வியாழன், 24 டிசம்பர், 2015

ஸ்ரீ தத்தாத்ரேய ஜெயந்தி

 
கலியில் மக்கள் உய்ய வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம ஸ்வரூபமே.
சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு, ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது.
மார்க்கண்டேயனைப் போல, ஹனுமனைப் போல தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி.
அத்ரி என்று ஒரு மஹரிஷி, இவரது மறுபாதியே அனுசூயை. இவர்கள் தமக்கு புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்தனர். அப்போது மும்மூர்த்திகளும் அவர்கள் முன்பு தோன்றி, தாங்கள் மூவரும் அத்ரி-அனுசூயைக்கு மகனாகப் பிறப்பதாக வாக்களிக்கின்றனர். அவ்வாறு தோன்றியவரே தத்தாத்ரேயர்.
 
மும்மூர்த்திகளும் தானே வந்து அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் 'தத்த' என்ற பெயர் வந்ததாகச் சொல்வர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார்.
 
இவர் பிறந்தது மார்கழி மாதத்து பெளர்ணமி, மிருகசீர்ஷ நக்ஷத்திரம்.
 
இந்த அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஸ்தாணுமாலயனாக இறைவன் இங்கே இருக்கிறார்.
 யாயாதி ராஜ வம்சத்தில் வந்த கர்த்தவீர்யார்ஜுனன் தத்தரது சிஷ்யர்களுள் ஒருவன். இவனது குல-குரு கர்க்க மஹரிஷியின் மூலம் தத்தாத்ரேயரைப் பற்றி அறிந்து அவரை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெறுகிறான்.
வரங்களை அளித்து அவனுக்கு தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கர்த்த வீர்யார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள்.
தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவர்.
பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ தத்தாத்ரேயர். இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது.
பாரதத்தின் பல இடங்களிலும் பாதுகைகளில் இவரை தியானித்து வணங்கக் கோவில்கள் இருக்கிறது. உத்ரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிப்பதாக இருக்கிறதாம். பிரயாகையில் இவரது கோவில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல இமாலயத்தில், ஆத்ரேய மலைப்பகுதியில் ஒரு குகையில் பலகாலம் தத்தர் தவம் செய்ததாகவும், அந்த குகையின் பெயரே தத்த குகை என்றும்கூறுவர் . 
இதேபோல காவிரி உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகிலும், சித்ரதூர்க்கா மலையிலும், குல்பர்கா அருகில் கங்காப்பூர் என்னும் இடத்திலும் இவர் தவம் செய்த குகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கர்னாடகாவில் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
 
 
 
 
 

செவ்வாய், 22 டிசம்பர், 2015

குருவாயூர் குசேலர் தினம்



மார்கழி மாத முதல் புதன் கிழமை குசேலர் தினமாக குருவாயூரில் கொண்டாடப்படுகிறது.

குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க ஆவலுடன் அவல்  கொண்டு சென்ற தினம் மார்கழி மாத முதல் புதன் கிழமை.

ஆகவே அன்றைய தினம் குருவாயூரப்பனுக்கு அவலும், அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது.

அன்றைய தினம் ஸ்ரீ கிருஷ்ணர் குசேலருக்கு அருள் செய்த தினமாதலால் பக்தர்கள் இலையில் அவலும், அச்சு வெல்லமும் கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.

அன்று பக்தர்கள் படிகணக்கில் அவல் தானம் செய்வார்கள்.

அன்றைய தினம் குருவாயூரப்பனுக்கு அவல் படைத்து வணங்குவதால் ஐஸ்வர்யம் பெருகும்.
 

ஸ்ரீசுதர்சனர் மாலா மந்திரம்


செல்வம், நீண்ட ஆயுள்,உடல் நலம் தரும் ஸ்ரீசுதர்சனர் மாலா ம்ந்திரம்:


ஒம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீ:
ஜன வல்லபாய பராய பரமபுருஷாய
பரமாத்மனே பரகர்ம-மந்த்ர யந்த்ர தந்த்ர
-ஒளஷத அஸ்த்ர சாஸ்த்ராணி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய!
 
 ஒம் நமோ பகவதே! மஹா ஸுதர்சனாய தீப்த்ரே
ஜ்வாலா-பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய
ஹும் பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!
 
 
ஸ்ரீசுதர்சனர் காயத்ரி:
 
 ஓம் ஸுதர்சனாய வித்மஹே 
ஜ்வால சக்ராய தீமஹி 
தன்ன சக்ர ப்ரசோதயாத்!
 
 

மகா தானம்



காராம் பசு

குதிரை

எள்

யானை

தேர்

வீடு (நிலம்)

தங்கம்

ரத்தினம் (நவரத்தினம்)

ஆகியவற்றை தானம் செய்வது  மகாதானம் ஆகும்.

பூஜைகளில் செய்யக்கூடாதவை


விநாயகர்- துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது.
விஷ்ணு - அட்சதை, ஊமத்தைபூ, எருக்கம்பூ இவைகளால் அர்ச்சனை  செய்யக்கூடாது.
துர்க்கை---அருகம்புல் அர்ச்ச்னை செய்யக்கூடாது
சூரியன் ---வில்வம்,நெல்லி இலை அர்ச்சனை செய்யக்கூடாது.
லட்சுமி ---தும்பைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
சரஸ்வதி--பவள புஷ்பத்தால் அர்ச்சனை செய்யக்கூடாது.
பைரவர்---மல்லிகைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
பரமசிவன் - தாழம்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.

எந்த தெய்வத்திற்கும் செண்டு மல்லிகையோ, ஏனைய வாசமற்ற மலர்களையோ பயன் படுத்தக்கூடாது.
 
துலுக்க சாமந்திப்பூவை பூஜைக்கு பயன்ப்டுத்தக்கூடாது.

உணவு, பூஜை, மங்கல காரியம், ஜபம், ஹோமம்,மக்கள்,கூடுமிடம் ஆகிய இடங்களில் மூக்கை சிந்துவதோ,காரிஉழிழ்வதோ கூடாது.
 
விளக்கின் சுடரை கையால் தொடக்கூடாது. தொட்டால் குளிக்கவேண்டும்.

தான் செய்த புண்ணியத்தை தானம் செய்யக்கூடாது.

கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்வது, பூனை வாய் வைத்த சாதத்தை, உணவுப் பொருட்களை சாப்பிடுவது, நீரிலே தன்னுடைய நிழழை பார்ப்பது இவைகள் எவ்வளவு பெரிய பணக்காரனையும் ஏழையாக்கிவிடும்.

கிழமையும் தானமும்


ஞாயிறு - சர்க்கரை பொங்கல், பாயாசம்
திங்கள் -- பால்
செவ்வாய் - வாழைப்பழம்
புதன் -- வெண்ணைய்
வியாழன் - சர்க்கரை
வெள்ளி -வெள்ளை சர்க்கரை
சனி -- பசும் நெய்

நட்சத்திரத்திற்குரிய மரங்கள்


அசுவணி----எட்டி
பரணி ----நெல்லி
கார்த்திகை--அத்தி
ரோகிணி ---நாவல்
மிருகசீரிடம்-கருங்காலி
திருவாதிரை-செம்மரம்
புனர்பூசம் --மூங்கில்
பூசம் -----அரசு
ஆயில்யம்--புன்னை
மகம் ---ஆல்
பூரம் ----பலா
உத்திரம் --அலரி
அஸ்தம்---வேலம்
சித்திரை--வில்வம்
சுவாதி----மருது
விசாகம்--விலா
அனுஷம்--மகிழம்
கேட்டை--குட்டிப்பலா
மூலம்----மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம்-சக்கைப்பலா
திருவோணம்-எருக்கு
அவிட்டம்---வன்னி
சதயம்-----கடம்பு
பூரட்டாதி -கருமருது
உத்திரட்டாதி-வேம்பு
ரேவதி------இலுப்பை