செல்வம் தரும் குளியல்
நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் தீர, தீபாவளி அன்று முதலில், சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எதனால் என்றால், தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம்.
இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் குளித்து விட வேண்டும் என்பதற்கு காரணம் என்னவென்றால், சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலஷ்மியும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரிதிரமும் நீங்கும்.
மங்களம் தரும் மஞ்சள்
புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.
துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு
பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் கேரள நாட்டில் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும். வெடி சத்தத்தை கேட்டு மிருகங்கள் பயந்து ஓடுவதுபோல, துஷ்ட சக்திகளும் ஒடி விடும்.
வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி.
தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.
ஸ்ரீஇராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்க்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள்.
ஸ்ரீஇராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னம் ஜொலிக்கும் தீப ஒளி். அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்..
அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.
அதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலஷ்மியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீமகாலஷ்மியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் – அருளும் கிடைக்கும்.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வரரை வேண்டி, பெண்கள் நோம்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோம்பின் பயனால்தான் கௌரிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள்.
தீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கையே ஜொலிக்கும். எப்போதும் வெற்றிதான்.
ஒருமுறை, தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து தோன்றியவர் ஸ்ரீமகாலஷ்மி. ஸ்ரீமகாலஷ்மியை பார்த்த சந்தோஷத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு, லஷ்மிதேவிக்கு மாலையிட வந்தார்.
சிறிது நேரம் ஸ்ரீமகாவிஷ்ணுவுடன் விளையாடலாம் என்ற எண்ணத்தில், லஷ்மிதேவி ஓடிபிடித்து விளையாடினார். அப்போது அங்கிருந்த எள் செடியின் மீது லஷ்மிதேவியின் பாதம்பட்டு, எள்ளில் இருந்து எண்ணெய் வெளியேறியது. இதை கண்ட ஸ்ரீவிஷ்ணுபகவான், “இந்த நாளில் நீ நல்லெண்ணெயில் வாசம் செய்வாயாக” என்று உத்தரவிட்டார்.
தீபாவளி திருநாள் அன்று, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற தண்ணீர், கங்கையாக மாறும் என்பது ஐதீகம்.
அதனால் தீபாவளி திருநாளாள் அன்று நல்லெண்ணைய் தேய்த்து குளிக்கும்போது, அந்த தண்ணீரை கங்கை நீராக பாவித்து வணங்கி ஸ்நானம் செய்தால், தரித்திரங்கள் விலகும்.
தீபாவளி திருநாள் அன்று ஸ்ரீமகாலஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்க வேண்டும். சுத்தமும் – சுகாதாரமும் இருக்கின்ற இடத்தில்தான் ஸ்ரீலஷ்மிதேவி வாசம் செய்வாள். அதனால் தீபாவளி திருநாள் அன்று, காலையில் வீட்டு வாசல் பெருக்கி, பசும் சாணம் அல்லது பன்னீரில் மஞ்சள் கலந்த தண்ணீரை வாசலில் தெளித்து, தாமரை பூகோலம் போட வேண்டும்.
வாசற்காலுக்கு மஞ்சள் – குங்குமம் வைக்க வேண்டும். வாசலுக்கு மாயிலை தோரணம் கட்டி, மல்லிகை பூவைத்து அலங்கரிக்க வேண்டும். இதனால் அந்த இல்லத்தினுள் ஸ்ரீலஷ்மிதேவி நுழைவாள் என்கிறது சாஸ்திரம்.
அத்துடன் இந்த தீபாவளி திருநாள் அன்று பித்ருக்கள் (முன்னோர்கள்) நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.
பித்ருக்களின் புகைப்படம் இருந்தால் அவர்களின் புகைப்படத்திற்கு துளசியும், வாசனை மலர்களையும் வைக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைக்க வேண்டும். தீப திருநாள் அன்று, பித்ருகளுக்கும் முக்கியதுவம் இருப்பதால் இதற்கு, “நரக சதுர்த்தி” என்று பெயர்.
மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி சொன்ன ரகசியம்
ஒருமுறை, மகாபலி சக்கரவர்த்தி ஸ்ரீமகாலஷ்மியிடம், “தாயே, உன் பக்தர்களின் இல்லத்தில் நீ நிரந்தரமாக இருக்க என்ன செய்ய வேண்டும். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீலஷ்மி தேவி, மகாபலி சக்கரவர்த்திக்கு ரகசியமாக சில பூஜை முறைகளை பற்றிச் சொன்னார்.
ஐப்பசி மாதம் – கிருஷ்ணபட்சத்தில், திரயோதசி முதல் அமாவாசைவரை, தீபம் ஏற்றி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் இல்லத்தில் ஆண்டு முழுவதும் இருப்பேன்.” என்றார் ஸ்ரீமகாலஷ்மி.
மகாபலி சக்கரவர்த்தியின் தயவில் நாம் இந்த ரகசியத்தை தெரிந்துக் கொண்டாம். இதனை நம்பிக்கையுடன் கடைபிடித்து ஸ்ரீலஷ்மிதேவியின் அருளை பெறுவோம்.
தீபாவளி திருநாள் அன்று, மாலையில் பெருமாள் படத்திற்கு துளசி, மல்லிப்பூ வைத்து, ஸ்ரீலஷ்மிதேவிக்கும் தாமரை பூ, மல்லிகைப் பூ வைத்து, அத்துடன் நெல்லிக்கனியையும் வைத்து வணங்குவது மிக சிறப்பு.
நெல்லிக்கனி, ஸ்ரீமகாலஷ்மியின் அம்சம் என்கிறது விருக்ஷ் சாஸ்திரம்.
மாலையில் தீபம் ஏற்றிய பிறகு, ஸ்ரீகனகதார ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களை கேசட்டில் ஒலிக்கச் செய்யலாம்.
வடக்கு வாசம் – குபேர வாசம் என்பார்கள். அதனால் வடக்கை நோக்கி குபேர பகவானை வணங்குங்கள்.
தீபாவளி திருநாள் அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தன் பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தன் சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.
தீபதிருநாள் அன்று கேதார கௌரி விரதத்தை கடைபிடிப்பார்கள்.
கேதாரேஸ்வரரை வேண்டி கௌரிதேவி நோம்பிருந்து, ஈசனின் இடப்பாகத்தை பெற்றார் என்கிறது புராணம்.
இதனால் கேதார கௌரி நோம்பை கடைபிடித்தால், கணவருடன் ஒற்றுமையான வாழ்க்கை அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
இப்படி, முன்னோர்களின் ஆசியும், ஸ்ரீலக்ஷ்மி தேவியின் ஆசியும், இன்னும் பல தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும் மகிமை வாய்ந்த அற்புத திருநாள்தான் தீபாவளி திருநாள்.
தீப திருநாளாம் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக