புதன், 6 ஜனவரி, 2016

குரு கவசம்


1.வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே! உன்னை
தேனான சொல்லெடுத்து செவி குளிர போற்றுகின்றேன்
காணாத இன்பம் யாவும் காண நீவழி வகுப்பாய்
மீனமும் தனுசும் உந்தன் மேலான வீடதாகும்!
2.பொன்னிற முல்லையொடு புஷ்ப ராகத்தை ஏற்றாய்!
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய் மரத்தினில் அரசை ஏற்றாய்!
எண்ணத்தில் நிற்கும் தேவா! எளிதினில் வெற்றி தாராய்!
மண்ணினில் பதினாறு ஆண்டை மறவாமல் நீயும் ஏற்றாய்!
3. சுண்டல் நைவேத்யதால் தொல்லைகள் தீர்ப்பவன் நீ!
கொண்டதோர் யானை உந்தன் கொண்டாடும் வாகனம் தான்!
தந்திடும் பதவி வாய்ப்பும் தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளைப் பேறும் வழங்குதல் உன் பொறுப்பே!
4. பொருளோடு புகழைத் தந்து போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம் வரும் காலம்ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும் ! பேரருள் கூட்ட வேண்டும்!
அருள்மிகு குருவே உன்னை அடிப்பணிந்து வணங்குகின்றேன்!
5. வருடம் ஓர் ராசி வீதம் வட்டமாய் சுழன்று வந்தே
தருகிற பலனை நாங்கள் தங்கமாய் ஏற்றுகொள்வோம் !
வருகிற நாட்கள் எல்லாம் வசந்தமாய் மாறுதற்கே
அருள்தரும் உனது பார்வை அனுதினம் எமக்கு வேண்டும்!
6. குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்!
திருவருள் இணைந்தால் வாழ்வில் திருமணம் வந்து கூடும்!
பொருள் வகை பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்!
அருள் தர வேண்டி உன்னை அன்போடு துதிகின்றோமே!
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக