திங்கள், 27 பிப்ரவரி, 2017
உஜ்ஜைன் மகா காளி ஆலயம் (கடகாலிகா )!
12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றான மஹாகால லிங்கம் இங்கு தரிசனம் அளிக்கிறார். 51 சக்தி பீடங்களில் இது ஒன்றாகும். சதியினுடைய முழங்கை முழங்கால் இங்கு விழுந்ததாகப் புராணங்களில் சொல்லப்படுகிறது. ருத்ரஸாகர் ஸரோவர் பக்கத்தில் ஹரஸித்தி தேவி கோயிலில் சக்தி பீடம் இருக்கிறது. இங்கு மூர்த்திக்குப் பதிலாக முழங்கைக்குப் பூஜை நடை பெறுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு சிம்மராசியில் மேலும் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிற சமயம் இங்கு கும்பமேளா (ஸிம்ஹஸ்த மகாகும்பம்) நடைபெறுகிறது. ஆறு ஆண்டு களுக்குப்பின் அர்த்த கும்ப மேளா நடைபெறுகிறது.
இது கிருஷ்ண பகவானின் பாத தூளிகள் படிந்த புனிதமான இடம். புராதன காலத்தில் முனிவர்களின் தபோ பூமியாக இருந்தது.
ப்ராநதீ: உஜ்ஜைன் நகரத்தில் ஓடும் ப்ராநதி மிகவும் புனிதமானதாகும். விஷ்ணு பகவானின் இருதயத்திலிருந்து க்ஷிப்ரா நதி உண்டானது என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பெயர் மீன கங்கா. உஜ்ஜைன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
1. நரஸிம்ஹ காட், 2. ராம காட், 3. பிசாச மோசன் தீர்த்தம், 4. சத்ரீ காட், 5. வாமன தீர்த்தம், 6. கந்தர்வ தீர்த்தம் ஆகியவை பிரசித்தமான படித்துறைகள். ஒவ்வொரு படித்துறையிலும் கோயில்கள் உள்ளன. கங்கா தசஹரா, கார்த்திக் பூர்ணிமா, வைகாசி பூர்ணிமா பருவங்களில் இங்கு மேளா நடைபெறுகிறது.
குரு சிம்மராசியில் சஞ்சரிக்கும் சமயம் ப்ராநதியில் ஸ்நானம் செய்வது, மகத்துவம் பொருந்தியது. ‡ப்ரா நதி கந்தர்வ தீர்த்தத்தின் அப்பாலுள்ள பாலத்தின் வழியாக அக்கரை சென்றால் அங்கு தத்தவின் அகாடா, கேதாரேச்வரர், மேலும் ரணஜீத் ஹநுமான் கோயில் இருக்கின்றன. அங்கு உள்ள மயானத்திற்கு அப்பால் வீர துர்கா தாஸ் ராடௌரின் “சத்ரீ” மேடை உள்ளது. இன்னும் தள்ளி ருணமுக்த மகாதேவர் கோயில் உள்ளது.
மஹாகால மந்திர் : உஜ்ஜைன் (புண்ய) தீர்த்த க்ஷேத்திரத்தில் - பிரதானமான மேலும் விசாலமான மகா கால மந்திர், ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயில் வளாகம், பூமி மட்டத்திலிருந்து கொஞ்சம் கீழே உள்ளது. வளாகத்தின் மத்தியில் உள்ள இந்தக் கோயிலில் இரண்டு பகுதிகள் உள்ளன. பூமி மட்டத்தில் உள்ள பகுதியில் கோயிலின் மேல்பாகம் உள்ளது. இங்கு சங்கரின் லிங்கமூர்த்தி ஓங்காரேச்வரர் கோயில் கொண்டுள்ளார். இதற்கு நேர் கீழே உள்ள பகுதியில் (கோயில்) மகாகால லிங்கமூர்த்தி தரிசனம் அளிக்கிறார்.
விசாலமான மஹாகாளேச்வரரின் (லிங்கமூர்த்தி) “ஜலஹரி” அதாவது சிவலிங்கத்திற்கு மேலே தொங்கவிடப்பட்டிருக்கும், ஜலம் நிரம்பிய, அடிபாகத்தில் துளை உள்ள, குடத்தின் மேல் பாகத்தில் நாகப் பிரதிமை அதை வளைத்துச் சுற்றியுள்ளதைக் காணலாம். ஒரு பக்கம் கணேசரும், மற்றொரு பக்கத்தில் பார்வதியும், மூன்றாவது பக்கத்தில் கார்த்திகேயரையும் காணலாம். ஸந்நிதியில் ஒரு நெய் தீபம், மேலும் ஒரு எண்ணெய் தீபம் (அகண்ட தீபம்) விடாமல் ஜ்வலித்துக் கொண்டு இருக்கும்.
கோயிலின் மேல்பகுதி சுற்றுக்கட்டு வெளிப்பக்கத்தில் (முற்றம்) பல சன்னிதிகள் உள்ளன. அதில் அனாதிகாளேச்வர், மேலும் விருத்த காளேச்வர் ஸந்நிதிகள் விசாலமானவை. மஹா கால கோவில்/சன்னிதிக்குப் பக்கத்தில்-கீழே சபா மண்டபமும், அதற்குக் கீழே கோடி தீர்த்த ஸரோவரும் உள்ளது.
மஹாகாளேச்வர் சபா மண்டபத்தில் ஸ்ரீராமர் கோயிலும், ராமருக்குப் பின்னால் அவந்திகாபுரியின் அதிஷ்டாத்ரி தேவி -அவந்திகா தேவி காட்சியளிக்கிறாள்.
படே (பெரிய) கணேசர் : மஹாகால மந்திர் பக்கத்தில் பெரிய கணேசர் கோயிலும், அதன் அருகில் பஞ்சமுக ஹனுமார் கோயிலும் உள்ளன. இந்தக் கோவிலில் பல தேவமூர்த்திகளை சேவிக்கலாம்.
ஹரஸித்தி தேவி : ருத்ர ஸரோவருக்குப் பக்கத்தில் மதில் சுவர்களால் சூழப்பட்டுள்ள ஹரஸித்தி தேவியின் சிறந்த கோயில்= அவந்தியின் சக்தி பீடம் உள்ளது. மஹாராஜா விக்கிரமாதித்திய னால் - ஆராதிக்கப்பட்ட பவானி தேவி-குலதெய்வம் இங்கு தரிசனம் அளிக்கிறாள். ஹரஸித்தி தேவியின் ஒரு கோயில் ஸௌராஷ்ட்ராவில் மூல துவாரகாவிற்கு அப்பால் சமுத்திரத்தின் வளைகுடாவின் ஒரு குன்றில் இருக்கிறது. மஹாராஜா விக்கிரமாதித்தியன் அங்கு தேவியை பக்தியுடன் ஆராதித்து-தனது பக்திமூலம் தேவியைத் திருப்தி செய்து அவந்திக்கு எழுந்தருளச் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. மேற்படி இரண்டு இடத்திலும் மூர்த்திகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. கோயிலில் தேவியின் மூர்த்தியின் முக்கிய பீடத்தில் “ஸ்ரீயந்திரம்” தான் உள்ளது. அதற்குப் பின்புறம் அன்னபூர்ணாவைக் காணலாம். இன்றும் மூல துவாரகாவின் கோயிலிலும் அந்தத் தேவியின் ஒரு அம்சம் உள்ளது. கிழக்கு வாசலை ஒட்டி ஸப்தசாகர் ஸரோவர் உள்ளது. ஹரஸித்தி தேவி கோவிலின் பின்புறம் அகஸ்தியேச்வர் ஸ்தானம் உள்ளது.
24. கம்பங்கள் : மஹாகால் கோயிலிலிருந்து கடைவீதிக்குச் செல்லும் வழியில் 24 கம்பங்கள் உள்ளன. முன்பு புராதனமான நுழைவாயில் இருந்த இடம். இது பத்திரகாளியின் ஸ்தானம்.
கோபால மந்திர் : நகரத்தின் கடை வீதியில் கோபால மந்திரில் ராதாகிருஷ்ணன் மேலும் சங்கர் மூர்த்திகளைச் சேவிக்கலாம்.
அங்கபாதம் (ஸாந்தீபநி ஆச்ரமம்) கோபால மந்திரிலிருந்து மங்களேச்வர் செல்லும் மார்க்கத்தில், 3 கி.மீ தூரத்தில் ஸாந்தீபநி ஆசிரமம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணன், பலராமன், சுதாமா ஆகியோர் இங்கு ஸாந்தீபநி முனிவரிடம் குருகுலவாசம் செய்து அத்யயனம் செய்தனர், கல்வி பயின்றனர். இங்கு கோமதி ஸரோவர், மேலும் ஒரு நந்தவனம் உள்ளது. மஹரிஷி ஸாந்தீபநி, அவரின் குமாரன், கிருஷ்ணன், பலராமன், மேலும் சுதாமாவின் மூர்த்திகள் உள்ளன. இங்கு ஸ்ரீவல்லபாசார்யரின் பீடம் இருக்கிறது. அருகில் விஷ்ணு ஸாகர், புருஷோத்தம ஸாகர், சித்ர குப்தனின் இடம் பார்க்கலாம். அங்கபாதத்திலிருத்து மேற்கே உள்ள ஜனார்தன் மந்திர் செல்லலாம்.
ஸித்தவட் : கால பைரவ் கோயிலுக்குக் கிழக்கே ஸிப்ரா நதியின் அக்கரையில் ஸித்தவடத்தில் உள்ள ஆல விருக்ஷத்தின் கீழே நாகபலி, நாராயண பலி முதலியவை அளிப்பது மகிமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
மங்களநாத் : அங்கபாதத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு குன்றில் மங்களநாத் கோயில் உள்ளது. பூமி புத்திரன் மங்கள க்ரஹம் இங்கு உண்டானதாகச் சொல்லப்படுகிறது.
வேதசாலா : வான மண்டல பரிசோதனைச் சாலை. வேத சாலையை இங்கு மக்கள் யந்த்ர மஹல்” என்று சொல்லுகிறார்கள். இது உஜ்ஜைன் தென்பாகத்தில் ப்ரா நதியில் தென்கரையில் இருக்கிறது. தற்சமயம் சிதிலமடைந்துள்ளது. இங்கு முன்பு ஆகாய மார்க்கத்தில் கிரஹ-நக்ஷத்திரங்களின் கதியை/சஞ்சாரத்தை அறிய சிறந்த இயந்திரங்கள் இருந்தன. தற்சமயத்திலும் சில இயந்திரங்கள் இருக்கின்றன.
அவந்தியில் பஞ்சகோ‚ (ஐந்து கோஸ்), யாத்திரை- பிரதக்ஷிணத்தில்-பிங்களேச்வர், காயா வரோஹ ணேச்வர், பில்வேச்வர், துர்தரேச்வர் மேலும் நீலகண்டேச்வர் கோவில்கள் அடங்கியுள்ளன. இதைத் தவிர பக்தர்கள் பின்கண்ட யாத்திரைகள் (ப்ரதக்ஷிணம்) மேற்கொள்கின்றனர்.
1. ப்ரா நதிக்கரையில் 28 தீர்த்த யாத்திரை.
க்ஷேத்திர யாத்ரா : சங்கோத்தார் க்ஷேத்ரம் - அங்கபாத் க்ஷேத்திர யாத்திரையில் 4 தீர்த்தங்கள் அடங்கியுள்ளன.
நகர பிரதக்ஷிணம் : நகர்வலம் இந்த நகர வலத்தில் நகரத்தின் 5 முக்கிய அதிஷ்டாத்ரி தேவிகளைச் சேவிக்கலாம்.
1. பத்மாவதி, 2. ஸ்வர்ணச்ருங்கா, 3. அவந்திகா, 4. அமராவதி, 5. உஜ்ஜைநீ
துவாதச யாத்ரா : துவாதச யாத்ராவில், பிசாச மோசன் தீர்த்தத்திலிருந்து ஆரம்பித்து 12 தேவ மூர்த்திகளை வணங்கு கிறார்கள்.
ஸப்த ஸாகர் யாத்ரா : ஸப்த ஸாகர் யாத்திரையில் 7 தீர்த்தங்கள் அடங்கும்.
இங்கு 13 தேவீ ஸ்தானங்கள் மஹிமையுடன் விளங்கு கின்றன. அவந்திகா க்ஷேத்திரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அனேக சிவலிங்கங்களில் 84 முக்கியமானவையாகும்.
விஷ்ணு பகவானின் மஹிமை. உஜ்ஜைன் நகரின் சரித்திரத் திலும், பூகோளத்திலும், கதைகளிலும் மேலும் தத்துவத்திலும் காணக் கிடைக்கிறது. ஸாந்தீபநி ஆச்ரமம், மேலும் கிருஷ்ண பகவானின் விவரம் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.
சமுத்திர மந்தன் சமயம் மோஹினீ ரூபத்தில் அமுதம் வினியோகிக்கும் ஸமயம் இங்குதான் ராகு/கேது தலையைத் துண்டித்ததாகவும், லக்ஷ்மீ தேவியுடன் பத்மா தேவி எழுந்தருளி யதால் இந்த இடம் பத்மாவதிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மஹாராஜ் இந்திரத்யும்னனுக்கு இங்குதான் விஷ்ணு பகவானின் அருள் கிடைத்தது. அதன்படி உள்ளுணர்வு தூண்டுதலால் ஆயிரக் கணக்கான மைல்கள் யாத்திரை செய்து நீலாஞ்சலில் (கிழக்கு சமுத்திரக் கரை) விஷ்ணு பகவானைத் தரிசித்தார். அவருடைய நியமனப்படி புரீயில் கோயில் கட்டி ஜகன்னாத பகவானை பிரதிஷ்டை செய்தார்.
பகவான் மஹாவிஷ்ணு இங்கு மிகுந்த வைபவத்துடன் விளங்குகிறார். பிரம்மாவும் சிவனும் இங்கு புனித சுவர்ண சிகரத்தின்கீழ் அமர்ந்து, அருள் பாலிக்கும் விஷ்ணு பகவானைத் தரிசிக்க வந்தனர். அது சமயம் மஹாவிஷ்ணு அவர்களின் விருப்பப்படி உஜ்ஜைன் நகரத்தின் வடதிசையில் பிரம்மாவையும், மகாதேவனைத் தெற்கேயும் எழுந்தருளச் செய்தார். அதனால் இந்த இடம் “கனக ச்ருங்கா” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த க்ஷேத்திரத்தில் விஷ்ணு தத்துவம், சிவ தத்துவம் இரண்டும் சமமாக வளர்வதைக் காண்கிறோம். வைகுண்ட சதுர்தசி தினம் (கார்த்திக் சுக்ல பக்ஷம்) மஹாகாளேச்வர், கோபால மந்திருக்குப் புறப்பாடு கண்டு அருளும் சமயம், அங்கு கிருஷ்ண பகவானுக்கு வில்வ பத்ரம் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்துடன் பஸ்ம-விபூதி பூஜை சமயம் கோபால பகவான் மஹா காளேச்வர் கோயிலுக்கு புறப்பாடு கண்டருளி அங்கு துளசி சமர்ப்பிக்கப்படுகிறது. உஜ்ஜைன் நகரத்தில், விஷ்ணு பகவானுக்கும், சிவனுக்கும் பேதம் பாராட்டுவ தில்லை. இந்த ஒற்றுமை, சமன்வயம் ஆதர்சமாக-சீரிய முன்மாதிரி யாக விளங்குகிறது. பரஸ்பர வைபவங்கள் அநேகம் உண்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக