திங்கள், 22 ஜூன், 2015

குதிரை மீது காட்சி தரும் மகாலக்ஷ்மி!

download
இந்தியாவின் மிகச் சிறிய மானிலமான கோவாவில் வரலாற்றுப்பிண்ணனியும் பழமைச் சிறப்பும் கொண்ட பல புராதன ஆலயங்கள் உள்ளன. அதில் மகாலட்சுமி ஆலயமும் ஒன்று  கோவாவின் தலை நகரான பானாஜியின் அதி தேவதையாக மகாலட்சுமி போற்றப்படுகிறாள். பதினாறாவது நூற்றாண்டின் போர்ச்சுகீசியர் படையெடுப்பிற்குப் பின்னர் கட்டப்பட்ட முக்கியமான இந்துக்கோவிலாக இது திகழ்கிறது. 
 
ஆரம்பத்தில் போர்ச்சுகீசிய அரசு இந்த ஆலயத்தைக்கட்ட விடாமல் இறுதியாக 1818 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் திருப்பணிகள் செய்யப்பட்டு தற்போது வனப்பு மிக்க ஆலயமாகத் திகழ்ந்து வருகிறது.
 
download (2)

இந்த ஆலயத்தின் பிண்ணனியில் கூறப்படும் வரலாற்று நிகழ்ச்சிகள் சுவாரசியமானவை. மகாலட்சுமியை வழிபட்டு வந்த ஹவ்யகா என்ற பிரிவினர் தங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தேவியின் சிலையை எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். 16 வது நூற்றாண்டில் கோவாவிற்கு வந்த அவர்கள் தளிதாவோ என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோது போர்ச்சுகீசியர்களீன் அடக்குமுறைக்குப் பயந்து சிலையை ஒரு குதிரைலாயத்தில் மறைத்து வைத்தனர்.  அப்போது ராகவேந்திரகாமத் என்ற இந்தியர் போர்ச்சுகீசிய அரசில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
 
download (1)
 
மிகுந்த பக்திமானான அவர் குதிரை லாயத்தில் மகாலட்சுமி சிலை இருப்பதை அறிந்து வருந்தி மாயம் என்ற கிராமத்திற்கு அதைக் கொண்டுவந்து பத்திரப்படுத்தினார். 1817 ம் ஆண்டு நாராயண காமத் என்பவர் அந்த சிலையை எடுத்துச் சென்று பஞ்சிம் என்ற நகரத்தில் ஒரு மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். பின்னர் தற்போதுள்ள இடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டு 1818 ம் ஆண்டு ஜூலை மாதம் குடமுழுக்கு செய்யப்பட்டது.
 
images

காலங்காலமாக வழிபடப்பட்டு வந்த மகாலட்சுமியின் பளிங்குச் சிலை தற்போது ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு கருவறையின் பின்புறத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கருவறையில் புதிதாக ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறைக்கு வெளியே சபாமண்டபம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த விசாலமான சபா மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனதில் கலக்கங்கள் நீங்கி மனம் ஒருமைப்படும். 
 
ஆலயத்திற்கு முன்பாக கொங்கணிக் கோவில்களில் காணப்படும் தீபஸ்தம்பம் உள்ளது. கோவாவில் காணப்படும் கொங்கணி ஆலயங்களில் கட்டட  அமைப்பை இந்த ஆலயமும் பிரதிபலிக்கிறது. 1929 ம ஆண்டு இந்த ஆலயத்தின் வலப்புறம் அனுமன் சன்னதி கட்டப்பட்டது. இதன் அருகில் வரத வினாயகர் பளிங்கு நந்தி பளிங்கு மகாதேவர் சன்னதிகள் உள்ளன,  இங்குள்ள மகாதேவர் ராவல் நாதர்  ராதாகிருஷ்ணர்  ராம புருஷர்  மற்றும் கிராம புருஷர் ஆகியோர் மகாலட்சுமி தேவதையின் பரிவாரங்களாகவும் காவல் தெய்வமாகவும் கருதப்படுகின்றனர்.

கருவறையில் மகாலட்சுமி நான்கு கரங்களோடு பட்டு வஸ்திரம் தரித்து அலங்கார ஆபரணங்கள்  மலர் மாலைகள் அணிந்து வெள்ளி விதானத்தின் கீழ் குதிரையின் மீது காட்சி தருகிறாள். இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்தி ஆண்டிற்கு மூன்று தடவை வீதியுலா வருகிறாள்.
 
கோவா மகாலட்சுமியின் பேரருளால்தான் இப்பகுதியில் பல்ர் செல்வசெழிப்புடன் சுகமான வாழ்வு வாழ்வதாக சொல்லப்படுகிறது.

download (3)
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக