வெள்ளி, 15 ஜூலை, 2016

பண்டிகை சமையல்!


நெய் அப்பம்
தேவையானவை: பச்சரிசி, பொடித்த வெல்லம்  – தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வாழைப்பழம் – ஒன்று (மசித்துக்கொள்ளவும்), கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய், தேங்காய் எண்ணெய் – தலா அரை கப்.
செய்முறை: பச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, விழுதாக அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்கவும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன் றாக சேர்க்கவும். இந்தக் கலவையை பணியார சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்).

மசாலா பொரி
தேவையானவை: அரிசிப் பொரி – 2 கப், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கருவடகம் – 2 டீஸ்பூன், பூண்டு – 4 பல்  (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகு – 4, தனியா, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் – 2 (கிள்ளவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் , தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,  உப்பு – சிறிதளவு.
செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் கருவடகம் சேர்த்து, சிவந்ததும் பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து, ஒரு முறை கிளறி, அரிசிப் பொரி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து  நன்றாகக் கலக்கி இறக்கவும்
கருவடகம் செய்முறை: உளுத்தம்பருப்பு ஒரு பங்கு, பாசிப்பருப்பு அரை பங்கு எடுத்து ஊறவைத்து வடித்து, 3 பங்கு சாம்பார் வெங்காய விழுது, உப்பு சேர்த்து அரைத்து, மாவைக் கிள்ளி எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு, வெயிலில் வைத்து காயவைத்து எடுக்கவும்.

டிரெயின் இட்லி
தேவையானவை: இட்லி – 5, இட்லி மிளகாய்ப்பொடி – 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: இட்லி செய்த உடன் நன்றாக ஆறவிடவும். இட்லி மிளகாய்ப்பொடியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு கலக்கவும். இதில் இட்லியைப் போட்டு புரட்டி எடுக்கவும் (இட்லி மிளகாய்ப்பொடி இட்லி முழு வதும் படும்படி புரட்ட வேண்டும்). மிளகாய்ப்பொடியில் ஊறிய இட்லி, சுவையில் அள்ளும். சாப்பிடும் இடமே மணக்கும்.
இட்லி மிளகாய்ப்பொடி செய்முறை: கடலைப்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), கட்டிப் பெருங்காயம் – சிறிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய், கல்  உப்பு – தேவைக்கேற்ப, புளி – சிறிதளவு, வெள்ளை எள் (விருப்பப்பட்டால்) – 2 டீஸ்பூன். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கொடுக்கப்பட்டுள்ள வற்றை ஒவ்வொன்றாக சிவக்க வறுத்து ஆறவிடவும். பிறகு, கொரகொரப்பாக பொடிக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கலாம்.

இஞ்சி – எலுமிச்சை சிரப்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சிச் சாறு – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப்.
செய்முறை: சர்க்கரையுடன், அது முழுகும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். ஆறியதும் அதில் எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். எலுமிச்சை பழ சர்பத் தேவைப்படும்போது ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் ஒன்று (அ) 2 ஸ்பூன் சிரப்பை விட்டுக் கலந்து பருகவும்.

உப்பு நெல்லிக்காய்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, கல் உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 2 கப்.
செய்முறை: நெல்லிக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் எடுத்து, கல் உப்பு சேர்த்து, நன்றாக கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். அதில் முழு நெல்லிக்காயை போடவும். இதை பயணத்தின் போது காற்றுப்புகாத கன்டெய்னரில் எடுத்துச் செல்லவும்.  தயாரித்து, 5,6 நாட்களுக்குப் பிறகு  உபயோகித்தால்தான் நெல்லிக்காயில் உப்பு ஏறியிருக்கும். தேவைப்படும்போது உப்பு தண்ணீரிலிருந்து நெல்லிக்காயை எடுத்து  சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ள லாம்.
விட்டமின்-சி  நிறைந்த சத்தான ரெசிப்பி இது.

இஞ்சி, எலுமிச்சை மிக்ஸ்
தேவையானவை: இளசான இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன் (தோல் சீவி பொடியாக நறுக்கியது), சீரகம் – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு கிண்ணத் தில் இஞ்சி, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும். இதனை 4 – 5 நாட்கள் வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து, சேமித்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: பயணத்தின்போது ஏற்படும் வயிற்றுப் பொருமல், அஜீரணம் ஆகியவற்றுக்கு இதனை சிறிது எடுத்து சாப்பிட லாம். நல்ல நிவாரணம் கிடைக் கும்.

அவல் ஃப்ரை
தேவையானவை: மெல்லிய அவல் – ஒரு கப், பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2 (கிள்ளவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து… பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் அவலையும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அவல் மொறுமொறு என வரும் வரை வறுத்து எடுக்கவும். (தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணெய் சேர்க்கலாம்). ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்து பயன்படுத்தவும்.

தக்காளி தொக்கு
தேவையானவை: பழுத்த  தக்காளி – 10, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்  மஞ்சள்தூள், கடுகு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: நீரை சூடாக்கி, தக்காளியைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் தோலை எடுத்துவிட்டு, விழுதாக அரைக்கவும். அடி கனமான கடாயில்  எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த தக்காளி விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில்வைத்து, மூடி போட்டு, அவ்வப்போது திறந்து, அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். தக்காளி கலவை நன்றாக சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும் (விருப்பப்பட்டால் கடைசியில் மிகவும் சிறிதளவு சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்துக்  கிளறி இறக்கலாம்).
குறிப்பு: இதை சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளலாம். உப்பு குறைந்தால், தொக்கு சீக்கிரம் கெட்டுவிடும். தேவையான அளவு உப்பு போடவும்.

உளுந்து தட்டை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி – இரண்டரை கப், பச்சரிசி – ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), உளுந்துப்பொடி (சலித்தது) – அரை கப், வெள்ளை எள் – அரை டீஸ்பூன், ஊறவைத்த கடலைப்பருப்பு  – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, காய்ந்த மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். உளுந்துப் பொடியை, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கலந்து… எள், ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் (அ) வாழை இலையில் மெல்லிய தட்டைகளாக தட்டி, உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடத்துக்குப் பிறகு தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சத்துமாவு உருண்டை
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், கேழ்வரகு மாவு –  அரை கப், பாதாம் – 4, முந்திரி – 10, பொட்டுக்கடலை – அரை கப், நெய், பொடித்த சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். கேழ்வரகு மாவையும் வெறும் கடாயில் வறுக்கவும். பொட்டுக் கடலையை கடாயில் சிறிது சூடாகும் வரை வறுத்து, மிக்ஸியில் பொடித்து சலிக்கவும். பாதாம், முந்திரியை உடைத்து நெய்யில் வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யை சூடாக்கி இதில் நன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டவும்.
பயணத்தின்போது களைப்பை நீக்கி, சக்தி கொடுக்கும் சத்தான ரெசிப்பி இது. பொடித்த சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரையும் பயன் படுத்தலாம்.

ராகி தட்டை
தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், பொடியாக  நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
விழுதாக அரைக்க: சாம்பார் வெங்காயம் – 10 (உரித்தது), காய்ந்த மிளகாய் – 4, தனியா – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். ஆறியதும் இதை கேழ்வரகு மாவில் சேர்த்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் லேசான தட்டைகளாக தட்டி (கையில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்), உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடத்துக்குப் பிறகு தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

மொறுமொறு மிக்ஸர்
தேவையானவை: கடலை மாவு – 3 கப், அரிசி மாவு – ஒரு கப், ஓமம் – 2 டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை – ஒரு கப், கெட்டி அவல் கால் கப், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஒரு கப் கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். மாவை பூந்தி கரண்டியில் விட்டு சூடான எண்ணெயில் முத்து முத்தாக விழும்படி தேய்த்து, பொன்னிறமாக எடுக்கவும். மீதமுள்ள 2 கப் கடலை மாவுடன் மீதமுள்ள அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஓமத்தை அரைத்து வடித்த தண்ணீர் சேர்த்துப் பிசையவும். இந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.
அவல், வேர்க்கடலை, கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை பொரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை வறுத்து, உப்பு சேர்த்து பொடியாக்கிக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து… பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்து, ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

லெமன் ரைஸ்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), உடைத்த முந்திரி – 2 டீஸ்பூன் (வறுக்கவும்), தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு,  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: சாதத்தை ஆறவைத்து, சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கரண்டியால் கிளறிவிடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கலக்கி வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயத்தூள் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து  சிவக்க வறுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு – உப்பு – மஞ்சள்தூள் கலவையை சேர்த்துக் கிளறி, ஆறிய சாதம், வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து, அடுப்பை நிறுத்தவும்.
குறிப்பு: உபயோகிக்கும்போது கைபடாமல் கரண்டி, ஸ்பூன் பயன்படுத்தி உபயோகிக்கவும். இந்த லெமன் சாதம் உடலைக் குளுமைப்படுத்தும்; உடலுக்கு சக்தி கொடுக்கும்.

பட்டர் முறுக்கு
தேவையானவை: இட்லி புழுங்கலரிசி – 4 கப், பொட்டுக்கடலை மாவு (சலித்தது) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: இட்லி புழுங்கல் அரிசியைக் கழுவி, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் (அரைக்கும் போது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்). அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், எள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு சூடாக்கவும். முள் முறுக்கு அச்சில் மாவை போட்டு, முறுக்குகளாக எண்ணெயில் பிழிந்து, பொன்நிறமாக சிவந்ததும் எடுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

கம்பு லட்டு
தேவையானவை: கம்பு மாவு, பொடித்த சர்க்கரை – தலா ஒரு கப்,  முந்திரி – 10 (உடைத்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கம்பு மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து, ஆறவைக்கவும். உடைத்த முந்திரியை நெய்யில் சிவக்க வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய்யை சூடாக்கி அதில் விட்டுக் கலந்து, உருண்டைகளாக உருட்டவும். கம்பு, உடலுக்கு குளுமை தரும்.

காக்ரா
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், ஓமம் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை, தண்ணீர் – தேவையான அளவு, நெய் – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு, ஓமம், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி, தண்ணீர் விட்டுப் பிசையவும். 20 நிமிடம் ஊறவிடவும். மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி. சூடான தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு, வெந்ததும், திருப்பி போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடி கனமான பாத்திரத்தால் சப்பாத்தியை அழுத்தியபடி, கரகரப்பாக ஆகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இது பிஸ்கட் போல இருக்கும்.
இதற்கு, ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம். காக்ரா செய்யும் மாவில் விருப்பத்துக்கு ஏற்றவாறு சீரகப் பொடி, ஆம்சூர் பவுடர், கஸூரி மேத்தி போன்றவற்றையும் கலந்து பிசையலாம்.

புல்கா
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு – 2 சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவில் முதலில் உப்பு சேர்த்துப் பிசிறி, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிசைந்த மாவின் மீது சில துளி எண்ணெய் தடவி நன்கு அடித்துப் பிசையவும். 3 மணிநேரம் ஊறவிடவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மேலே சிறிதளவு மாவு தூவி  சப்பாத்தியாக இடவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போடவும். அதன் மேல் சிறு கொப்புளங்கள் வரும்போது சட்டென்று திருப்பி போட்டு சில நொடிகள் வேகவிடவும். இதை ஒரு இடுக்கியில் எடுத்து நேரடியாக எரியும் தணலில் காட்டி, `புஸ்’ என்று உப்பி வந்ததும் எடுத்து, உலர்ந்த, மெல்லிய துணியில் போட்டு, தேவைப்பட்டால் நெய் தடவி மூடி, சேமித்து வைக்கவும்.

கோதுமை பரோட்டா
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசிறவும். இதனுடன்  தேவையான தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் அழுத்தி பிசையவும். பிறகு, மாவை மூடி வைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சப்பாத்திபோல் திரட்டி, அதன்மேல் அரிசி மாவு – நெய் கலவையை பரவலாக தடவி புடவை மடிப்புபோல முன் பின்னாக மடித்து அதனை வட்ட வடிவில் சுருட்டிக் கொள்ளவும். பிறகு,  இதனை பரோட்டாவாக இடவும். பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய் விட்டு, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
நெய்க்குப் பதில் எண்ணெயும் உபயோகிக்கலாம்.

காரக் குழம்பு ரைஸ்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் – ஒரு கப், ஏதாவது ஒரு வற்றல் (வெண்டை, பாகற்காய் அல்லது மணத்தக்காளி) – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுகிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் – தேவை யான அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண் ணெய், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வற்றலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, பூண்டையும் வறுத்து எடுத்து வைக்கவும்.  கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து… புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பூண்டு,  சாம்பார் பொடி சேர்த்து…. வறுத்த வற்றலையும் போட்டு, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும் (விருப்பப்பட்டால், சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கலாம்). குழம்பு ஆறியதும் உதிரான சாதத்தில் கலந்துகொள்ளவும்.

ஸ்வீட் அண்ட் சோர் ஆப்பிள் ஜாம்
தேவையானவை: பழுத்த ஆப்பிள் (பெரியது) – ஒன்று, சர்க்கரை – கால் கிலோ, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி, நடு பாகத்தில் இருக்கும் விதையை நீக்கி சிறு துண்டுகளாக்கி, அளவாக தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, 2 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வெந்த ஆப்பிளை நன்கு மசித்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து சுருள வரும்போது இறக்கி, அத்துடன் எலுமிச்சைச் சாறு கலந்து, ஆறிய பிறகு காற்றுப்புகாத கன்டெய்னரில் சேமித்து வைக்கவும்.
பயணத்தின்போது சப்பாத்தி, பிரெட், இட்லிக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

பாசிப்பருப்பு உருண்டை
தேவையானவை: பாசிப் பருப்பு – ஒரு கப், சர்க்கரை – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்து…மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். சர்க்கரையையும் நைஸாக பொடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் விட்டுக் கிளறி, உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பகாளாபாத்
தேவையானவை: அரிசி – ஒரு கப், தயிர் – கால் டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, எண்ணெய் – சிறிதளவு, பால் – ஒன்றரை கப், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியைக் களைந்து, தேவையான தண்ணீர் விட்டு குழைவாக சாதம் செய்து, அதனை சூட்டுடன் கரண்டியால் மசிக்கவும். பிறகு, உப்பு சேர்த்து, கால் டீஸ்பூன் தயிர் விட்டு, பால் சேர்த்து கரண்டியால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி சாதத்தில் சேர்த்து, பயணத்தின்போது சாப்பிட எடுத்துச் செல்லலாம்.
விருப்பப்பட்டால் முந்திரி, உலர் திராட்சை சேர்க்கலாம்.

டூ இன் ஒன் வேர்க்கடலைப் பொடி
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை (தோலுரித்தது) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), கட்டிப் பெருங்காயம் அல்லது பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தை வறுக்கவும். உப்பையும் வறுக்கவும். வேர்க்கடலையை கடாயில் சூடு செய்யவும். ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
இதை பயணத்தின்போது எடுத்துச் சென்றால் இட்லி, தோசைக்குத் தொட்டு கொள்ளலாம். இந்தப் பொடியில் நீர் விட்டுக் கலக்கி சட்னியாகவும் பயன்படுத்தலாம்.

மிஸ்ரி ரொட்டி
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு, 2 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு, நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
சப்பாத்தியில் ஒரு பக்கம் நெய் தடவி பயணத்துக்கு எடுத்துச் செல்லலாம். சாப்பிடும்போது உள்ளே ஜாம் அல்லது ஊறுகாய் தடவி ரோல் செய்து சாப்பிடலாம்.

கார சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மாங்காய் தொக்கு – சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவில் மாங்காய் தொக்கு சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, 15 நிமிடம் ஊறவிடவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சிறிதளவு  மாவு தூவி, லேசான சப்பாத்தியாக திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
இதை ஜாம் உடன் பரிமாறலாம். தயிரில் சர்க்கரை கலந்து இந்த சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். தயிரில் சிறிது ஜாம் சேர்த்து, மிளகாய்ப்பொடி தூவியும் தொட்டு சாப்பிடலாம்.

புளி சாதம்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப், கெட்டியான புளிக்கரைசல் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – கால் கப், கடுகு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி (பொடிக்கவும்), வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 ( இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்).
செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு நன்கு வறுத்து, கடுகு சேர்த்து, பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து, சிவந்ததும் கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்துக் கிளறி, கெட்டியான புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்றாக கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது, விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும் (பொடி போட்டு ரொம்ப நேரம் கொதிக்க வேண்டாம்). உதிரான சாதத்தில் முதலில் புளிக்காய்ச்சலில் உள்ள நல்லெண்ணெயை சிறிது விட்டு கலந்து… பிறகு, புளிக்காய்ச்சல் விட்டு நன்றாகக் கலக்கவும். புளிசாதம் ஊற ஊற சுவை அதிகரிக்கும்.

எனர்ஜி லட்டு
தேவையானவை: பாதாம் – ஒரு கப், முந்திரி – ஒரு கப், பேரீச்சம்பழம் – கால் கப், உலர்ந்த திராட்சை – கால் கப், பால் பவுடர் – ஒரு கப், பொடித்த வெல்லம் – சிறிதளவு, நெய் – தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உலர் அத்திப்பழம் – ஒன்று.
செய்முறை: பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும். பேரீச்சையை விதை நீக்கி சிறிய துண்டுகளாக செய்துகொள்ளவும். உலர் அத்திப்பழத்தையும் சிறிதாக வெட்டிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பாதாம், முந்திரி, பேரீச்சம்பழத் துண்டுகள், அத்திப்பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் உலர்ந்த திராட்சை, பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லத்தை பொடியாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக்  கலக்கவும். அடுப்பில் நெய்யை சூடாக்கி செய்து வைத்த கலவையில் சிறிது சிறிதாக விட்டு, உருண்டைகளாக உருட்டி பயன்படுத்தவும்.

கோதுமை பிஸ்கட்
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – 4 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பொடித்த சர்க்கரையை கோதுமை மாவில் சேர்த்துக் கலக்கி… பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்கு பிசையவும். கையில் எண்ணெய் தொட்டு, மாவை எடுத்து, உருண்டைகளாக உருட்டி,  சப்பாத்தியாக திரட்டி, ஆங்காங்கே ஃபோர்க் கரண்டியால் குத்தவும். இதை கத்தியால் துண்டுகளாக வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

ஸ்டஃப்டு பாகற்காய்
தேவையானவை: பாகற்காய் (சிறிய  சைஸ்) – கால் கிலோ, பட்டை – சிறிய துண்டு, லவங் கம் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன்,  எண்ணெய் – ஒரு கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: பாகற்காயின் நடுவில் நீளமாக கீறி, விதை எடுத்து, அரை வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுத்து வைக்கவும் (கசப்பு நீங்க சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடலாம்). பட்டை, லவங்கத்தை தூளாக்கி, இஞ்சி – பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பாகற்காய்களில் ஸ்டஃப் செய்ய வும். கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, ஸ்டஃப் செய்த பாகற்காயை சேர்த்து மூடி போடவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). அவ்வப்போது மூடியைத் திறந்து, மசாலா வெளியே வராதபடி கிளறவும். நன் றாக ரோஸ்ட் ஆனதும். எடுக்கவும். இதை ஃபாயில் பேப்பரில் வைத்து சுருட்டி பயணத்தின்போது எடுத்துச் செல்லலாம்.
இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.

மேங்கோ அச்சார்
தேவையானவை: புளிப்பான மாங்காய் துண்டுகள் – ஒரு கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், சோம்பு – தேவைக்கேற்ப, உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அத்துடன் தேவையான மஞ்சள்தூள், உப்பு கலந்து வெயிலில் நன்றாக காயவைக்கவும். நன்கு சுண்டிய பிறகு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் நல்லெண்ணெயைக்  காயவைத்து, ஆறவைத்து அதனுடன் மாங்காய் கலவை, சோம்பு ஆகியவற்றை கலந்துவிடவும்.
இது ராஜஸ்தானி டிஷ். பயணங்களின்போது, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள உபயோகிக்கலாம்.

அளவற்ற பலன்களைத் தரும் அதிமதுரம்!

அதிமதுரத்தின் சக்தி
ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
கல்லடைப்பு நீங்க...
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
இருமல் நீங்க...
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
மஞ்சள் காமாலை நீங்க...
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
பெண் மலடு நீங்க...
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க...
அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
ரத்த வாந்தி நிற்க...
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
வரட்டு இருமல் நீங்க...
அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
இளநரை நீக்க...
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.
நெஞ்சுச் சளி நீங்க....
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
இருமல் நீங்க...
அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..
மஞ்சள்காமாலை தீர...
அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
தாது விருத்திக்கு...
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
வழுக்கை நீங்கி முடி வளர
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.
தலைவலிகள் நீக்க...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
தொண்டை கரகரப்பு நீங்க...
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

தேவலோகத்து அரம்பையர்கள்!



அரம்பையர்கள் என்பவர்கள் மேலோகத்தில் / தேவலோகத்தில் சிவபெருமானின் உமையாள் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள் ஆவார்கள். இந்த அரம்பையர்கள் பாற்கடலை கடையும் போது தோன்றியவர்கள் எனவும் கூறப்படுகிறது. அரம்பை என்பவள் தான் இந்த அரம்பியர் கூட்டத்தின் தலைவியாக கூறப்படுகிறாள்.

அரம்பையர்களை தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள் என்றும் கூற கூருகிறார்கள். பெரும்பாலும் இவர்களில் நாம் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றவர்களை தான் நமது காவியங்களிலும், இலக்கியங்கள் மூலமும் அறிந்திருப்போம். ஆனால், இவர்கள் மொத்தம் 60,000 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற அரம்பையர்கள்

அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற் கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமைய வளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள்.

ரம்பை, ஊர்வசி, மேனகை மட்டுமின்றி தேவலோகத்தில் திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி என்ற சிலரும் கூட புகழ்பெற்ற அரம்பையர்களாக திகழ்ந்தனர்.

அப்சரஸ் பெயர் காரணம்

அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் கூட இருக்கிறது. “அப்ஜம்” என்றால் தாமரை என்று பொருள், “சரஸ்” என்றால் நீர்நிலை என்று பொருள். அப்சரஸ் என்றால் நீர்நிலையில் தோன்றிய தாமரை என்ற பொருள் பெறுகிறது.  நீர் நிலையில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பியர்கள் என்பதால் இவர்கள் இந்த பெயர் பெற்றனர்.

தவம்

தாங்கள் வசிக்க ஓர் லோகம் வேண்டும் எனவும், தாங்கள் என்றுமே இளமை வாய்ந்தவர்களாக தோற்றமளிக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்டி தவம் செய்தனர். அரம்பையர்களின் தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் வரத்தை அளித்து, அவர்களுக்காக அப்சரஸ் எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார்.

அரம்பையர்கள் குணங்கள்

பார்வதிக்கு துணையாக, தோழியாக இருப்பது மட்டுமின்றி, சிவனுக்கு உரிய பூஜைகளும் செய்து வந்தனர். வசீகரமான வடிவும், அழகும் கொண்ட அரம்பையர்கள், யாழ் இசை மீட்டுவதில் பெரும் திறன் கொண்டவர்களாக திகழ்ந்தனர்.   அரம்பையர்கள் குணங்கள் பாடல்கள் படுவதிலும் திறன் வாய்ந்து விளங்கினர் அரம்பையர்கள். மேலும், நடனக் கலையிலும் வல்லமை படைத்தவர்களாக இந்த பேரழகிகள் இருந்தார்கள் என்றும் அறியப்படுகிறது.

உமையவள் சில காரணங்களுக்காக சிவபெருமானைப் பிரிந்து தவம் செய்திருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அங்கெல்லாம் அரம்பையர்கள் உமையவளுக்குப் பலவிதங் களில் தொண்டு செய்வது வழக்கம்.

தலங்கள்

திருப்பைஞ்ஞீலி - இவ்விடத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவியதால், இன்றளவும் திருப்பைஞ்ஞீலி வாழைக்கு தலவிருட்சமாக போற்றப்படுகிறது.

காசி – இங்கு மேனகை எனும் அரம்பை சிவபெருமானை வழிபட்டு தனது சாபத்தினை போக்கிக் கொண்டார்.

தலங்கள் திருக்கழுக்குன்றம் – இங்கு திலோத்துமை எனும் அரம்பை சிவபெருமானை வழிபாடு செய்தார். 

மேலும், திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களில் அரம்பையர்கள் வழிபாடு செய்த தலங்களாக அறியப்படுகின்றன.

வழிபடுதல்
தேவலோக கன்னிகளான அரம்பையர்களை வழிபட்டால், இளமையும், செல்வமும், இன்பமும் பெருகும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இவர்களை வழிப்படும் முறை பழங்காலத்தில் இருந்து வந்துள்ளது. வட இந்தியாவில் இருக்கும் ஸ்ரீலட்சுமி பூஜையில் அரம்பையர்களையும் சேர்த்து தான் வழிப்படுகின்றனர்.

"பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.

ஆனி மாதத் திரிதியை இவர்களுக்குரிய நாள். இந்நாளில் அப்சரஸ்களை வழிபடும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது.

தற்பொழுது, வடநாட்டில் இந்நாளில் ஸ்ரீலட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

அரம்பையர்கள் தேவலோகத்தில் மட்டுமல்ல; பூலோகத்திலும் உமையவள் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார்கள்.

ஆனி மாதத்தில் வரும் திரிதியை அன்று அந்தந்த திருத்தலங்களில் அருள்புரியும் இறைவனையும் அம்பாளையும் வழிபட்டால் அரம்பையர்கள் மனமகிழ்ந்து வாழ்த்துவார்கள். இதனால் அழகு கூடும்; செல்வ வளம் பெருகும்; கலை களில் சிறந்து விளங்கலாம்.

ஆனி மாத வளர்பிறை திரிதியை அன்று ரம்பா திரிதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட் டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்து வார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.

கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர். 


செல்வம் தரும் 3ம் பிறை தரிசனம்!

அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும்,

3ம் பிறை தரிசனம் கண்டால் செல்வவளம் பெருகும்,  தேவைகள் யாவும் பூர்த்தியாகும், பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம்,

சந்திர தரிசனம் சிவன் பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும்  ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆவார்கள், சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள், சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், மாலை வேலைக்கும். மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் .

காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும், ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும்,

அதற்கான முறைகளையும் காண்க, ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து  வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும், அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்,

அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும், இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள், பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள், தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, தர்ம பலம் . மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.

சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது  . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார்,  சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்,

வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு. தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும், இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான் இது உறுதி,

மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை    6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்,

பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும்,  குறிப்பாக சந்தோஷ மன நிலையில்  பிறையை காண வேண்டும், என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்,

அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்,

இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.

திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்,திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும், சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம், இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை, யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.

ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக   வழிபட்டு வரவேண்டும். அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன்  யோகத்தை அருளுவார், எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும், சிலருக்கு  12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும், எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் காணுங்கள் அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் .


வியாழன், 14 ஜூலை, 2016

சப்த மங்கைத் தலங்கள்!


சக்கரமங்கை, அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை எனப் போற்றப்படுகிற அந்த ஏழு தலங்களைத் தரிசிப்போமா?


சிவ நேத்ர தரிசனம்  (சக்கரப்பள்ளி)
ஞ்சை- கும்பகோணம் சாலையில், சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள அய்யம்பேட்டை என்னும் ஊருக்கு அருகில் உள்ளது சக்கரப்பள்ளி. புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் முதல் பிரதமை திதியில், பிராம்மியானவள் இங்கே வழிபட்டாள். பார்வதிதேவி சிவனாரின் நெற்றிக் கண்ணைத் தரிசித்து அருள்பெற்றாள். தவிர, மகாவிஷ்ணு தன் சக்கராயுதத்தைப் பெற்ற திருத்தலம் இது. 
மேலும், சக்கரவாகப் பறவை வடிவில், அம்பிகை வழிபட்டாள் என்றொரு தகவலும் சொல்கிறது ஸ்தல புராணம்.
ஸ்வாமி - ஸ்ரீசக்ரவாகேஸ்வரர்; 
அம்பாள் - ஸ்ரீதேவநாயகி. 
அற்புதமான ஆலயத்தில் அழகுறக் காட்சி தருகின்றனர் இறைவனும் இறைவியும்! பிரதமை திதி நாளில், இங்கே வந்து வணங்குவது சிறப்பு.

கங்கா தரிசனம்  (அரிமங்கை)
ய்யம்பேட்டை கோயிலடி பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமங்கை. சப்த மங்கையரில் ஒருவரான மகேஸ்வரி, துவிதியை திதி நாளில் வழிபட்ட தலம். இங்கே, பார்வதிதேவி சுயம்பு மூர்த்தத்தை வழிபட... சிவ - கங்கை தரிசனம் கிடைக்கப் பெற்றாள். 
ஸ்வாமி - ஸ்ரீஹரிமுக்தீஸ்வரர்; 
அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை.
திரிசூல தரிசனம்  (சூலமங்கலம்)
ய்யம்பேட்டையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது சூலமங்கலம். திருதியை நாளில், கௌமாரி வணங்கி அருள் பெற்ற திருத்தலம். சூலமங்கலம் சுயம்பு மூர்த்தத்தை வணங்கித் தொழுத வேளையில், பார்வதிதேவி சிவனாரின் திரிசூல தரிசனத்தைப் பெற்றாள்.
ஸ்வாமி - ஸ்ரீகீர்த்திவாகீஸ்வரர்; 
அம்பாள் - ஸ்ரீஅலங்காரவல்லி. 
இங்கே, அஸ்திர தேவர் சந்நிதி உள்ளது சிறப்பு. 
சகல தெய்வங்களுக்குமான அஸ்திரங்களை வார்த்துத் தரும் மூர்த்தி இவர். இவரை வணங்கினால், எதிரிகள் தவிடுபொடியாகிவிடுவார்கள்.
திருக்கழல் தரிசனம்  (நந்திமங்கை)
ய்யம்பேட்டையை அடுத்துள்ளது நல்லிசேரி. ஒரு காலத்தில் நந்திமங்கை என அழைக்கப்பட்ட திருத்தலம் இது. சப்த மாதாக்களில் ஒருவரான வைஷ்ணவிதேவி, சிவனாரைத் தொழுது அருள் பெற்ற திருவிடம். பார்வதிதேவி இங்கே தவம் செய்ய... தன் திருக்கழல் தரிசனத்தைக் காட்டியருளினார் சிவபெருமான்.
'சிவனாரின் திருக்கழல்தானே நம் மீது படுகிறது. அவரின்  திருப்பாதம் நம் மீது எப்போது படும்’ என நந்திதேவர் ஏங்கினாராம். பிறகு, இந்தத் தலத்தில் ஆயிரத்தெட்டு பிரதோஷ பூஜைகளை சிவனாருக்குச் செய்ய... மகிழ்ந்த சிவனார், தன் திருப்பாத ஸ்பரிசத்தை நந்தியம்பெருமானுக்குத் தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.
ஸ்வாமி - ஸ்ரீஜம்புகேஸ்வரர்; 
அம்பாள் - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.

உடுக்கை தரிசனம்  (பசுமங்கை)
ஞ்சை - பாபநாசத்தை அடுத்துள்ளது பசுபதிகோவில். காமதேனு மற்றும் வராஹி தேவி வழிபட்ட இந்தத் தலத்தில், ஸ்ரீபார்வதிதேவி வழிபட்டு சிவனாரின் உடுக்கைத் தரிசனம் கிடைக்கப் பெற்றாள். பசுமங்கை எனும் தலம், பிறகு பசுபதிகோவில் என மாறியதாம்!
ஸ்வாமி  - ஸ்ரீபசுபதீஸ்வரர். 
அம்பாள் - ஸ்ரீபால்வள நாயகி. 
இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம். தீய சக்தி அண்டாமல் நம்மைக் காத்தருள்வார் இறைவன் என்பது ஐதீகம்!
பிறை தரிசனம்  (தாழமங்கை)
பசுபதிகோவிலுக்கு அருகில் சுமார் 1 கி.மீ. தொலைவில், மெயின் சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது தாழமங்கை திருத்தலம். இந்திராணி எனப்படும் மாகேந்திரி, வழிபட்டுப் பாபம் நீங்கிய தலம் இது. உமையவள் கடும் தவம் புரிந்து, மூன்றாம்பிறையுடன் சிவனாரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். 
ஸ்வாமி - ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்; 
அம்பாள் - ஸ்ரீராஜராஜேஸ்வரி.
ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கும் தலங்கள் மிகக் குறைவு. மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து வழிபட்டால், குடும்பத்தில் சாந்தம் குடிகொள்ளும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்வர்.

நாக தரிசனம்  (திருப்புள்ளமங்கை)
தஞ்சை- பசுபதிகோவிலுக்கு அருகில், சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புள்ளமங்கை. சாமுண்டிதேவி, அஷ்டநாக மூர்த்திகளுடன் இங்கே சிவலிங்கத் திருமேனிக்கு முப்பது கோடி நாகலிங்கப் புஷ்பங்கள் சார்த்தி வணங்கி, அருள் பெற்ற திருவிடம் இது. ஸ்ரீபார்வதிதேவி கடும் தவம் செய்ததன் பலனாக, சிவபெருமானை கழுத்தில் நாகாபரணத்துடன் தரிசித்துப் பூரித்தாள்.
ஸ்வாமி - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்; 
அம்பாள் - ஸ்ரீஅல்லியங்கோதை என்கிற சௌந்தரநாயகி.
இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும், திருமண பாக்கியம் கைகூடும், சகல ஐஸ்வரியங்களுடன் சந்ததி சிறக்க வாழலாம் என்கின்றனர்.
இந்த ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். காசியம்பதியில் இருந்து வந்த அநிவித்யநாத சர்மா மனைவியுடன் வழிபட்டார், அல்லவா? அப்போது 48-ஆம் நாள் பூஜையின்போது, இறைவனுக்கு திருப்பல்லக்கு தயார் செய்து, சக்கரப்பள்ளியில் இருந்து மற்ற தலங்களுக்கு தூக்கிச் சென்றாராம். பிறகு அந்தந்த ஊர்க்காரர்களின் உதவியால், அந்தத் தலத்து இறைவனும் இறைவியும் திருப்பல்லக்கில் பின்னே வர... ஏழு தலங்களின் மூர்த்தங்களும் ஏழு பல்லக்கில் பவனி வந்ததாம்!
 பெண்கள் இங்கு வந்து ஏழு தலங்களையும் அங்கே குடிகொண்டிருக்கிற சிவ- பார்வதியையும் வணங்கித் தொழுதால், அவர்கள் ஒரு குறையுமின்றி, நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்கள் என்பது உறுதி.

புதன், 13 ஜூலை, 2016

எழில்மிகு பெருமாள் ஆலயத்தில் ஏழின் சிறப்புகள்!


ஏழு  எண்ணுக்கும் இந்து மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏழு உலகங்கள், ஏழு சமுத்திரங்கள், ஏழு தீவுகள், கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி போன்ற ஏழு நதிகள், 

திருவேங்கடவன் கோயில் கொண்டுள்ள ஸப்தகிரி எனப்படும் ஏழுமலை (கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி)  அயோத்யா, மதுரா, காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி),  துவாரகா, மாயாபுரி (ஹரித்வார்) ஆகிய ஏழு முக்தித்தலங்கள், 

அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காச்யப ஆங்கிரஸ  என்ற ஸப்த ரிஷிகள்,  அஸ்வத்தாமா, மஹாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகள், 

தேவியின் அம்சமான ஸப்த மாதர்கள், 
வானவில்லின் ஏழு நிறங்களைக் குறிக்கும் சூரியனின் ஏழு குதிரைகள்,
திருமணத்தில் முக்கியச் சடங்கான ஏழு அடி எடுத்து வைக்கும் ஸப்தபதி,
சங்கீதத்திற்கு ஆதாரமான ஸப்தஸ்வரங்கள், 
வாரத்தின் ஏழு நாட்கள்…  
என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 


சுமார் 6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவும் நான்கு கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்ட,  வைணவர்கள் “கோவில்’’ என்று போற்றப்படும் திருவரங்கத்திற்கும் கீர்த்தி மிகுந்த ஏழு என்ற எண்ணிற்கும் உள்ள தொடர்பு ஆலயத்தின் அற்புதத்தைப் பெருமை சாற்றுவதாக அமைந்துள்ளது. 







பன்னிருவரில் பதினோரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற பெருமையைக் கொண்டது இந்த ஆலயம். ஸப்த ப்ராகாரங்கள் எனப்படும் ஏழு திருச்சுற்றுகள் ஏழு உலகங்களைக் குறிப்பதாகக் கூறுவர். இந்த ஏழு திருச்சுற்றுகளையும் வளைத்து தன்னகத்தே கொண்டபடி அவற்றிற்கு வெளியே அமைந்திருக்கும் திருச்சுற்று அடையவளைந்தான் திருச்சுற்று என்றே அழைக்கப்படுகிறது.
எண் ஏழுக்கும் திருவரங்கத்திற்கும் உள்ளஎழிலான தொடர்புகள்:
*இந்தியாவில் ஏழு திருச்சுற்றுக்களுடன் (ஸப்த பிராகார க்ஷேத்ரம்) கூடிய ஒரே ஆலயம் என்ற பெருமையைக் கொண்டது திருவரங்கம்.  ஒவ்வொரு திருச்சுற்றுக்கும் புராண-சரித்திர தொன்மையைப் பறைசாற்றும் தனிப் பெயர்கள் உள்ளன: முதலாவது தர்மவர்மன் திருச்சுற்று, இரண்டாவது ராஜமகேந்திரன் திருவீதி, மூன்றாவது குலசேகரன் திருவீதி, நான்காவது ஆலிநாடன் திருவீதி, ஐந்தாவது அகலங்கன் திருவீதி, ஆறாவது திரிவிக்ரமன் திருவீதி, ஏழாவது சித்திரைத் திருவீதியாகும்
*ஸ்ரீ ரங்கம் ரங்க நாதப் பெருமாளுக்கு ஸ்ரீதேவி,   பூதேவி  ,  துலுக்க நாச்சியார், சேரகுலவல்லித் தாயார், கமலவல்லித் தாயார்,   கோதை நாச்சியார், ரெங்கநாச்சியார் என ஏழு தேவியர்கள் உள்ளனர். 
*இந்த ஆலயத்தில் உற்சவரான நம்பெருமாள், (1)விருப்பன் திருநாள், (2) வசந்த உற்சவம், (3) விஜயதசமி, (4) வேடுபறி, (5) பூபதி திருநாள், (6) பரிவேட்டை, (7)ஆதி பிரம்மோற்சவம், ஆகிய ஒவ்வொரு திருநாளிலும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். 

* ஓர் ஆண்டில் 322 நாட்களுக்கு உற்சவங்கள் கொண்டாடப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் வருடத்திற்கு ஏழு திருவிழாக்கள். அவை: 1. சித்திரை, 2. வைகாசி, 3.ஆடி,
4. புரட்டாசி, 5. தை, 6. மாசி, 7. பங்குனி ஆகிய மாதத் திருவிழாக்கள். இச்சமயங்களில் உற்சவர் நம்பெருமாள் திருவரங்கத்தை  விட்டு வெளியே எழுந்தருளுகிறார். 

*ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் நடைபெறும் 1. சித்திரை, 2.வைகாசி, 3.ஆவணி, 4.ஐப்பசி, 5.தை, 6.மாசி, 7.பங்குனி ஆகிய மாத உற்சவங்களின் ஒவ்வொரு உற்சவத்திலும் ஏழாவது நாளன்று ஏழு முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். 

* இங்கு நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் ஏழாம்  திருநாளன்று ரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறுகிறது. 
*தமிழ் மாதங்களில் ஏழாவதான ஐப்பசி (துலாக் காவேரி மாதம்)  மாதத்தில் மட்டும் 30 நாட்களும்  திருமஞ்சனத்திற்காக தங்கக்குடத்தில் புனித காவிரி நதி நீர், யானையின்  மீது எடுத்து வரப்படுகிறது. பிற மாதங்களில் கொள்ளிடத்திலிருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது.
*தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராமாவதாரத்தின் போது  ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை கொண்டவர்
 அரங்கநாதப் பெருமாள். இதனால்  ராமபிரானின் குலதெய்வமாகத் திகழ்ந்த  ரங்கநாதர் இக்ஷ்வாகு குல தனம் என்றே போற்றப்படுகிறார். 
*மார்கழி மாதம் நடைபெறும் இராப்பத்து உற்சவத்தின் ஏழாம்  திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
*ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாச்சியார் திருச்சந்நதியில், 1. கோடை உற்சவம், 2. வசந்த உற்சவம், 3. ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, 4. நவராத்திரி, 5. ஊஞ்சல்உ ற்சவம், 6. அத்யயநோற்சவம், 
7. பங்குனி உத்திரம் என்று வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறுகின்றன.
*இந்த ஆலயத்தில் பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சந்நதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்:
 1. முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார், 2. நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார், 3. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள், 4. குலசேகரர், 5. திருப்பாணாழ்வார், 6. தொண்டரடிப்பொடி, 7. திருமழிசை. 
*தெற்கு திசை நோக்கி சேவை சாதிக்கும் பெரிய பெருமாள் திருமுக மண்டலம் காட்டும்  தென் திசையில். 1. நாழிகேட்டான் கோபுரம், 2. ஆர்யபடாள் கோபுரம், 3. கார்த்திகை கோபுரம், 4. ரெங்கா ரெங்கா கோபுரம், 5. முதலாவது தெற்கு கட்டை கோபுரம், 6. இரண்டாவது தெற்கு கட்டை கோபுரம், (7) ராஜகோபுரம் ஆகிய ஏழு கோபுரங்கள் அமைந்துள்ளன. 
*ஏழு உற்சவங்களின் போது,  குறிப்பிட்ட மண்டபங்களைத் தவிர மற்ற மண்டபங்களுக்கு உற்சவர்  எழுந்தருளுவதில்லை: 1. வசந்த உற்சவம், 2. சங்கராந்தி,  3. பரிவேட்டை, 4. அத்யயநோற்சவம், 5. பவித்ர உற்சவம், 6.  ஊஞ்சல் உற்சவம், 7. கோடை உற்சவம்.
* இங்கு நடைபெறும் உற்சவங்களில் ஏழு சந்தர்ப்பங்களில் மட்டும் இந்த அரிய சேவைகளை ஆண்டில் ஒரு முறை மட்டுமே பக்தர்கள்  கண்டு தரிசிக்கலாம்:  1. பூச்சாட்டல்  சேவை, 2. கைசிக ஏகாதசி அன்று இரவு பக்தர்கள் பச்சைக் கற்பூரத்தைக் காணிக்கையாக்கும் கற்பூர படியேற்ற சேவை, 3. மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, 4. வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், 5. உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும்  ராமநவமி சேர்த்தி  உற்சவம், 6. தாயார் திருவடி சேவை,
 7. ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவத்தை அடுத்து தீபாவளி அன்று மாலை நம்பெருமாளுக்குச் செய்யப்படும் ஜாலி அலங்காரம்.









புதன், 6 ஜூலை, 2016

திருலோக்கி அகிலாண்டேஸ்வரி!


காவிரியின் வடகரையில் அமைந்த ஏமநல்லூராகிய திருலோக்கியில் அகிலாண்டேஸ்வரியுடன் சுந்தரேசப் பெருமான் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது சூரியனார் கோயில், துகிலி வழியாகவும்  இதனை அடையலாம். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர  வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும்.



‘அணைத் தெழுந்த பிரானின் அழகுத் திருமேனி, நந்தியின் மேல் ஒரு பீடத்தில் சிவம் தழுவிய சக்தியாக அல்லது சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய திருமேனி. பின் இரு கரங்களில் சூலம், மான் ஏந்தியும், முன் வலது கரம் அபய முத்திரையுடனும் திகழ, இடது கரம் அம்பிகையை அணைத்த அழகு வடிவம். பெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையினது வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும், இடது கரத்தில் மலர் ஏந்தியும், உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறாள். இந்த உமாதேவியின் பெயர் ‘பார்யா ஸௌக்ய ப்ரதாயினி’ என்பதாகும்.



அம்பிகை வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடக்கி உடம்பை வளைத்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தின் மேற்புறம் கந்தர்வர்கள் கானம் செய்கிறார்கள். கின்னரர் வாத்தியம் வாசிக்கிறார்கள்; நடன மங்கையர் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமின்றி அவர்களைத் தமது முதுகில் தாங்கிக் கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கும் நந்தியெம் பெருமானின் மிடுக்கான தோற்றம் மிக அருமை. இந்த அழகுக் காட்சியைக் காணவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக் கொண்டு நவகிரக குரு பகவான் பக்தி பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதி!




 திருலோக்கியில் அகிலாண்டேஸ்வரியுடன் சுந்தரேசப் பெருமான் அருள்பாலிக்கிறார். இவரது லிங்கத் திருமேனிக்கு குருபகவான் கொன்றைமாலை அணிவித்து முல்லைப் பூவால் அர்ச்சனை செய்தார். பசு நெய்யால் விளக்கேற்றி தயிர் அன்னம் நிவேதனம் செய்து பெருமானது திருவருளை வேண்டினார்.

அவரது அன்பான சிரத்தையான பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் ‘ப்ருஹஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நீ முக்கிய காரணமாக இருப்பாய்; உமது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி ‘குருபலம்’ பெற்று மகிழ்ச்சியான இல்வாழ்க்கை பெற உமது பலம் பெருகட்டும்’ என்று அருளினார். குரு சுந்தரேசப் பெருமானிடம் அருள்பெற்ற இனிய  நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் திருநட்சத்திரம்) ஆகும்.



சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு.
ஆனால், இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிப்பது அவர் பெற்ற பேரானந்தத்தின் விளைவுதானே? இது மட்டுமா! இந்தப் பீடத்தின் பின்புறம் சிவலிங்க வடிவைக் காணும்போது நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. சிவலிங்க மூர்த்தியை குரு பூஜை செய்ததன் பலனாக. சிவபிரான் ரிஷப வாகனத்தில் உமாமகேஸ்வரராக தோன்றி அம்பிகையை ஆலிங்கனம் செய்த எழிற்கோலத்தில் காட்சியளித்தார். இம்மாதிரி ஓர் அற்புத வடிவை தமிழ்நாட்டில் வேறெங்கும் காண இயலாது. குரு பூஜித்து அருள்பெற்று தமது குருபலத்தை பூலோக மக்களுக்கு வழங்கும் ஒப்பற்ற திருத்தலம் திருலோக்கிதான் .

இந்த தெய்வீக வடிவைக் கண்டு இன்புற்ற கருவூர்த் தேவர் சுந்தரன் சுந்தரியுடன் விளங்கும் திரைலோக்ய சுந்தரனை காந்தாரப் பண்ணில் திருவிசைப்பாவால்  பாடி மகிழ்கிறார்.

  ‘‘வேதங்களின் சாரமாகிய உபநிஷத் தேனை குடித்து அருந்தமிழ் மாலை சற்று சிவமணம் கமழப் பெற்ற காரணத்தினால் காந்தாரப் பண்ணில்  கருவூர்த் தேவர் இசைத்த இந்தத் தமிழ் மாலையை இசையோடு பாடி வழிபடுவோர் இனிமையான நல்லறம் பெற்று இன்புறுவார்’’ என்று போற்றுகிறார். 

கருவூர்த் தேவரது திருவுருவை இக்கோயிலின் வெளிமண்டபத் தூணில் காணலாம்.

இத்தலத்தில் கண்ணுக்கு விருந்தாகும் மற்றொரு அற்புத வடிவம் ரதி-மன்மதன் பேரெழில் காட்சியாகும்.



வலது கையில் புஷ்பம் ஏந்தியும், இடது கையால் ரதியின் தோளைத் தழுவியபடியும் மன்மதன்; ரதியின் வலது கரம் காமதேவனை அணைத்தும், இடது கையில் ஜடை மாலையும், தலையில் அலங்காரக் கொண்டையுடன் உடலை சற்று வளைத்து ஒய்யாரமாக நிற்கும் அவளது பேரழகு வடிவம் வார்த்தைகளால் வருணிக்க இயலாது. அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர்.

திருவாசி (பிரபை)யுடன் ஐந்தடி உயரத்தில் மிகவும் மிருதுவான கல்லில் நேர்த்தியாக அமைந்த தெய்வீகக் சிலை. ஹொய்சாலர் காலத்து  கலைக் கருவூலமாகும்.

மூலஸ்தானத்தில் திரைலோகிய சுந்தரனான சுந்தரேசப் பெருமானை தரிசித்து வெளி மண்டபத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரியை வழிபட்டு வலம் வரும்போது தெற்கு பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

  இங்கே கிழக்கு நோக்கி புதிதாக அமைக்கப் பெற்ற சித்திர சபையில் உமாமகேஸ்வர மூர்த்தி ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கிறார். அருகில் குருபகவான் கரங்கூப்பி அந்த அழகு காட்சியை ரசிக்கிறார். பின்புறம் கண்ணாடி பொருத்தப்பெற்று குரு பூசித்த சிவலிங்கத் திருமேனி காட்சியளிக்கிறது. அவருக்கு இடதுபுறம் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். மற்றும் விஸ்வநாதர், பைரவர் துர்க்கை, சண்டேசர் சந்நதிகளும அமைந்துள்ளன.

தலவரலாற்றுப்படி பிருகு முனிவர் வழிபட்டதும், தருமன் என்பவனது பேச்சுக் குறை நீங்கப் பெற்றதுமான பெருமையுடையது. இத்திருக்கோயில், கணித  சக்ரவர்த்தியால் கட்டப் பெற்றது என்பர்.

திருலோக்கியில் உமாமகேஸ்வரப்  பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து  குருவருளும் திருவருளும் பெறலாம்.