ஞாயிறு, 18 டிசம்பர், 2016

பந்தர்க்கவானா தேவி ஜகதாம்பா!

download

மகாராஷ்டிர மானிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள கேலாப்பூர் கிராமம். தேவி ஜகதாம்பா ஆலயத்தினால் பிரபலமடைந்துள்ளது. பந்தர்க்கவானா என்றும் அழைக்கப்படுகிற இத்தலத்துக்கு ஆந்திர மானிலத்திலிருந்தும் மக்கள் எராளமாகக் கூடுகிறார்கள்.

images (1)

வீர சிவாஜியின் அபிமான தேவியான துளஜாபூர் பவானியும் லோனவ்லாவில் உள்ள கார்லா குகை எகவீரா தேவியுமே இங்கு ஸ்ரீ ஜகதாம்பா தேவியாக வழிபடப் படுவதாகவும் இந்த இரு தேவிகளும் சுரங்க மார்க்கமாக இங்கு வந்து மா ஜகதாம்பா என்ற திரு நாமத்தோடு எழுந்தருளியிருப்பதாகவும் ஆலய அர்ச்சகர் தெரிவிக்கிறார். ஸ்ரீ ஜகதாம்பா தேவியின் கருவறையில் இந்தச் சுரங்கப்பாதையின் வாயில் உள்ளதாகக் கூறப்படுகிறது,

images (2)

ஸ்ரீ ஜகதாம்பா தேவியை பக்தர்கள் அம்பாஜி என்றும் அம்பா தேவி என்றும் அழைக்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு அம்பா தேவி ஆலயம் என்பதே பிரபலமான பெயராக அமைந்துள்ளது.

download (1)

ஆலயத்தைச் சுற்றிலும் சுமார் ஐம்பது கி மீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் வசிக்கின்ற மக்களுக்கு இந்த தேவியே குலதெய்வமாக விளங்குகிறாள். ஆந்திர மானிலம் அட்லாபாத்திலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக அம்பிகையைத் தரிசிக்கவும் குழந்தைப் பேறு அமையவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். விரதமிருந்து தரிசித்தால் விருப்பங்கள் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘கேலா’ என்ற சொல் வாழைப்பழத்தைக் குறிக்கும். இத்தலத்தில் தேவி வாழைப்பழ உருவத்தில் தோற்றமளிக்கும் சுயம்பு விக்கிரகத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே இத்தலம் கேலாப்பூர் எனப்படுகிறது.

images

நான்கு கால்களுடன் கூடிய வெள்ளியினாலான அழகிய மண்டபத்தில் ஸ்ரீ ஜகதாம்பா தேவி எழுந்தருளியிருக்கிறாள். நின்ற நிலையில் இரண்டு கரங்களையும் இருபுறங்களிலும் விரித்து காட்சி தரும் தேவியின் முகத்தில் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டுள்ளது.

கருவறைக்கு வெளியே கருங்கல்லினால் செய்யப்பட்ட பெரிய எருமை வாகனமும் பலி பீடமும் உள்ளன. இதற்கு அருகில் பக்தர்கள் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து தீபங்களை ஏற்றி வழிபடுகிறார்கள்.

download (2)

நவராத்திரி  மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அது சமயம் “ அகண்ட மனோ காம்னா ஜோதி” என்ற பெயரில் ஏராளமான விளக்குகள் ஆலய வளாகம் முழுவதும் ஏற்றி வைக்கப்படுகின்றன. “ மனோ காம்னா” என்பது மனதில் ஏற்படும் அனைத்து ஆசைகளையும் குறிக்கிறது.

இந்த தீபத்தை ஏற்றி வைத்தால் பக்தர்களின் நியாயமான ஆசைகளை தேவி நிறைவேற்றி வைப்பாள் என்ற நம்பிக்கை உள்ளது. நவராத்திரி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு அருள்வேண்டி வருகின்றனர்.






 

அளப்பரிய ஆற்றல் அருளும் காயத்ரி மந்திரம்!


முக்தா வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகை:
த்ரீக்ஷணை:யுக்தாமிந்து கலாநிபத்த ரத்ன மகுடாம்
தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாங்குச கசா: சுப்ரம் கபாலம் கதாம்
சங்கம் சக்ரமதாரவிந்த யுகளம் ஹஸ்தைர்வஹந்தீம் பஜே!

- காயத்ரி தேவியின் ஸமஷ்டி ரூப த்யானம்!
 

பொதுப்பொருள்:
 
முத்து, பவழம், ஸ்வர்ணம், கறுப்பு, வெளுப்பு ஆகிய வர்ணங்களுள்ள ஐந்து முகமுள்ளவளும்,
 
அந்த ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் உள்ளவளும், சந்திரகலையை தலைமீது அணிந்தவளும்,
 
தத்வார்த்தம் உள்ளதான எழுத்து ரூபமான வளும்,
 
வரதம், அபயம், அங்குசம், பாசம், வெளுப்பான கபாலம், கதை, சங்கம், சக்ரம், இரு தாமரை ஆகியனவற்றைத் தன் கரங்களில் ஏந்தியவளுமான காயத்ரி தேவியே நமஸ்காரம்.
 
 காயத்ரிமந்திரத்தை இந்தபூமிக்கு அறிமுகப் படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.

வர் ஆகாயத்தில் சூட்சுமஒலியாக தியான நிலையி லிருந்து இதைக்கண்டறிந்தார்.

காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
 
‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.

ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.


 
காயத்ரி மந்திரம்!

ஓம் பூ: புவ: ஸ்வஹ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்!

 
இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.
 
அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும். 
 
இதன் தமிழ்அர்த்தம் என்ன?

‘யார் நம் அறிவாகிய ஒளிச் சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக்கடவுளை நான் வணங்குகிறேன்’ என்பதே இதன் அர்த்தம் ஆகும்.




சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரி மந்திரத்தின் ஸ்தூலவடிவமாக அமர்ந்திருக்கிறாள்.

அவளுக்கு 5 திருமுகங்கள்! 

லட்சுமி, சரசுவதி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவு படுத்துகின்றன.



காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர் களின் அனைத்து ஆசைகளும்  உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இந்த உலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
 
இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.
 
மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.
 
இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.



காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி-க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி-க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதி-க்காகவும் ஜபிக்கப்படுகிறது.


 
காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப் படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
 

 


 
Widgets Magazine
 
 

கணேசாங்க நிவாஸினி ஸித்தலக்ஷ்மி!

 





முக்நாபாம் திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர் மேகலாத்யை:

நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம்
கர்பூரா மோத வக்த்ராம் அபரிமித க்ருபா


பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீலக்ஷ்மீம் பத்ம ஹஸ்தாம்
ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி!


- கணேசாங்க நிவாஸினி ஸித்தலக்ஷ்மி த்யானம்!





பொதுப்பொருள்:


முத்தாலான ஆபரணங்கள் அணிந்து, கஸ்தூரிப் பொட்டிட்டு, கல்ஹார மாலை அணிந்து இடையில் மேகலை தவழ நவமணிகள் இழைக்கப்பட்ட கச்சை அணிந்து அளவில்லா கருணை பொங்கும் விழிகளோடு தாமரை மலரை கையில் ஏந்தி கணபதியை அணைத்த வண்ணம் காட்சிதரும் கணேசாங்க நிவாஸினியான ஸித்தலக்ஷ்மி தேவியே தங்களை வணங்குகிறேன்.



இத்துதியை பாராயணம் செய்து வர அருள்வளம், பொருள்வளம் பெருகும்.



மூலமந்த்ரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி
வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா!






 

ஐயப்பன் பூதநாதோபாக்யானம்!


ஓம் நமஸ்தே பகவதே நமோ நாராயணாயதே:

ஓம் நமஸ்தே பகவதே சர்வஞ்ஞாய நமோ நம:

கோர சம்சாரார்ணவஸ்ய தாரகாய நமோ நம:
தாரக ப்ரஹ்ம ரூபாய பூதநாதாயதே நம:
போத ரூபாய பூதாய புண்ய பூர்ணாயதே நம:
வர்ணத்ரய யுதேகாய ஓங்காராய நமோ நம:
பகாராய நமஸ்துப்யம் ரேபாந்தாய நமோ நம:
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ நம:
யகாராய தகாராய ரேபாந்தாய நமோ நம:
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம:
ஸ்ரீச ஸங்கர புத்ராய ஸர்வதா தே நமோ நம:
ஹர போ சங்கடம் தேவ ஸகலம் ஸகலேஸ்வர:
தேவேச விஸ்வ கர்த்தாஸ்த்வம் பரிபாஹி ஜகத்பதே
விச்வபர்த்தா ஜய ஸதா ஹர்தா யப்ரபோஜ
சர்வவேஷாம் ஜீவ லோகானாம் ஏக ஜீவஸ்வரூபக
தேவ தேவ ஜயத்வம் போ ஸர்வதா சர்வநாயக
தர்மசாஸ்தா ஜயபவான் ஜன்மதுக்க வினாசனா.


- பூதநாதோபாக்யானம்



குறிப்பு:

‘மஹிஷியை வதம் செய்த ஐயப்பனைப் போற்றி தேவர்கள் இவ்வாறு துதித்தனர். அதனால் மனம் மகிழ்ந்த ஐயப்பன், யாரெல்லாம் இத்துதியை  பாராயணம் செய்கின்றனரோ அவர்களை எப்போழுதும், எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பேன் என உறுதியளித்தார்’ என ஐயப்பன் அருளிய பூதநாதோபாக்யானம்  எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துதியை கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் மகர ஜோதி தரிசனம் தரும் தை மாத முதல் தேதி வரை பாராயணம்  செய்து வந்தால் ஐயப்பன் திருவருள் கிட்டும்.




 

வியாழன், 1 டிசம்பர், 2016

மந்திரம் சொல்லி மஞ்சள் பூசுங்க!



சுமங்கலிகள் தினமும் தரமான மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசியம். மஞ்சள் கிழங்கைத் தேய்க்கும்போதோ அல்லது மஞ்சள் பொடியைக் கையில் எடுத்த பிறகோ,


""ஹரித்ரே பீதவர்ணே! த்வம் ஹாரிணீ ஜனரஞ்ஜனீ!
அதஸ் த்வாம்லே பயிஷ்யாமி ஸெளபாக்யம் தேஹி மேனகே!''


என்ற ஸ்லோகம் சொல்லியபடியே பூச வேண்டும்.
 
இதனால் சவுபாக்கியம், அதிர்ஷ்டம், ஆயுள், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
 
மஞ்சள் சருமநோயைப் போக்கி, முகப்பொலிவையும் தருகிறது.
 
 

செல்வச் செழிப்பு அதிகரிக்க!







வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு, அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.


எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ, பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ, அங்கெல்லாம் செல்வம் குவியும்.

எங்கெல்லாம் விட்டுக் கொடுத்தலும், இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
 
 

நீடித்த ஆயுள் தரும் கார்த்திகை தீப வழிபாடு!

 
இறைவனை ஜோதி வடிவாக வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும்.

நினைத்தால் முக்தி தரும் திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றினார். இதை நினைவு கூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது.

தீப வழிபாடு என்பது நீண்ட நெடிய காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வட நாட்டில் தீப வழிபாடு என்பது ‘தீபாவளி’ என்றும், தெற்கே ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.
 
தீபத்தின் நடுவில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் முப்பெருந்தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.



அடிமுடி காணாத வரலாறு!

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காத்தல் கடவுளாகிய திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாய் தோன்றினார். ‘இருவரில் யார் எனது அடியையோ (பாதம்), முடியையோ காண்கிறீர்களோ அவர்களே பெரியவர்’ எனக் கூறினார்.

திருமால், வராக உருவம் கொண்டு திருவடிகளை காணச் சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருக்கொண்டு திருமுடியை காண பறந்து சென்றார். ஆனால் இருவரும் அடியையோ, முடியையோ காணமுடியாமல், அகங்காரங்கள் அழிய பெற்றவர்களாக சிவ பரம்பொருளே உலகின் முழு முதற் பரம்பொருள் என்பதை உணர்ந்துகொண்டனர். தங்களது பிழையை பொறுத்து அருளுமாறு சிவ பெருமானை பிரார்த்தனை செய்தனர்.

உடனே சிவன், சிவலிங்க திரு உருவத்தோடு ஜோதிப்பிழம்பில் இருந்து வெளிப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமானது. அதில் இருந்து தோன்றிய சிவலிங்கம் அருணாசலேசுவரர் ஆனார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் தான், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மாதந்தோறும் கார்த்திகை விரத நாள் வருகிறது. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினத்தை ‘திருக் கார்த்திகை’ என்பர்.

விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை முதல் நாளன்று பரணி நட்சத்திர நாளில், பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்த வேண்டும். கார்த்திகைஅன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில் காலைக்கடன் களை முடித்து நீராடி பாலினை அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உமாதேவிக்கு சிவபெருமான் தனது இடப்பாகத்தினை கொடுத்து ஆட்கொண்டதும் இந்நாளில்தான். அன்று ‘‘ஓம் நமச்சிவாய வாழ்க’’ என்று சொல்வது தீராத வினைகளை தீர்த்து வைக்கும். நீங்காத செல்வத்தையும் வழங்கும். நீடித்த ஆயுளை தரும்.

கார்த்திகை விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு வாழலாம். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார்.

வீடுகளில் மாலை பவுர்ணமி நிலவு தோன்றும் நேரத்தில் வீட்டு வாசலில் வாழைக்கன்று நட்டு வைத்து அதன்மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்குள் வெளிச்சம் தரும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றியும் அழகுபடுத்திட வேண்டும். இதைக் கார்த்திகை விளக்கீடு என்றும், சர்வலாய தீபம் என்றும் அழைக்கின்றோம்.

தீபம் இருளை நீக்கிப் பொருளை விளக்கம் பெறச் செய்கிறது. தீபம் பிரகாசமாக இருக்குமிடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 12 ஆண்டுகள் விரதமிருந்து முருகனை பிரார்த்தனை செய்வதால் வேண்டும் வரங்களைப் பெறலாம். கார்த்திகை தீபத்தன்று முருகன் ஆலயங்களில் தீப விழா இடம் பெறுவது குமாராலய தீபம் என்று அழைப்பர்.

கார்த்திகை மாதம் முழுவதும் மாலை வீட்டு வாசலில் விளக்கேற்றி வைக்கின்ற பழக்கம் உண்டு. கார்த்திகையன்று முருகன் ஆலயங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வர். ஆலய முன்புறத்தில் காய்ந்த ஓலை, மட்டை, இலைகளால் பனைவடிவில் கட்டப்பட்ட சொக்கப்பனை ஏற்றி ஜோதி வடிவாகக் காட்சியளிக்க செய்வர்.

சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து தரிசனம் செய்வர்.

பூஜைக்கேற்ற விளக்கு

குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு, அதற்கு அடுத்து சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து அதன் மூலம் தீபம் ஏற்றி, எவரொருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48 நாட்கள்) பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் கிடைக்கும்.

தீபம் ஏற்றும் முறை

முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2–வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3–வது மேற்கு நோக்கி, இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்ற கூடாது. குளிர்விக்கும் போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2–வது வடக்கே உள்ள திரியையும், 3–வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?


திருக்கார்த்திகை தினத்தன்று சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நாட்டி அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து கட்டுகின்றனர். மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சில கோவில்களில் பனை ஓலைகளை ஒரு சிறு கூண்டைப்போல கட்டி அதை எரிக்கின்றனர். ஆணவம் எரிகிறது. கூடவே அஞ்ஞானமும் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவாக காட்சி தருகிறான்.

சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.

விளக்கேற்ற நல்ல நேரம்

கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும். வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல்திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும், மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.