திங்கள், 22 ஜூன், 2015

பொன்னான வன்னி இலைகள்!

maxresdefault

விஜயதசமி நாளில் அம்பிகை மஹிஷாசுரனை சம்ஹரித்த பிறாகு வன்னி [ சமஸ்கிருதத்தில் ஸ்மீ ] இலைகளைப் பிரசாதமாக வழங்குவார்கள்  அதற்குப்பிறகு வன்னி பங்காரவாகோண [ வாருங்கள் பொனாக ஆவோம் என்பது இந்தக் கன்னட சொலவடையின் பொருள் ] என்று சொல்லும் வழக்கம் கர்னாடகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கிறது. இதன் பின்னால் ஒரு கதை உண்டு.

ஸ்மீவ்ருதன் என்ற ஏழைப் பையன் இருந்தான். தாய் தந்தையற்ற அனாதை மிகவும் நல்லவன். கடின உழைப்பாளி. படிக்கவேண்டுமென்ற பேரார்வத்தினால் ஊரில் இருந்த சிசு என்ற குரு குலத்தில் மஹான் என்ற குருவிடம் சிஷ்யனானான்.

vannimaram

அதே குருகுலத்தில் அந்நாட்டு இளவரசன் வ்ருக்ஷிதனென்பவனும் வேதாத்யனம் செய்து கொண்டிருந்தான். பாடம் கற்கும்போது பசி தாகத்தைப் பொருட்படுத்தாமல் கற்பதிலேயே கண்ணாக இருக்கவேண்டும் என்று குரு சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட ஸ்மீவ்ருதன் எழுத்துப்பிசகாமல் அனுசரித்து வந்தான். ஆனால் வ்ருக்ஷிதனின் கருத்து. “ உணவில்லாவிட்டால் பாடம் படிக்க ஊக்கமே இருக்காது. மாணவன் நடைபிணம் போலாகிடுவான் ‘ என்பது.

காலக்கிரமத்தில் படிப்பு முடிந்தது. அப்பொழுது குருவானவர் “ நான் உங்களிடம் வந்தபோது எனக்குக் குருதட்சணை கொடுங்கள் “ என்று கூறினார். அவ்வாறே ஒரு நாள் வ்ருக்ஷிதனின் அரண்மனைக்குப் போனார். அவன் இப்போது அரசனாகியிருந்தான். இதுவரை யாருமே கொடுத்திருக்காத அளவு குருதட்சணை கொடுத்து நான் எவ்வளவு உயர்ந்த சிஷ்யன் என்று நிரூபிப்பேன் என்று எண்ணி வைரம் பொன் ஆபரணங்களை யானையின் மேல் வைத்து குருவுக்கு அனுப்பினான்.

மேலும் ஏழையான ஸ்மீவ்ருதன் அற்ப காணிக்கை கொடுக்கும் போது குரு எப்படி தெரிந்து கொள்கிறார். என்பதையும் பார்க்க விரும்பி அவரை ரகசியமாகப் பின் தொடர்ந்தான்.

ஸமீவ்ருதன் குருவை வரவேற்று உபசரித்து பால் பழங்களை அன்புடன் வழங்கினான். தன்னிடம் ஒன்றுமில்லை என்றாலும் இருப்பதில் எதைக் கேட்டாலும் கொடுப்பதாகச் சொன்னான். குரு அவன் குடிலின் பின்னால் வளர்ந்திருந்த ஒரு பசுமரத்தை கொடுக்கும்படி கேட்டார்.

sam_5501

மரத்தைக் கொடுக்க சம்மதித்து குருவை அழைத்தான் ஸமீவ்ருதன். குருவின் கை பட்டதும் மரத்தின் இலைகளெல்லாம் பொன் இலைகளாகி விட்டன். மரத்திலிருந்து இலைகள் கீழே மேடாகக் குவிந்தன. ஆனால் மரத்தில் ஒரு இலை கூடக் குறையவில்லை.

நான் கொடுக்கிறேன் என்ற அகந்தையில்லாமல் அன்புடன் கொடுக்கும் ஒரே ஒரு இலையானாலும் அது தங்கத்துக்கு சமம் என்று குரு புகழ்ந்தார். மறைவில் நின்றிருந்த வ்ருக்ஷிதனைக் கூப்பிட்டு தங்கம் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் உண்மையான அன்பும் நட்பும் பணத்தைக் கொண்டு வாங்கமுடியாதவை. என்று அறிவுறுத்தி அவனை நண்பனிடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்தார். இருவரும் மரத்தின் மகிமையால் ஒன்று சேர்ந்ததால் அதற்கு ஸமீவ்ருக்ஷம் என்று பெயரிட்டார்.

kodumudi8

அன்றிலிருந்து வன்னி அல்லது ஸமீவ்ருக்ஷத்தின் இலை நட்புக்கு அடையாளமாயிற்று. ஸமபத்ரத்தைப் [ வன்னி இலையை ] பகிர்ந்துகொண்டு நட்பைக் கொண்டாடும் வழக்கம் வந்தது என்பர்.

ஆந்திரா தெலுங்காவிலும் விஜயதசமியன்று இந்த வன்னி இலையை ஒருவருக்கொருவர் பங்காரம் பங்காரம் என்று சொல்லி கொடுத்து மகிழ்வர்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக