திங்கள், 18 ஜூலை, 2016

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்!

1.ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம் 

சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச வராபய கராந் விதாம் அப்ஜத்வய கராம்போஜாம் அம்புஜாசநஸமஸ்த்திதாம் ஸஸிவர்ண கடேபாப் யாம் ப்லாவ்யமானாம் மஹாச்ரியம் சர்வாபரண சோபாட்யாம் சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம் சாமரக்ரஹ நாரீபி : ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ : ஆபாதலம்பி வசநாம் கரண்ட மகுடாம் பஜே. 

பலன்கள்:- மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும்  ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.


 2.ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம் 

த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச சாபயாம் வரதாந்விதாம் புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன சம்ஸ்த்திதாம் புஷ்ப தோரண சம்யுக்தாம் ப்ரபா மண்டல மண்டிதாம் சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம் பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு பந்தநாம் ஸ்தநோந்நதி சமாயுக்தாம் பார்ச்மயோர் தீபசக்திகாம் செளந்தர்ய நிலையாம் சக்திம் ஆதிலட்சுமி மஹம் பஜே. 

பலன்கள்:- இந்த சுலோகத்தை தினமும் காலை முறைப்படி பாராயணம் செய்து வந்தால் எந்தக் காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழுவெற்றியுடன் நடக்க ஸ்ரீ ஆத்லட்சுமி நமக்கு அருள்புரிவாள். மேலும், எதிர்பார்த்ததை விடச் சிறந்த பலன்கள் கிடைக்கும். 


3.ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம் 
ஜடாமகுட சம்யுக்தாம் ஸ்த்தி தாசந சமந்விதாம் அபயம் கடகஞ் சைவ பூர்ணகும்பம் புஜத்வயே கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச மெளக்திகம் சாபிதாரீணீம் தீபசாமர நாரீபி:சேவிதாம் பார்ச்வ யோர்த்வயோ பாலே சேநாநி சங்காசே கருணாபூரி தாநநாம் மஹாராஞ் ஞீஞ்ச சந்தான லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே 

பலன்கள்:- மேற்கூறிய சுலோகத்தை தினசரி சொல்லி வந்தால் நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள். 


4.ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம் 

கிரீட மகுடோ பேதாம் ஸ்வர்ண வர்ண சமந்விதாம் சர்வாபரண சம்யுக்தாம் சுகாசந சமந்விதாம் பரிபூர்ணஞ்ச கும்பஞ்ச தக்ஷிணேன கரேணது சக்ரம் பாணஞ்ச தாம்பூலம் ததா வாம கரேணது சங்கம் பத்வஞ்ச சாபஞ்ச கண்டி காமபி தாரிணீம் சத்கஞ்சுக ஸ்தநீம் த்யாயேத் தன லக்ஷ்மீம் மநோஹரம். 

பலன்கள்:- இந்த சுலோகத்தை தினமும் சொல்லி வழிபட்டால், நல்ல வழியாகிய தர்மநெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி அருள்புரிவாள். 


5.ஸ்ரீ தான்யலட்சுமி ஸ்தோத்திரம் 

வரதாபய சம்யுக்தாம் கிரீட மகுடோஜ்வலாம் அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச கதலீ பலத்ரோணிகாம் பங்கஜம் தக்ஷவாமேது ததாநாம் சுக்லரூபிணீம் க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம் சுகாசந சமந்விதாம் சர்வாலங்கார சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம் மதமத்தாம் மநோஹரி ரூபாம் தான்யட்ரீயம் பஜே

பலன்கள்:- 
மேற்கண்ட சுலோகத்தை தினமும் கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறைந்து விளங்கும். நம் வாழ்வில் உணவுப் பஞ்சமே இராது. 


6.ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம் 

அஷ்ட பாஹீயுதாம்தே வீம் ஸிம்ஹாசன வரஸ்த்திதாம் சுகாஸநாம் சுகேசீம்ச கிரீட மகுடோஜ்வலாம் ச்யாமாங்கீம் கோமளாகாரம் சர்வாபரண பூஷிதாம் கட்கம் பாசம் ததா சக்ரம் அபயம் சவ்ய ஹஸ்தகே கேடகஞ் சாங்குசம் சங்கம் வரதம் வாமஹஸ்தகே ராஜரூபதராம் சக்திம் ப்ரபா செளந்தர்ய சோபிதாம் ஹம்சாரூடாம் ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயாப்தயே 

பலன்கள்:- மனித வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் உரிய காரண தேவதையாக இருப்பவள் ஸ்ரீவிஜயலட்சுமி, இவளது அருட்பார்வை இருந்தால்தான் தொடர்ந்து வெற்றியை அடைய முடியும். மேற்கூறிய சுலோகத்தை 1 தினமும் பக்தியுடன் முறைப்படி கூறி ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்த தேவியை வழிபட்ட பின்னரே எந்த முயற்சியையும் தொடங்க வேண்டும். ஸ்ரீவிஜயலட்சுமியை அலட்சியம் செய்து தொடங்கப் பெறும் எந்த முயற்சியிலும் வெற்றியே கிட்டாது என உணர வேண்டும். 


7.ஸ்ரீ வீரலட்சுமி ஸ்தோத்திரம் 

அஷ்டபாஹியுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாசந வரஸ்த்திதாம் தப்த காஞ்சந சங்காசாம் கிரீட மகுடோஜ் வலாம் ஸ்வர்ண கஞ்சுக சம்யுக்தாம் ச்சன்ன வீரதராம் ததா அபயம் வரதஞ் சைவ புஜயோ:சவ்ய வாமயோ: சக்ரம் சூலஞ்சபாணஞ் ச சங்கம் சாபம் கபாலம் தததீம் வீரலக்ஷ்மீஞ் ச நவதாலாத் மிகாம் பஜே. 

பலன்கள்:- இந்த சுலோகத்தை தினமும் பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ வீரலட்சுமி அளிப்பாள். எனவே, இச்சுலோகத்தை தவறாமல் தினமும் கூறி வழிபட வேண்டும். 


8.ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம் 

சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்ம சுபூஜிதாம் பத்ம பத்ராப நயனாம் வராபய கரோஜ்வலாம் ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ர காம் பத்வாசநே சுகாஸீநாம் பஜே அஹம் சர்வ மங்களாம்.

 பலன்கள்:- மேற்கூறிய சுலோகத்தை தினமும் கூறி ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம், அத்துடன், இவளை உண்மையுடன் வழிபட்டவர்களின் வாழ்க்கை என்றும் ஆனந்தமாயிருக்கும் என்பது உறுதி. 

பொதுவாக, அஷ்டலட்சுமி வழிபாடு செய்ய விரும்புகிறவர்கள் ஏதோ ஒரு நாள் பண்டிகையாக நினைக்காமல், தனது வாழ்வின் அன்றாடக் கடமையாகக் கொள்ள வேண்டும். அப்போது தான் மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும். வீட்டில் வழிபடுவதோடு , நேரம் கிடைக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளியிருக்கிற புண்ய தலங்களுக்கும் அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.



மங்கல வெள்ளியில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி!

நிலைத்த செல்வங்களை பெறவும், பெற்ற செல்வங்கள் நிலைக்கவும், உங்கள் வீடு வரும் மகாலட்சுமியை மனதாரப் பணிந்து பாக்யங்களைப் பெற சொல்லவேண்டிய துதி ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி இதோ...! 

ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
யசோதேஹி தனம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


பரப்ரம்ம சொரூபமான ஆதிலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.
புகழ், தனம் ஆகியவற்றைக் கொடு. என் நியாயமான தேவைகளை நிறைவேற்று.



ஸந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ரபௌத்ர ப்ரதாயினி
புத்ராந்தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே!! 


பிள்ளைகள், பேரன்களை அளிக்கும் சந்தான லக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.
என் சந்ததியருக்கு வாரிசை கொடு. செல்வத்தைக் கொண்டு நிறைவேறும் ஆசைகளை ஈடேற அருள்வாய்.



வித்யாலட்சுமி நமஸ்தேஸ்து ப்ரஹ்ம வித்யாஸ்வரூபிணி
வித்யாம் தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


பிரம்ம வித்யா சொரூபிணியான வித்யா லக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.
வித்தைகளைக் கொடு. கலைகளைக் கொடு. எ
ல்லா ஆசைகளையும் நிறைவேற்று.


தனலட்சுமி நமஸ்தேஸ்து ஸர்வதாரித்ரா நாசினி
தனம் தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


ஏழ்மையை அழிக்கும் தனலட்சுமியே! தனத்தைக் கொடு.
திருவைக்கொடு. எல்லா விருப்பங்களுக்கும் பூர்த்தியைக் கொடு.



தான்யலட்சுமி நமஸ்தேஸ்து ஸர்வாபரண பூஷிதே
தான்யம் தேஹி தனம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே! 


சர்வாபரண பூஷிதையான தான்யலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.
தான்யத்தைக் கொடு. தனத்தைக் கொடு. இஷ்டங்களை நிறைவேற்று.



மேதாலக்ஷ்மி நமஸ்தேஸ்து கலிகல்மாஷா நாசினி
பிரஜ்ஞாம்தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


வினைப்பயனைத் தீர்க்கும் மேதாலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.
எனக்கு ஞானத்தைக் கொடு. லக்ஷ்மிகரத்தைக் கொடு. ஆசைகளை நிறைவேற்று.




கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவச்வரூபிணி
அச்வாம்ச்ச கோகுலம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


எல்லா தேவர்களின் அம்சங்களும் உள்ளவனே, உனக்கு நமஸ்காரம்.
ஆநிரை, குதிரைகள், அபீஷ்டங்களைக் கொடு.



வீரலட்சுமி நமஸ்தேஸ்து ஸர்வகார்ய ஜெயப்ரதே
வீர்யம் தேஹி பலம் தீஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


பராசக்தி சொரூபமான வீரலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம். எனக்கு வீர்யத்தைக் கொடு. பலத்தைக் கொடு. பலிக்கக்கூடிய இஷ்டங்களைக் கொடு.


ஜெயலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்திஸ்வரூபிணி
ஜெயம் தேஹி சுபம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தரும் ஜயலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம். வெற்றியைக் கொடு. சுபத்தைக் கொடு. சர்வா பீஷ்டத்தையும் கொடு.


பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சௌமாங்கல்ய விவர்த்தினி
பாக்கியம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


சௌமாங்கல்யத்தை அருளும் பாக்ய லக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.
பாக்யத்தைக் கொடு. திருவருளைக் கொடு. எல்லா இஷ்டங் களையும் நிறைவேற்று.




கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்தல ஸ்திதே
கீர்திம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


பகவான் மகாவிஷ்ணுவின் திருமார்பில் வசிக்கும் கீர்த்திலட்சுமியே!
உனக்கு நமஸ்காரம். நீங்காப் புகழ் பெற உன் திருவருளை எனக்குக் கொடு. சர்வாபீஷ்டத்தைக் கொடு.



ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வரோகநிவாரிணி
ஆயுர்தேஹி தனம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே! 


எல்லா நோய்களையும் தீர்க்கக்கூடிய ஆரோக்யலட்சுமியே! உனக்கு நமஸ்காரம்.
நீண்ட ஆயுளையும் லட்சுமிகரத்தையும் கொடு. சர்வா பீஷ்டமும் நிறைவேற அருள் செய்.



சித்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாலங்கார சோபிதே
சித்திம்தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


எல்லா சித்திகளையும் அளிக்கும் சித்த லட்சுமியே! உனக்கு நமஸ்காரம்.
சித்தியைக் கொடு. திருவருளைக் கொடு. எனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்று.



சௌந்தர்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாலங்கார சோபிதே
ரூபம் தேஹி சரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹிமே! 


சர்வாலங்காரங்களுடன் விளங்கும் சௌந்தர்ய லட்சுமியே! உனக்கு நமஸ்காரம்.
 நல்ல வடிவம் கொடு. லட்சுமிகரத்தைக் கொடு. சர்வா பீஷ்டமும் நிறைவேற அருள்செய். 


ஸம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து புக்திமுக்தி ப்ரதாயினி
மோக்ஷம் தேஹி சரியம் தேஹி சர்வகாமாம்ச்ச தேஹிமே! 


பக்தி முக்தி என்று இரண்டையும் அளிக்க வல்ல சாம்ராஜ்ய லட்சுமியே!
எனக்கு மோக்ஷத்தைக் கொடு. திருவருளைக்கொடு. எல்லா ஆசைகளையும் 
 நிறைவேற்று!


ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே! 


எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்ய தேவியே! க்ஷேமத்தைக் கொடுப்பவளே, எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவளே, த்ரயம்பகே, நாராயணியே, உன்னைச் சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே உனக்கு நமஸ்காரம்.


 சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்
மம சத்ரு விநாசாய தீபஜ்யோதி நமோஸ்துதே! 


அன்னை கல்யாணியே, சுபம் நடக்கட்டும். ஆயுள், ஆரோக்யம், சம்பத்துக்காகவும், என் எதிரிகளின் நாசத்துக்காகவும் தீப ஜோதியான உனக்கு நமஸ்காரம் செய்கிறேன். 


மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா! 


மாங்கல்யத்தை அருளக்கூடிய மங்களேஸ் வரியே சகல மங்களங்களையும் அருளும்  மாங்கல்யத்தை எனக்கு  அருளுங்கள்! 


"ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ"





கனகதாரா ஸ்தோத்ரம்! (தமிழில்)


1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||

மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் அழகு - அது அனைவருக்கும் ஐச்வர்யத்தை நல்குவது - எனக்கு மங்களம் தருவதாகுக !

2. முக்தா முஹ§:விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|
மாலா த்ருசோ:மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரீயம் திசது ஸாகரஸம்பவாயா:||

மலர்ந்து பரந்த உத்பல புஷ்பத்தில் தேன் வண்டு போல் முராரியான நாராயணனுடைய முகத்தில் ப்ரேமையுடனும், வெட்கத்துடனும் மெல்ல மெல்லப் போவதும் வருவதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண்தொடர் எனக்கு ஐச்வர்யத்தை கொடுக்கட்டும்.

3. விச்வாமரேந்த்ர பதவிப்ரம தானதக்ஷம்
ஆனந்த ஹேது ரதிகம் முரவித்விஷோபி|
ஈஷந்நிஷீதது மயி க்ஷண மீக்ஷணார்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:||

எல்லா தேவர்களுக்கும் தலைமையான - இந்த பதவியை - கொடுக்க வல்லதும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுப்பதும், நீல ஆம்பல பூ போன்றதுமான லக்ஷ்மி தேவியின் அரைக்கண் பார்வை என்னிடம் நொடியாகிலும் நிலை பெறட்டுமே!

4. ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்||
ஆகேரஸ்தித கநீநிக பக்ஷநேத்ரம்
பூத்யை பவேத் மம புஜங்கசயாங்கநாயா:||

சற்றே மூடிய கண்களையுடயை முகுந்தனை மகிழ்ச்சியுடன் அடைந்து - (ஆனந்தத்தின் மூலகாரணமாயும் மறைவில்லாததுமான காம சாஸ்திரமயமாகியவர் அவர்) சற்று சாய்வாக நிற்கும் கருவிழியும், இமையும் கொண்ட லக்ஷ்மி தேவியின் கண் எனக்கு ஐச்வர்யத்தை பயக்கட்டும்.

5. பாஹ்வந்தரே மதுஜித:ச்ரித கௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி|
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹதுமே கமலாலயாயா:||

மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபம் கொண்ட மார்பில் இந்திர நீல மணி ஹாரம் போல் விளங்குவதும், பகவானுக்கே காமத்தை கொடுப்பதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் தொடர் எனக்கு மங்களத்தை உண்டாக்கட்டும்
.
6. காலாம்புதாலிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ|
மாது:ஸம்ஸ்தஜகதாம் மஹனீயமூர்த்தி:
பத்ரானி மே திசது பார்கவந்தனாயா:||

கைடபனை வதைத்த மஹாவிஷ்ணுவின் கரூநீல மேகம் போன்ற சீரிய மார்பில், மேகத்தின் மேல் விளங்கும் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதே ஜகன் மாதாவின் மேன்மை தங்கிய வடிவம், அது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.

7. ப்ராப்தம் பதம் ப்ரதமத:கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதினி மன்மதே ந|
மய்யாபதேத் ததிஹ மந்தரமீக்ஷணார்தம்
மந்தாலஸ ம் ச மகராலய கன்காயா:||

பாற்கடலின் மகளான மஹாலக்ஷ்மியின் மேலான கடைக்கண் என்மேல் சிக்கெனப் பதியட்டும். அதன் வலிமையாலன்றோ மன்மதன், முதலில் மதுவரக்கனை வீழ்த்திய மஹாவிஷ்ணுவினிடத்தில் இடம் பெற்றான்.

8. தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:||

ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மியின் கடாக்ஷம் என்ற கார்மேகம் தயவு என்ற காற்றுத் துணையுடன், வெகு நாள் செய்த பாபமாகிய கோடையை நீக்கி பணமாகிய நீர்மழையை இந்த ஏழை  மேல் பொழியட்டும்.

9. இஷ்டாவிசிஷ்டமதயோபி யயா தயார்த்ர -
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே|
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோகரதீப்திரிஷ்டாம்
புஷ்டீம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:||

சாதாரண புத்திமான்களும் தயைததும்பும் எந்தக்கண் பார்வையால் மூவுலகத்தலைமைப் பதவியை கூட சுலபமாக பெறுகின்றனரோ, அந்த மலர்ந்த தாமரை மலரையத்த பார்வை- தாமரைமலரில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மியின் பார்வை - என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்.

10. கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி
சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி|
சிருஷ்டிஸ்திதி ப்ரலய கேலிஷ§ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நம:த்ரிபுவணே குரோஸ் தருண்யை ||

மூன்று உலகங்களுக்கும் ஒரே நாயகரான பரமேச்வரனுக்கு உலகை ஆக்கவும், நிலைபெறச் செய்யவும் அழிக்கவும் ஆன விளையாட்டில் உடனிருக்கும் பத்நியாக ஸரஸ்வதீ எனவும், சாகம்பரீ எனவும், சந்திரசேகரரின்பிரியை எனவும் விளிக்கப்பட அவ்வன்னைக்கு நமஸ்காரம்.

11. ஸ்ரீ§த்யை நமோஸ்து சுபகர்மபலப்ரஸ¨த்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணர்ணவாயை||
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை||

நாம் செய்த நற்செயல்களின் பயனைக் கொடுக்கும் சுருதி என்றறியப்படுபவளுக்கும், இணிய குணங்களுக்கு கடல் போன்றிருக்கும் ரதிக்கும், தாமரையை இருப்பிடமாஸகக் கொண்ட சக்திக்கும், புருஷோத்தமன் ப்ரியையான புஷ்டிக்கும் நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

12. நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை|
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை||

தாமரை மலரொத்த முகமுடையவளும், பாற்கடலை பிறந்த இடமாகக் கொண்டவளும், சந்திரன், அமிர்தம் இவற்றின் சகோதரியாகவும் இருக்கிற ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

13. ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனாநி
ஸாம்ராஜ்ய தான விபவானி ஸரோருஹா
த்வத்வந்தனாநி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே||

ஹே!தாமரைபோல் கண்களை உடையவளே!செல்வம் கொழிப்பனவும், கரணங்களனைத்தையும் மகிழ்விப்பனவும் சக்ரவர்த்தி பதவியை நல்குவனவும், பாபங்களைப் போக்குபவனவுமான உன்னை வணங்கல்கள் என்னையே சாரட்டும்.

14. யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:|
ஸந்தநோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரிஹ்ருதயேச்வரீம் பஜே||

எந்த அம்பிகையின் வழிபாடு, வழிபடுபவனுக்கு எல்லா வித செல்வங்களையும் நல்குமோ, அந்தவிஷ்ணு பத்னியை முக்கரணங்களாலும் சேவிக்கிறேன்.

15. ஸரஸிஜநிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்யசோபே|
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்||

தாமரைமலரில் வீற்றிருப்பவளே! கையில் தாமரையை கொண்டவளே!மிக வெண்மையான துகில், சந்தனம் மாலை இவற்றால் அழகியவளே!இனியவளே, மதிப்பிற்குரிய ஹரிப்ரியே!மூவலகிற்கும் ஐச்வர்யம் நல்குபவளே எனக்கு மனமுவந்து அருள்வாயாக!

16. திக்ஹஸ்திபி:கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமல சாரு ஜலுப்லுதாங்கீம்|
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதிநாத க்ருஹீணீ மம்ருதாப்திபுத்ரீம்||

திக்கஜங்கள், தங்கக்குடங்களின் வழியே பெருகச்செய்த ஆகாசகங்கை நீரால் நனைந்த உடலையுடையவளும், உலகனைத்திற்கும் தாய் ஆனவளும், உலக நாயகரான விஷ்ணு ப்ரியையானவளும், பாற்கடல் பெண்ணுமாகிய லக்ஷ்மி தேவியை வணங்குகிறேன்.

17. கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணா பூரதரங்கிதை ரபாங்கை:|
அவலோகய மாமகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:||

மஹாலக்ஷ்மி!மஹாவிஷ்ணுவின் பிரியே!நீ கருணை ததும்பும் கடாக்ஷங்களால், மிக ஏழையானவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டிய முதல் நபரான என் மேல் பார்த்தருள்வாயாக !

18. ஸ்துவந்த யே ஸ்துதிபிரமூபிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம்!
குணாதிகா குருதர பாக்ய பாஜினோ (பாஜனா:)
பவந்தி தே புவி புதபாவிதாசாய:||

மூன்று வேதங்களே உருவான த்ரிலோகமாதாவும் லக்ஷ்மிதேவியை இந்தஸ் ஸ்தோரங்களால் தினந்தோறும் ஸ்தோத்ரம் செய்பவர் குணம் மிக்கவராயும், மிகப்பெரிய பேறு பெற்றவராயும், அறிஞர் போற்றும் கருத்து கொண்டவராயும் ஆவர்.

கனகதாரா ஸ்தோத்திரம் முற்றிற்று


சனி, 16 ஜூலை, 2016

சர்வ மங்களம் அருளும் மாகேஸ்வரி!


சப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மாகேஸ்வரி. மகேஸ்வரனான பரமசிவனின் பத்தினியானதால் மாகேஸ்வரி என்றானாள்.

இத்தேவி சர்வ மங்களத்தையும் அருள்பவள். இவள் வாகனம் எருது. தர்மத்தின் உருவம். உழைப்பிற்குப் பெயர் பெற்றது. சகலவிதமான ஞானம், வற்றாத ஆற்றல், அளப்பரிய சக்தி போன்றவற்றின் மொத்த உருவமே மகேஸ்வரன். அந்த மகேஸ்வரனின் அம்சமாக வெளிப்பட்டவள் மாகேஸ்வரி. சிவபிரானைப் போன்றே முக்கண் ஐந்து திருமுகங்களைக் கொண்டவளாகக் காட்சியளிப்பவள்.

பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு உள்ளிட்ட ஆயுதங்களை தம் கரங்களில் தரித்தவள். அபய வரத ஹஸ்தம் துலங்க பத்து கரங்களுடன் இடபக்கொடி, ஜடாமகுடம், கொடிய விஷங்கள் கொண்ட நாகங்களை தன் கைகளில் வளையல்களாகவும், கங்கணங்களாகவும் பூண்டவளாய் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவள். வெள்ளை நிறமுடையவள். தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள்.

உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும்-போகமும் அருள்பவள்!


அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் உலகில் செய்வதற்கு அரிதான சம்ஹாரம் எனும் தொழிலைச் செய்கிறார். வடகிழக்கு என்னும் ஈசானிய திசையை நிர்வகித்து வருபவள். இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள் என தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பன
வற்றில் கூறப்பட்டுள்ளது.

மகம் என்றால் வேள்வி என்றும் ஒரு பொருள் உண்டு. யாகங்களைக் காப்பவளாக இத்தேவி விளங்குகிறாள். யாகங்கள் முறையாக நடைபெற்றால்தான் நாட்டில் மழை பொழியும். வேளாண்மை பெருகும் என்பது நம்பிக்கையாகும். அதனால் வேள்விகள் முறையாக நடைபெறவும், நடைபெறும் வேள்விகளால் உலகமக்கள் பயனடையச் செய்பவளாகவும் இத்தேவி விளங்குகிறாள்.

லிங்கோத்பவ மூர்த்தி முதல் கங்காதர மூர்த்தி வரை ஈசன் பல்வேறு வடிவங்களில் உலகைக் காத்தருள்கிறான். அந்த அனைத்து வடிவங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் சக்தியாய் திகழ்பவள் இந்த தேவி. மகேஸ்வரரின் மனைவியாய் உள்ளதாலும், மகான்களின் மனக் குகையிலும் உறைவதாலும் மாகேஸ்வரி எனப்படுகிறாள் என்கிறது தேவிபாகவதம்.

இத்தேவி கயிலையங்கிரியில் வாசம் புரிவதில் விருப்பமுள்ளவள். கயிலாசம் என்றால் ஸப்தம் வாசம் செய்யும் இடம் எனப் பொருள்படும். முனிவர்களின் வேத கோஷத்தாலும், சிவ கணங்களின் நாத கோஷத்தாலும் இவள் வாசம் புரியும் இடம் கைலாயமாயிற்று. நம் உடலில் கொழுப்புக்குத் தலைவியான இத்தேவி சினம் கொண்டால் வெட்டுக்காயம் ஏற்படும். குறுவேர் விசிறியினால் விசிறி, குங்குமார்ச்சனை செய்து, சுண்டலும், நீர்மோரும் எளியவர்க்கு விநியோகம் செய்தால் அன்னை மகிழ்வாள். இந்த அம்பிகையை மனமாற வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர். இவள் கையில் உள்ள சூலாயுதம் சிறப்பு பெற்றது.. இத்தேவி கோபம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், ஆச்சரியம் என்ற தீய குணங்களின் குரோதத்தைப் போக்கி அருள்கிறாள்.

ஒரு சமயம் ஹாலாஹலர் என்ற அசுரர்கள் பிரம்மதேவனிடம் மூவுலகையும் வெல்லும் வரம் பெற்று தேவர்களுக்கு தொல்லை கொடுத்தனர். திருமாலும், பரமனும் அவர்களுடன் நெடுங்காலம் போரிட்டு, அவர்களை வென்று தன் பவனம் எனும் இடத்திற்கு வந்தனர். தங்களுக்கு கிடைத்த வெற்றி பராசக்தியினால்தான் என்பதை உணர்ந்தும், தங்கள் வீர சூர பராக்கிரமங்களால் தான் வெற்றி கிட்டியது எனத் தற்பெருமை பேசிய அரியையும், அயனையும் விட்டு அவர்கள் சக்திகள் அகன்றன. சக்தி அகன்றதால் இருவரும் செயல்பட முடியாதபடி சோர்ந்தனர்.

அதைக்கண்டு பதறிய நான்முகன் தன் புதல்வர்களான மனு, சனகர் போன்றவர்களையும், தட்சனையும் அழைத்து தவம் புரிந்து மீண்டும் இருவருக்கும் பராசக்தியை அவரவர் சக்திகளாக இருக்கும்படி வரம் வாங்கிவரப் பணித்தார். அதன்படி அவர்கள் தவம் புரிய அவர்கள் தவத்தை மெச்சிய பராசக்தியும் அவர்கள் விரும்பிய படியே வரங்களை அளித்தாள்.

அப்போது தட்சன் தேவியைத் தன் புதல்வியாகப் பிறந்து வளர வரம் வேண்டினார். அதை ஏற்று அவன் மகளாய்ப் பிறந்த பராசக்தி தக்க சமயத்தில் பரமனை மணந்தாள். பின் தட்சன் தான் செய்த வேள்வியில் சிவனை அவமரியாதை செய்ததுடன், நிந்தனையும் செய்ததால் கோபத்தால் கோபம் கொண்ட தாட்சாயணி தன் உயிரை விட்டதாக தந்த்ர சாஸ்திரம் கூறுகிறது. அவள் பிரிவைத் தாங்கமுடியாத பரமனும் கலங்கினான். சிவனின்றி சக்தியும் சக்தியின்றி சிவனும் இல்லை எனினும், சொல்லும், பொருளும், வானும் நிலவும் போல் ஒன்றியுள்ள அவர்கள் உலகத்தோர் உய்யவே இருவர்போல் தோற்றமளிக்கின்றனர்.

பரம்பொருள் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் எனத் திகழும்போது மாயையான பராசக்தி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்றாகிறாள் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். சக்தியின்றி மும்மூர்த்திகளும் ஏதும் செய்ய இயலாது என்பது சாக்த வழிபாட்டின் திண்ணமான கருத்தாகும்.தாட்சாயணியின் சித்கலா ரூபமான உடலை சுமந்து கொண்டு எங்கும் திரிந்த பரமனிடம் திருமால் நான் இந்த கலைகளைப் பிரித்து பாரதத்தில் ஆங்காங்கே சக்தி பீடமாக்குகிறேன் என்று கூறி அந்தக் கலைகளை புவியெங்கும் ஸ்தாபித்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் அருளாட்சி புரிந்து சக்தி பீடங்களாகத் திகழ்ந்து வணங்குவோர் வாழ்வில் வளம் தந்து அருளும் மாகேஸ்வரியைத் துதிப்போம்.

யோ வேதா தௌ ஸ்வர: ப்ரோக்தா: வேதாந்தே ச ப்ரதிஷ்டித:
தஸ்ய பிரக்ருதி லீனஸ் ய: பரஸ் ஸ மஹேஸ்வர:

எனும் ஸ்ருதி வாக்யத்தில் குறிக்கப்பட்ட மகேஸ்வரன் த்ரிகுணாதீதமாதும் நிர்குணமானதுமான வடிவமுடையர். அப்பேர்ப்பட்டவரின் ஈஸ்வரியும் அவரைப்போலவேதான் இருப்பாள். மஹதீ என்றால் அளவிட முடியாத பெருஞ் சரீரத்தையுடையவள் என்று அர்த்தம்.

ப்ருஹதஸ்ய சரீரம்யத் அப்ரமேயம் ப்ரமாணத:
தாதுர் மேஹதி பூஜயாம் மஹாதேவி தத: ஸ்ம்ருதா என்கிறது தேவி புராணம்.

மாகேஸ்வரி தியான ஸ்லோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்தீ  ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மாகேஸ்வரி மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:
ஓம் -ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:

மாகேஸ்வரி காயத்ரி மந்திரங்கள்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்

ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சுசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம் ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.

ஒரு முகம், முக்கண்கள், நான்கு கரங்கள் கொண்டவளும், ஜடாமகுடத்தைத் தரித்திருப்பவளும், வெண்மை நிறமாக இருப்பவளும், மிகவும் அழகாகப் பிரகாசிப்பவளும், அபய முத்திரையைக் கொண்டவளும், மான், மழு இவைகளை ஏந்தியவளும், ரிஷப வாகனத்தில் அமர்ந்திருப்பவளும் மகாதேவியுமான மாகேஸ்வரியை வணங்குகின்றேன்.
அவள் எனக்கு மங்களங்களை அருள்வாளாக.

தேவி மஹாத்மியத்தில் மாகேஸ்வரி துதி:

த்ரிசூல சந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண
நாராயணி நமோஸ்துதே.

மாகேஸ்வரி வடிவம் கொண்டு திருசூலமும், பிறைமதியும், அரவமும் தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயணியே உனக்கு நமஸ்காரம்.

 

சியாமளா தண்டகம்!

மகாகவி காளிதாசன் இயற்றிய அற்புத ஸ்லோகம், சியாமளா தண்டகம். தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார். கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம்.

மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், நீல மணியின் ஒளியுடன் கூடிய அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனி
வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் தியானம் செய்கிறேன்.

சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும், நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ச்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.

மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப
வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே

ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியேஉலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன். நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக. (கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).

ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,
க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!

அம்ருதம் எனும் கடலின் மத்தியில், மனதைக் கவரும் சிறப்புடைய தீவில் வில்வமரங்கள் சூழ்ந்த பிரதேசத்தில் கற்பக விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே!
யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே, அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே.

ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா ஸம்ப்ரமாலோல
நீபஸ்ரகாபத்த சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே
சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீநத்த
ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக
ஸம்பாவிதே!

நீ பாடத்துவங்கி அந்த ஸங்கீத ரஸத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் உனது முதுகெலும்பின் அடிப்பாகம் வரை நீண்ட கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப புஷ்ப கொத்துக்கள் அசைந்தாடுவதே தனி அழகு. ஹே! ஹிமவானின் புதல்வியே! நீ சிரஸில் ஆபரணமாக அணிந்த சந்திர கலையின் கிரணங்களால் சூழப்பட்ட சுருள் சுருளான கருங்கூந்தல்களுடன் மிளிர்பவளே, சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுபவளே!

காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்ப
ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே
சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே
ஸூராமே ரமே

காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ எனு ப்ரமைக்குரித்தானவளே, அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே! கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே! மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே!

ப்ரோல்ல ஸத்வாலிகா மௌக்தி கச்ரேணிகா
சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்
தலந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த
ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீஸ்வரே ஸூஸ்வரே பாஸ்வரே.

ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும், கன்னங்களில் கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணா நாதத்துடன் இணைந்தவளே. வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே, மந்திர சித்தி பெற்ற சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே.

வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த
தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.
திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலாலஸச் சக்ஷு
ஜராந்தோலன ஸமாக்ஷிப்த கர்ணைக
நீலோத்பலே, ச்யாமலே
பூரிதா சேஷலோகாபிவாஞ்
சாபலே நிர்மலே.

சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே, நீலநிறத் திருமேனியுடையவளே. லோகங்களெல்லாம் நிரப்பும் விருப்பிய பலன்களை உடையவளே, பரிசுத்தமானவளே! ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.

ஸ்வேத பிந்தூல்லஸத்பால லாவண்ய நிஷ்யந்த
ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே
ஸர்வ மந்த்ராத்மிகே. ஸர்வ விச்வாத்மிகேகாளிகே
முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக 
கற்பூரதாம்பூல கண்டோத்கரே ! ஞானமுத்ராகரே,
ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, கரே !

நெற்றியில் காணும் வியர்வைத் துளிகளின் கூட்டமோ என்று பராமரிக்கக்கூடிய சோபை மிகுந்த புல்லாக்கு ஆபரணம் அணிந்தவளே! மந்திரங்களுக்கு இருப்பிடமானவளே! வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே, ஞானமே சின்னமாய் உடையவளே, சம்பத்துகள் அருள்பவளே, கையில் எழில் மிகுந்த தாமரை புஷ்பம் ஏந்தியவளே!

குந்த புஷ்பத்யுதி ஸ்நிக்த தந்தாவலீ
நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர 
சோபாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே

முல்லை புஷ்பம் போல் சோபையுள்ள பல்வரிசைகளின் ப்ரகாசத்துடன் கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே.

ஸுலலித நவயௌவனாரம்ப சந்த்ரோத  யோத்வேல லாவண்ய
துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ஹ்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா
ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே

துவங்கும் யௌவனத்தின் சந்த்ரோதயம் போன்று சோபையுடன் கூடிய பாற்கடலிலிருந்து வெளிப்படும் சங்கின் அழகையும் மிஞ்சும் கழுத்து உடையவளே, நளின நடையுடையவளே! சிறந்த ரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே, மங்கள ஸ்வரூபிணியே!

ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே, யோகிபி: பூஜிதே:
விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத்
கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !

ரத்னங்களை இழைத்த வங்கியின் ஒளிக்கிரணங்களால் சோபிக்கின்ற தோள்களுடன் விளங்குபவளே, யோகிகளால் வணங்கப்படுபவளே! திசைகளெல்லாம் ஒளிர்ப்பிக்கும் ப்ரகாசம் உடைய கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்டவளே, உபாஸகர்களால் பூஜிக்கப்படுபவளே!

வாஸராரம்பவேலா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த
ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம
ஸந்த்யாய மானாங்குலீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ)
கண்டலே,
சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே சூர்யோதயத்தில் மலர்ந்த தாமரை

புஷ்பத்திற்கு ஒப்பான கைகளையுடையவளே, எப்பொழுதும் பெருக்கெடுக்கும் தயையுடையவளே, இரண்டற்று ஒன்றேயானவளே, கைகளை அலங்கரிக்கும் ரத்ன மோதிரங்களின் ஒளியில் சாயங்கால சிவந்த வானம் போன்றதில், நகம் எனும் சந்திரனைப் போல் ப்ரகாசமுடைய தளிர் ரல்களுடையவளே, ஞானமாகிற ஒளியினால் சூழப்பட்டவளே, ஒளிரும் குண்டலங்கள் பூண்டவளே.

தாரகா ராஜிநீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ
வலிச்சேத விஸீஸ முல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே, கிங்கர  கரே
ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோப பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே
லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே,
 மஞ்ஜூ ஸம்பாஷணே

நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பான ப்ரகாசமான முத்து மாலைகளின் வரிசையினால் சோபையூட்டப் பட்ட உயர்ந்த பரந்த மார்பகத்தின் பாரத்தினால் சிறிது மடிந்து வளைந்த இடையுள்ளவளே! கடல் போன்ற ஸௌந்தர்யங்களை உடையவளே, கைகளில் வீணை ஏந்தியவளும், குபேரனால் வணங்கப்படுபவளும் ஆனவளே! தங்கக்குடத்திற்கு ஒப்பான மார்பின் பாரத்தினால் வணங்கினவளே, மூன்று லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே, இனிய பேச்சுடையவளே.

சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே
பத்ம ராகோல்லஸத் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே,சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு
கச்சன்ன சாரு சோபா பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர
மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்கலே ச்யாமளே.

மன்மதனின் வில்லின் நாணுக்கு ஒப்பான சலங்கை பொருந்திய அரை ஞாண் பூண்டவளே, ஜரிகை வஸ்த்ரம் அணிந்தவளே. பத்மராகக் கல்லினால் இழைத்த ஒட்டியாணத்தின் சோபையுடன் கூடிய இடையுடையவளே, பவுர்ணமி நிலவு போன்று குளிர்ந்தவளே. மலர்ந்த பலாச புஷ்பம் போல் சிவப்பு நிறப் புடவையினால் மூடப்பட்ட துடைகளின் ப்ரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தூரத்தினால் சிவந்த ஐராவதத்தின் துதிக்கை போன்று கையை உடையவளே, எல்லையற்ற வைபவங்களுடன் கூடியவளே, இந்திரநீல போன்ற நிறம் உடையவளே.

கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸிதானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தல ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ
ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோகரிங்க்கந்ந கேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.நிர்மலே!

அழகிய மென்மையான நீலத்தாமரை புஷ்பத்தினாலான மன்மதனின் அம்புறாத் தூணியோ என்றெண்ணக் கூடிய கொடி போன்ற கணுக்கால்களை உடையவளே, அழகிய விளையாடும் நடையுடையவளே. அடிபணியும் திக்பாலக ஸ்த்ரீகளின் சுருளான கருங்கூந்தல் கூட்டத்தின் நீலநிற சோபையினால், மானுடன் சம்பந்தம் சொல்லக்கூடிய அறுகம்புல் தளிர்களா அவை என்றெண்ணும்படியான, நகம் எனும் சந்திரன் போன்ற மிகையான ப்ரகாசத்துடன் விளங்குபவளே.

ப்ரஹ்வ தேவேச, பூதேச வாணீச கீநாச
தைத்யேச, யக்ஷேச, வாகீச, வாணேச,
கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலாதபோத் தாமலாக்ஷவர
ஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.

ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே,
ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே,
சங்க்க பத்மத்வயோபாச்ரிதே வணங்குகின்ற இந்திரன், விஷ்ணு,
சிவன், யமன், வருணன், குபேரன், ப்ரஹ்மா,

நிருருதி, வாயு, அக்னி, இவர்களுடைய கிரீடத்திலுள்ள மாணிக்க மணிகளின் ஒளியால் இளம் வெய்யில் போல் சிவந்ததும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களை உடையவளே, உமாதேவியே! நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகிய சிறந்த ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளே, அழிவற்றவளே. ரத்னம் போன்ற தாமரையில் ரத்ன ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்து, சங்கு, தாமரை இரண்டாலும் சேவிக்கப்படுபவளே.

தத்ரவிக்னேச துர்க்கா, வடுக்ஷேத்ர பாலையுதே
மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே,
மஞ்ஜூளாமேனகாத்யங்க நாமானிதே,

பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி
வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே,
சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி
சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !
பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங் கனா மண்டலை ரர்ச்சிதே

விநாயகர், துர்க்கை, ப்ரம்மச்சர்யம் பூண்ட பிரம்ம தேவதைகள், க்ஷேத்ரபாலன் இவர்களுடன் கூடியவளே. ஆனந்தத்தில் திளைக்கும், மதங்க முனிவரின் புதல்விகளால் சூழப்பட்டவளே. மஞ்ஜுளா, மேனகா முதலிய அப்ஸர ஸ்தீரிகளால் போற்றப்படுபவளே, எட்டு பைரவர்கள் எனும் தேவர்களால் சூழப்பட்டவளே. பூமி, லக்ஷ்மி முதலிய எட்டு சக்திகளுடன் கூடியவளே. ப்ராம்ஹீ முதலிய மாத்ருக்கள் எனும் எழுவரால் அலங்கரிக்கப்பட்டவளே. யக்ஷர், கந்தர்வர், ஸித்தர் இவர்களின்
ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுபவளே.

பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யாச
ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாபிநந்திதே
பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே,
யோகினாம் மானஸே, த்யோதஸே,

சந்தஸாமோஜஸா ப்ராஜஸே
கீதவித்யா வினோதாதி த்ருஷ்ணேன
க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே
பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே,
விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர்கீயஸே

மன்மதனைப் போன்று மயங்க வைக்கும் ரூபலாவண்யம் உடையவளே, மன்மதன் ரதிதேவி இவர்களாலும் பூஜிக்கப்படுபவளே, ப்ரியமுள்ள வஸந்தருதுவினால் சந்தோஷப்படுத்தப்படுபவளே, பக்தியுள்ளோருக்கு மோக்ஷமும் அனுக்ரஹமும் செய்கிறாய். யோகிகளின் மனதில் ப்ரகாசிக்கிறாய். வேதங்களின் ஸாரத்தில் உறைந்திருக்கிறாய். ஸங்கீத ரஸானுபவத்தில் ப்ரியமுள்ள க்ருஷ்ணனால் பூஜிக்கப்படுகிறாய். பக்தி ஆவேசம் உடைய பிரம்மாவால் பூஜிக்கப்படுகிறாய். மனதைக் கவரும் வீணை முதலிய வாத்யங்களிசைக்கும் வித்யாதரர்களால் ஸ்தோத்திரம் செய்யப்படுகிறாய்.

ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே
ஸர்வ ஸௌபாக்ய வாஞ்ச்சா வதூ
பீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு
காதா ஸமுச்சாடனம்
கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம்
ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகாபம் சுகம் லாலயந்தீ
 பரிக்ரீடஸே.

செவிகளுக்கு இனிய நாதமுடைய வீணையினால் கின்னர்களால் பாடப்படுகிறாய். யக்ஷ, கந்தர்வ, ஸித்தர்களின் ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். இஷ்ட ஸித்திகளில் விருப்பங்கொண்ட தேவஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். சகல வித்யைகளின் ஸாரமுடைய இனிமையான ஸ்லோகங்களை மொழிகின்றதும், கழுத்தின் அடிப்பாகத்தில் மூன்று வர்ணக் கோடுகளையுடையதும், அழகிய பச்சை நிற இறக்கைகள் உடையதும், புரச மொட்டின் நேர்த்தியை எஞ்சுகிற அழகுடன் கூடிய மூக்குடையதும் ஆன கிளியுடன் விளையாடிக் களிக்கிறாய்.

பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபிஸ்ப்பாடிகீம்
ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம்சாங்குசம்
பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே  தஸ்ய
வக்த்வரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.
யேன வாயா வகாபாக்ருதிர்
பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா:

யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம்த்யாயத:

தாமரை போன்று அழகிய இரு கைகளில் ஞானத்தின் சாரமாகிய புஸ்தகத்தையும், ஸ்படிகமணி ஜப மாலையையும் தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை த்யானிப்போர் நாவின் மூலம் உரைநடை, செய்யுள் வடிவான வாக்சாதுர்யம் தானே வெளிப்படுகிறது. சிவந்த மேனியளாய் உன்னை த்யான செய்பவர்களுக்கு ஸ்த்ரீ புருஷர்கள் வசப்படுகிறார்கள். ஐஸ்வர்ய ரூபியாக உன்னை த்யானிப்பவர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாய். சந்த்ர கலையை சிரசில் அணிந்த உனது அழகு பொழிந்த நீல வர்ண சரீரத்தை மனதில் வைத்து த்யானம் செய்பவருக்கு எதுதான் கிட்டாது.

தஸ்ய லீலாஸரோவாரித:
தஸ்ய கேளீவனம் நந்தனம்
தஸ்ய பத்ராஸனம் பூதலம்,
தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ,
தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்
மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே,

ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே,
ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே,
ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே,
ஸர்வவிச்வாத்மிகே,
ஸர்வ தீக்ஷவத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே,
ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம்,

பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:

சமுத்திரம் (ஸம்சார) அவருக்கு விளையாட்டாக கடக்க முடிகிறது. தேவலோக நந்தவனம் அவருக்கு விளையாட்டிடம் ஆகிறது. பூமி ஸிம்ஹானமாகிறது. சரஸ்வதியும் பணிப்பெண்ணாகிறாள். அவர்க்கு ஐஸ்வர்யலக்ஷ்மீ பணிந்து செயல்படுகிறாள். சகல தீர்த்தங்களின் வடிவானவளே, சகல மந்த்ர ஸ்வரூபிணியே, சகல சாஸ்த்ர ரூபிணியே, மந்த்ர ரூபமான உபாஸனா யந்த்ரங்களில் உறைபவளே!

எல்லா ஜ்யோதிஷ்சக்கரங்கள், சக்திகளுக்கும் இருப்பிடமானவளே, எல்லா தேவதா ஸ்தானங்களின் வடிவானவளே, எல்லா தத்வார்த்தங்களுக்கும் உறைவிடமே, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமானவளே, யோகம் முதலிய சகல உபாஸனை சாதனைகளுக்கும் இருப்பிடமானவளே, சகல சப்த ரூபங்களுக்கும் உறைவிடமே, அக்ஷரங்களின் ஸ்வரூபிணியே, யக்ஞம் முதலிய உபாசனா தீக்ஷைகளில் உறைபவளே, எங்கும் வ்யாபித்த அத்வைத வடிவினளே, ஹே உலகங்களின் தாயே! என்னை காப்பாற்று, என்னைக் காப்பாற்று, என்னைக்காப்பாற்று, உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள்.

 

படைப்பாற்றலை பெருக்குவாள் பிராம்ஹி!


சரஸ்வதியின் அம்சமாக ப்ராம்ஹி எனும் திருப்பெயரில் அருள்புரியும் அம்பிகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பிராம்ஹி பிரம்ம தேவனின் முதல் எழுத்தாகிய ‘ப்ராம்’ என்பதே இவளின் பீஜாட்சரமாகத் துலங்குகிறது. மது, கைடப வதத்திற்குப் பின் பிரம்ம தேவனுக்கு உலகை உருவாக்கும்படி பராசக்தி கட்டளையிட, பிரம்மா தன் பணியைத் திறம்பட புரிய துணையாக அவருக்கு அவளருளால் தரப்பட்ட சரஸ்வதி தேவியே ப்ராம்ஹி எனப் போற்றப்படுகிறாள்.

ஓர் சமயம் நான்முகன் தம் நாயகியரான காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி போன்ற தம் சக்திகளுடன் காசிக்கு வந்தார். அங்கு ‘பிதாமகேஸ்வரம்’ எனும் லிங்கத்தை நிறுவி வழிபட்டார். உலக நலனுக்காக பத்து அஸ்வமேதயாகங்களை அங்கே செய்து முடித்தார் படைப்புக் கடவுள்.

யாகங்கள் முடிந்ததும் ‘அவப்ருத எனும் ஸ்நானம் செய்ய வேண்டி கங்கையை நோக்கி காயத்ரி, சாவித்ரி போன்ற இரு தேவியருடன் சென்றார் பிரம்மா. யாக சாலையில் கந்தர்வர்களின் இனிய இசையில் சங்கீதத்திற்கு தேவதையான சரஸ்வதியே ஆழ்ந்திருந்தாள். ஆகையால், பிரம்மன் நீராடச் சென்றதை அவள் அறியவில்லை. சரஸ்வதிக்காக கங்கையின் கரையில் காத்திருந்த நான்முகன் நேரம் கடந்துவிட்டதால் மற்ற இருவருடன் அவப்ருத ஸ்நானம் செய்து முடித்தார்.

காலம் கடந்து கங்கையை அடைந்த கலைவாணி ‘‘தாங்கள் என்னை விட்டு எப்படி நீராடலாம்?’’ என வெகுண்டாள். அதனால் கோபம் கொண்ட பிரம்மா, ‘‘தேவி! நீ சரியான நேரத்தில் வராதது மட்டுமன்றி என்னிடமும் கோபம் கொண்டாய். எனவே, நீ பூமியில் நாற்பத்தெட்டு முறை பிறவி எடுத்து பின் எம்மை அடைவாய்,’’ என சாபமிட்டார்.

அதற்கு சரஸ்வதி, ‘‘நான்முகனே! நாற்பத்தெட்டு முறை நான் பூமியில் பிறவாமல் என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்,’’ என வரம் கேட்டாள். ‘‘பூவுலகில் உனது உருவாய்த் திகழும் 48 அட்சரங்களும் 48 தமிழ்ப் புலவர்களாய்ப் பிறந்து ஒரே சமயத்தில் வாழ்வர். அவர்களுக்கு ‘ஹ’காரத்தின் உருவமாய் பரமனே அந்தத் தமிழ்ப் புலவர்களுக்குத் தலைவனாய் இருந்து அவர்களைப் போற்றுவார்,’’ எனக் கூறினார் பிரம்மன். அவர்களே கீரன், கபிலர், பரணர் முதலான முதற்சங்க தமிழ்ப்புலவர்களானர். சுந்தரேசப் பெருமானே அவர்களுக்குத் தலைவனாய், கவிநாயகனாய் அவர்கள் தலைவனாய் உதித்து தாமிரபரணிக் கரையோரம் வாழ்ந்த அவர்களை மதுரையம்பதிக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் பொறுப்பில் அவர்களை விட்டுச் சென்றார்.

இந்த சரஸ்வதி தேவியின் அம்சமான 48 மாத்ருகா அட்சரங்களே 48 சங்கப் புலவர்களாகத் திகழ்ந்தனர். பொருட்சுவையும், சொற்சுவையும் நிறைந்த இனிமையான பற்பல பாடல்களை இயற்றி, சொல்லும் பொருளுமாய், மலரும் மணமுமாய் உள்ள மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை போன்றவற்றைச் செய்து பாரினில் தமிழ் மணம் பரப்பியதை திருவிளையாடற் புராணம் பேசுகிறது.

இத்தேவி சொல்லின் உருவமானவள். வாக்தேவதை, வர்ணமாத்ருகா, வாக்வாதினி, சரஸ்வதி என மந்திர சாஸ்திரங்களால் வர்ணிக்கப்படுபவள். அ முதல் ஃ வரையிலுள்ள உயிர் எழுத்து களை முகமாகவும், கண், காது, மூக்கு போன்றனவாகவும் விளங்குகின்றன. வடமொழியின் கவர்கம், சவர்கம் போன்ற பத்து எழுத்துகள் தேவியின் கரங்களாகவும், ட-வர்கமும் த- வர்கமும் ஆகிய பத்து எழுத்துகள் ப-வர்க்கம் வயிறாகவும், ய-விலிருந்து ஹ வரை எட்டு எழுத்துகளும் தோல், ரத்தம், சதை, எலும்பு, மஞ்ஜை, சுக்லம் போன்ற தாதுகளாகவும் இவளின் திவ்ய தேகத்தில் அமைந்துள்ளன.

சங்கீதமும் ஸாகித்யமும் இரு ஸ்தானங்களாகத் திகழ்கின்றன. தன் ஆறு கரங்களிலும் வரதம், அக்கமாலை, தண்டம், கமண்டலம், சருவம், அபயம் போன்றவற்றைத் தரித்தவள். பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் அன்னத்தை வாகனமாய்க் கொண்டதை நம் வேண்டாத குணங்களையும் பிரித்துக் காப்பதை உணர்த்துவதுபோல் உள்ளது.

மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் கலந்த நிறத்தை உடையவள். மான் தோலை ஆடையாகத் தரித்தவள். இவள் பாலை எனும் குழந்தை வடிவமும் கொண்டவள் என துர்க்கா பூஜா கல்பம் எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது. இத்தேவி அதிகாலையில் துதிக்கப்படும் சந்தியா தேவதையாகவும், பிரம்ம சக்தி எனும் கிராம தேவதையாகவும் வேள்விகளைக் காக்கும் யாக தேவதையாகவும், அஷ்ட பைரவர்களில் முதல்வனான அஸிதாங்க பைரவரின் தேவியாகவும் பல நிலைகளில் இருந்து பக்தர்களுக்கு திருவருட்பாலிக்கிறாள்.

‘ப்ராம்ஹணீ பஞ்ஜிகா ஸ்ப்ருகா த்விஜபரி நீஷுவிச் ருதா’ என்ற விச்வ கோச வசனப்படி ப்ராம்ஹணீ எனும் பதமானது ஞான விசேஷத்தைக் குறிக்கும். வெள்ளைத் தாமரையில் ஞான வடிவாக விளங்குவதை ஸமயாசார ஸ்ம்ருதி எனும் நூல் ‘ப்ராஹ்மணீ ச்வேத புஷ்பாட்யா ஸம்வித்ஸா தேவாத்மிகா’ என்று போற்றுகின்றது. இவள் ப்ரம்மானந்தத்தை உடையவள் என்பதால் ப்ரஹ்மானந்தா என்றும் இவளைப் போற்றுவர்.

இவளே கலாதேவி. சகல கல்வி கேள்விகளில் சிறந்தவராக இவள் கடைக்கண் பார்வை கட்டாயம் தேவை. இந்த தேவியின் வாகனமான அன்னமும் சத்வ குணத்திற்குப் பெயர் பெற்ற பறவையாகும்.
இந்த அன்னையை தியானித்து வழிபட்டால் கற்ற கலைகள் மறந்து போகாமல் மனதினில் நிலைத்திருக்கும்.

போர்க்கோலம் கொள்ளும்போது ஆயுதங்களோடும், ஞானத்தை அளிக்கும்போது வாக்தேவியாக, வீணா புஸ்தக தாரிணியாக, சரஸ்வதியாக அருள்பவளும் இவளே. தோலிற்குத் தலைவியான இவள் கோபம் கொண்டால் சொறி நோய் ஏற்படும். வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை சாந்தமடைந்து நம்மை ஆசீர்வதிப்பாள். தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித் தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.

ப்ராம்ஹி த்யான ஸ்லோகங்கள்

அக்ஷஸ்ரக் சுபகுண்டி கேச தததீம் ஹஸ்தைர் வரம் சாபயம்
தேவீ ஸௌம்ய முகோத்பவாம் ஸ்மித முகீம்
ஹம்ஸேஸ்திதாம் வாஹனே ப்ரம்மாணீம்ஜகதாம் சுபம்
விதததீம் ஆத்யாமஹம் மாதரம்வந்தே ஸ்வர்ணஸமான
காந்திருதிராம் சக்திம் ப்ராம் ப்ராஹ்மணீ:

தண்டம் கமண்டலூம் கச்சாத் அக்ஷஸூத்ரமதாபயம்
பிப்ரதி ககச்யா ப்ராஹ்மீ க்ருஷ்ணாஜினோஜ்வலா.
சதுர்புஜாம் சதுர்வக்த்ராம் பீதமால்யாம் பரோஜ்வலாம்
வரதாபய ஹஸ்தாம் ச ஸாக்ஷமாலாம் ஸகண்டிகாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்ஹம்ஸவாகனஸுஸ்திதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ப்ராஹ்மீம் த்யாத்வார பூஜயேத்.

நான்கு முகங்களையும், நான்கு கைகளையும் உடையவளும், மஞ்சள் நிறமான ஆடை, மாலை இவைகளால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், வரதம், அபயம் எனும் முத்திரைகளைக் கையில் பெற்றிருப்பவளும் (ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவளும், அன்னவாகனத்தில் பவனிவருபவளும் எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமான பிராஹ்மி தேவியை தியானிக்கிறேன்.

ப்ராஹ்மி காயத்ரி

ஓம் ஹம்ஸத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்:

அன்னத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை உடையவளும், தர்ப்பைப் புற்களால் ஆன கூர்ச்சத்தை ஏந்திய கரங்கள் கொண்டவளுமான ப்ராஹ்மி எனும் தேவியை த்யானம் செய்கிறேன். அவள் என் முன்வந்து என் அறிவை மேம்படுத்தி ப்ரகாசிக்கச் செய்வாளாக.

மந்த்ரம்

ஓம் ப்ராம் ப்ராஹ்ம்யை நமஹ.

தேவி மஹாமித்யத்தில் ப்ராஹ்மி!

ஹம்ஸயுக்த விமானஸ்தே பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரிசாம்ப க்ஷூரிகே தேவி நாராயணி நமோஸ்துதே.

ப்ராஹ்மி வடிவம் எடுத்து ஹம்ஸங்கள் பூட்டிய விமானத்தில் வீற்றிருந்து தர்பைப்புல்லால் நீரைத் தெளிக்கும் தேவி நாராயணியே! உனக்கு நமஸ்காரம்.

 

மகோன்னத வாழ்வருளும் ப்ருஹஸ்பதி கவசம்!

இந்த ஸ்லோகம், பரமசிவனால் ரிஷிகளுக்கு உபதேசிக்கப்பட்டது. இதைப் படிப்பவரின் எல்லா எண்ணங்களும் ஈடேறும். எங்கும் எதிலும்  வெற்றியைக் காணமுடியும். வயிறு, இதயப் பகுதிகளில் தோன்றக்கூடிய நோய்கள் நீங்கும். நீண்ட ஆயுள் கிட்டும். குரு கிரக தோஷம் விலகும்.

ப்ரஹஸ்பதி த்யானம்தப்த காஞ்சன வர்ணாபாம் சதுர்புஜஸமன்விதாம்
தண்டாக்ஷ ஸூத்ரஹஸ்தம் ச கமண்டலுவரான்விதாம்
பீதாம்பரதரம் தேவம் பீதகந்தானுலேபனம்
புஷ்பராகமயாபூஷம் விசித்ரமகுடோஜ்வலம்
ஸ்வர்ணாஸ்வரதமாரூடம் பீதத்வஜ ஸுஸோபிதாம்

மேரோ: ப்ரதக்ஷிணம் ஸம்யகாசரந்தம் ஸுஸோபனம்
அபீஷ்டவரதம் தேவம் ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வ காமார்த்த ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும் ஸதா

பொதுப் பொருள்:
 
உருக்கிய தங்கம் போன்ற நிறத்தைக் கொண்டவரே, நான்கு கரங்கள் உடையவரே, அந்தக் கரங்களில் தண்டம், ருத்ராக்ஷ மாலை, கமண்டலு, வரத முத்திரை ஆகியவற்றைத் தரித்தவரே நமஸ்காரம். பொன்னாடை அணிந்தவரே, மஞ்சள், சந்தனம் பூசியவரே, ஒளிவீசும் விசித்திரமான கிரீடம் அணிந்தவரே,

மஞ்சள் வண்ணக் கொடி கட்டப்பட்ட, தங்க நிறத்தில் ஜொலிக்கும் குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்திருப்பவரே, மேரு மலையை மிக அழகாக வலம் வருபவரே, கோரிய வரங்களைத் தட்டாமல் அளிப்பவரே, தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே, ப்ரஹஸ்பதி எனும் குரு பகவானே, என் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி அருள்வீராக. 

ப்ரஹஸ்பதி ஸஸிரோ பாது லலாடம் பாது மே குரு:
கர்ணௌ ஸுரகுரு: பாது நேத்ரே மேபீஷ்டதாயக:

ப்ரஹஸ்பதியே என் தலையைக் காப்பீராக. குருவானவரே என் நெற்றியைக் காப்பீராக. தேவர்களின் குருவே என் காதுகளைக் காப்பீராக. விரும்பிய பொருளை விரைந்து அளிப்பவரே என் கண்களைக் காப்பீராக.

நாஸாம் பாது ஸுராசார்ய: ஜிஹ்வாம் மே வேதபாரக:
முகம் மே பாது ஸர்வக்ஞ புஜௌ பாது ஸுபப்ரத:

ஸுராசார்யரே என் மூக்கைக் காத்தருள்வீராக. வேதங்களில் கரையைக் கண்டவரே எனது நாக்கைக் காத்தருள்வீராக. ஸர்வக்ஞரே எனது முகத்தைக் காத்தருள்வீராக. சுபமான நற்பயனை அளிப்பவரே என் புஜங்களையும் காத்தருள்வீராக.

கரௌ மே வரத: பாது வக்ஷோ மே பாது கீஷ்பதி:
ஸ்தனௌ மே பாது வாகீஸ: குஷிம் மே ஸுபலக்ஷண:

வரங்களை வாரி வழங்குபவரே, என் உள்ளங்கைகளைப் பாதுகாப்பீராக. வாக்குக்கு அதிபதியானவரே, என் மார்பை பாதுகாப்பீராக. வாகீஸ்வரரே எனது ஸ்தனங்களைக் காப்பீராக. அழகிய லக்ஷணம் பொருந்தியவரே எனது வயிற்றைக் காப்பீராக.

நாபிம் பாது ஸுநீதிக்ஞ: கடிம் மே பாது ஸர்வத:
ஊரும் மே பாது புண்யாத்மா ஜங்கே மே க்ஞானத: ப்ரபு:

மங்களமான நீதியை அறிந்தவர் என் தொப்புளைக் காக்கட்டும்.  எல்லாவற்றையும் அளிப்பவர் எனது இடுப்பைக் காக்கட்டும்.  புண்ணியமான மனமுடையவர் என் தொடைகளைக் காக்கட்டும். அறிவை வளர்க்கும் பிரபுவானவர் என் ஆடுசதைகளைக் காக்கட்டும்.
 
பாதௌ மே பாது விஸ்வாத்மா ஸர்வாங்கம்
ஸர்வதா குரு:
 
உலகெங்கும் வியாபித்தவர் எனது கால்களையும், குருவானவர் எப்பொழுதும் எல்லா அங்கங்களையும் ரட்சிப்பீராக. 

ய: இதம் கவசம் திவ்யம் த்ரிஸந்த்யம் ய: ப்டேந்நர:
ஸர்வான் காமானவாப்னோதி ஸர்வத்ர விஜயீ பவேத்
ஸர்வத்ர பூஜ்யோ பவதி வாக்பதேஸ் ச ப்ரஸாதத:

இந்த கவசத்தை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று  வேளைகளிலும் படிப்போர், எல்லா நலன்களையும், வெற்றிகளையும் எளிதாக அடைவர். ப்ரஹஸ்பதியின் இந்தப் பேரருளால் எல்லோராலும் புகழப்படுபவராகவும், மதிக்கப்படுபவராகவும் விளங்குவர்.

ப்ருஹஸ்பதிஸ் ஸுராஸார்ய: தயாவான் ஸுபலக்ஷண:
லோகத்ரய குரு மான் ஸர்வக்ஞஸ் ஸர்வகோவித:

ப்ருஹஸ்பதியானவர் தேவர்களுக்கு ஆசாரியர். தயை உள்ளவர். சுபமான லக்ஷணங்கள் பெற்றவர். மூன்று உலகங்களுக்கும் குருவானவர். சோபையுள்ளவர். ஸர்வத்தையும் அறிந்தவர். எல்லாவற்றிலும் கரை தேர்ந்தவர்.

ஸர்வேஸஸ் ஸர்வதா பீஷ்டஸ் ஸர்வஜித் ஸர்வபூஜித:
அக்ரோதனோ முனிஸ்ரேஷ்ட: நீதி கர்த்தாகுரு: பிதா

அவர் சகலத்திற்கும் ஈஸ்வரர். எப்போழுதும் எல்லோரையும் மிகவும் விரும்பி அருள்பவர். எல்லாவற்றையும் ஜெயித்தவர். எல்லோராலும் பூஜிக்கப்பட்டவர். கோபமற்றவர். சிறந்த முனிவர். நீதியை செய்தவர். குரு, தந்தையைப் போன்றவர்.

விஸ்வத்மா விஸ்வகர்தா ச விஸ்வயோநிரயோநிஜ:
பூர்புவஸ்வ: ப்ரபுஸ்சைவ பர்தா சைவ மஹாபல:

உலகின் ஸ்வரூபமாக இருப்பவர். உலகை உருவாக்கியவர். தெய்வீக அவதாரம் எடுத்தவர். பூ:, புவ:, ஸுவ: என்ற மூவுலகங்களுக்கும் பிரபுவாகத் திகழ்பவர். உடன் பிறந்தவராக இருப்பவர். மிக்க பலமுள்ளவர்.

சதுர்விம்ஸதி நாமானி புண்யானி நியதாத்மனா
நந்தகோப க்ருஹாஸீன விஷ்ணுனா கீர்த்திதானி வை

இந்த புண்ணியமான ப்ரஹஸ்பதியின் நாமங்கள் நந்தகோபனின் வீட்டில் வசித்த மகாவிஷ்ணுவான கிருஷ்ணனால் ஒருமைப்பட்ட மனத்துடன் கூறப்பட்டன.

ய: படேத் ப்ராதருத்தாய ப்ரயதஸ்ஸு ஸமாஹித:
விபரீதோபி பகவான் ப்ரீதஸ்யாத்து ப்ருஹஸ்பதி:

மிக்க முயற்சியுற்றவனாகவும், அடங்கிய மனமுடனும், எவன் காலையில் எழுந்து இதைப் படிக்கிறானோ, அவனுக்கு ஜாதகத்தில் பலன்கள் விபரீதமான முறையில் இருந்தாலும் பகவானான ப்ருஹஸ்பதி திருவருளால் அவையெல்லாம் நல்லனவாகவே மாறும்.

யஸ்ஸ்ருணோதி குருஸ்தோத்ரம் சிரம் ஜீவேன்னஸம்ஸய:

ஸஹஸ்ர கோதானபலம் விஷ்ணோர் வசனதோபவேத்
ப்ருஹஸ்பதி க்ருதாபீடா நகதாசித்பவிஷ்யதி.

யார் இந்த குரு ஸ்தோத்திரத்தைக் கேட்கிறாரோ, அவன் சிரஞ்சீவியாக வெகு காலம் வாழ்வார். திருமாலின் வாக்குப்படி ஆயிரம் கோதானம் செய்த பயனும் கிட்டும். குரு க்ரஹ பாதிப்புகள் ஒரு பொழுதும் ஏற்படாது.