புதன், 29 மார்ச், 2017

அஷ்ட லக்ஷ்மீ தியான சுலோகம்!

1 தன லட்சுமி

 யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 ஆதி லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

 

செல்வம் பெருக சில விஷயங்கள்!

1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

காரிய சித்தி நட்சத்திரங்கள்!



புனர்பூசம் பூரம் ஸ்வாதி உத்திரட்டாதி ஆகிய நான்கும்


காரிய சித்தி நட்சத்திரங்கள்.

" காரிய சித்தி நட்சத்திரங்கள் என்றால் காரியத்தை சித்திக்க (நிறைவேற்றி) வைக்கும் நட்சத்திரங்கள் "

காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களில்
நீங்களும் ஒருவராக இருப்பீர்கள் அல்லது உங்கள் நட்பு / உறவு வட்டத்தில் இருப்பார்கள்.

காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் இணைந்து பயனிக்க வாழ்க்கை இனிமையாகும் என்பது ஜோதிட விதி.

ஒருவர் ஒரு காரியம் நடைபெறவில்லை என்னும் வருத்தத்தை காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அத்தகைய நடக்காத பல காரியங்கள் நடைப்பெறும்.


மரபணு நட்சத்திரங்கள்!


Image may contain: text
Image may contain: text











சுகம் அருளும் கோதூளி நீராடல்!

கோதூளி என்றால் பசுவின் கால் குளம்படிப் பட்ட புனிதமான மண் என்று பொருளாகும்.

கோ தூளி நீராடல் என்பதாகப் பசுவின் கால் குளம்படி பட்ட மண் துகளை எடுத்து வந்து பூஜித்து, நீரில் இட்டு நீராடுதல் ஆகும். இதுவே பவித்ரமான கோதுளி ஸ்நானம் ஆகும். இவ்வாறு பசுவின் கால்குளம்படி பட்ட மண்ணை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து வீட்டில் வைத்திருந்தால், எத்தகைய காத்துக் கருப்பு தோஷங்களும் வராது காப்பதோடு தக்க தற்காப்புச் சக்திகளையும் தரும்.

மக நாளில் கோதூளி பூஜை, கோதூளி நீராடல் விசேஷமான புண்ய சக்திகளைப் பெற்றுத் தரும். 

பிரம்மா, விஷ்ணு, சிவன் முதல் திருமகள், கலைமகள், பார்வதி தேவி உட்பட அகஸ்தியர் மாமுனி குபேரன் வரை அனைத்துத் தேவாதி தேவ தேவதா மூர்த்திகளும், சித்தர்களும், மாமுனிகளும் பசுவின் உடலில் வசிக்கின்றனர் எனில், பசு எத்தகைய உத்தம தெய்வீகப் பிறவி என அறிக!
தினமும் பசுவைத் தொட்டுக் கும்பிட்டு வலம் வந்து வணங்குவது, தரித்திர நிலையை நீக்க வல்லது ஆகும். 

லால்குடி, ஒரு யுகத்தில் கோசாலைப் பூஜைக்குப் பிரசித்தி பெற்ற வூராகும். இங்கு காராம் பசுக்கள் மிகுந்திருந்தன. காரணம், பண்டையக் கால காயத்ரீ நதிக் கரையில் இது அமைந்திருப்பதே! தற்போது இந்நதி சிதிலமடைந்து விட்டது. ஏதோ பெயருக்குக் கால்வாயாக உள்ளது.

இங்கு முற்காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பொலிந்தன. அரிசி, கோதுமை மற்றும் ஏனைய தானியங்களின் தவிடை இங்கு மக்கள் இலவசமாக அளித்த காலமும் உண்டு.

அக்காலத்தில் தவிடை எவரும் விற்பது கிடையாது. வீட்டு வாசலில் தான, தர்மத்திற்காக எடுத்து வைத்து விடுவார்கள். தவிடைத் தானனமாக அளித்து, அதில் சிறிதை எடுத்துப் பானையில் வைத்தலால் அதிர்ஷ்டம் பெருகும். பணம் விருத்தி ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த கோ ஆசீர்வாதமும் ஆகும். இவ்வாறு தானமளித்தத் தவிட்டில் ஒரு பிடியை மீந்து மீண்டும் தவிட்டுப் பானையில் சேர்த்திட்டால் தவிட்டுப் பானையில் பொன் நிறையும் என்பது ஐதீகம்.
மகம் மற்றும் அவிட்ட நட்சத்திர நாளில் பசுக்களுக்காகத் தானமாக அளிப்பது வீட்டில் செல்வ கடாட்சத்திற்குப் பெரிதும் உதவும். 



தாம்பூலம் வழங்குவதின் சிறப்பு!

Image may contain: food

தாம்பூல பூரித முகீ…………..என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.
இதன் பொருள் தாம்பூலம் தரித்தால்பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்’என்பதாகும்.

தானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம்.
திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது.

விழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, ‘நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர்

பண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம், கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.

1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம்.

மஞ்சள்,குங்குமம்,மஞ்ச ள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,
கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,
வளையல், மன அமைதி பெற‌
தேங்காய், பாவம் நீங்க,
பழம்,அன்னதானப் பலன் கிடைக்க,
பூ, மகிழ்ச்சி பெருக,
மருதாணி, நோய் வராதிருக்க,
கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,
 தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,
ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ வழங்குகிறோம்.

அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள்.



நீர்க்கட்டி பிரச்சனை குணமாக!

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்துக்கள்

நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால்

நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும். கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்.

கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை

உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை

பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.

காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக

இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட

கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்.



நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மோர், பச்சிலை மருந்துக்கள்

வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள் மோர். இதனுடன் பச்சிலை எனப்படும் மூலிகையை கலந்து குடித்து வர நீர்க்கட்டி குணமாகும். பச்சிலை என்பது வீட்டில் எளிதாக வளரக்கூடிய

மூலிகை ஆகும். இது துளசியை ஒத்த மனமும் குணமும் கொண்டது. அன்றாடம் இந்த கலவையை அருந்தி வர நல்ல  வித்தியாசத்தை காணலாம்.



நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கச்சக்காய் மருந்து

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கச்சக்காயை உண்டு வர நீர்க்கட்டிகள் கரையும். இந்த காய்க்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணம் உண்டு.



நீர்கட்டி பிரச்சனை சரியாக வெந்தயம் மருந்து

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கனையதால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். பின்பு மதிய

உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.



நீர்க்கட்டி பிரச்சனை சரியாக இலவங்கப்பட்டை மருத்துவம்

இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.



நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகள் மருந்து

இந்த விதைகளில் ஒமேகா சத்து மற்றும் புரத சத்து நிரம்பி உள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ,

பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம். உடல் பருமனுக்கும் இந்த ஆளிவிதைகள் பரிந்துரைக்கப்படுகிறது.



நீர்க்கட்டி பிரச்சனை குணமாக துளசி மருந்து

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம். துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும்

கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.



நீர்க்கட்டிக்கு தேன் மருத்துவம்

உடற்பருமனும் பாலி சிஸ்டிக் ஓவரியன் ச்ய்ன்றோமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடல் எடையை குறைத்தால் நீர்க்கட்டி தானாக குறைந்து விடும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஒரு அருமையான மருந்து தேன். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.



நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து

நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குலள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை

குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.



நீர்க்கட்டிக்கு பாகற்காய் மருந்து

பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதனால் நீர்க்கட்டி

அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்.