திங்கள், 22 ஜூன், 2015

விக்னேஸ்வர சோடச நாமாவளி


ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே.


விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன அவை விக்னேஸ்வர சோடச நாமம்" என்று பெயர் பெற்றவை.

அவருக்குச் சிறப்பாக பதினாறு நாமங்கள் கொண்ட சோடச நாமாவளியும் இருக்கிறதுஇந்தச் சிறப்பான நாமாவளி விநாயகரின் விக்னநாசன கணபதி அம்சத்துக்கு உரியது

சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி.

அதுபோலவே விக்னங்களை நீக்குவதற்கு விக்னநாசனன் அல்லது விக்னஹரன்.

விக்னநாசன கணபதியின் சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம்.

பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்.

சுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:


இதனையே நாமாவளியாக:
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

இவை அனைத்திற்கும் சுருக்கமான விளக்கவுரையும் இருக்கிறது.

சுமுகாய நம: = மங்கலகரமான முறுவலுடன் கூடிய இனிய முகத்தோன்.

ஏகதந்தாய நம: = ஒற்றைத் தந்தமுடையவன்.

கபிலாய நம: = கபில நிறமுடையவன்.

கஜகர்ணகாய நம = யானைக்காது உடையவன்.

லம்போதராய நம = தொப்பையான வயிற்றையுடையவன்.

விகடாய நம = வேடிக்கையானவன்.

விக்நராஜாய நம = விக்னங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன்.

விநாயகாய நம = தனக்கு மேலாக  தலைவன் யாரும் இல்லாதவன்.

தூமகேதவே நம = புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்.

கணாத்யக்ஷ¡ நம = கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன் .

பாலச்சந்த்ராய நம = நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்.

கஜானனாய நம = யானை முகத்தோன்.

வக்ரதுண்டாய நம = வளைந்த துதிக்கையை உடையவன்.

சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்.

ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.

ஸ்கந்தபூர்வஜாய நம = முருகனுக்கு முன்பு தோன்றியவன்.
இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக