புதன், 23 அக்டோபர், 2019

ஸ்ரீ வராஹி அன்னை!

பக்தர்கள் வேண்டும் வரத்தை தரும் வராஹி அம்மன் வராஹி. மனித உடலும், வராஹ முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும் .

 ஸ்ரீ வராஹிஅன்னை திருவடிகளே சரணம்

ஸ்ரீ வராஹிஅன்னைக்கு பல நாமங்கள் உள்ளன :
சேனநாதா ,
தண்டநாதா,
வராஹி,
பஞ்சமீ,
கைவல்யரூபி ,
வீரநாரி,
கிரியா தேவி,
வார்த்தாளி,
தூமாவதி(வடிவம்),
பலிதேவதா ,
ஸங்கேதா ,
ஸமயேஸ்வரி ,
மகாசேனா ,
அரிக்னீ,

பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி ன் நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.
இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான வராஹி அம்மன் பக்தர்கள் வேண்டிக் கொள்வதை வழங்கக் கூடியவள். விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை அருள்பவள். பயிர்களை விளைவிப்பதும், பலன்தருவதும் கடமையாக கொண்டவள். அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம்.

வராஹி காயத்திரி :
ஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தலே அவளை அடையும் உபாயம் எளிய வழி அன்னையின் பக்தனுக்கு மட்டுமே

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி :
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

தியான சுலோகம் :
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி மூல மந்திரம் :
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
4) செல்வம் பெருக
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II
காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!

 பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!

 1.ஓம் கேசவாய நமஹ!
2.ஓம் சங்கர்ஷனாய நமஹ!
3.ஓம் நாராயணாய நமஹ!
4.ஓம் வாசு தேவாய நமஹ!
5.ஓம் மாதவாய நமஹ!
6.ஓம் ப்ரத்யும்னாய நமஹ!
7.ஓம் கோவிந்தாய நமஹ!
8.ஓம் அனிருத்தாய நமஹ!
9.ஓம் விஷ்ணவே நமஹ!
10.ஓம் புருஷோத்தமாய நமஹ!
11.ஓம் மதுசூதனாய நமஹ!
12.ஓம் அதோஷஜாய நமஹ!
13.ஓம் த்ரிவிக்மாய நமஹ!
14.ஓம் லஷ்மி நரசிம்ஹாய
நமஹ!
15.ஓம் வாமனாய நமஹ!
16.ஓம் அச்சுதாய நமஹ!
17.ஓம் ஸ்ரீதராய நமஹ!
18.ஓம் ஜனார்தனாய நமஹ!
19.ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!
20.ஓம் உபேந்த்ராய நமஹ!
21.ஓம் பத்மநாபாய நமஹ!
22.ஓம் ஹரயே நமஹ!
23.ஓம் தாமோதராய நமஹ!
24.ஓம் கிருஷ்ணாய நமஹ!

யார் ஒருவர் தினமும் மேற்கண்ட ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்.

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு!

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு!
1.பஞ்ச பூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
2. பஞ்சாட்சரம்
நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
சி - மகா காரண பஞ்சாட்சரம்
3.சிவமூர்த்தங்கள்
1.பைரவர் -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி
4.நடராசர் -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி
4.பஞ்சலிங்க சேத்திரங்கள்
1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம் -நேபாளம்
3.போகலிங்கம் -சிருங்கேரி
4.ஏகலிங்கம் -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்
5.பஞ்சவனதலங்கள்
1.முல்லை வனம் -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -அவளிவணல்லூர்
3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி
4.பூளை வனம் -திருஇரும்பூளை
5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர்
6.பஞ்ச ஆரண்ய தலங்கள்
1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு -திருப்பாசூர்
3.ஈக்காடு -திருவேப்பூர்
4.ஆலங்காடு -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு -திருவிற்குடி
7.பஞ்ச சபைகள்
1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம் -பொன் சபை
3.மதுரை -வெள்ளி சபை
4.திருநெல்வேலி -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை
8.ஐந்து முகங்கள்
1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு
9.ஐந்தொழில்கள்
1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்
10.ஐந்து தாண்டவங்கள்
1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்
11.பஞ்சபூத தலங்கள்
1.நிலம் -திருவாரூர்
2.நீர் -திருவானைக்கா
3.நெருப்பு -திருவண்ணாமலை
4.காற்று -திருக்காளத்தி
5.ஆகாயம் -தில்லை
12.இறைவனும் பஞ்சபூதமும்
1.நிலம் - 5 வகை பண்புகளையுடையது
(மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர் - 4 வகை பண்புகளையுடையது
(சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது
(ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று - 2 வகை பண்புகளையுடையது
(ஊறு ,ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
(ஓசை )
13.ஆன் ஐந்து
பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்
14.ஐங்கலைகள்
1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை
15.பஞ்ச வில்வம்
1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்
16. ஐந்து நிறங்கள்
1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு - வெண்மை நிறம்
17.பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்
18.இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து
1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்
19.பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்.
*நம பார்வதி பதயே
ஹரஹர மகாதேவா*
#தென்னாட்டுடைய சிவமே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!



வியாழன், 15 ஆகஸ்ட், 2019

சகல நன்மைகளும் தரும் சரஸ்வதி அந்தாதி!

சரஸ்வதி அந்தாதி!

கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியை நித்தமும் அல்லது சரஸ்வதி பூஜையன்றோ பாராயணம் செய்பவர் வாழ்வில் சகல விதமான ஞானங்களும், செல்வமும் நிறையும்.

#காப்பு
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி. நூல்.

கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல்
தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1

வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல்
சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால்
உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2

உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லர் மெண்ணில் உன்னையன்றித்
தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை
வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3

இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்தமூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலாவிடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4

அருக்கோதயத்தினும் சந்திரோதயமொத்து அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப்பாவை திசைமுகத்தான்
இருக்கோது நாதனும் தானுமெப்போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே. .. 5

மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூரிருட் கோர்
வெயிலே நிலவெழுமேனி மின்னே யினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே. .. 6

பாதாம்புயத்தில் பணிவார் தமக்குப் பல கலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறலரிதாவது எனக்கினியே. .. 7

இனி நான் உணர்வது எண்ணெண் கலையாளை இலகு தொண்டைக்
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமல அயன்
தனிநாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப்
பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே. .. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பாளிடம் விதியின் முதிய
நாவும் பகர்ந்த தொல்வேதங்கள் நான்கும் நறுங்கமலப்
 பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே. .. 9

புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ
அந்தியில் தோன்றிய தீபமென்கோ நல அருமறையோர்
சந்தியில் தோன்றும் தபமென்கோ மணித்தாமமென்கோ
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே. .. 10

ஒருத்தியை ஒன்றும் இலாளன் மனத்தின் உவந்து தன்னை
இருத்தியை வெண்கமலத்திருப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தையெல்லாம்
திருத்தியை யான்மறவேன் திசைநான்முகன் தேவியையே. .. 11

தேவரும் தெய்வப்பெருமானும் நான்மறை செப்புகின்ற
மூவரும் தானவர் ஆகியுள்ளோரும் முனிவரரும்
யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த
பூவரும் மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே. .. 12

புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே. .. 13

வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போத உருவாகி ஏங்கும் பொதிந்த விந்து
நாதமும் நாத வண்டார்க்கும் வெண்டாமரை நாயகியே. .. 14

நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞான இன்பச்
சேயகம் ஆன மலரகம் ஆவதும் தீவினையா
லே அகம் மாறிவிடும் அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும்
தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே. .. 15

சரோருகமே திருக்கோயிலும் கைகளும் தாளிணையும்
உரோருகமும் திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்
ஒரோருகம் ஈரரை மாத்திரையான உரை மகட்கே. .. 16

கருந்தாமரை மலர் கண்தாமரை மலர் காமருதாள்
அருந்தாமரை மலர் செந்தாமரை மலர் ஆலயமாத்
தருந்தாமரை மலர் வெண்டாமரை மலர் தாவிலெழில்
பெருந்தாமரை மணக்குங் கலை கூட்டப் பிணை தனக்கே. .. 17

தனக்கே துணிபொருள் என்னும் தொல் வேதம் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும் இமையவர் தாம்
மனக்கே தம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான்
கணக்கேச பந்திக் கலை மங்கை பாத கமலங்களே. .. 18

கமலந்தனிலிருப்பாள் விருப்போடங் கரங்குவித்துக்
கமலங் கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந் தனைக் கொண்டு கண்டொருகால் தம் கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே. .. 19

காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும் ஓர் நான் மருப்பு
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே. .. 20

அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே தவன முளரிமின்னே முடியா இரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21

வேறிலை என்றுன் அடியாரிற் கூடி விளங்கு நின்பேர்
கூறிலையானும் குறித்து நின்றேன் ஐம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்கால் நின் மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள் வெண்டாமரை மலர்ச் சேயிழையே. .. 22

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலாமுறப் போதிக்கலாம் சொன்னதே துணிந்து
சாதிக்கலாமிகப் பேதிக்கலாம் முத்தி தானெய்தலாம்
ஆதிக்கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவரே. .. 23

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றிலர் யாரைத் தொழுவதுவே. .. 24

தொழுவார் வலம் வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து
விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகித்து
அழுவார் இனுங் கண்ணீர் மல்குவார் என் கண்ணின் ஆவதென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே. .. 25

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
 உய்க்கும் பொருளும் கலைமாது உணர்த்தும் உரைப்பொருளே. .. 26

பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ
மருளாத சொற்கலைவான் பொருளோ பொருள் வந்து வந்தித்து
அருளாய் விளங்குமவர்க்கு ஒளியாய் அறியாதவருக்கு
இருளாய் விளங்கு நலங்கிளர்மேனி இலங்கிழையே. .. 27

இலங்கும் திருமுகம் மெய்யிற்புளகம் எழும் விழிநீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே
துலங்கும் முறுவல் செயக்களிகூரும் சுழல்புனல் போல்
கலங்கும் பொழுது தெளியுஞ்சொல்மானைக் கருதினர்க்கே. .. 28

கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும்
புரியார்ந்த தாமரையும் திருமேனியும் பூண்பனவும்
பிரியாவென் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. .. 29

பெருந்திருவும் சயமங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளருளும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ் சீர் தருமே. .. 30

சரசுவதி அந்தாதி முற்றுப்பெற்றது.


திங்கள், 12 ஆகஸ்ட், 2019

சம்பத்து நட்சத்திரங்கள்!

  1. உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள்.

    அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான்இருக்கும்.


    வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.

    புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம்.

    புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை. வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா!

    சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்மை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தானே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.

    சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

    இதை எப்படி அறிந்துகொள்வது?

    உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

    அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்

    பரணி, பூரம், பூராடம்

    பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்

    கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    ரோகிணி, அஸ்தம்,திருவோணம்

    ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்

    மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

    மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    திருவாதிரை, சுவாதி,சதயம்

    திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

    புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    பூசம், அனுசம்,உத்திரட்டாதி

    பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    ஆயில்யம்,கேட்டை,ரேவதி

    ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    மகம், மூலம்,அசுவினி

    மகம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    பூரம்,பூராடம்,பரணி

    பூரம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

    உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

    அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்

    சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    சுவாதி,சதயம்,திருவாதிரை

    சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

    விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

    அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    கேட்டை,ரேவதி,ஆயில்யம்

    கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    மூலம், அசுவினி,மகம்

    மூலம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    பூராடம்,பரணி,பூரம்

    பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

    உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    திருவோணம், ரோகிணி,அஸ்தம்

    திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை

    அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    சதயம்,திருவாதிரை,சுவாதி

    சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்

    பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    உத்திரட்டாதி, பூசம், அனுசம்

    உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    ரேவதி,ஆயில்யம்,கேட்டை

    ரேவதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

    அசுவினி,மகம்,மூலம்

    இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ... அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.

    இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.

    இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன்.

    நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்தநட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... சம்பத்து நட்சத்திரங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும்!

    உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்.

    சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர்.

    இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை” பயன்படுத்தி அழியாப் புகழுடன்இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையைஅமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும்சிறப்புமாக்குவோம்!

புதன், 31 ஜூலை, 2019

shri vaaraahi!


ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ்வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங்களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.

அவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.

வாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.

வாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்
வாராகி உதித்த திதி:- பஞ்சமி (வளர்பிறை)
வாராகி உதித்த மாதம்:-ஆடி
வாராகிக்கு உகந்த நிறம் :- நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ் திரமே முதன்மையானது.
வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
வாராகிக்கு வலிமை கூடும் நாள்:- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம்:- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு
பிடித்த அமுது:- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.

பூர்வபுண்ணிய படி யாரெல்லாம் வாராகியை நாடுவார்கள்?....

ஒருவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள். பிறக்கும் போதே ஜாதகத்தில் (சனி+கேது) அல்லது சனிக்கு(1,5,9) எனும் திருகோண ஸ்தானங்கள் கேது அமர்ந் தாலும் அன்னையின் அருள் எளிமையாக கிட்டும். மேலும் பனிரெண்டாம் இடத்தில் ராகு அமைய பெற்றவரும் (சுக்ரன்+புதன்+ ராகு) சேர்க்கை பெற்று பாவத்தில் அமைந்தவர் அன்னை பிறக்கும் போதே தேடி வருவாள், ராகு என்பவனே ஜோதிடத்தில் மாந்திரீக சக்தி, சித்திக்கு அதிபதி. அவர் மோட்ச ஸ்தானம் எனும் 12-ம் இடத்தில் அமரும் போது நிச்சயம் இப்பிறப்பில் அவன் ‘வாராகி’-யை நாடியே தீர வேண்டும் அவள் அருள் பெற வேண்டும் என்பதே நியதி,

வாராகி எனும் நாமமே இனி நம்மை கரை சேர்க்க இருக்கின்றது. சிங்கத்தின் மீதேறி அண்டமெல்லாம் அஞ்சிநடுங்க அதர்மங்கள் ஒடுங்கி ஓட, சத்ருக்கள் குடலை பிடுங்கி வீச வருகிறாள் வாராகி.

இனி உங்கள் வாழ்வில் வசந்தமே. வரம் தர வாழ்வு தர வர இருக்கிறாள் வாரம் தோறும், இனி உங்கள் வாழ்வில் அனைத் தும் சுகமே, நிம்மதியே. செல்கின்ற இடமெல்லாம் அன்னையால் வெகுமதியே

யார் கையில் எல்லாம் யார் இல்லங்களில் எல்லாம் இந்த மலர் செல்கின்றதோ அங்கெல்லாம் அவள் அமர்ந்து ஆட்சி செய்ய இருக்கிறாள் என்று அர்த்தம்...


வியாழன், 28 ஜூன், 2018

அதிஷ்ட வாய்ப்புகளுக்கான தூபம்.!!!!!

வீட்டில் உள்ள பஞ்சத்தை போக்கி வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்றும் பஞ்ச மூலீகை தூபம் :-


நன்னாரி ,
லவங்கப்பட்டை ,
சந்தனம்
வெண் குங்கிலியம்
மற்றும் வெள்ளைப்போளம்


எடுத்து கொள்ளவும் , இவை அனைத்தையும் ஒன்றாக பொடித்து வைத்து கொள்ளவும் ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற வாரம் ஒரு முறை இந்த பொடியை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.



அதிஷ்ட வாய்ப்புகளுக்கான தூபம்.!!!!!


ஏலக்காய் / கிராம்பு ( பொடித்து வைத்து கொள்ளவும் ) இவை இரண்டையும் சாம்பிராணி உடன் கலந்து தினம்தோறும் நாம் தங்கும் இடத்தில் ( வீடு , விடுதி ) தூபம் போட்டால் , நாம் முன்னேற்ற பாதையில் செல்ல அதிஷ்ட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
குறிப்பாக வீட்டு வாசலில் போடவும்.