வெள்ளி, 8 ஜனவரி, 2016

அனுமன் ஜெயந்தி

 அனுமன் வாயு பகவானுக்கும், அஞ்சனை தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அது ஒரு மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திர தினமாகும். அவரது சக்தி அபாரமானது. நினைத்ததை நினைத்தபடி முடிப்பவர், பிறர் நினைத்துப்பார்க்க முடியாததையும் நடத்திக் காட்டும் ஆற்றல் கொண்டவர்.
ஆஞ்சநேய ஜெயந்தியன்று விரதம் இருந்து, ராமநாமம் பாடி அனுமனை வழிபட்டால் சஞ்சலங்கள் விலகும். சகல செல்வங்களும் பொங்கி பெருகும்.

விரதம் இருக்கும் முறை

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும்.

நினைத்த காரியம் கை கூடும்.

துன்பம் விலகும். இன்பம் பெருகும்.

அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஆஞ்சநேயரை ராமநாமத்தால் பூஜிப்பதோடு, வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி வழிபட வேண்டும்.

வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது.

அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்வதனால் அனுமன் மிக மகிழ்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக