புதன், 31 ஜூலை, 2019
shri vaaraahi!
“ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ்வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங்களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.
அவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.
வாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.
வாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்
வாராகி உதித்த திதி:- பஞ்சமி (வளர்பிறை)
வாராகி உதித்த மாதம்:-ஆடி
வாராகிக்கு உகந்த நிறம் :- நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ் திரமே முதன்மையானது.
வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
வாராகிக்கு வலிமை கூடும் நாள்:- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம்:- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு
பிடித்த அமுது:- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.
பூர்வபுண்ணிய படி யாரெல்லாம் வாராகியை நாடுவார்கள்?....
ஒருவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள். பிறக்கும் போதே ஜாதகத்தில் (சனி+கேது) அல்லது சனிக்கு(1,5,9) எனும் திருகோண ஸ்தானங்கள் கேது அமர்ந் தாலும் அன்னையின் அருள் எளிமையாக கிட்டும். மேலும் பனிரெண்டாம் இடத்தில் ராகு அமைய பெற்றவரும் (சுக்ரன்+புதன்+ ராகு) சேர்க்கை பெற்று பாவத்தில் அமைந்தவர் அன்னை பிறக்கும் போதே தேடி வருவாள், ராகு என்பவனே ஜோதிடத்தில் மாந்திரீக சக்தி, சித்திக்கு அதிபதி. அவர் மோட்ச ஸ்தானம் எனும் 12-ம் இடத்தில் அமரும் போது நிச்சயம் இப்பிறப்பில் அவன் ‘வாராகி’-யை நாடியே தீர வேண்டும் அவள் அருள் பெற வேண்டும் என்பதே நியதி,
வாராகி எனும் நாமமே இனி நம்மை கரை சேர்க்க இருக்கின்றது. சிங்கத்தின் மீதேறி அண்டமெல்லாம் அஞ்சிநடுங்க அதர்மங்கள் ஒடுங்கி ஓட, சத்ருக்கள் குடலை பிடுங்கி வீச வருகிறாள் வாராகி.
இனி உங்கள் வாழ்வில் வசந்தமே. வரம் தர வாழ்வு தர வர இருக்கிறாள் வாரம் தோறும், இனி உங்கள் வாழ்வில் அனைத் தும் சுகமே, நிம்மதியே. செல்கின்ற இடமெல்லாம் அன்னையால் வெகுமதியே
யார் கையில் எல்லாம் யார் இல்லங்களில் எல்லாம் இந்த மலர் செல்கின்றதோ அங்கெல்லாம் அவள் அமர்ந்து ஆட்சி செய்ய இருக்கிறாள் என்று அர்த்தம்...
வியாழன், 28 ஜூன், 2018
அதிஷ்ட வாய்ப்புகளுக்கான தூபம்.!!!!!
வீட்டில் உள்ள பஞ்சத்தை போக்கி வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்றும் பஞ்ச மூலீகை தூபம் :-
நன்னாரி ,
லவங்கப்பட்டை ,
சந்தனம்
வெண் குங்கிலியம்
மற்றும் வெள்ளைப்போளம்
எடுத்து கொள்ளவும் , இவை அனைத்தையும் ஒன்றாக பொடித்து வைத்து கொள்ளவும் ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற வாரம் ஒரு முறை இந்த பொடியை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
அதிஷ்ட வாய்ப்புகளுக்கான தூபம்.!!!!!
ஏலக்காய் / கிராம்பு ( பொடித்து வைத்து கொள்ளவும் ) இவை இரண்டையும் சாம்பிராணி உடன் கலந்து தினம்தோறும் நாம் தங்கும் இடத்தில் ( வீடு , விடுதி ) தூபம் போட்டால் , நாம் முன்னேற்ற பாதையில் செல்ல அதிஷ்ட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
குறிப்பாக வீட்டு வாசலில் போடவும்.
வியாழன், 4 ஜனவரி, 2018
சூட்சும விஞ்ஞானம் ...!
சூட்சும விஞ்ஞானம் ...!
1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
39. சூரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
நரசிம்மர் ஒரு வேடனிடம கட்டுண்ட கதை !!
!! அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம கட்டுண்ட கதை !!
பக்தியால் நம்மால் சாதிக்க முடியாதது என்று எதுவும் உண்டா?
அண்டசராசரங்களையும் கிடுகிடுக்க வைத்த நரசிம்ம மூர்த்தி, இதோ ஒரு வேடனுக்கு கட்டுண்ட கதையை படியுங்கள். உங்களுக்கே புரியும்.
ஆதிசங்கரரின் சீடர்களுள்
முக்கியமானவர் பத்மபாதர். கங்கை ஆற்றின் ஓரம் ஒரு முறை ஆதிசங்கரர் நின்று கொண்டிருக்கையில் கரையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்பதை காண்கிறார். தனது சீடனை “உடனே வா” என்று அழைக்கிறார்.

குருநாதர் அழைக்கிறாரே என்று எதை பற்றியும் கவலைப்படாது அப்படியே ஆற்றின் மீது கால் வைத்து நீர் மேல் நடக்க ஆரம்பித்துவிட்டார் பத்மபாதர்.
என்ன ஆச்சரியம் அவரது குருபக்திக்கு கட்டுப்பட்டு, கங்காதேவி அவர் ஒவ்வொரு முறை பாதத்தை எடுத்துவைக்கும்போதும் ஒரு தாமரை மலரை தோன்றச் செய்தாள்.
அதன் மீது நடந்து வந்துவிட்டார் பத்மபாதர்.
பிறகு தான் தெரிந்தது தான் தாமரை பூக்கள் மீது நடந்து வந்தது. “எல்லாம்…. குருநாதரின் மகிமை” என்று மெய்சிலிர்த்து ஆதி சங்கரரின் கால்களில் வீழ்ந்தார்.

அது முதல் தான் அவருக்கு ‘பத்மபாதர்’ என்று பெயர் ஏற்பட்டது.
மிக தீவிர நரசிம்ம பக்தரான இவருக்கு எப்படியாவது நரசிம்மரை நேரில் காணவேண்டும் என்று ஆவல் மேலிட்டது. ஆவல் கடைசியில் வைராக்கியமானது. எப்படியாவது நரசிம்மரை நேரில் கண்டு விட வேண்டும் என முடிவு எய்து காட்டில் கடும் தவமிருந்தார்.

ஒருநாள் அவ்வழியே ஒரு வேடன் வந்தான். தண்ணீரோ உணவோ இன்றி பத்மபாதர் பல நாட்களாக அங்கு அமர்ந்திருப்பதை (தியானம் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது) அறிந்துகொள்கிறான்.
“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…” என்றான்.
“என்னை தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”.

“அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான்.
“நான் நரசிம்ம பிரபுவை எண்ணி தவமிருக்கிறேன்”.
“நரசிம்மமா? அப்படின்னா என்ன?”
வேடன் புரியாது கேட்கிறான்.
“சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”

“நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்!
இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். “இவனுக்கு எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிக்கொண்டார்.
வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக தேடி அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான்.
மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி விட்டது.
“ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! கந்தா… அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.
இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு அர்பணிப்பு கண்டு அந்த ஸ்ரீ மன் நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானார்.
“ஆகா! மாட்டிகிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான்.
வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றது.
நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.
“சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”.

பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பது தான் தெரிந்தது.
“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?” என்றபடி ஏளனமாய் சிரித்தார்.
“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது…. நல்லா பாருங்க…” வேடன் கூறுகிறான்.
அப்போது ஒரு அசரீரி கேட்டது.
“பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான்.

என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய்.
தவிர ஆணவமும் கொண்டாய்….உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.
ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி பத்மபாதர் வெட்கி தலைகுனிந்தார். அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.
ஆதிசங்கரரின் வராலற்றில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது.
!! நமஸ்தே நரசிம்மாயா !!
ஞாயிறு, 12 நவம்பர், 2017
சர, ஸ்திர, உபய ராசி!
ராசிகளில் சர ராசி; ஸ்திர ராசி; உபய ராசி என்று இருக்கிறது.
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும்.
சரராசி என்றால் என்ன பொருள்? சரம் என்றால் இயங்கிக் கொண்டே இருப்பது என்று பொருள்.
ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள்.
உபயம் என்றால் ஒரேநிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள்.

புதன், 27 செப்டம்பர், 2017
கார்த்திகை (சுக்ல பட்ச) நந்த சப்தமி!
நந்த சப்தமி
கார்த்திகை சுக்ல பட்ச மாத வளர்பிறை சப்தமி திதியை நந்த சப்தமி என்று வழிபடுவர்.
அன்றைய தினம் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சிறப்பு.
பசுவின் உடலில் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். "உபநிடதங்கள் அனைத்தும் பசுக்கள்; அதை மேய்ப்பவனும் கறப்பவனும் கிருஷ்ணன்' என்று பகவத்கீதை கூறுகிறது.
பசுவுக்கு "ரிக்வேதம்' பின்பக்கமாகும். யஜுர் வேதம் நடுப்பகுதி. சாம வேதம் முகமும், கழுத்துமாகும். இஷ்டம், பூரிதம் ஆகியன இருகொம்புகள். பசுவின் ரோமங்கள் சகல சூக்தங்கள். சாந்தி கர்மாவும், புஷ்டி கர்மாவும் கோமயம். வேதம் வகுத்த நான்கு வர்ணங்கள் பசுவின் பாதங்கள். ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், ஹந்த் என்ற நான்கும் பால்சுரக்கும் தனங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடையும்போது பல அரிய பொருட்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று காமதேனு என்கிறது புராணம். காமதேனுவின் வாரிசாக பல பசுக்கள் பூவுலகில் தோன்றின. அவற்றுள் சிறப்புமிக்க நால்வகை தெய்வப் பசுக்களில் சுஷுதையை இந்திரனுக்கும், கபிலையை எமனுக்கும், ரோஹினியை வருணனுக்கும், காமதேனுவை குபேரனுக்கும் வழங்கினாராம் மகாவிஷ்ணு.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதால் பசுவை எங்கு கண்டாலும், அதனைத் தொட்டு வணங்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது! குறிப்பாக பசுவின் பின்புறம் சாணம் வெளிப்படும் பகுதியில் தொட்டு வணங்கினால் மகாலட்சுமியின் அருள்கிட்டும். அந்தப் பகுதியில்தான் மகாலட்சுமி வாசம் செய்வதாக வேதங்கள் கூறுகின்றன.
பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், சாணம், கோமயம் இவை ஐந்துமே "பஞ்ச கவ்யம்' எனப்படுகிறது. ஆனால் ஒரே பசுவிடமிருந்து பஞ்ச கவ்யம் தயாரிக்கக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
"ஆன்-ஐந்து' என்பது பஞ்ச கவ்யத்திற்கு இணையான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லே தேவாரத் திருமுறைகளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
பசுவின்பால் ஐந்து பங்கு, பசுவின் தயிர் மூன்று பங்கு, நெய் இரண்டு பங்கு, பசுவின் சிறுநீர் ஒரு பங்கு, பசுஞ்சாணம் கைப்பெருவிரல் அளவில் பாதி சேர்த்து ஒரு வெள்ளிப்பாத்திரம் அல்லது தாமிரப் பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, அதற்குரிய மந்திரம் சொல்லிப் பூஜை செய்தபின், அந்தப் பஞ்ச கவ்யத்தின் ஐந்து பொருட்களும் ஒவ்வொரு தேவதைக்கு உரித்தாகிறது. கோஜலத்துக்கு வருணனும், சாணத்துக்கு அக்கினியும், பாலுக்கு சந்திரனும், தயிருக்கு, வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.
மின்னும் செந்நிறப் பசுவிடமிருந்து கோநீரையும், வெள்ளைப் பசுவிட மிருந்து சாணத்தையும், பொன்னிறப் பசுவிடமிருந்து பாலையும், நீலநிறப் பசுவினிடமிருந்து தயிரினையும், கருநிறப் பசுவினிடமிருந்து நெய்யினையும் கொள்ளின் நலமெனப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.
பஞ்ச கவ்யம் தயாரிக்கும்பொழுது காயத்ரி மந்திரத்தைச் சொல்லி கோநீரையும், "கந்தத்வாராம்' என்ற மந்திரத்தால் பசுஞ்சாணத்தையும், "ஆபயாயஸ்ய' என்று தொடங்கும் மந்திரத்தால் பசும்பாலையும், "ததிக்ராப்னோ' என்று தொடங்கும் மந்திரத்தால் பசுந்தயிரையும் "சூக்ரமஸி' என்று தொடங்கும் மந்திரத்தால் பசு நெய்யையும், "தேவ ஸ்யாத்வா' என்ற மந்திரத்தால் தத்துவதீர்த்தத்தையும் மந்திரித்து சேர்த்து தயாரிப்பதே மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச கவ்யம் எனப்படுகிறது.
இந்தப் பஞ்ச கவ்யத்தை தினமும் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பூஜித்து அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும், உடல் வளம்பெறும்.
பஞ்ச கவ்யம் சிவ வழிபாட்டிலும், விஷ்ணு வழிபாட்டிலும் இடம்பெறுகிறது. இறைவனுக்கு அபிஷேகிக்கப்பட்ட பஞ்ச கவ்ய பிரசாதத்தை பக்தியுடன் அருந்தினால் நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழலாம்.
இத்தகைய பஞ்ச கவ்யத்தைத் தரும் கோமாதாவான பசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். பசுஞ் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொடுக்கும் வல்லமை படைத்தது.
கயிலையில் வீற்றிருக்கும் நந்திதேவருடன் ஐந்து பசுக்கள் வாழ்கின்றன. நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை,, சுமலை என்னும் அந்த பசுக்களின் வழியில் வந்து பூமியில் தோன்றின இப்போது வாழும் பசுக்கள். இந்தப் பசுக்களின் சாணத்தால் பங்குனி மாதத்தில் சிவாகமத்தில் அருளியபடி அக்கினியில் மந்திரம் சொல்லி பஸ்பமாக்குவது "கற்பவிபூதி' என்பர்.
நந்தை என்னும் பசு கருமை இல்லாத பொன்னிறம் கொண்டது. இதன்மூலம் கிடைக்கும் சாணத்திலிருந்து தயாரிப்பது விபூதியாகும். பத்திரை எனும் பசு கருமை நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது பசிதமாகும். சுரபி எனும் வெண்ணிறப் பசுவிடமிருந்து கிடைப்பது பசுமம் ஆகும். சுசீலை எனும் பசு புகை நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது சாரம் எனப்படும். சுமலை என்னும் பசு செந்நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது இரட்சை ஆகும்.
சித்திரை மாதத்தில் பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தைத் தூளாக்கி, விதிமுறைப்படி அக்கினியில் அதற்குரிய மந்திரம் ஜெபித்து புடமிட்டுத் தயாரிப்பது அநுகற்ப விபூதியாகும். காட்டில் இயற்கையால் ஏற்பட்ட அக்னியில் உண்டாக்கிய சாம்பலை எடுத்து, பஞ்ச கவ்யம் விட்டு மந்திரங்கள் ஜெபித்து மீண்டும் அக்னியில் புடமிட்டு எடுப்பது உபகற்ப விபூதியாகும். முறைப்படி தயாரிக்கப்பட்ட விபூதியை நெற்றியிலும் உடலிலும் மந்திரம் ஜபித்து அணிந்தால் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்று வேதங்கள் கூறுகின்றன.
பல மகத்தான சக்திகளைக்கொண்ட கோமாதவான பசுவை அதற்குரிய நாளான நந்த சப்தமியன்று பூஜித்தால் கூடுதல் பலன்கள் பெற்று வளமுடன் வாழலாம். பசுவை வழிபட்டபின், அதற்கு ஆகாரமாக ஒரு கைப்பிடி புல், சிறிதளவு அகத்திக்கீரை, வாழைப்பழங்கள் கொடுப்பது மிகவும் நல்லது.

வேண்டுவன அருளும் காமதேனு!
"ஸர்வ காமதுகே தேவி
ஸர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே.'
"எல்லாருடைய விருப்பங் களையும் பூர்த்தி செய்பவள்; எல்லா புண்ணிய நதிகளின் தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவள்; மங்கள கரமானவள்; சிறப்புவாய்ந்த காமதேனுவே உனக்கு நமஸ்காரம் (வணக்கம்)' என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும். மனிதப்பிறவியை எப்படி உயர்வாகச் சொல்கிறோமோ அப்படித்தான் பசுவின் பிறவியும் உயர்வானது. தெய்வ லோகத்தின் தெய்வீகப் பசுவை (காமதேனு) வணங்குவதன்மூலம் நாம் வேண்டிய வளங்களைப் பெறலாம். மேலும் எல்லாவிதமான தோஷங்களும் பாவங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்.
தேவாசுரர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அரிய பொருட்கள் பல வெளிவந்தன. அதில் வெளிப்பட்டது தான் காமதேனு. கேட்பவர்களுக் குக் கேட்ட வரத்தைத் தரும் அபூர்வ சக்தி காமதேனுவுக்கு உண்டு.உடலால் வெள்ளைநிறப் பசுவின் தோற்றமும், முகம், மார்புப் பகுதிகள் பெண் உருவத் தோற்றமும், பின்புறம் மயில் போன்ற அழகிய தோகையும் இறக்கையும் கொண்டு, ஒரு புதுவிதமான அற்புதத் தோற்றத்தைக் கொண்டதுதான் காமதேனு. தேவலோகத்தில் இந்த தெய்வீகப் பசு வாழ்ந்து வந்தது. இதற்கு சுரபி என்னும் பெயரும் உண்டு.
காமதேனுவைப் பற்றி வியாச பகவானால் உபதேசிக்கப்பட்ட புராணங்களிலும், இதிகாசங் களிலும் பல செய்திகள், குறிப்புகள் உள்ளன. அதேபோன்று வேதங்களிலும் ஸ்ரீமத் தேவி பாகவதத்திலும் "பசு' என்கிற பெயரில் பல குறிப்புகளும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஐந்தாவது வேதமாக இந்துக்களால் போற்றப்படும் பகவத்கீதையில் பசுவான் கிருஷ்ணர் காமதேனுவைப் பற்றி சொல்லும்போது "காமதுக்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸஹயக்ஞா: பர்ஜா: ஸ்ருஷ்ட்வா
புரோவாச ப்ரஜாபதி
அனேன ப்ரஸவி ஷ்யத்வமேஷ
வோ அஸ்த்ஷிஷ்ட காமதுக்'.(கீதை 3.10)
(படைக்கும் கடவுளாகப் போற்றப் படும் பிரம்மதேவன் முதலில் மனித உயிர்களைப் படைத்துவிட்டு அவர் களிடம், "உங்களின் குலம் தழைக்கும். உங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் இந்திரனின் பசுவான காமதேனு (காமதுக்) மூலம் பெறுவீர்கள்' என்றார்.
அதேபோன்று மற்றொரு இடத்தில் பகவான் கிருஷ்ணர்-"ஆயுதாநாம் அஹம் வஜ்ரம்
தேநூநாம் அஸ்மி காமதுக்
ப்ரஜந: ச அஸ்மி கந்தர்ப்ப
ஸ்ர்ப்பாணாம் அஸ்மி வாசுகி'(கீதை: 10-28)என்கிறார். இதில் "பசுக்களில் நான் (பகவான் கிருஷ்ணன்) காமதேனுவாக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
தன்னை வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தரும் சக்தியும் ஆற்றலும் பெற்ற பசுக்களின் தாயான காம தேனுவை அதற்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் நிச்சயம் பலன் தரும்.
"ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ர்யை ச தீமஹிதந்நோ தேனு ப்ரசோதயாத்.'
காமதேனுவாக நினைத்து பசுவை வெள்ளிக்கிழமையன்று கன்றுடன் சேர்த்து வழிபடுவது சிறப்பு.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)