அதிசிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.
தீபோற்சவம்
தீபாவளியை பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன ஞான நூல்கள். பவிஷ்யோத்ர புராணம்- தீபாவளிகா என்றும்; காலவிவேகம் மற்றும் ராஜமார்த்தாண்ட நூல் சுகராத்திரி என்றும்; காமசூத்ரா- கூட ராத்திரி என்றும், நீலமேகம் புராணம் தீபோற்சவம் என்றும் குறிப்பிடுகின்றன. தஞ்சை-சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் ஆகாச பைரவி ஜபம் என்ற ஓலைச்சுவடிகளில் தீபாவளி மற்றும் வாண வேடிக்கை பற்றிய குறிப்புகள் உள்ளன.
தீபாவளியன்று ராமாயணம்
குலு பள்ளத்தாக்கில் தீபாவளி தினத்தன்று ராவண உருவத்தின் மீது வண்ணக் கோலமிட்டு அதை எரிப்பது வழக்கம். அன்றைய தினம் ராமாயணத்தின் பல்வேறு சம்பவங்கள் குறித்து நாடகங்கள் நடத்தப்படும். மலை வாழ் மக்கள் குன்றுகளில் கோயில் கொண்டுள்ள தெய்வங்களை பேரிகை முழக்கத்துடன் ஊர்வலமாக ராமபிரானை தரிசிக்கக் கொண்டு வருவார்கள்.
மோனி தீபாவளி
வட மாநிலங்களில், தீபாவளியன்று லட்சுமி வீட்டில் தங்குவதாக ஐதிகம். அமாவாசையன்று பூஜையறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கு எரியும். அந்த விளக்கில் படியும் புகைக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் கண் மையைத்தான் ஆண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள். இதை மோனி தீபாவளி என்கிறார்கள்.
நாய்கள் கொண்டாடும் தீபாவளி
நேபாள நாட்டில் தீபாவளி ஒட்டி கொண்டாடப்படும் விழாவில் நாய்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நாய்களுக்கு மாலை அணிவித்து அவற்றின் நெற்றியில் திலகமிட்டு வழிபடுகின்றனர்.
சத்பூஜா!
மத்தியப் பிரதேசம், இமாலயம் போன்ற இடங்களில், தீபாவளித் திருநாளை உழவர்களுக்குரிய தினமாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், புதுக்கதிர் அறுத்து எடுத்து வந்து இறைவனுக்கு சமர்பித்து வழிபடுவதுடன், மாடுகளை அலங்கரித்து அவற்றுக்கும் பூஜை செய்து வழிபடுவார்கள். பீகார் மாநிலத்து பெண்கள், தீபாவளிக்கு 7-ம் நாள் சத்பூஜா என்ற பெயரில் சூரியனை பூஜிக்கின்றனர். புதிய முறத்தில் ஐந்து வகை பழங்கள் வைத்து , சூரியனுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.
தீபாவளி அன்று எல்லா நீரும் கங்கையே...!
உலகில் உள்ள நதிகள் அத்தனையிலும் புனிதமானது கங்கையே என்கின்றன புராணங்கள்.
ந கங்கா முத்ரஸம் தீர்த்தம்
ந தேவா  கேசவத் பர: என்ற ஸ்லோகம், கங்கைக்கு நிகரான தீர்த்தமில்லை கேசவனுக்கு சமமான தெய்வமில்லை என்கிறது. மகாவிஷ்ணுவின் திருவடியில் உருவாகி, மகேஸ்வரனின் திருமுடியில் தங்கி பெருமை பெற்றது கங்கை. கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு புனித நதிகளுள் முதன்மையானது கங்கையே. கங்கைக் கரையில் அமர்ந்து ஒருமுறை ஜபம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். கங்கையை தரிசிப்பது, அதில் நீராடுவது, கங்கை நீரை அருந்துவது என எல்லாமே சகல பாவங்களையும் போக்கும் எவர் கங்கையை மனதால் நினைக்கிறாரோ அவரது இல்லத்தில் மகாலட்சுமி நீங்காது இருப்பாள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் கங்கையின் மகிமையை.
தீபாவளிக்கு முந்தைய நாளினை நீர் நிரப்பும் திருநாளைக் கொண்டாடுவது சில இடங்களில் வழக்கமாக உள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் மாலையில் நல்ல நேரம் பார்த்து தூய்மையான பாத்திரத்தின் வெளிப்புறம் விபூதி தடவி தூய்மையான குங்குமம் இட்டபின் பாத்திரத்தில் நீரை நிரப்புவர். அந்த நீரில் ஆல், அரசு, பலா, வேம்பு மரப்பட்டைகளை இடுவர். மறுநாள் அதாவது தீபாவளி தினத்தின் அதிகாலையில் அந்த நீரை சுட வைத்து அதில்தான் எண்ணெய் நீராடுவர்.
தீபாவளித் திருநாளில் எல்லா நீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதிகம் உள்ளது. அதனால் உங்கள் வீட்டில் வழக்கமாக நீங்கள் குளிக்கும் நீர் கூட அன்றைய தினம் கங்கா தேவியின் அம்சம் நிரம்பியதாக இருக்கும். தீபாவளி நாளன்று எள் செடிகள் நிரம்பிய தில த்வீபத்தில் திருமகளின் திருமணம் நடந்தது என்பதால் அன்று நல்லெண்ணெயில் திருமகள் வாசம் செய்கிறாள். தீபாவளி நாளில் அதிகாலையில் எழுந்து, தைலை லட்சுமி, ஜலே கங்கா தீபாவளி வசேத் என்று சொல்லிவிட்டு எண்ணெயையும். நீராட வெந்நீரும் எடுத்து வையுங்கள். புனித கங்கையை மனதால் துதித்து, உங்கள் பாவங்கள் எல்லாம் தொலைந்து புண்ணியம் சேருவதாக நினைத்தபடி நீராடுங்கள்.
கங்கே ச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நதிம் குரு
கங்கை உள்ளிட்ட ஏழு புனித நதிகளும் இந்த நீரில் எழுந்தருளி புனிதமாக்கட்டும் என்ற இந்தத் துதியையும் சொல்லலாம். தீபாவளியன்று பூவுலகில் உள்ள எல்லா நீரும் கங்கையை. கங்கா ஸ்நானம் செய்யுங்கள். புனிதம், புண்ணியத்தோடு திருமகள் அருளும் உங்களுக்குக் கிடைக்கும். மேலும்
விஷ்ணோ: பாதப் ஏஸுதாஸி
வைஷ்ணவி விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத
ஆஜன்ம மரணாத்திகாத்
திஸ்ர கோட் யோர்த்த கோடீச
தீர்த்தானாம் வாயுப்ரவீத்
திவிபுவ்யந்தரி÷க்ஷச தானிமே
ஸந்து ஜாஹ்னவி!
என்று பக்தியுடன் தியானம் செய்ய வேண்டும்.
 
 

தனம் வர்ஷிக்கும் தன திரயோதசி!

பவுர்ணமியில் இருந்து 13வது நாள் வரும் திரயோதசி  தன்தேராஸ். அதாவது, தன திரயோதசி.

வட இந்தியர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு கொண்டாட்டம்..... தீபாவளியை ஒட்டி வருகிற இந்த நிகழ்வு, செல்வத்தையும் வளத்தையும் அள்ளித் தருவதாக நம்பப்படுகிற ஒரு நாள். இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் செல்வந்தர்களாகவும் குபேரர்களாகவும் வாழ்க்கைத் தரம் உயர்வதாக அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வட இந்தியர்களுக்கு உண்டு.

அந்த தன திரயோதசி தினத்தன்று விரதம் இருந்து தெற்கு நோக்கி விளக்கேற்றி தனலட்சுமி பூஜையும் செல்வங்களைப் பரப்பி குபேர பூஜையும் செய்வது வட இந்தியர்களிடையே காலங்காலமாகத் தொடரும் வழக்கம். தீபாவளிக்கு முதல் நாள் வரும் இந்தப் பண்டிகையை சின்ன தீபாவளி என்றே அவர்கள் அழைப்பார்கள்.

மருத்துவ கடவுள் என அழைக்கப்படுகிற தன்வந்திரி அவதரித்த நாள் இது. மருத்துவ கண்டுபிடிப்புகளையும் புதிய மருத்துவமனை திறப்புகளையும் கூட அந்த நாளில் வைத்துக் கொள்வதையே பலரும் விரும்புகிறார்கள்.

தென்னிந்தியர்களுக்கு அட்சய திருதியை போல வட இந்தியர்களுக்கு தன திரயோதசி. அன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். வசதி குறைவானவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தையாவது வாங்காமல் இருக்க மாட்டார்கள். புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை என்று பளபளப்பான எதையாவது வாங்குவது அவர்களது வழக்கம்.

இதோ தன திரயோதசி நேபாளத்தில் டிஹர் விழா என கொண்டாடப்படுகிறது. ‘எம தீப் தின்’ என்கிறார்கள். அதாவது, எமனுக்கு தீபம் ஏற்றும் நாள் என அர்த்தம்.

தன்வந்திரி அவதரித்த நாள் என்பதால் தன்வந்திரி ஜெயந்தி என்றும் இதற்கொரு பெயர் உண்டு.

தீபாவளியை ஒட்டி வரும் பூச நட்சத்திர தினம், குரு பூசம் அல்லது ரவி பூசம் என அழைக்கப்படும். அதுவும் திரயோதசி அளவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்றும் தங்க நாணயங்கள் வாங்கி, கடவுள் சிலையில் ஒட்டி, வழிபடுவது வட இந்தியர்களின் வழக்கம்.

அனைத்து வட இந்திய வியாபாரிகளும், தங்கம், வெள்ளி, வைரம் விற்போர், பாத்திரம் விற்போர் அந்த நாளன்று லட்சுமி படத்தை வைத்து புதுக் கணக்கு போடுவதுபோல கணக்குப் புத்தகங்களை வைத்து அதன் மீது தங்கக் காசுகளைப் பரப்பி, அதன் மேல் வெள்ளிக் காசுகளை வைத்து, இனிப்புகள் வைத்து வியாபார இடங்களில் பூஜை செய்வார்கள். பிறகு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வார்கள்.

சென்னையில் அதிகளவில் வட இந்திய வியாபாரிகள் இருக்கும் பாரிமுனையில் தீபாவளியைவிட அதிகக் கொண்டாட்டத்துடன் இந்த நாள் களைகட்டும். அதே போல அவர்களது வீடுகளிலும் இந்தக் கொண்டாட்டம் அமர்க்களப்படும். 

பிறந்த வீட்டிலிருந்து பெண்களுக்கு தங்க, வெள்ளிக் காசுகளும் அன்பளிப்புகளும் கொடுப்பதையும் முக்கிய சம்பிரதாயமாகவே கடைப்பிடிக்கிறார்கள். தன்தேராஸ் கொண்டாட்டத்தின் பிரமாண்டத்தைப் பார்க்க வேண்டுமானால் தீபாவளி சீசனில் வட இந்தியாவுக்கு ஒரு முறை விசிட் செய்யலாம். முடியாதவர்கள் பாரிமுனை, சவுகார்பேட்டை வரையிலாவது சென்று வரலாம்


 

தீபாவளித் திருநாளில் இனிப்பு யாகம்!

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலை அடுத்து அமைந்துள்ள அய்யாவாடி திருத்தலத் தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. அதர்வண காளியாக தனிச் சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக் கும் பிரத்தியங்கரா தேவியானவள் சிம்ம முகத் தோடு பதினெட்டு கரங்களுடன் சிரித்தபடி அருள் புரிகிறாள். தேவியின் அருகே ஸ்ரீலட்சுமியும் ஸ்ரீசரஸ்வதியும் காட்சி தருவது தனிச்சிறப் பாகும்.

இத்தலத்தில் அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் அருள்புரிகிறார்.

இவ்வாலயத்தில் மாதந்தோறும் நடக்கும் யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவியும் மரியாதை களும் மீண்டும் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. மேலும் மரணபயம் நீங்கும். நோய் நொடிகள், துக்கம், மனவேதனை, பில்லி சூன்யம், நவகிரகத் தொல்லைகள், தீயசக்தி களின் தாக்கம், திருஷ்டி போன்ற அனைத்தும் நிவர்த்தியாகும்.

"தன்னை ஆராதிப்பவர்களுக்கும் ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களுக்கும் வேண்டும் வரத்தைத் தரும் தேவி, வழிபடுபவர்கள் தீய எண்ணங்களுடன் நடந்து கொண்டாலும் நெறி தவறினாலும் அவர்களுக்கு அருள் புரியாமல் அழித்துவிடும் குணம் கொண்டவள்' என்று அதர்வண வேதம் சொல்கிறது. எனவே, தூயமனம் கொண்டவர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே இங்கு நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இழந்த அரச பதவியையும் நாட்டையும் மீண்டும் பெற பஞ்சபாண்டவர்கள் பூஜை செய்த திருத்தலம் இது. அதன் காரணமாகவே இத்தலத்திற்கு ஐவர் பாடி என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, அதுவே மருவி தற்போது அய்யாவாடி எனப்படுகிறது.

ராம-இராவண யுத்தம் நடந்தபோது, இராவணனின் மகன் இந்திரஜித், ராமபிரானைப் போரில் வெல்வதற்காக இத்திருத்தலம் வந்து நிகும்பலா யாகம் செய்தான். இதனை அறிந்த ராமபிரானும் மகாபிரத்தியங்கரா தேவியிடம் வந்து பிரார்த்தித்தார். நியாயம் உள்ள பக்கம் அருளினாள் தேவி. இந்திரஜித்தும் மாண்டான். இராவணனும் தோல்வியைத் தழுவி உயிர் விட்டான்.

மாதந்தோறும் அமாவாசை திதியில் ஸ்ரீபிரத்தியங்கராதேவியின் முன் காலை எட்டு மணி அளவில் தொடங்கும் யாகம், பகல் இரண்டு மணி வரை பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் 108 வகையான மூலிகைகள், ஹோமத்துக்குரிய பொருட்கள், பழங்கள், மலர்கள், பட்டாடைகள், பால்குணம் கொண்ட மரக்கட்டைகள், சமித்துக்கள், நெய் ஆகிய பொருட்களை அர்ப்பணிப்பதுடன் மிளகாய் வற்றலும் மூட்டை மூட்டையாக அர்ப்பணிக்கப்படுகிறது.

ஆடி, புரட்டாசி, கார்த்திகை, தை அமாவாசைகளில் செய்யப்படும் யாகம் மிகவும் சிறப்பானது. பக்தர்களின் பிரார்த்தனைகளுக்காகச் செய்யப்படும் இந்த யாகத்தை "நிகும்பலா யாகம்' என்பர்.

ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளித் திருநாளில் வரும் அமாவாசை நாளில் மட்டும் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் மேலே சொல்லப்பட்ட ஹோமப் பொருட்களை யாகக் குண்டத்தில் அர்ப்பணிப்பதில்லை. மேலும், யாருடைய உபயமாகவும் செய்யாமல் கோவில் நிர்வாகத்தி னரின் முழுச் செலவில் இந்த யாகம் நடை பெறும்.

அந்த யாகத்தில் பதினோரு ஆயிரம் எண்ணிக்கையில் இனிப்புப் பொருட்களான லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு என ஏதாவது ஒன்றினை யாகத்தில் சமர்ப்பிப்பார்கள். அன்று மிளகாய் வற்றல் சமர்ப்பிப்பது இல்லை. இனிப்புப் பண்டத்துடன் சமித்துக்கள், நெய் மட்டும் சேர்க்கப்படுகின்றன. இந்த யாகத்தை இனிப்பு யாகம் என்பர்.

தீபாவளி அன்று நடைபெறும் யாகம் மிகவும் சிறப்பானது.

பதினெட்டு சித்தர் பெருமக்கள் வழிபட்ட தலம்- அகத்திய மாமுனிவருக்குத் தேவி காட்சி தந்த திருத்தலம் அய்யாவாடி!

இங்குள்ள தலவிருட்சமான ஆலமரம் மிகவும் சிறப்பு பெற்றது. இந்த ஆலமரத்தில் ஐந்து வகையான இலைகள் துளிர்த்து, செழித்து இருக்கும் அதிசயத்தை இன்றும் காணலாம். பல பெருமைகளைக் கொண்ட ஸ்ரீபிரத்தியங்கரா தேவியை வழிபடுபவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும். பகைவர்கள் அழிவர். அனைத்துக் காரியங்களும்- அது நியாயமாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும். ஆரோக்கியமான சூழ்நிலையில் வளமான வாழ்வு கிட்டும்!


 

தானங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!


 
1. ஆடைகள் தானம்:
ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.
2. தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
3. நெய்தானம்: 
பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை). நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.
4. தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
5. அரிசிதானம்: 
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.
6. கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

 

திங்கள், 24 அக்டோபர், 2016

காசியில் தீபாவளி!

இந்துக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். கங்கையின் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி, விசுவேசுவரரைத் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. காசியில் கங்கை நதிக்கரை சுமார் ஆறு கிலோமீட்டர் நீளம் கொண்டது. வடக்கே வருணை நதி கலக்கும் இடத்திற்கும்- தெற்கே அஸி நதி கலக்கும் இடத்திற்கும் இடையே இந்தப் பகுதியும் காசி நகரமும் அமைந் திருக்கின்றன. அதனால் தான் அதற்கு வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டிருக் கிறது.




புனித கங்கை நதி அலங்காரத் தோற்றம் அளிக்கிறது. பெண்கள் கங்கைப் படித்துறையில் தீபங்கள் ஏற்றி வைத்து, தீர்க்க சுமங்கலிகளாக இருக்க கங்கையை வேண்டி பூஜை செய்கிறார்கள். காசி கங்கை நதியில் யமுனை, சரசுவதி, தூத்பாபா, கீர்னா ஆகிய புண்ணிய நதிகளும் கலந்து ஓடுவதாக ஐதீகம் உண்டு. அதனால்தான் காசியில் ஓடும் கங்கையைப் "பஞ்சகங்கா' என்று அழைக்கிறார்கள்.


கங்கைக் கரை ஓரமாக அறுபத்து நான்கு ஸ்நானக் கட்டங்கள் (படித்துறைகள்) உண்டு. படித்துறை ஓரமாக ஆலயங்களும் அமைந்து இருக்கின்றன. இந்தப் படித் துறைகளில் மிக முக்கிய மானவை ஐந்து. அஸி கட்டம்- அஸி நதி கங்கை யில் சங்கமமாகும் கட்டம்; தசாசுவமேத கட்டம்- பத்து அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் கட்டம்; வருணா கட்டம்- வருணை நதி கங்கையில் சங்கமமாகும் கட்டம்; அனுமன் கட்டம்; மணிகர்ணிகா கட்டம்- மகேசுவரன் கங்கைக் கரையில் நீராடி ஆனந்த நடனம் செய்த வேளையில் அவருடைய காதிலிருந்த குண்டலமும், முடியிலிருந்த மணியும் கங்கையில் விழுந்து கலந்த இடம். இந்த ஐந்து முக்கியமான கட்டங்களிலும் தீபாவளியன்று ஸ்நானம் செய்கிறார்கள். கங்கையில் மணி கர்ணிகாவில் நீராடி, மணிகர்ணிகாஅஷ்டகத்தைப் பாராய ணம் செய்தால், பிறவிக் கடலைக் கடந்து விடலாம் என்கிறார் சங்கர பகவத் பாதர்.

கங்கைக் கரை நெடுகிலும் மூங்கிற் குடைகள் வட்ட வட்டமாகக் காணப்படுகின்றன. இவற்றின் நிழலில் பண்டாக்கள் அமர்ந்து, தீபாவளி ஸ்நானம் முடித்து வருபவர்களுக்குப் பூஜைகளைச் செய்து வைக்கிறார்கள். உயர்ந்து நிற்கும் மூங்கிற் கழிகளின் முடியில் கூடைகள் தொங்குகின்றன. தீபாவளியை ஒட்டி இவற்றில் தீபங்களை ஏற்றி வைப்பார்கள். ஆகாச தீபங்கள் என்று இவை வணங்கப்படுகின்றன. கங்கைக்கரை ஓரம் உண்மையாகவே தீப-ஆவளி (தீபங்களின் வரிசை) தரிசனமாகக் கிடைக்கிறது.

மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி கங்கை யைப் பூஜித்துவிட்டு மேலே ஏறிவந்தால் தாரகேசுவரரைத் தரிசனம் செய்யலாம். அதை முடித்துக் கொண்டு, கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து, காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்வது முறை. நாமே லிங்கத்துக்கு அபிஷே கம் செய்து, கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள லாம். தீபாவளியன்று கிடைக் கும் மிக  அபூர்வமான அனு பவம் இது.

காசி விசுவநாதரை நாம் தொட்டுத் தரிசிக்கலாம்; பாலாபிஷேகம் செய்யலாம்; மலர் மாலைகள் சாற்றலாம். அபிஷேகம் செய்த கங்கை நீரையும் பாலையும் பிரசாத மாகப் பெற்று  அருந்தலாம்.

காசியில் இருப்பது ஜோதிலிங்கம். மகா விஷ்ணு ஈசனை இங்கே ஒளிவடிவமான லிங்க ரூபத்தில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. காசி விசுவநாதர் உருவில் சிவபெருமான் என்றென் றும் இங்கே சாந்நித்யம் கொண்டிருக்கிறார் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அதனால் காசி அவிமுக்த க்ஷேத்திரம்; காசி விசுவநாதர் அவிமுக்தேசுவரராக விளங்குகிறார். ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும், ஞானசம்ஹிதையிலும், வால்மீகி ராமாயணத்திலும் காசியின் சிறப்பு கூறப்பட்டிருக்கிறது. அங்கே விசுவநாதரை தீபாவளி தினத்தன்று வழிபடுவது விசேஷம்.


காசி விசுவநாதர் ஆலயத்தில் விடியற் காலை மூன்று மணிக்கு உக்ஷத்கால பூஜையும், பன்னிரண்டு மணியை ஒட்டி உச்சி கால பூஜையும், மாலையில் சந்தியா பூஜையை ஒட்டி சப்தரிஷி பூஜையும் நடக்கின்றன. நள்ளிரவில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறு கிறது.

சப்தரிஷி பூஜை மிக விசேஷமானது. ஏழு அந்தணர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிவ ஸ்தோத்திரம் சொல்லுகிறார்கள். படிப் படியாக சுவாமிக்கு அலங்காரம் செய்கிறார்கள். முதலில் கங்கை நீர், பிறகு பால், சந்தனம், தேன் ஆகிய வற்றினால் அபிஷேகம் நடக்கிறது. அதன்பின் பலவகை மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள். அதன்பின் வளையங்களாக மலர் மாலை அலங்காரம். நாகாபரணம் சிவலிங்கத் தின் முடியை அலங்கரிக் கிறது. ஐந்துமுக விளக்கு களைக் காட்டி, முடிவில் கற்பூர ஆரத்தி எடுக்கிறார் கள். ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலை களையும், பஞ்சமுக தீபம் ஐம்புலன்களையும் உணர்த்துவதாக, இந்த பூஜையின் தாத்பரியம் சொல்லப்படுகிறது. காசி விசுவநாதரின் பூஜைகளிலேயே இதுதான் மிகவும் முக்கிய மானது. தீபாவளியன்று விசுவேசுவரருக்குப் பஞ்சமுக அலங்காரம் செய்து, கவசமாகச் சாற்றுகிறார்கள்.

காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருப்பது காசி விசாலாட்சி யின் ஆலயம். இது தமிழ்நாட்டுப் பாணியில் அமைந்த திருக்கோவில். தீபாவளியன்று விசுவநாதர் ஆலயத்திலும் இங்கேயும் நாதசுர இசை மங்களகரமாக முழங்குகிறது. இங்கே அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வதுண்டு. தீபாவளியின்போதும் மகா சிவராத்திரியன்றும் தங்க விசாலாட்சி அம்மனைத் தரிசிக்கலாம்.

காசியில் தீபாவளியன்று விசேஷமான அலங்காரங்களுடன் எழுந்தருளுவது அன்னபூரணி. அன்று அன்னபூரணியின் தரிசனத் துக்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். காசியில் விசுவநாதர் ஆலயத்துக்கு இணையாக மிகச் சிறப்புடன் விளங்குவது அன்னபூரணியின் ஆலயம்தான்.

சாதாரண நாட்களில் கருவறையில் அன்னபூரணி அம்மனின் தரிசனம் கதவின் துவாரம் வழியாகவே பக்தர்களுக்குக் கிட்டுகிறது. கருவறைக்கு எதிரே எண்கோண வடிவம் கொண்ட மண்டபம் இருக்கிறது. அங்கே அமர்ந்து பக்தர்கள் பஜனை செய்கிறார்கள். பூஜை நேரத்தில் ஆலயமணி முழங்குகிறது. பசுவின் முகம் கொண்ட இந்த ஆலயமணியின் நாதத் தில் பக்தர்களின் கோஷம் கலந்து ஒலிக்கிறது. கற்பூர ஆரத்தி காட்டி குங்குமப் பிரசாதம் அளிக்கிறார்கள்.

காசியில் இருப்பவர் களுக்கு அன்னவிசாரம் இல்லை என்பது வாக்கு. காசிக்கு வரும் பக்தர்களும் அன்னதானம் செய்வதையே சிறப்பாகக் கருதுகிறார்கள். ஈசனுக்கே அன்னபூரணி உணவளித்ததாக வரலாறு கூறுகிறது. அன்னபூரணியின் திருவுருவத்தை இந்தத் தோற்றத்திலேயே காசியில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.


அன்னபூரணி அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளிக்கும் தேவி. ஆகவே உலகத்தில் மக்கள் எதனால் உயிர் வாழ்கிறார்களோ, எந்த சௌக் கியங்களை அடைய ஆசைப்படுகிறார்களோ- அவ்வளவையும் தரும் செல்வியாக அன்னபூரணி விளங்குகிறாள். அந்த தேவியின் தரிசனத் துக்காக தீபாவளியன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அன்னபூரணியைப் பூஜை செய்து வழிபடும் முதல் நாள் தன திரயோதசி. அன்று தங்க அன்னபூரணிக்குப் பூஜைகள் உண்டு. ஆனால் முழு தரிசனம் கிடைக்காது. திரை போட்டு மறைத்து விடுகிறார்கள். அடுத்த நாள் சோடி தீபாவளி. அன்று தரிசனத்துக்காக சந்நிதியைத் திறந்து வைக்கிறார்கள். தீபாவளியன்று ஐசுவரியங்களை அளிக்கும் தேவியாக விளங்கும் அன்னபூரணிக்கு குபேர பூஜை நடக்கிறது. அன்று கங்கா ஸ்நானம் செய்துவிட்டு ஏராளமான மக்கள்- குறிப்பாக சுமங்கலிகள் தரிசனம் செய்கிறார்கள். அடுத்த நாள் சகலவிதமான தன, தான்ய, சம்பத்துகளை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை நடைபெறுகிறது. இப்படி தீபாவளியை ஒட்டி மூன்று நாட்கள் விசேஷமாக தரிசனம் கிடைக்கிறது.


அந்த உலகத்தாய் தீபாவளியன்று ஒளி வடிவமாகப் பிரகாசிக்கிறாள். நவரத்தினங் களும் இழைத்த அணிகலன்கள் அன்னையின் மார்பில் தவழ்கின்றன; அருள்பாலிக்கும் கரங்களை அலங்கரிக்கின்றன; தண்ணொளி வீசும் மணிமகுடமாகத் திகழ்கின்றன. பொன்னும் மணியும் நவரத்தினங்களும் பூட்டி, பொன் உருவிலேயே ஜகன்மாதாவை வைத்துப் பூஜிக்கிறார்கள்.

ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவிருக்கிறாள். உலகத்தையே ஆளும் மகேசுவரன் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம். ஆலகாலத்தையும் அமுதமாய் விழுங்கிய எம்பிரானுக்கு அப்படி ஓர் எளிய தோற்றமா? அத்தனை பசியா? "உலகக் குழந்தைகளைக் காப்பாற்று; அதற்கு ஒரு பாவனையாக எனக்கு உணவு கொடு!' என்று கேட்கிறார் கைலாசபதி.

அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கத்தில் செய்த விக்கிரகங்களாகத் தரிசனம் தருகிறார்கள். அந்தத் தோற்றம், கையை உயர்த்தி அபயமளித்து ஆசீர்வாதம் கூறும் விதமாகவே இருக்கிறது. காசி விசுவேசுவரர், வெண்ணீறணிந்த பெருமான்- வெள்ளி மலையமர்ந்த ஈசன் வெள்ளி விக்கிரகமாக ஜொலிக்கிறார்.

லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். பக்தர்கள் அன்னபூரணிக்கு காணிக் கையை ரூபாய் நோட்டு களாக மழைபோலப் பொழிகிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை யின்போது, மூன்று நாட்களும் காசியில் உள்ள கோவில்களில் திருவிழாக் கோலம் கண்ணைக் கவருகிறது. காசி விசுவநாதர் ஆலயத்திலும், அன்னபூரணி கோவிலிலும் இந்தச் சிறப்பு தனி ஒளியுடன் துலங்குகிறது. அன்னம் மலைபோலக் குவித்து வைக்கப் படுகிறது. வகை வகையான இனிய பணியாரங் கள் குவியல் குவியலாக வைக்கப்படுகின்றன. எங்கும் பசியாற்றும் உணவு இறைவனின் அருளாகப் பொங்கி நிறைகிறது.

"அன்னபூர்ணே சதாபூர்ணே
சங்கரப்ராண வல்லபே!
ஞானவைராக்ய வித்யர்த்தம்
பிட்சாம் தேஹி ச பார்வதி'

என்கிறார் ஆதிசங்கரர். அதாவது, "ஜகன்மாதாவான அன்னபூரணி! நீ உன் குழந்தைகளுக்கு முக்தியடைய உதவும் பேரறிவையும் வைராக்கியத்தையும் தந்து அருள்பாலிக்க வேண்டும் தாயே' என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணியைத் துதிக்கிறார். நீராடும் போது நாமும் அந்த சுலோகத்தைச் சொல்லிக் கொள்ளுகிறோம்.

காசியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி அனுமான் காட் என்ற கங்கைப் படித் துறை அமைந்துள்ள நகரப் பகுதி. அங்கே உள்ள தமிழர்கள் அன்று விடியற்காலையிலேயே எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கையில் நீராடுகிறார்கள். நம்மைப்போலவே அங்கும் கொண்டாடுகிறார்கள்.

உண்மை தான்- காசியில் அன்ன விசாரமே இல்லை! அதுவும் தீபாவளித் திருநாளில் துளியும் இல்லை!
 

சனி, 22 அக்டோபர், 2016

விருட்சங்கள்!

துளசி
துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.
சந்தன மரம்
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
அத்திமரம்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.
மாமரம்
மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.
அரசமரம்
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
ஆலமரம்
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.
மருதாணிமரம்
மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.
ருத்ராஷ மரம்
ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
 
நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.
வில்வமரம்
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.
 
வேப்பமரம்
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
 
அசோக மரம்
அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
மாதுளம் மரம்
மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்.
 
 
 

நூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா?

 அதிக மாதம் என்பது சுமார் இரண்டரை (33 மாதங்களுக்கு ஒரு முறை) வருடத்திற்கு ஒரு முறை வரும். அதிக மாதம் என்பது எந்த மாதத்தில் வேண்டுமானாலும் வரும். ஒரு முறை சிராவணத்தில் வரும் ஒரு முறை வைசாகத்தில் வரும். இந்த மாதத்தில் தான் அதிக மாதம் என்று குறிப்பிட்டு வராது. அதிக மாதத்தில் எது ஒரு முறை தானம் செய்தாலும் 100 முறை தானம் செய்த பலன் கிடைக்கும்.

அதிக மாதத்தில் செய்ய வேண்டிய தான வகைகளின் விவரம் வருமாறு:-

அதிக மாதத்தில் இப்படி தானங்கள் கொடுப்பது நல்லது. அதிக மாதத்தை முடிந்த மட்டில் மிகவும் நல்ல விதமாக உபயோகித்துக் கொள்ள வேண்டும். துளசி பூஜை திரவயங்களுடன்+ துளசி பூஜை பாத்திர சாமான்கள் நிறைவான தானம் போல் கொடுக்கலாம் அல்லது துளசி பூஜை திரவியங்களை மட்டும் கொடுக்கலாம். சாலிக்ராம பூஜை சாமான்களுடன்+ சாலிக்ராம பூஜை பாத்திர சாமான்களும் வைத்து நிறைவான தானமாகக் கொடுக்கலாம் அல்லது சாலிக்ராம பூஜை த்ரவ்யங்கள் மட்டும் கொடுக்கலாம்.

பஞ்சாமிருத சாமான்கள் களிம்பு ஏறாத வெண்கல கிண்ணங்களில் அல்லது தொன்னையில் கொடுக்கலாம். பஞ்சாம்ருத சாமான்கள் களிம்பு ஏறாத வெண்கல கிண்ணங்களில் அல்லது தொன்னையில் கொடுக்கலாம்.

 அதிக மாதத்தில் ரவை உருண்டையும், அருளுருண்டையும் தானமாகக் கொடுக்கும் பொழுது 33 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். வஸ்தர தானம் என்பது புடவை+ரவிக்கை+ ஜதை வேஸ்டி என்றும் கொடுக்கலாம் அல்லது வேஷ்டியும், ரவிக்கையும் கொடுக்கலாம் அல்லது புடவை, ரவிக்கை மட்டும் கொடுக்கலாம். தேன்+நெய் தானம் களிம்பு ஏறாத கிண்ணத்திலும் கொடுக்கலாம் அல்லது தொன்னையில் கொடுக்கலாம்.

சையாதானம் என்பது சௌகரியம் போல் கொடுக்கலாம். ஜமுக்காளம்+தலையணை+போர்வை கொடுக்கலாம். வசதி உள்ளவர்கள் மெத்தையும் சேர்த்து கொடுக்கலாம். காய்கறிகள் தானத்தில் கசப்பு, துவர்ப்பு, காரம் போன்றவைகளை ஒதுக்கிவிட்டு மற்ற காய்கறிகள் கொடுக்கலாம். போஜன சாமான்கள் இருவர் சாப்பிடக்கூடிய அளவுக்கு எல்லாமே வைத்து கொடுக்கலாம். போஜனம் என்பது சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதினால் சமைப்பதற்கு உண்டான எல்லா சாமான்களும் கொடுக்கலாம்.

 யதா சக்தியான கோ தானம் என்பது பசு மாடு வைத்து இருப்பவர்கள் வீட்டில் நம்மால் முடிந்த தொகையை கொடுத்து பசுமாட்டை விலைக்கு வாங்கியதாக பாவித்து மறுபடியும் அதை அவர்களுக்கே தானமாகக் கொடுப்பதுடன் பசுமாட்டிற்கு வஸ்த்ரம், கால் சலங்கை, கொம்புகளுக்கு சலங்கை, பால் கறக்கும் பாத்திரம், கோக்ரஸம் வைக்க தட்டு எல்லாம் கொடுக்க வேண்டும். கோக்ரஸம் என்பது அரிசி+வெல்லம்+பருத்திக் கொட்டை, பழம் எல்லாம் ஒரு தட்டில் அல்லது இலையில் வைத்து பசுமாட்டிற்கு கொடுப்பதாகும். ஆகையால் பசு மாடு வைத்திருக்கும் மாத்வர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கியதாக பாவித்து தானம் கொடுக்க வேண்டும்.

புஸ்தக தானம் என்பது விஷ்ணு சம்பந்தப்பட்ட புராண புத்தகங்கள் அதிலும் ஸ்ரீமத் பாகவதம் மிகவும் நல்லது. ஆசன தானம் என்பது உட்காரும் பலகை, நாற்காலியும் கொடுக்கலாம். பாய் தானம் ஒத்தையாக கொடுப்பது கூடாது. ஜோடியாக கொடுக்க வேண்டும். நாணய தானம் என்பது நாணயங்களை வைத்து தானம் கொடுப்பது. நாணயம் கொடுத்திருப்பதினால் தட்சணை வைக்காமல் இருக்கக்கூடாது. தட்சணை வைத்து தான் தானம் கொடுக்க வேண்டும்.

க்ருஹ தானம், பூ தானம் என்பது நம் பெண்களுக்கு வீடு, நிலம் போன்று கொடுப்பதாக இருந்தால் தானமாக கொடுக்கலாம். இலந்த பழம், நெல்லிக்காய் தானம் என்பது கார்த்திகையில் அதிக மாதமாக அமையும் பொழுது கொடுக்கலாம். மற்ற மாதங்களில் கிடைத்தாலும் கொடுக்கலாம். விக்ரஹ தானம் என்பது சாதாரண சமயங்களில் கிருஷ்ணன் மற்றும் வேறு ஏதாவது பெருமாள் சிலை தானம் கொடுக்கலாம். ஆனால் அதிக மாதத்தில் அதிக மாத தெய்வமான ராதா சமேத ஸ்ரீகிருஷ்ண சிலை தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

பஞ்சகர்ஜுர தானம் என்பது உலர்ந்த பழவகைகளான, பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், திராட்சை, சர்க்கரை பாதாம், அத்திப்பழம், அக்ரோட் போன்றவைகளை வகைக்கு 33 வைத்து எல்லாம் சேர்த்து தானமாக கொடுப்பதாகும். சாதுர் மாதம் அதிக மாதமாக அமைந்தால் முதலிலும், கடைசியிலும் வரும் இரண்டு மாதங்களில் பஞ்சகர்ஜீர தானம் கொடுப்பது கூடாது.

வியாச பீட தானம் என்பது வியாச பீடத்தில் விஷ்ணு சம்பந்தமான புராண புத்தகம் அல்லது ஸ்தோத்திர புத்தகம் வைத்து தானமாகக் கொடுப்பது. விதை தானம் என்பது நல்ல பக்குவமான விதையாக உள் நெல் அல்லது அருளு நெல் தானமாக கொடுப்பது. இது வம்ச விருத்தியை தரும்.

வாத்ய தானம் என்பது நம் பெண் குழந்தைக்கு வாத்ய வகை ஏதாவது கற்று கொடுத்திருந்தால் திருமணம் ஆன பிறகு அந்த வாத்யத்தை நம் பெண்ணிற்கே தானமாக கொடுக்கலாம். வெளி நபர்களுக்கும் கொடுக்கலாம். மேற்கூறிய தானங்கள் எல்லாவற்றிற்கும் தேங்காய் வைத்துக் கொடுப்பது மிகவும் நல்லது.*





 

ஸ்ரீ மூகாம்பிகா சகஸ்ர நாமாவளி!


ஓம் மூகாம்பிகாயை நம:
மூக வாக்பூதி தாயின்யை நம:
மகா லட்சிமியை நம:
மகா தேவ்யை நம:
மகாராஜ்ய ப்ரதாயின்யை நம:
மஹோத்யாயை நம:
மகா ரூபாயை நம:
மாந்யாயை நம:
மஹித விக்ரமாயை நம:
மத வந்த்யாயை நம:
மகேஷ்வாஸாயை நம:
மந்த்ரி வர்யாயை நம:
மனஸ்வின்யை நம:
மேனகா தனயாயை நம:
மாத்ரே நம:
மஹிதாயை நம:
மாத்ரு பூஜிதாயை நம:
மஹத்யை நம:
மார ஜனன்யை நம: 20
ம்ருத சஞ்சீ விந்யை நம:
மத்யை நம:
மகா நீயாயை நம:
மதோல்லஸாயை நம:
மந்தாரக் குஸூம ப்ராபாயை நம:
மாதவ்யை நம:
மல்லிகா பூஜ்யாயை நம:
மலயாசலாஸின்யை நம:
மகா ஸாரஸ்வத ப்ரதாயை நம:
மர்த்ய லோகாச்ரயாயை நம:
மந்யவே நம:
மதிபாயை நம:
மோட்ச தாயின்யை நம:
மகா பூஜ்யாயை நம:
மகஹல ப்ரதாயை நம:
மகவதாச்ரவாயை நம:
மரீசயே நம:
மாருதப் ப்ராணாயை நம: 40
மதஜ்யேஷ்டாயை நம:
மஹெளஷ்தாயை நம:
மகா காருண்யகாயை நம:
முக்தா பரணாயை நம:
மங்கல ப்ரதாயை நம:
மணி மாணிக்ய சோபா நம: ட்யாயை நம:
மதஹீநாயை நம:
மதோத்கடாயை நம:
மகா பாக்யவத்யை நம:
மந்தஸ்மிதாயை நம:
மன்மத சேவிதாயை நம:
மாயா வித்யாயை நம:
மத்தஞ்ஜூ பாஷிண்யை நம:
மதால ஸாயை ம்ருடான்யை நம:
ம்ருத்யு மதின்யை நம:
ம்ருது பாஷாயை நம:
ம்ருடப் பிரியாயை
மந்ரஞ்ஞாயை
மித்ர ஸங்காசாயை 60
முந்யே
மஹிஷ மர்த்தின்யை
மஹாபயாயை
மஹோரஸ்காயை
ம்ருகதுஷ்டயே
மஹேஸ்வர்யை
ம்ருணால சீ தாளாயை
ம்ருத்யவே
மேரு மந்தார வாஸின்யை
மேத்யாயை
மதங்க சமனாயை
மகா மாரீஸ்வ ரூபிண்யை
மேக ச்யாமாயை
மீனாட்சியை
மதனாக்ருதயே
மனோன்மண்யை
மஹ்யை
மாயாயை
மகிஷாசுர மோட்சதாயை 80
மேனகாவந்தி தாயை
மேன்யாயை
முனி வந்தித பாதுகாயை
முனி வந்த்யாயை
ம்ருத்ய தாத்ரை
மோகின்யை
மிதுநாக்ருதயே
மகா ரூபாயை
மோகநாங்க்யை
முனிமானஸ ஸம்ஸ்திதாயை
மோகனாகார வதனாயை
மூஸலாயுத தாரிண்யை
மரீசி மாலாயை
மாணிக்ய பூஷனாயை
மந்தகாமின்யை
மஹிஷ்யை
மாருத கதயே
மகா லாவண்ய சாலின்யை
ம்ருதங்க நாதின்யை
மைத்ரை 100
மதிராமோத லாலஸாயை
மாயா மய்யை
மோக நாசாயை
முனிமானஸ மந்திராயை
மார்த்தாண்டகோடி கிரணாயை
மித்யாஞ்ஞான நிவாரிண்யை
ம்ருகாங்க வதனாயை
மார்க்கதாயின்யை
ம்ருகநாபி த்ருதே
மந்தமாருத ஸம்ஸேல்வாயை
மந்தார தரு மூலகாயை
மந்தஹாஸாயை
மதகர்யை
மதுபரண ஸமுத்யதாயை
மதுராயை
மாதவந்தனாயை
மாதவ்வை
மாதவார்ச்சிதாயை
மார்த்தாண்டகோடிஜனன்யை
மார்த்தாண்ட கதிதாயின்யை 120
மார்த்தாண்ட கதிதாயின்யை
ம்ருணாளமூர்த்தியை
மாயாக்யை
மகா ஸாம்ராஜ்ய தாயின்யை
காந்தாயை
காந்தமுகாயை
காள்யை
கச நிர்ஜித ப்ருங்க காயை
கஞ்சாக்ஷ்யை
கஞ்சவத்னாயை
கஸ்தூரி திலகோஜ்வலாயை
கலிகாகாரவதநாயை
கர்ப்பூரா மோத ஸம்யுதாயை
கோகிலாலா வஸங்கீதாயை
கனகாக்ருதி பிம்பப்ருதே
கம்பு கண்ட்யை
கஞ்ஜஹாராயை
கலிதோஷ விநாசின்யை
கஞ்சு காட்யாயை
கஞ்சு ரூபாயை
காஞ்சீ பூஷண ரஞ்சிதாயை 140
கண்டீரவஜித மத்யாயை
கஞ்சீ தாம விபஷிதாயை
க்ருத கிங்கிணிகா சோபாயை
சாஞ்ச நஸ்ராவி நீவிகாயை
காஞ்ச நோத்தம சோபாட்யாயை
கனக க்லுப்த பாதுகாயை
கண்டீரவ வஸவாஸீதாயை
கண்டீரவ பராக்ரமாயை
கல்யாண்யை
கமலாயை
காம்யாயை
கமநீயாயை
கலாவத்யை
க்ருதயே
கல்பதரவே
கீர்த்தயே
குடாஜாசல வாஸின்யை
கவிப்பிரியாயை
காவ்ய லோலாயை
கபர்தீ ருசிராக்ருதயே 160
கண்டீரவ த்வ@ஷஜாயை
காம ரூபாயை
க்ருசாநவே
கேச வந்தனாயை
க்ருத ப்ரஞ்ஞாயை
க்ரு சோதர்யை
கோசாதீஸ்வர ஸம்ஸேவ்யாயை
க்ருசாயை
கர்ஜித பாதுகாயை
கரீந்த்ர காமின்யை
கேள்யை
குமார்யை
குலபாஷிண்யை
கலிதோஷகராயை
காஷ்டாயை
கரவீர ஸமப்பிரியாயை
கலா ரூபாயை
க்ருஷ்ணந்த நாயை
கலதார ஸூபூ ஜிதாயை 180
கப்ஜாயை
கஞ்சேக்ஷணாயை
கன்யாயை
கலாதர முகாயை
கவயே
கலாயை
கலாங்க்யை
காவேர்யை
கெளமார்யை
காலரூபிண்யை
கலாட்யை
கோல ஸம்ஹர்த்ரை
ரூஸூமாட்யாயை
குலாங்கநாயை
குசோன்னதாயை
குங்கு மாட்யாயை
கெளஸூம்ப குஸூமப்பிரியாயை
குச சோபாயை
காளராத்ரை
கீச காரண்ய ஸேவிதாயை 200
குஷ்ட ரோகஹராயை
கூர்ம பிருஷ்டாயை
காமித விக்ரஹாயை
கலான தாயை
கலா லாயாயை
கலபாதீச் வரார்ச்சிதாயை
கேதகீ குஸூமப்பிரியாயை
கைலாச பத தாயின்யை
கபர்தின்யை
கலா மாலாயை
கேசவார்ச்சித பாதுகாயை
குசாத்மஜாயை
கேச பாசயை
கோலாபுர நிவாஸின்யை
கோச நாதாயை
க்லேச ஹந்த்ர்யை
கீசஸேவ்யானாய
க்ருபா பராயை
கெளஞ்தேயார்ச்சித பாதாப் ஜாயை
காளீந்த்யை 220
குமுதால யாயை
கனத்கனக தாடங்காயை
கரிண்யை
குமு தேக்ஷணாயை
கோகஸ் தன்யை
குந்தர தாயை
குல மார்க்க ப்ரவர்த்தின்யை
குபேர பூஜிதாயை
ஸ்தம்ர மாத்ரே
கீ லால சீதளாயை
காள்யை
காம லாயை
காச்யை
காச பூஷ்ப ஸமப்ரபாயை
கின்னர்யை
குமதாஹ்லாத காரிண்யை
கபிலாக்ருத்யே
காரிய காரண நிர்முக்தாயை
க்ரு மீடாந்த மோக்ஷ தாயை
கிராத வனிதாயை 240
காந்த்யை
கார்ய காரண ரூபிண்யை
கபிலாயை
கபிலா ராத்யாயை
கபிச த்வஜ் ஸேவிதாயை
கராள்யை
கார்த்திகேயாக்ய ஜனன்யை
காந்த விக்ரஹாயை
கர போரவே
கரேந்தச்ரியை
கரேந்திர ச்ரியை
கபாலி ப்ரீதி தாயியின்யை
கோலரிஷி வர ஸேம்ஸவ்யாயை
கிருதஞ்ஞாயை
காங்த்தாக்ஷித்ததாயை
பாலாயை
பாண தாரிண்யை
பாண பூஜிதாயை
பிஸப்ர ஸூந்நய நாயை
பிஸதந்து நிபாக்ருதயே 260
பிஹூப்ரதாயை
பஹூபாலாயை
பாலாதித்ய ஸமப்ரபாயை
பாலாதர ஹிதாயை
பிந்து நிலயாயை
பகளா முக்யை
பதரீபல வக்ஷோஜாயை
பாஹ்யதம்ப விவர்ஜிதாயை
பலாயை
பல ப்ரியாயை
பாஹ்யை
பந்தவே
புதாயை
பௌத்தாயை
பதேச்வர்யை
பில்வ ப்ரியாயை
பாலலதாயை
பால சந்திர விபஷிதாயை
புத்திதாயை
பந்தன சேத்ரை 280
பந்தூக குஸூமப் பிரியாயை
ப்ராம்யை
ப்ரும்மந்தனாயை
பிரத்ம தயாயை
ப்ரும்மசாரிண்யை
பிரஹஸ்பதி ஸமாரத்யாயை
புதார்சித பதாம்பஜாயை
ப்ரஹத் கக்ஷ்யை
பிரஹத் வாண்யை
பிலேசயாயை
பிரஹித்வஜ ஸூதாயை
பர்ஹிக சாயை
பீஜாச்ரயாயை
பலாயை
பிந்து ரூபாயை
பீஜபீர ப்ரியாயை 300
பிரும்பரூபிண்யை
போதரூபாயை
பிரஹத்ரூபாயை
பந்தின்யை
பந்த மோகின்யை
பிம்ப ஸம்ஸ்தாயை
பாலரூபாயை
பாலராத்ரீச தாரிண்யை
வனதுர்க்காயை
வநௌக ச்ரியை
வந்த்ய ப்பியாயை
வனஸ்தி தாயை
வந்தி தேஜஸே
வந்தி சக்தயே
வந்நிதாரந்த ரூபிண்யை
வசுமத்யை
வசுதாயை
வசுதாயின்யை
விவேகின்யை 320
விசேஷக்ஞாயை
விஷ்ணவே
வைஷ்ணவ பூஜிதாயை
விந்திதாகில தைத்யாயை
விஜயாயை
விஜய ப்ரதாயை
விலாஸின்யை
வேத வேத்யாயை
வியத் பூஜ்யாயை
விசாகின்யை
விச்வேச்வர்யை
விச்வ ரூபாயை
விச்வ சிருஷ்டி விதாயின்யை
வீரபத்யை
வீரமாத்ரே
வீர லோகப் பிரதாயின்யை
வர பிரதாயை
வர்ய பதாயை
வைஷ்ணவ ச்ரியை
வதூவராயை 340
வத்வை
வாரிதி ஸஞ்ஜாதாயை
வாரணாதி ஸம்ஸ்திதாயை
வாம பாகாதி காயை
வாம மார்க்க விசாரதாயை
வாமின்யை
வஜ்ர ஸம்ஸேவ்யாயை
வஜ்ராத்யாயுத தாரிண்யை
வேத்யாயை
விச்வ வந்த்யாயை
விமோகின்யை
வித்வத் ரூபாயை
வஜ்ர நகாயை
வயோவஸதா விவர்ஜிதாயை
விரோத சமன்யை
வித்யாயை
வாரிவாஹாயை
விபூதிதாயை
விச்வாத்மிகாயை
விச்வபாச விமோசின்யை
வாரணஸ்திதாயை
விபுதார்ச்சாயை
விச்வ பிரமண காரிண்யை
விலக்ஷணாயை
விசாலாக்ஷ்யை
விசுவாமித்ர வரப் பிரதாயை
விரூபாக்ஷப் பிரியாயை
வாரிஜாக்ஷை
வாரிஜ ஸம்பவாயை
வாங்மய்யை
வ்யாரூபாயை
வார்தீ கம்பீர கமனாயை
வஜ்ராத்யாயத் தாருண்யை
வாரிஜாக்ஷ ஸத்யை
வராயை
விஷயாயை 380
விஷயா ஸக்த்தாயை
வித்யா வித்யா ஸ்வரூபிண்யை
வீணாதாரிண்யை
விப்ர பூஜ்யாயை
விஜயாந்விதாயை
விவேகஜ் ஞானாயை
விதித்துத்யாயை
வீசுத்தாயை
விஜயார்ச்சிதாயை
வைதவ்ய நாசின்யை
வைவாஹிதாயை
விச்வ விலாசின்யை
விசேஷமானதாயை
வைத்யாயை
விபுதார்த்தி விநாசின்யை
விபுலச் ரோணி ஜகனாயை
வலித்ரய விராஜிதாயை
விஜயச்ரியை
விதுமுக்யை
விசித்ராபரணா ந்விதாயை 400
விபக்ஷவ்ராத ஸம்ஹர்த்ரை
விபத் ஸம்ஹார காரிண்யை
வித்யா தராயை
விச்வமய்யை
விரஜாயை
வீர ஸம்ஸ்துதாயை
வேதமூர்த்யே
வேத ஸாராயை
வேத பாஷாயை
விசக்ஷணாயை
விகித்ர வஸ்த்ராபாணாயை
வரதாந்விதாயை
வரதாத்மிகாயை
வரதஹலாயை
விபூஷித சரீரிண்யை
வீணாகாயன ஸம்ஸக்தாயை
வீதராகாயை
வசுப்ரதாயை
விராகின்யை
விச்வசாராயை 420
விச்வாவஸ்தா விவர்ஜியைதா
விபாவஸவே
வயோ வ்ருந்தாயை
வாச்ய வாசக ரூபிண்யை
வருத்த ஹந்த்ரியை
வருத்தி தாத்ரை
வாக் ஸ்வரூபாயை
விராஜிதாயை
வ்ருத கார்யாயை
வஜ்ரஹஸ்தாயை
வ்ருத சீ லாயை
வ்ருத ஷாட்குண்ய காரிண்யை
வ்ருத்தயே
வாதாத்மிகாயை
வ்ருத்தி பிரதாயை
வர்யாயை
வஷட் க்ருதாயை
விஞ்ஞாத்ரை
வித்வாயை
விபாவஸூ ஸமட்த்யு த்யை 440
விச்வ்வேத்யாயை
விரோதக்நை
விபதஸ்தோம ஜீவனாயை
வியத்யானாயை
விக்ஞான கன ரூபிண்யை
வரவாண்யை
விசுத்தாந்தக் கரணா
விச்வமோகின்யை
வாக் விபதி தாயின்யை
வாரி ஜானனாயை
வாருணீ மத ரக்தாக்ஷ்யை
வாம மார்க்க பீரவர்த்தின்யை
வாம நேத்ராயை
விராட்ரூபாயை
வேத்ராஸூர நிஷூதின்யை
வாக்யார்த்த ஞான ஸந்தாத்ரை
வாக் அதிஷ்டான தேவதாயை
வைஷ்ணவ்வை
விச்வ ஜனன்யை
விஷ்ணு மாயாயை
வாரன்னாயை
விச்வம்பர்வை
வீதி ஹோத்ராயை
விச்வேஸ்வர விமோகின்யை
விச்வப்பிரியாயை
விச்வகர்த்ரை
விச்வ பாலன தத்பராயை
விச்வ ஹந்த்ரை
விநோதாட்யாயை
வனப்பிரியாயை
வர தாத்ரை
வீதபான ரதாயை
வீர நிபர்ஹிண்யை
வித்யாந் நிபாயை
வீதரோகாயை
விகத கன்மஷாயை
விஜிதாகில பாஷண்டாயை
வீரசைதன்ய விக்ர ஹாயை
ரமாயை 480
ரக்ஷாகர்யை
ரம்யாயை
ரமணீயாயை
ரணப்பியாய
ரக்ஷாபராயை
ரக்ஷாஸக்ந்யை
ராஞ்ஞை
ரமண ராஜிதாயை
ராகேந்து வதனாயை
ருத்ராயை
ருத்ராண்யை
ரௌத்ர வர்ஜிதாயை
ருத்ராக்ஷ தாரிண்யை
ரோக ஹாரிண்யை
ரங்க நாயிகாயை
ராஜ ஸ்ரீ ரஞ்சித பதாயை
ராஜ ராஜ நிஷேவிதாயை
ருசிராயை
ரோசனாயை
ரோசிஷே 500
குணமோசன காரிண்யை
ரஜ நீச கலாக்த்யை
ரஜ தாத்ரி கேதநாயை
ராஜ கோட்ஷ்யை
ராக ஹ்ருதயாயை
ராமாயை
ராவண சேவிதாயை
ரக்த பீஜார் திந்யை
ரக்த லோசனாயை
ராஜ்ய தாயின்யை
ரவிப் பிராபாயை
ரவிகராயை
ரத் நாட்யாயை
ராஜ வல்லபாயை
ராஜ குசுமதம் மில்லாயை
ராஜ ராஜேஸ்வர்யை
ரத்யை
ராதயை
ராதார்ச்சிதாயை
ரௌத்திர்யை 520
ரணந் மஞ்சீர நூபுராயை
ராகாயை
ராத்ரியை
ரிஜ்வே
ராசயே
ருத்ர பூத்யை
ருகாத் மிகாயை
ராஜ் சந்டர ஜடா சூடாயை
ராகேந்து முக பங்கஜாயை
ராவணே சவிமோகின்யை
ராஜத்கனக கேயூராயை
ராஜத்கர ஜதாம்புஜாயை
ராம சேவி தாயை
ரண பண்டி தாயை
ரம் போரவே
ரத்ன கட்காதயே
ராஜஹம்ச கதாகததே
ராஜீவ ரஞ்சித பதாயை 540
ராஜ் சிம்காசன ஸ்திதாயை
ரக்ஷாகர்யை
ராஜ வந்த்யாயை
ரக்ஷோ மண்டல தேஹிந்யை
தாக்ஷாயின்யை
தாந்த ரூபாயை
தானக்ருதே
தான வார்த்தின்யை
தாரித்ர்ய நாசின்யை
தாத்ரை
தயையுக்தாயை
துராந் ஸதாயை
துர்ஜ யாயை
துக்க சமன்யை
துர்க தாத்ரை
துரத்ய யாயை
தாஸி க்ருதாமராயை
தேவ மாத்ரே
தாக்ஷிண்ய சாலின்யை
தௌர்பாக்ய ஹரிண்யை 560
தேவ்யை
தக்ஷயக்ஞ் விநாசிண்யை
தயா கர்யை
தீர்க பாஹவே
தூத ஹந்த்ர்யை
திவிஸ் திதாயை
தயா ரூபாயை
தேவராஜ ஸம்ஸ்து தாயை
தக்த மன்மதாயை
திருக்ருத் கோடி ஸங்காசாயை
திவிஷதே
திவ்ய ஸ்வரூயாயை
தீக்ஷி தாயை
திக் பதயே
திவ்ய லோசனாயை
துர்க்காயை 580
துக்கௌக சமன்யை
துர்க்கா மூர்த்தயே
திகீச் வர்யை
துர்ஞேயாய
துஷ்ட சமன்யை
துரிதக்னியை
துராஸதாயை
துரந்தாக்யாயை
துஷ்ட தாக்யாயை
துர்தர்ஸாயை
தும்துபிஸ்வநாயை
துஷ்ப்ரதர்ஷாயை
துராராத்யாயை
துர்நீத ஜனனீ நிக்ரகாயை
தூர்வாதள சியாமளாங்க்யாயை
தூதத்ருசே
பூஷணோந்திதாயை
தேவ தாயை
தேவதே வேச்யை 600
தேசிக வல்லபாயை
தேவிகாயை
தேவ ஸர்வஸ்வாயை
தேச பாயை
தேச காரிண்யை
தோஷா பகாயை
தோஷ தூராயை
தோஷாகர ஸமானனாயை
தோக்த்ரை
தௌர்ஜன்ய சமன்யை
த்யூதாதி க்ரீடந பராயை
த்யுமணயே
த்யூத சாலின்யை
த்யோதி நாசாயை
த்யூத பராயை
த்யா வாப்ரமீ விகாரிண்யை
தந்தின்யை
தண்டின்யை
தம்ஷ்ட்ரை
ததூஸதக விஷாயகாயை 620
தம்பதூராயை
தந்தி சுதாயை
தண்ட மாத்ரு ஜயப்ரதாயை
தர்வீ கராயை
தக்ரீ வாயை
தக நார்சிஷே
ததிப்பிரியாயை
ததீசி வரதாயை
தக்ஷாயை
தக்ஷிணா மூர்த்தி ரூபிண்யை
தான சீலாயை
தீர்க ப்ருஷ்டாயை
லக்ஷிணார் தேச்வராயை
த்ரு தாயை
தாடிமீ குசுமப்பிரியாயை
துர்க துஷ்க்ரு ஹாரிண்யை
ஜயந்த்யை
ஜனன்யை
ஜ்யோத்ஸ்னாயை
ஜல்ஜாக்ஷை 640
ஜயப்ரதாயை
ஜராயை
ஜரார்ய ஜப்ரீதாயை
ஜீவநாயை
ஜீவ நகர்யை
ஜீவேச்வர விராஜிதாயை
ஜகத் யோனயே
ஜநிஹராயை
ஜாத வேதஸே
ஜலாம் ச்ரயாயை
ஜிதாம்பராயை
ஜிதா ஹாராயை
ஜிதா காரயை
ஜகத் ப்ரியாயை
ஞன ப்பிரியாயை
ஞான ஹனாயை
ஞான விஞ்ஞான காரிண்யை
ஞானேஸ்வர்யை
ஞானகம்யாயை
ஞானாக் ஞான ஹநாசின்யை 660
ஜிஞ்ஞாஸாயை
ஜீர்ண ஹரிதாயை
ஞானின்யை
ஞான கோசராயை
அக்ஞான த்வம்ஸின்யை
ஞான ரூபிண்யை
ஞானகாரிண்யை
ஜாதார்தி சமன்யை
ஜன்ம ஹாரிண்யை
ஞான பஞ்சராயை
ஜாதீ ஹீனாயை
ஜகன் மாத்ரே
ஜாபால முனி வந்திதாயை
ஜாக ரூபாயை
ஜகத் பாத்ரை
ஜகத் வந்த்யாயை
தகத் குரவே
ஜல் ஜாக்ஷ த்யை
ஜேத்ரை
ஜகத் ஸம்ஹார ஹாரிண்யை
ஜிதக் ரோதயை
ஜிதரதாயை
ஜித சந்திர முகாம்பஜாயை
யஞ்ஞேஸ்வர்யை
யஞ்ஞ பலாயை
யஜனாயை
யம பூஜிதாயை
யதயே யோநயே
யவநிகாயை
யாமஞ்ஜூ காயை
யுகாத் மிதூயை
யுகாத்ருதய
யோக தாத்ரை
யாஜ் யாயை
யுத்த விசார தாயை
யக்மப் பிரியாயை
யுக்த சித்தாயை
யத்ன ஸாத்யாயை
யசஸ்காயை 700
யாமின்யை
யாதன ஹராயை
யோக நித்ராயை
யதிப்பிரியாயை
யதிஹ்ருத் கமலாயை
யஞ்ஞாயை
யஜ் மானஸ்வரூபிண்யை
யக்ஷேச்யை
யக்ஷ ஹரணாயை
யக்ஷிண்யை
யக்ஷ சேவிதாயை
யாத வஸ்த்ரியை
யது பதயே
யமளால்ஜூந பஞ்சனாயை
வ்யாளாலங் காரிண்யை
வ்யய நாசின்யை
திரஸ் க்ருத மகா விதுஷே
திர்யக் பிருஷ்டாயை
திரோரஹிதாயை 720
திலபஷ்ப ஸமாகார நாசிகாயை
திர்த் ரூபிண்யை
திர்யக் ரூபாயை
திர்த்த பாதாயை
த்ரிவர் காயை
த்புரிரேஸ்வர்யை
த்ரி ஸந்த்யாயை
த்ரிகுணாத் யக்ஷாயை
த்ரி மூர்த்தயே
த்ரி புராந்தக்யை
த்ரிநேத்ர வல்லபாயை
த்ரயக்ஷாயை
த்ரய்யை
த்ராத்ன பராயணாயை
தாரணாயை
தாரிண்யை
தாராயை
தாரா பரிகலா வ்ருதாயை
தாராத் மிகாயை 740
துரி தாட்யாயை
துத்ருத்த மாயை
தூர்ண ப்ரஸா தாயை
தூணி ரதாரிண்யை
தூர்ண ஸம்ஸ்ருதாயை
தோஷிண்யை
தூர்ண கமநாயை
துலா ஹினாயை
அதுல ப்ரதாயை
தாங்கிண்யை
தாங்காட் யாயை
துலாயை
துந்தி புத்ரிண்யை
துநூநபதே
தந்து ரூபாயை
தாரங்க்யை
தந்திர ரூபிண்யை
தாரகாரயே
துங்க கசாயை 760
திலகாளயே
திலகார்ச்சிதாயை
துமோபஹாயை
தார்க்ஷ்ய கதயே
தாமஸ்யை
த்ரிதி வேச்வர்யை
தபல்வின்யை
தபோரூபாயை
தாபஸேட்யாயை
த்ரயீதநவே
தபப்பலாயை
தபஸ் ஸாத்யாயை
தலாதல நிவாஸிந்யை
தாண்ட வேச்வர ஸம்ப்ரீதாயை
தடிதீக்ஷண ஸம்பவாயை
தநு மத்யாயை
தநு ரூபாயை
தல பாநவே
தடித் ப்ரபாயை
ஸதயாயை
வந்திதாயை 780
ஸத ஸத் பராயை
ஸத்ய ப்ரஸாதின்யை
ஸாதவே
சச்சிதானந்த ரூபிண்யை
சரித் வேகாயை
சதாகாராயை
சரித்பதி வசுந்தராயை
சரீஸ்ரு பாங்காபரணாயை
சர்வ சௌபாக்ய தாயின்யை
ஸாம சாத்யாயை
ஸாம கீதாயை
சோம சேகர வல்லபாயை
சோம வக்த்ராயை
சௌம்ய ரூபாயை
சோமயாக பலப்ரதாயை
சகுணாயை
சத்கிரியாயை
சத்யாயை
சாதகாபீஷ்ட தாயின்யை
சதா வாண்யை 880
சௌத வாஸாயை
சுஞ்ஞாயை
சுச்ரியை
சுரேஸ்வர்யை
கேதகீ குசுமப்ரக்யாயை
கர நிர்ஜித நீரபாயை
குந்தளாலித ப்ருங்காளயே
குந்தளீக்ருத கேசிக்யை
சிந்தூரங்கித கேசாந்தாயை
கஞ்சாக்ஷ்யை
சகலோலிகாயை
சலத் கனக தாடங்காயை
சம்பகாக்ருதி நாசிகாயை
நாஸா லங்க்ருத ஸந்முக்தாயை
பிம்போஷ்ட்யை
பால சந்திர த்ருதே
கந்த பந்தாயை
த்ரிநயனாயை
புண்ய சிரவண
கீர்த்தனாயை
காள வேண்யை 820
கபர்ஜித சகோராயை
ஹார ரஞ்சிதாயை
கரஸ் தாங்குளிகாயை
ரத்ன காஞ்சிதாம விராஜிதாயை
ரத்ன கிங்கிணிகாயை
ரம்ய நீவிகாயை
ரத்ன கஞ்சுகாயை
ஹரி மத்யாயை
அகாதப் பிருஷ்டாயை
கரபோரவே நிதம்பின்யை
கரபோரவே நிதம்பின்யை
நிர்ஜித பத்மாபாயை
ஊர்மிகாஞ்சி தாங்குலயே
காங்கேய கிண்கிணி யுக்தாயை
ரமணீயாங்குலீ யுதாயை
மாணிக்க ரத்னாபரணாயை
மதுபான விசாரதாயை
மது வந்த்யாயை 840
மந்த கதாயை
மத்தேபஸ்தாயை
அமரார் சிதாயை
மயூர கேது ஜனன்யை
மலயாசல புத்ரிகாயை
ஹரார்த்த பாகாயை
ஹர்யக்ஷ வாகனாயை
ஹரி சோதர்யை
ஹாடகா பாயை
ஹரிந்த்தாயை
ஹம்ஸகாயை
ஹம்ஸ ரூபிண்யை
ஹாஷப்ரதாயை
ஹரிபதயே
சர்வகாயை
சர்வ தேவேச்யை
சாமகான ப்ரியாயை
சத்யை
சர்வோபத்ரவ ஸம்ஹந்தர்யை
சர்வ மங்கள தாயின்யை 860
சாதுப்பிரியாயை
நாக ராஜாயை
சர்வகர்த்ரை
சநாதன்யை
சர்வோபநித் கீதாயை
சர்வ சத்ரு நிபர்ஹிண்யை
சன காதி முனிஸ்துதாயை
சதாசிவ மனோகராயை
சர்வஞ்ஞாயை
சர்வஜனன்யை
சர்வாதாராயை
சதாகதயே
சர்வபூத ஹிதாயை
சாத்யாயை
சர்வ சக்தி சுவரூபிண்யை
சர்வகாயை
சர்வ சுகதாயை
சர்வேச்யை
சர்வரஞ்ஜின்யை
சிவேச் வர்யை
சிவாராத்யாயை 880
சிவானந்தாய
சிவாத்மிகாயை
சூர்ய மயைண்டல மத்யஸ்தாயை
சிவயை சங்கர வல்லபாயை
சுதாப்லவாயை
சுதா தாராயை
சுக சம்வித் ஸ்வரூபிண்யை
சிவங்கர்யை
சர்வ முக்யை
சூக்ஷ்ம ஞான ஸ்வரூபிண்யை
அத்வாயானந்த சமசோபாயை
போகஸ்வர்க்கா பவர்க்க தாயை
விஸ்ணு ஸ்வஸ்ரே
விவிதார்த்த விரோதின்யை
கிரிஜாயை
கிரீசப்பிரியாயை
சர்வாண்யை 900
சர்மதாயின்யை
ஹிருதபத்ம மத்ய நிலயாயை
சர்வோத் பத்தயே
ஸ்வராத்மிகாயை
தருண்யை
கருணாக்ருபாயை
விந்த்யா சிந்த்ய ஸ்வரூபிண்யை
ச்ருதாய
ஸ்ம்ருதி மய்யை
ஸ்துத்யாயை
ஸ்துதி ரூபாயை
ஸ்துதிப்பிரியாயை
ஓம்கார கர்ப்பாயை
ஒம் கார்யை
கங்காள்யை
காலரூபிண்யை
விச்வம்பர்யை
விநீதஸ்தாயை
விதாத்ரை
விவிதப்ரபாயை 920
ச்ரீகர்யை
ச்ரீமத்யை
ச்ரேயஸே
ஸ்ரீதாயை
ஸ்ரீ சக்ர மத்யகாயை
த்வாத சாந்த சரோஜஸ்தாயை
நிர்வாண சுக தாயின்யை
சாத்யை
சர்வோத் பவாயை
சத்வாயை
ஸ்ரீகண்ட ஸ்வாந்த மோகின்யை
வித்யா தனவே
மந்திர தனவே
மதநோத்யான வாசின்யை
யோக லக்ஷ்ம்யை
ராஜலக்ஷ்ம்யை
மகாலக்ஷ்ம்யை
சரஸ்வத்யை
சதானம்தைக ரசிகாயை
ப்ரும்ம விஷ்ணு ஈசவந்திதாயை940
குமார்யை
கபிலாயை
காள்யை
பிங்காக்ஷ்யை
கிருஷ்ண பிங்களாயை
சண்ட கண்டாயை
மகா சித்தயே
வாராஹியை
வர வர்ணின்யை
காத்யாயின்யை
வாயுவேகாயை
காமாக்ஷ்யை
கர்ம சாக்ஷ்ண்யை
துர்கா தேவ்யை
ஆத்ய தேவ்யை
மகா சனாயை
மகா வித்யாயை
மகா மாயாயை
வித்யா லோலாயை 960
தமோமய்யை
சங்க சக்ர கதா ஹஸ்தாயை
மகா மகிஷ மர்த்தின்யை
வத் கீண்யை
சூலின்யை
புத்தி ரூபிண்யை
பூதி தாயின்யை
வாருண்யை
ஜடிந்யை
த்ரஸ்த தைத்ய ஸம்காயை
சிவந்தின்யை
சுரேச்வர்யை
பூஸ்திர பஜ்யாயை
மகா காள்யை
த்விஜார்ச்சிதாயை
இச்சாயை
ஞானாயை
க்ரியாயை
சர்வ தேவதானந்த ரூபிண்யை
சர்வ சக்தி ஐக்ய ஸ்வரூபிண்யை
மத்தசிம்ப நிசும்பக்னை கண்ட
முண்ட விகாதிந்யை
வந்நி ரூபாயை 980
மகா காந்த்யை
ஹராயை
ஜயோத் ஸ்நாவத்யை
ஸ்மராயை
வாகீச்வர்யை
வ்யோம கேச்யை
மூக ஹர்த்ரை
வரப்தாயை
ஸ்வாஹாயை
ஸ்வதாயை
சுதாயை
மேதாயை
ஸ்ரீயை
ஹ்ரியை
கௌர்யை
பரமேச்வர்யை 1000

ஸ்ரீ மகாகாளி, மகாலக்ஷ்மி, மகாசரஸ்வதி ஐக்ய ரூபிண்யை ஸ்ரீமூகாம்பிகாயை நம:
மூகாம்பிகா சகஸ்ரநாமம்சம்பூர்ணம்!

சுக்கு மல்லி காப்பி!

கொத்துமல்லி விதை 5 கப், மிளகு 5 கப், சீரகம் 3 கப், சுக்கு 4, 5 துண்டுகள் (பெரியதாக), ஏலக்காய் – 6, கிராம்பு – 6 இவற்றை எண்ணை விடாமல் சூடுவர வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் காபிக்கு ஒரு ஸ்பூன் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் பால், சீனி சேர்த்து அருந்தவும். அஜீரணம், தலைவலி இவற்றிற்கு சுக்கு, மல்லி, டிகாஷனில், ஒரு ஸ்பூன் தேன் விட்டு, சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தவும். ஜலதோஷம், இருமல் இவற்றிற்கு சுக்கு மல்லி பொடி போட்டு கொதிக்கும் போது சில துளசி, ஓமவல்லி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, பால், பனங்கல்கண்டு சேர்த்து அருந்தவும்.

அஷ்டமி பிரதட்சிணம்!

மார்கழி மாதத்து சுக்லபட்ச அஷ்டமி தினமானது அன்னை மீனாட்சி தேவியும், அண்ணல் சுந்தரேசுவரரும் ஆட்சி புரியும் மதுரையம்பதியிலே மிக விசேஷமாகக் கொண்டாடப்படும் திருநாள். அன்று எந்த சிவன் கோயிலாயிருந்தாலும் அஷ்டமி பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதன் பலனாக நாம் செய்த பலகோடி பாவங்கள் நீங்கி, முக்தியும் கிடைக்குமென்று ஸ்ரீஸ்காந்த புராணம் உரைக்கிறது.

ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம் தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றாள்.

அச்சமயம் உயிகளுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடப்பது உறுதி என்றும் கூறினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் திருமங்கலம் என்னும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வேத, வேதாந்த நூல்களைக் கற்று கரை கண்டவன். மிக்க அறிவாளி. கடவுள் பக்தி மிக்கவன். பிராமண நியதிகளிலிருந்து வழுவாது வாழ்ந்தவன். எனினும் அவன் மிகக் கொடியவன். பல தீய வழிகளில் பணம் சேர்ப்பவன். அவனைக் கண்டு மக்கள் அஞ்சி ஒதுங்கினர்.

அதே ஊரில் மற்றொரு பிராமணன் இருந்தான். அவன் கத்தரித் தோட்டம் வைத்து, அதில் விளையும் கத்தரிக் காய்களை விற்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்த கத்தரிக்காய் பிராமணனை, பாவி பிராமணன் கண்டு அவனை வாயில் வந்த படியெல்லாம் பேசி, உதைத்து சுவாமி தரிசனம் செய்ய விடாது விரட்டி விட்டான். இதனால் மனம் நொந்த கத்தரிக்காய் பிராமணன் உடனே பாண்டிய ராஜனிடம் போய் முறையிட்டான். பாண்டிய மன்னன் உடன் அவனை அழைத்து கோபத்துடன் அவன் அப்படிச் செய்த காரணம் கேட்டான். உடன் பாபி, ‘அரசே, கத்தரிக்காய் மாமிசத்திற்கு ஒப்பானது. அதை உண்பது பாவம். ஆதலால், நான் அவனை ஆலயத்திற்கு வரவிடாது உதைத்து விரட்டினேன்’ என்றான். அதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசனோ இதற்கு எப்படித் தீர்வு கூறுவதென குழம்பி நின்றான். அச்சமயம் அகத்திய மாமுனிவர் அரசவைக்கு வந்தார்.

அவரை வணங்கி நின்ற பாண்டிய மன்னன், “ஹே! குருதேவா! கத்தரிக்காய் பற்றிய வரலாற்றைக் கூறியருளுக” என வேண்டினான். அகத்தியரும், ‘முன்னொரு காலத்தில் வார்த்தாகன் என்னும் பெயருடைய ஒருவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். அச்சமயம் வைகுண்டத்திலிருந்து கருடாரூடராக விஷ்ணு வந்தார். வார்த்தாகனோ விஷ்ணுவை கவனிக்காது சிவபூஜையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். விஷ்ணு கோபித்து வார்த்தாகனை கற்ப முடிவு வரையில் ஒரு செடியாக மாறும்படியும், அச்செடியில் உண்டாகும் காயும் சாப்பிட ஏற்றதாகாது என்றும் சாபமிட்டு மறைந்தார்.

வார்த்தாகனோ தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு பயந்து மேலும் சிவ பெருமானுக்கு விசேட பூஜை, அர்ச்சனை செய்தான். சிவபெருமான் தரிசனமளித்து, “உன் பூஜையால் மகிழ்ந்தோம். ஸ்ரீவிஷ்ணுவின் சாபத்திற்கு அஞ்ச வேண்டாம். உனது நாமசம்பந்தமான வார்த்தாகச் செடியில் விளையும் காயானது பிராமணர் சாப்பிட ஏற்றது, உனது கறியின்றி எனக்குச் செய்யும் பூஜை ஏற்புடையதாகாது. என் அன்பர்களுக்கு நீ விருப்பமுடையவனாவாய்.” என வரமளித்தார்.

எனவே வார்த்தாகக் காயெனப்படும் கத்தரிக்காய் சாப்பிடுவது தவறல்ல” என்றுரைத்து அகத்தியர் காசிக்குப் புறப்பட்டார். (வார்த்தாகன் விஷ்ணுவை அவமதித்த காரணத்தாலேயே அவருக்குகந்த ஏகாதசி, துவாதசி நாட்களில் கத்தரிக்காய் சாப்பிடுவது பாவம் எனக் கூறப்படுகிறது)

உடன் பாண்டிய ராஜன் பாவியாகிய பிராமணனைச் சிறையிலடைத்ததோடு, கத்தரிக்காய் பிராமணனுக்கு தன, தான்யங்கள் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தான். சிறையிலடைபட்ட பாவி அந்தணன் பசியால் வாடி சில நாளில் மரணமடைந்தான். மதுரையம்பதியில் மரணமடைந்ததால், அருகில் சிந்தாமணி எனும் கிராமத்தில் ஒரு இடையனுக்கு மகனாகப் பிறந்தான். முன்வினை காரணமாய் அவன் எப்பொழுதும் கொடிய செயல்களைச் செய்து கொண்டிருந்தான்.

அவன் முற்பிறவியில் சிறந்த சிவபக்தனாயிருந்த காரணம் பற்றி அவனுக்கு முக்தி கொடுக்க திருவுளம் கொண்டார் சுந்தரேசப் பெருமான். மீனாட்சி தேவியை நோக்கி, ‘ஹே தேவி! பாவியாகிய அவ்விடையன் பல நற்காரியங்கள் செய்தவனாகையால் அவனுக்கு முக்தி கொடுக்க வேண்டும். நீ பசுவடிவம் எடுத்து அவன் தோட்டத்தில் பயிரை மேய்வது போலச் சென்றால், அவன் உன்னை அடிக்க துரத்தி வருவான். நீ இவ்வாலயத்தின் எல்லா வீதிகளையும் சுற்றி, நமது சன்னிதியருகில் வந்து அவனை இடபத்தின் பின் தள்ளிவிட்டு, பசுவுரு நீக்கி என்னருகில் வருவாய்’ என்று திருவாய் மலர்ந்தார்.

அன்னையும் சிவபிரான் ஆக்ஞைப்படி எல்லாம் செய்து முடித்தார். கீழே விழுந்தவுடன் இடையன் ஸ்தூல சரீரத்தை விட்டு சூக்கும சரீரத்துடன் தேவலோகம் சென்றான். அங்கு அவனுக்கு பார்வதி உடனுறை பரமேசுவரனாகக் காட்சி அளித்த எம்பெருமான்,

“உன்னால் செய்யப்பட்ட பாவங்கள் எல்லாம் என் கருணாசித்தத்தால் முற்றும் நீங்கி நீ சுத்தனாகி விட்டாய். இனி நீ கயிலையில் வசிப்பாய். உனக்கு முக்தி கொடுத்த இந்த அஷ்டமி திருநாளில் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நித்ய நியமங்களை நிறைவேற்றி, மனதில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசரை தியானித்து, ஸ்ரீபஞ்சாட்சர ஜபத்தை வாயினால் ஓதிக் கொண்டு, அனைத்து வீதிகளையும், பிரகாரங்களையும் வலம் வந்து, ஆலயத்திலுள்ள அனைத்து மூர்த்திகளையும் தரிசித்து, சந்நதியில் நமஸ்கரித்து, வட்திசை நோக்கி ஸ்ரீருத்ரம் 11 முறையும், ஸ்ரீபஞ்சாட்சரம் 1008 உருவும், மேதா வித்யா சிற்சக்தி மந்திரங்களும் ஜபித்து தங்கள் வீடு சென்று, தங்கள் வசதிக்கேற்ப நெய், தேன், தயிர் இவற்றோடு சிவபக்தர்களாகிய அந்தணருக்கு போஜனம் செய்வித்து, அவர்களது ஆசிகளைப் பெற்றால் அவர்களுக்கு முக்தியும், கைலாய வாசமும் கிட்டுவது உறுதி” என்றார்.

எனவே, மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் எவ்வூரில் இருப்பினும் அங்குள்ள சிவாலயத்தில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரட்சிணம் செய்வதால் ஓர் அடிக்கு ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். வலம் வரும்போது எறும்புப் புற்றுகளுக்கு அரிசியிட வேண்டும். அவ்வாறு செய்தால் இலட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்த பலனை அடைவர். எவ்வளவு பாபம் செய்தவராயினும் அஷ்டமி பிரட்சிணத்தால் முக்தி அடைவர். மதுரையில் வாழ்வோர் கோயிலைச் சுற்றியுள்ள தைவீதி முதலாக ஏழு வீதிகளை வலம் வருதல் அவசியம். முடியாதவர் ஆடி வீதியையே ஏழுமுறை வலம் வர, ஏழு வீதியும் வலம் செய்த பயனை அடைவர். யராவது ஒரு சைவ சந்யாசிக்காவது அன்னதானம் செய்வது நல்லது.


மேற்கூறியவாறு எம்பெருமானாகிய சுந்தரேசர் தன் திருவாக்கினாலேயே அன்னை மீனாட்சி தேவியாருக்கு உரைத்ததாக ஸ்காந்த புராணம் உரைக்கிறது.  நம் ஊரிலுள்ள சிவபெருமான் ஆலயத்தில் அஷ்டமி பிரதட்சிணம் செய்து எம்பெருமான் மற்றும் உமாதேவியின் அருளைப் பெறுவோமாக!

செப்பரை நடராஜர் கோவில்!



திருவாதிரை அலங்காரம்


நடராஜர் என்றதும் நம் நினைவில் தோன்றும் தலம் தில்லை அம்பலம் எனும் சிதம்பரம். அந்த சிதம்பரத்தில் நாம் தரிசிப்பது அங்கு வடிக்கப்பட்ட முதல் சிலை அல்ல. எப்படி, ஏன்?

தில்லைக்காக முதலில் செய்யப்பட நடராஜ உருவம் அங்கு நிறுவப் படவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? இப்பொழுது நாம் தரிசிப்பது முதல் சிலை அல்ல. அந்த சிலை இருப்பது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பரை என்ற ஊரில்! அதற்கான இறைவனின் திருவிளையாடலைப் பார்ப்போம்.
 
செப்பரை

செப்பரை நடராஜர் கோவில்

 நடராஜர்

இந்த புண்ணிய பூமியில் அம்பலவாணரின் பஞ்ச சபைகள் அமைந்துள்ளன. தில்லை பொன் அம்பலம்,மதுரை வெள்ளி அம்பலம்,திருவாலங்காடு ரத்ன அம்பலம்,நெல்லை தாமிர அம்பலம்,குற்றாலம் சித்ர அம்பலம். ஆனால் உண்மையான தாமிரசபை நெல்லையில் உள்ளது அல்ல. நெல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராஜவல்லிபுரத்தில் அமைந்துள்ள செப்பரை அழகியகூத்தர் ஆலயம்தான் தாமிரசபை. அந்த சுவாரசியமான கதை என்ன?

சிங்கவர்மன் என்னும் மன்னன் சிதம்பரம் ஆலயத்தில் ஒரு நடராஜ சிலையைச் செய்யும்படி நமசிவாய ஸ்தபதியிடம் ஆணையிட்டார். அவரும் ஐம்பொன்னால் பொன்னார் மேனியனுக்கு ஒரு அழகு வடியும் அற்புதச் சிலையை உருவாக்கினார்.அதனைக் கண்ட அரசனுக்கு திருப்தி இல்லை. 'என் ஈசன் பொன்னம்பல வாணனுக்கு பசும்பொன் சிலை வடிப்பீராக' என ஆணையிட்டான். இரண்டாம் முறையாக வடித்த சிலையும்  பொன் வண்ணமாக இன்றி செப்பு நிறமாகவே இருந்தது. கோபம் கொண்ட மன்னன் சிற்பியை சிறையிலிட்டான். அன்று அவன் கனவில் தோன்றிய அம்மையப்பன் தான் மன்னன் கண்களுக்கு மட்டுமே பொன்னிறமாகத் தோன்றுவதாயும், மற்றவர்களுக்குத் தாமிரமாகத் தோன்றுவேன் என்றும் கூறினார். ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த அரசன் சிற்பியை விடுதலை செய்து அவர் இரண்டாவதாகச் செய்த சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தார். நம் ஆர்த்த பிறவி துயர்க்கெட கூத்தாடும் அய்யன் பொற்சபையாகிய தில்லையில்  கொண்டார். மன்னனும் இறைவனின் ஆணைப்படி முதல் சிலையை அச்சிற்பியிடமே அளித்து விட்டார். 

சிற்பியிடம் இருந்த நடராஜர் சிலை என்னாயிற்று? இறைவனே அதற்கும் வழி சொன்னார். சிற்பியை அச்சிலையுடன் தென் திசை செல்லும்படியும், சிலையின் எடை கூடுமிடமே தாம் எழுந்தருளப் போகும் இடம் என்றும் உரைத்தார். அவ்வண்ணம் சென்ற சிற்பி நெல்லை மாவட்டம் செப்பரை  என்ற ஊருக்கருகில் சென்றபோது சிலை கனமாக இருந்ததால் மிகவும் களைப்பாக உணர்ந்து சிலையை அங்கு வைத்துவிட்டு, அருகில் கண்ணயர்ந்து விட்டார்.

தாமிரபரணியின் வடகரையிலிருந்த ராஜவல்லிபுரம்  என்ற ஊரில் மன்னன் ராமவர்மபாண்டியனின் அரண்மனை இருந்தது. மன்னன் தினமும் நெல்லை சென்று  காந்திமதி சமேத நெல்லையப்பரை தரிசித்த பின்பே உணவு அருந்துவார். ஒருநாள் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து, நெல்லை செல்ல முடியாத அரசர் அன்று உணவு உண்ணாமலேயே உறங்கிவிட்டார். அச்சமயம் அவரது கனவில் தோன்றிய அம்பலவாணன் சிதம்பரத்திலிருந்து தன் சிலையுடன் ஒரு சிற்பி வருவாரென்றும், அவர் கொண்டுவரும் நடராஜ விக்கிரகத்தை அவன் அரண்மனை  அருகில் பிரதிஷ்டை செய்து,அதன் அருகில் எறும்புகள் ஊர்ந்து செல்லும் குழியின் மீது ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும்படியும், இனி நெல்லை  செல்லவேண்டாம், தன்னை இவ்விடத்திலேயே தரிசிக்கும்படியும் உரைத்தார்.

கண்ணயர்ந்த சிற்பி விழித்துப் பார்த்தபோது சிலையைக் காணாமல் பதறி மன்னனிடம் முறையிட, இறைவன் கூற்றுப்படி மன்னனும் சென்று சிலை யைத் தேடினர்.வேணுவனத்தில் சதங்கை ஒலியும், நடமாடும் சப்தமும் கேட்க அங்கு இருந்த நடராஜர் விக்கிரகத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தான் அரசன். இறைவன் அவ்விடமே தென்தில்லை, செப்பரை அம்பலம், தாமிர சபை என்று உரைத்து மறைந்தார்.மன்னன் அவ்விடத்தில் ஆலயம் அமைத்து அழகிய நடராசசபை அமைத்தான். இவ்வாறு தில்லையில் செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அங்கு நிறுவப்பட்டது. செப்பாலான விக்கிரகம் அமைந்த ஊர் செப்பரை எனப் பெயர் பெற்றது.

தாமிர சபை

1221ம் ஆண்டு பெரும் மழை...அதனால் ஏற்பட்ட  வெள்ளத்தில் ஆலயம் முற்றிலும் அழிந்து போயிற்று. ஆற்றில் தேடியதில் விக்கிரகங்கள் மீட்கப் பட்டு, இங்குள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழிபடப் பட்டன. தன் சிறப்பை உலகறிய விழைந்த பெருமான் அர்ச்சகரின் கனவில் தோன்றி நெல்லை ஆரைஅழகப்ப முதலியாரின் உதவியுடன் ஆலயம் அமைக்கும்படி அருள, அவ்வாறே ஆலயம் மீண்டும் உருவாயிற்று. செப்பரை ஆலயக் கற்கள் அரசவல்லிபுரத்துக்குக்  கொண்டு வரப்பட்டு ஆலயம் உருவாக்கப்பட்டு, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிதம்பரம் போன்றே இங்கும் செப்புத் தகடு வேயப்பட்ட நடராஜ சபை அமைந்துள்ளது. இதுவே உண்மையான தாமிரசபை.

அகத்தியர், திருமால், அத்திரி முனிவர் ஆகியோர் தவமிருந்து இறைவனை வழிபட்ட தலம் இது. கிருத யுகத்தில் ஆடல்வல்லான் தன் நடனக் காட்சியை அக்னி தேவனுக்கு இங்கு காட்டியதாக புராண  வரலாறு. ராமபண்டியனின் எல்லைக்குட்பட்ட சிற்றரசனான வீரபாண்டியன் இச்சிலையின் அழகில் மயங்கி இதனைப் போன்ற இரண்டு சிலைகளை கட்டாரி மங்கலத்திலும், கரிசூழ்ந்த மங்கலத்திலும் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தான். இது போன்ற அழகில் வேறு யாருக்கும் சிலை செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியைக் கொலை செய்யும்படி கூற, வீரர்கள் அவரது கைகளை வெட்டி விட்டனர். இது அறிந்த மன்னன் ராமபாண்டியர் வீரபாண்டியனின் கைகளை வெட்டி விட்டார். சிற்பிக்கு மரக் கைகளை பொறுத்த மீண்டும் மிக அழகான, அற்புதமான ஒரு சிலையைச் செய்தார் சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன் அதன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளியதால் ஏற்பட்ட வடுவுடன்  அந்த நடராஜர் கருவேலங்குளம் ஆலயத்தில் காட்சி தருகிறார். 




காந்திமதி அம்மன்


 நடராஜர்


 நெல்லையப்பர்


திருவாதிரை அலங்காரம்


ஆயிரம் ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தில்  நடராஜர் சன்னதியே பிரதானமானது. நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சன்னதிகள் உண்டு. மழலைப் பேறு, கல்வி வளர்ச்சி, திருமணத்தடை இவற்றிற்கான பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும். வேண்டவளர்ந்த நாதர் என்ற பெயரில் சுயம்புவாக விளங்கும் ஈசனே நெல்லையப்பராகப் போற்றப்படுகிறார். இந்த லிங்கத்தின் நடுவில் அம்பிகை உருவத்தை அபிஷேக சமயங்களில் காணலாம். இது இவ்வாலய அதிசயமாகக் கூறப்படுகிறது. இங்கு திருவாதிரைத் திருநாள் சிதம்பரம் போன்றே மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. அன்று நடக்கும் அபிஷேகங்களும், அலங்கார ஆராதனைகளும், நடராஜா புறப்பாடும் கண்ணுக்கு பெருவிருந்து. மற்றும் சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷம் முதலிய விழாக்களும் கொண்டாடப் படுகின்றன.

இவ்வூர் மக்களின் முயற்சியினால் இவ்வாலயத்திற்கென தேர் அமைக்கப்பட்டு, 2007ம் ஆண்டு தேரோட்டமும், மகா கும்பாபிஷேகமும் நடத்தப் பெற்றது. இத்துணை சிறப்புப் பெற்ற இவ்வாலய இறைவனை திருவாதிரையில் சென்று வணங்கி பலன் பெறுவோம்.


இவ்வாலயம் திருநேல்வேலியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. தாழையூத்து வழியாக அரசவல்லிபுரம் சென்று அங்கிருந்து செப்பரை செல்லலாம்.
ஆலய நேரம்...காலை 8 - 11....மாலை 4 - 9
தொலைபேசி....+91-4622339910