புதன், 6 ஜனவரி, 2016

குரு வார விரதம்:

வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும்.  வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள்.
குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, மஞ்சள் நிறம் ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை ஆரம்பித்து செய்யவேண்டும்.
தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள், அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில்மவுன விரதம்இருப்பது மிகவும்சிறந்ததாகும்.
குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின்ஆசிகள்ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம்.

வானவர்க் கரசே! வளம் தரும் குருவே! 
காணா இன்பம் காண வைப்பவனே! 
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்! 
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்! 


சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்! 
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்! 
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்! 
நிலையாய் தந்திட நேரினில் வருக!' 


நாளைய பொழுதை நற்பொழுதாக்கி  
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்! 
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்! 
வல்லவன் குருவே!  வணங்கினோம் அருள்வாய்! 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக