சனி, 11 ஜூன், 2016

அதிர்ஷ்டம் தரும் சூரிய தேவன்!




சூரிய கதிர்கள் நம்மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும் . அதுசரி எல்லோர் மேலும் தினம் தினம் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது எந்த கடாட்சாரமும் வாழ்வில் இல்லையே என கேட்கத் தோன்றும், அறிவீராக, காலையில் உதிக்கும் அருணோதயம் இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு கை உள்ளங்கையில் படவேண்டும், பெற்ற கதிர்களை தலையில் வைத்து எடுக்க வேண்டும், (சூரியனை பார்த்து இரு உள்ளங்கைகளையும் சிறிது நேரம் காண்பித்து அந்த கைகளை தலைமேல் ஒரு நிமிடம் வைத்துக் கொள்ளவும்) இதுபோல் மூன்று முறை செய்ய வேண்டும், இதை வெறும் வயிற்றோடு செய்ய வேண்டும், பிறகு தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம், இன்றே மாலை சூரியன் மறைவு நேரத்தில் மேற்கு பக்கமாக நின்று இரு கைகளையும் வயிற்றுக்கு நேராக வைத்துக் கொண்டு ஒன்று சேர்த்து சூரியனை லக்ஷ்மி நாராயணனாக பாவித்து வணங்க வேண்டும் . வணங்கி இரு உள்ளங்கைகளையும் தொப்புள் மேல் படும்படி வைத்து எடுக்க வேண்டும் .


ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் செய்வது முழு பலன் கொடுக்கும், பெண்கள் தொப்புளை இறுக்கி கட்டும் ஆடையை சற்று தொப்புளை இறுக்காமல் தளர்த்தி கட்டிக் கொண்டோ அல்லது தொப்புளை விட்டு இறக்கி கட்டிக் கொண்டோ வழிபாடு செய்ய வேண்டும் . அவசியம் உடலில் சூரிய கதிர்கள் படவேண்டும் . மேக மூட்டமாகவோ. மரங்கள் மறைத்தோ. உயரமான கட்டிடங்கள் மறைத்தோ இருந்தால் பலன் இல்லை .


நின்ற நிலையில்தான் வணங்க வேண்டும் . சூழ்நிலை இல்லாதவர்கள் அத்திசையை பார்த்து கூறியபடி வணங்கிக் கொள்ளுங்கள், பலன் சற்று தாமதமாக கிடைக்கும் .


வெள்ளி. சனி. ஞாயிறு. திங்கள் இந்த நாட்களிலும் பௌர்ணமி. அமாவாசை. தமிழ்மாத முதல்நாள் ஆகிய தினங்களில் தண்ணீரில் நின்று கூறியபடி சூரிய கதிர்களை பெற்றால் அற்புதமான செல்வ வளத்தையும். புகழ்வளத்தையும் பெறலாம், மீண்டும் நினைவுபடுத்துகிறோம், காலை சூரிய கதிர்களை பிரம்மா சரஸ்வதியாக பாவித்து சூரியனை பார்த்து உள்ளங்கையை காண்பித்து தலைக்கு மேல் வைத்து எடுக்கவும், இதுபோல் மெல்ல மூன்று தடவை செய்யவும், காலை வேளை மட்டுமே கூறிய தினங்களில் தண்ணீரில் நின்று பிராத்திக்கவும் . மாலையில் அவ்வாறு செய்யக்கூடாது .


கல்வி ஞானம் வளருவதோடு செல்வ வளமும் சேரும் மாலை வேளை லக்ஷ்மி நாராயணனாக பாவித்து இரு கைகளையும் வயிற்று தொப்புளுக்கு நேராக வைத்து வணங்கி தொப்புளில் இரு கைகளையும் வைத்து எடுக்கவும், மூன்று முறை இதுபோல் செய்யவும், செல்வத்திற்கான கோரிக்கையை தெளிவாக அன்றாடம் வேண்டவும், இவ்வாறு செய்தால் செல்வ வளம் கூடும், (தொப்புள் லக்ஷ்மி ஸ்தானம் அங்கு லக்ஷ்மி நாராயணரை மாலை வேளை வணங்கி லட்சுமி ஸ்தானத்தில் குவித்த கர சக்திகளை வைத்தால் செல்வ வளம் கூடும்), இந்த முறைகள் கல்வி. செல்வம். ஞானம் இவைகளுக்கான வழிபாடு முறையாகும் .


இங்கு ஒரு எச்சரிக்கையையும் அறிக உச்சி சூரியன் மதியம் 12 ல் இருந்து 1 மணிக்குள் ருத்ரன் இந்த கதிர்கள் உங்கள் இரு உள்ளங்கைகளிலும் நேரிடையாக படக்கூடாது, எப்பொழுதுமே உச்சி வெயில் தலையை தாக்குவதோ. உள்ளங்கையில் படுவதோ கூடாது . பணிபுரிபவர்கள் வெளியில் சென்றவர்கள் தலையில் படுவதை தவிர்க்க முடியாதுதான் எனினும் உள்ளங்கையில் படுவதையாவது தவிர்க்கலாம் .அவ்வாறு பட்டால் செல்வம் சந்தோஷம் அழிவது உறுதி,


ருத்ரவேளை எதையும் அழிக்கும், தங்களிடம் உள்ள சூன்யம். தீய சக்தி இவைகளை அழிக்கவே அந்த நேரம் பயன்படும், சுபிட்சங்களுக்கு அந்த நேரம் சிறந்ததாகாது . எனவே தவிர்க்கவும் .


ஒரு தகவலையும் அறியுங்கள், உள்ளங்கையில் ஒரு வேளை தெரியாமல் சூரிய ஒளி கதிர்கள் நேரிடையாக பட்டு விட்டால் தரித்திரம் ஆட்கொள்ளக்கூடாது என்பதற்காக மகாலட்சுமியின் அம்சமான மருதாணியை உள்ளங்கையில் வைத்து காத்துக் கொண்டனர், பெண்கள் வெளியில் செல்லும் போது தலையில் முக்காடு போட்டு உச்சி கதிர்கள் தாக்காதவாறு பாதுகாத்துக் கொண்டனர், (இன்றும் வடக்கு பகுதியில் வாழும் பெண்கள். மார்வாடி பெண்கள் வெளியில் செல்லும் போது முக்காடு போட்டு செல்வதை பார்த்திருப்பீர்கள், முஸ்லீம் பெண்களும். ஆண்களும் கூட வெளியில் செல்லும் போது குர்தா அணிவது. தொப்பி அணிவதை மறக்காமல் செய்வார்கள், காரணம் வேறாக இருந்தாலும் அதில் இயல்பாகவே நன்மையுள்ளது என்பதை கவனிக்க வேண்டும், ) 


உச்சி சூரிய கதிர்கள் நம் உள்ளங்கையில் படக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள், இன்றும்கூட உச்சி வேளையில் வெளியில் அனாவசியமாக போகாதீர்கள் காத்து கருப்பு அன்டும் என்றெல்லாம் பயமுறுத்துவார்கள், இன்றைக்கு இருப்பவர்களுக்கு அதற்கான விளக்கம் பலவாராக கூறினாலும் மேற்கண்ட கருத்தே முதன்மையானது . தரித்திரம் ஆட்கொள்ளும் , மூதேவி அண்டும், செல்வம் வற்றி கடன்பட வைக்கும் . எனவே உச்சி வெயிலில் உள்ளங்கைகளை காட்டாதீர்கள்,


காலை. மாலை சூரிய பூஜை செய்தாலும் மற்ற எந்த பூஜை வழிபாடு செய்தாலும் உச்சி வேளை கதிர் உள்ளங்கை கண்டால் எல்லாம் செயலிழக்கும், மேலும் ஒரு தகவலை அறியவும், விஷயம் அறிந்த ஆலய அர்ச்சகர்கள் 12 மணிக்கெல்லாம் ஆலயத்தை மூடிவிடுவார்கள், ஏனெனில் மக்கள் தன் குறைவுகளை கைநீட்டியே கேட்பார்கள், அப்போது சூரிய உச்சி கதிர்கள் கைகளில் (உள்ளங்கைகளில்) பட்டால் வழிபாட்டு பலன் கிடைக்காது என அறிந்தே அந்த நேரத்தில் வழிபாடு முடிக்க அர்ச்சகர்கள் எத்தனிப்பார்கள், இது தேவ ரகசியமாகும் . இன்று சூழ்நிலையில் அவர்களால் அறியாமலும் கடைபிடிக்க முடியாமலும் போனாலும் இனி அறிந்து செயல்படுங்கள், லட்சுமிகடாட்சரத்தை தவற விடாதீர்கள் .




நன்றி: கிரிதர்மஹாதேவ் தொகுப்புகள்!



வியாழன், 9 ஜூன், 2016

ஸ்ரீ லக்ஷ்மி கடாக்க்ஷம் அருளும் லக்க்ஷம் மஞ்சள் பிரார்த்தனை!








மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி

துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே.






ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ: ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ: ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை: ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம் ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே






சௌமங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள்

சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். 

அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம்,

ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் 
ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அன்னையை ஜபித்து பிரார்த்தித்தால் இக பர சௌபாக்கியங்களை அடையலாம் ...




ஆந்திர தேசத்தில் சுமங்கலிப் பெண்கள் நவராத்திரி தினங்களில்  ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள். 


  


மிகவும் சிரத்தையுடன் ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை  மட்டும் உணவு.  அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி  என்று  இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள்.














 
சிறப்பாக …, “ஒக்க லக்ஷ  பசுப்பு..” அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி  மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது  இரு கைகளின்  முழங்கை வரை மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள். 

 

அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்…அள்ளி அள்ளித் தருவார்கள்.

 நவராத்திரி  ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம்  மஞ்சள்கிழங்குகள் வரை கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர்.


இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும்.


இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும் பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும்.


 இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்

 
விடியற்காலையில்  நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரை கூட நீண்ட வரிசையில்  மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே “லலிதா சஹஸ்ரநாமம்” பாராயணம் செய்து கொண்டே இருக்கும் சுகமான அனுபவம் கிடைப்பதை பெரும் பேறு பெற்ற வரமாகவே சுமங்கலிப் பெண்கள் மகிழ்வார்கள்...

ஆந்திராவில் “லட்சப் பசுப்பு”என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் திரண்டு  அலைமோதும் கண்கொள்ளாக் கட்சியைப் பக்திப் பரவத்துடன் கண்டு களிக்கலாம்.






தமிழகத்தில் எப்படி “கொலு” வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று “கொலு பார்க்க வந்திருக்கோம்” என்று சென்று கொலுவைப் பார்த்துவிட்டு தாம்பூலமும் சுண்டலும் வாங்கிச் செல்வார்களோ…அதே போல ஆந்திராவிலும் “லட்சப் பசுப்பு” என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் அலைமோதும்.









Bhimavaram Sri Padmavathi Ammavaru receiving Poojas with 1 Lakh Turmeric Sticks (Pasupu Kommulu)








சுமங்கலி பிரார்த்தனை!

ஐந்து  சுமங்கலி பெண்களை  வரசொல்லி  அவர்களுக்கு கால்களில் நலங்கு இட்டு, வெற்றிலை. பாக்கு பழம், புஷ்பம், தக்க்ஷினை, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம்  கொடுத்து, ரவிக்கை துண்டு, கண்மை, மருதாணி  பவுடர் கொடுத்து சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும்.












லக்ஷம் மஞ்சள் கிழங்குகளை  நூறு  நூறாக ஆயிரம் பாக்கட்டுகளில் அல்லது ஐநூறு  ஐநூறாக இரு நூறூ பாக்கட்டுகள் செய்து கொண்டு 45 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும். கொடுக்கும் போது ஒவ்வொருவருக்கும், குங்குமம், வெர்றீலை பாக்கு, தக்ஷிணை, பழம், புஷ்பம் மஞ்சள் பாக்கட்டுடன் கொடுக்க வேண்டும்.




தீர்க்க சௌமாங்கல்யம் பெற

ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.

ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;

உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.



தீர்க்க சௌமாங்கல்யம் பெற:
ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
பதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே


மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக”
கொஞ்சும் தமிழே வருக .கோடான கோடி தருக ..





மஞ்சள் எனில் மங்களம். .. மஞ்சள் பண்டிகைகளில்   சிறப்பிடம் பெறுகிறது ...

மங்கள நிகழ்ச்சிகள்  துவங்கும்போதும் மஞ்சள்  பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர் வழக்கம்... இதற்கு விஞ்ஞான காரணமும் இருக்கிறது ...





இல்லத்தில் பூஜைப்பொருள்களோ , மளிகைப்பொருட்களோ வாங்குவதற்கு பிள்ளயார் சுழியிட்டு மஞ்சள் , குங்குமம , உப்பு என்றே ஆரம்பிக்கும் வழக்கம் உண்டு ..






திருமண்த்திற்கு முதலில் பொருட்கள் எடுத்துவைப்பதில் மஞ்சள் , மஞ்சள் குங்குமம் முதலிடம் பெறுகிறது ..









புத்தாடைகளை நுனியில் மஞ்சள் துளி தடவியே அணிவது வழக்கம் .

படிமம்:Plant turmeric.JPG



கைலாச கௌரி பூஜை :  utube view:







பதார்த்த குண சிந்தாமணி!



பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்

மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம்
ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே. (1506)

உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்

மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே.  (1507)

ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்
அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்

வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே (1508)

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ்
சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை

வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே (1509)

எளிமையாய்ப் புரிந்துகொள்ள இதன் பொருள்:

பாலும், பால் சேர்ந்த உணவும் உண்போம்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.
பகல்நேரத்தில் போகத்தில் ஈடுபட மாட்டோம்.
தன்னைவிட வயதில் மூத்த பெண்களோடும், பொதுமகளிரோடும் கூடமாட்டோம்.

காலை நேரத்து இளம்வெயிலில் திரிய மாட்டோம்.
மலத்தையும், சிறுநீரையும் அடக்க மாட்டோம்.
சுக்கிலத்தை அடுத்தடுத்து விட மாட்டோம்.
இடது கைப்புறமாக ஒருக்களித்துப் படுப்போம்.

மூலவியாதியை உண்டாக்கும் பதார்த்த வகைகளை உண்ண மாட்டோம்.
புளித்த தயிரை உண்போம்.
முதல்நாள் சமைத்த கறி அமிர்தத்துக்குச் சமமானாலும் புசிக்கமாட்டோம்.
பசித்தால் ஒழியச் சாப்பிட மாட்டோம்.

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம்.
இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம்.
மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம்.
பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம்.

கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம்.
பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம்.
நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வாந்தி மருந்து உண்போம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து உண்போம்.
ஒன்றரை மாதத்துக்கு ஒரு தடவை மூக்கிற்கு மருந்திட்டுக்கொள்வோம்.
வாரம் ஒரு தடவை முகச் சவரம் செய்துகொள்வோம்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்.

மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம்.
நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம்.
மாதவிடாய் நேரத்துப் பெண்டிராலும், ஆடு, கழுதை, பெருக்கும் துடைப்பம் இவற்றாலும் எழும் புழுதி உடல் மேல்படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம்.
பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம்.
உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், அழுக்குடை அணிதல் இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம்.

பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம்.
நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம்.
ஆனபடியால், நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?



சனி, 4 ஜூன், 2016

மகா சதாசிவ மூர்த்தி!

                            

அனந்த பத்மநாப சுவாமி விரதம்!




அனந்த பத்மநாப சுவாமி விரதம் .  இவ்விரதம் கேரள மக்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் ஒன்று.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எல்லாவித செல்வங்களையும் பெற்று நலமாக வாழ்கிறார்கள்.

இந்த விரதம் பற்றிய புராணக் கதை...

வசிஷ்டரின் வம்சத்தில் வந்த சுமந்து முனிவருக்கும், பிருகு முனிவரின் மகள் தீஷாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சீலா என்ற பெண் குழந்தை பிறந்ததும் தாய் தீஷா மரணமடைந்தாள். பிறகு சுமந்து முனிவர் கர்க்சா என்ற பெண்ணை இரண்டாந்தாரமாக மணந்தார். முதல் மனைவிக்குப் பிறந்த சீலா திருமண வயதை அடைந்ததும் அவளை கவுண்டிய ரிஷிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

அப்போது சீலாவுக்கு தாய்வீட்டுச் சீதனமாக ஏதும் கொடுக்காமல், வீட்டில் இருந்த சத்துமாவைக் கொஞ்சம் கட்டிக் கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பினாள் சித்தி கர்க்சா.

இதை நினைத்து வருந்தியபடி கணவருடன் சென்று கொண்டிருந்த சீலா, போகும் வழியில் பெண்கள் கூட்டமாகக் கூடி ஏதோ பூஜை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களிடம் அது பற்றிய விவரம் கேட்டாள்.

அன்று அனந்த பத்மநாப சுவாமி விரதம் என்று அப்பெண்கள் கூற, சீலாவும் அவர் களோடு சேர்ந்து தன்னிடம் இருந்த சத்துமாவை சுவாமிக்கு பக்தியுடன் படைத்து வணங்கினாள்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதையில் சொன்ன, "உன்னிடம் உள்ளதை உள்ளன்புடன் எனக்கு சமர்ப்பித்தால் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறேன்' என்ற வாக்கியத்திற்கிணங்க, அனந்த பத்மநாப சுவாமியும் சீலாவுக்கு அருள்புரிந்தார்.

பூஜையில் வைத்த பட்டுக் கயிறை எடுத்து தன் கையில் கட்டிக்கொண்டு கணவருடன் அவர் வீடு வந்து சேர்ந்தாள் சீலா.


அவள் செய்த விரத மகிமையால் கவுண்டி யருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஏழ்மை அகன்றது. ஆனால் போதாத காலம்- அவர் ஒருநாள் ஏதோ கோபத்தில் மனைவி கையில் கட்டியிருந்த பட்டுக் கயிறைப் பறித்து அக்னியில் எறிந்தார். உடனே சீலா ஓடிச்சென்று அது எரிவதற்குள் வெளியில் எடுத்து பாலில் நனைத்தாள்.

அன்று முதல் செல்வம் நீங்கி அவர்களை வறுமை வாட்டத் தொடங்கியது. அதன்பின் தான் செய்த தவறை உணர்ந்த கவுண்டியர்,  முனிவர்களின் ஆலோசனைப்படி ஆதிசேஷன் அருள் பெற காட்டுக்குச் சென்று கடும் தவமிருந்தார்.

அப்போது காட்டில் முதிய வேதியர் ஒருவர் கவுண்டியர்முன் தோன்றி, அவரை தற்போதைய திருவனந்தபுரம் கோட்டையில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்து, விவரம் கூறி அவர்முன் ஆதி சேஷனாகக் காட்சியளிக்க, அவரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு அவரது ஆசி பெற்றார் கவுண்டியர். இதை அறிந்த சீலா அரண்மனை வந்து ஆதிசேஷனை வணங்கி ஆசி பெற்றாள். பின்னர் இந்த தம்பதிகள் அனந்த பத்மநாப விரதத்தை அனுஷ்டித்து பல பாக்கியங்கள் பெற்று நலமாக வாழ்ந்தனர்.

மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட் டில் துன்புற்றபோது, ஸ்ரீகிருஷ்ண பகவான் தர்மரிடம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே விரதம் இருந்து மீண்டும் நாட்டையும் நலன்களையும் பெற்றனர்.

இந்த அனந்த பத்மநாப விரதத்தை அனுஷ் டிப்பவர்கள் இழந்த செல்வங்களையும் சக்தி களையும் மீண்டும் பெறுவதுடன், சகல சௌபாக்கியங்களையும் பெறுவர் என்பது திண்ணம். இந்த விரதத்தை அனந்தவிரதம் என்றும் சொல்வார்கள்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டையில் ஆதிசேஷன்மீது சயனித்துக் காட்சி தரும் அனந்த பத்மநாப சுவாமி கோவில் அமைந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.


பூஜை செய்யும் முறை

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியன்று சுமங்கலிப் பெண்கள், அனந்த பத்மநாப சுவாமி படத்தை கிழக்கு பார்த்து வைத்து மலர் அலங்காரம் செய்ய வேண்டும். சுவாமி சம்பந்தப்பட்ட பக்திப் பாடல்களையும், ஆழ்வார் பாடல்களையும் பாட வேண்டும். உங்களுக்கு விருப்பமான இனிப்புகளை அவருக்கு சமர்ப்பித்து, தூப- தீப- நிவேதனம் செய்ய வேண்டும். இதுபோல 13 ஆண்டுகள் தொடர்ந்து செய்ய வேண்டும். சுவாமி அருளால் எல்லா செல்வங்களும் பாக்கியங்களும் கிட்டும். இது சீலா அளித்த உறுதிமொழி. கன்னிப் பெண்களும் இதில் கலந்து கொள்ளலாம்.





திருமாலின் சயனத் திருக்கோலங்கள்!

   
திருமாலின் சயனங்கள்,


1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம் [
உத்தான ] 
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்



1 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம் 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.



2 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தல சயனம் மாமல்லபுரம், கடல மல்லை 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் கடல மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.




3 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்) முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.




4 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்) 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.



5 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான வீர சயனம் 59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் (வீரராகவப் பெருமாள்) வீர சயனத்தில் காட்சி தருகிறார்.



6 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான போக சயனம் 40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.



7 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம் 105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.



8 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான பத்ர சயனம் 99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள்) வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள்.




9 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான மாணிக்க சயனம் 61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

Kalyana Anchaneyar!




Kalyana Anchaneyar
     
A Very Rare Picture of Lord Hanuman with his wife Suvarchala (daughter of Surya )



Although it is unbelievable, it is a fact. The details of this celestial event are found in the manuscript written by Parasara Maharishi in his book Parasra Samhita. Sri Parasara Maharishi had written the life history of Lord Hanuman from his birth and goes on to depict his life even after the Ramayana.
According to Parasara Maharishi, Hanuman had worshipped Surya Bhagwan (the Sun god) as his Guru and studied the Vedas and mastered the Nine Vyakarnas. Being an Aajanma Brahmachari, Lord Hanuman was not eligible to study the Nava Vyakarnas(nine grammars) for which the status of being a Gruhasthu was essential. In order to facilitate the completion of his education, the Trimurthis approached Surya Bhagwan and created a beautiful Kanya, Suvarchala Devi, an Aajanma Brahmacharini, from the Sun's Kiranas(rays) and arranged a marriage with Hanumanji to make him a Gruhasthu without Brahmacharya being affected. Whereby he learnt and became a genius in the Nine Vyakarnas. These details can be found in Parasara Samhita.

There is also a sloka called `Hanuman Mangalashtakam' depicts the Lord thus and runs as follows: 
 
``Suvarchalaa kalathraaya chaturbhuja dharaaya cha
Ushtraa roodhaya veeraya mangalam Sri Hanumathe.''

Meaning of the above sloka : "Salutations to Lord Hanuman, having four arms, accompanied by His consort Suvarchala Devi, seated on a camel and exhibiting extraordinary valour.''
The text further describes Suvarchala as the daughter of Sun-God, Surya, from whom Anjaneya learnt the Vedas.

Temple for Kalyana Anjaneyar 
 
There is a Temple in chennai , Thailavaram on GST Road
At the temple at Thailavaram, the moolavar is eight feet tall. The Lord holds the customary mace in his hand that he rests on his right shoulder. His left hand is placed on his hip. The utsava moorth
i of Anjaneya is with his consort Suvarchala Devi. The Lord is depicted with four arms and is descriptively called Suvarchala Devi Sametha Chaturbhuja Subhamangala Varada Anjaneya Swami. This is a small temple but has an enormous bell about 32 feet high. The top portion of the bell, measures 18 feet with a flag at its mast. The 18 feet concept is said to stand for the 18 chapters of the `Bhagavad Gita.' 
 
The bell called Ghanta Sthamba also functions as a sannidhi for Lord Rama with his consort Sita and brother Lakshmana. The utsava moorthi of this Lord blesses the devotees. The moola vigraham, housed deep inside the bell and not visible to the visitor, is made of Rosewood.
At the base of the bell are four small statues of Anjaneya, with hands folded.
This bell is said to represent the great Vaishnava Acharya, Swami Desika, who according to traditional accounts was an incarnation of the bell of the Tirumala temple.
In front of this sannidhi is a small niche that enshrines an idol of Lord Sundara Bhakta Anjaneya. It is this vigraha that was being worshipped by Sri Muralidasan Swami during his foray into spirituality.
This temple was consecrated on June 30, 1999, by Sri Ramani Anna Swamy who is also responsible for the famous Hanuman temple at Nanganallur with its 32 feet tall Anjaneya Swami.

The temple is located well on GST high road (Chennai – Tricy route) in Thailavaram village, which is located between Guduvanchery and Maraimalai Nagar. The distance from Chennai is around 40 km and the distance from Guduvanchery to this temple is around 3 km. The temple is located next to the famous SRM Engineering College

 

Kalyana Anjaneya with His Consort Suvarchala Devi.

 

The exterior view of the temple of Kalyana Anjaneya (Thailavaram, Guduvancheri).

 
The massive bell. (Inset) Rosewood images of Rama, Sita and Lakshmana.