செவ்வாய், 22 டிசம்பர், 2015

நிறை செல்வம் வழங்கும் குபேர வழிபாடு!


இலங்கேஸ்வரன், சூர்ப்பனகை ஆகியோரின் சகோதரன். சிறந்த சிவபக்தன். தொடர்ந்து பலவிதமான தவங்கள் செய்ததால் சிவபிரான் மனம் குளிர்ந்து குபேரனை வட திசைக்கு அதிபதியாக நியமித்தார். ரிக் வேதத்தில், குபேரனுடன் மகாலட்சுமியும் தனதேவதைகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி - பதுமநிதியை குபேரன் ரட்சிக்கின்றார். சங்க- பதும நிதிகள் அளவற்ற பொருட் செல்வத்தைக் கொண்டமையால், குபேரனின் இருமருங்கிலும் இவர்கள் வீற்றிருப்பார்கள்.

சிற்ப சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி அளகா புரியில் (குபேர பட்டணம்) அத்தாணி மண்டபத் தில், தாமரை மலர்மீதுள்ள ஆசனத்தின் மெத்தைமீது, ஒரு கை அபய முத்திரை காட்ட, கிரீடம் முதலிய சொர்ணாபரணங்களுடன் திருமுத்துக்குடையின் கீழ் குபேரன் வீற்றிருக்கிறார். அவரது வலப்புறத்தில் சங்க நிதி தேவதை (ஆண் உருவம்) தன் இடது கையில் வலம்புரிச் சங்கும், வலது கை வர முத்திரையுடனும் இருக்கிறார். குபேரனுடைய இடப்புறத்தில் பத்ம நிதி தேவதை (ஆண் உருவம்) தன் வலக் கையில் பத்மத்துடனும், இடக் கை வர முத்திரையுடனும் இருக்கிறார். குபேரனுடைய இடப்புறம் அவரது தர்மபத்தினி இடக்கையில் கருநெய்தல் மலர் ஏந்திய நிலையில், வலக்கையால் தனது கணவரை அணைத்த வண்ணம் இருக்கிறார்.


சிவபூஜையில் லயிக்கும் குபேரன் ராஜயோகத்தை அளிக்கவல்லவர். தனலட்சுமியும் தைரியலட்சுமியும் சர்வசக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால், தனத்திற்கும் வீரத்திற்கும் ராஜாவாகிறார்.

திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்ப தால், கோபாதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார். யட்சர்களுக்குத் தலைவனான குபேரன் ஸ்ரீ ராஜாராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தை எப்போதும் ஜெபித்த வண்ணமிருப் பவர். இதனால சகல சக்திகளையும் தன்வயம் கொண்டு, பக்தர்களுக்கு இல்லையென்று கூறாமல் வாரி வழங்கிடும் பெருங்குணம் கொள்கிறார்.

எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் பலன் கிட்டுவதால், கற்பூர ஆரத்தி காட்டும் போது யஜுர் வேதமான,

ராஜதிராஜாய  ப்ரஹஸ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே/
ஸ மே காமாந் காமகாமாய மஹயம்
காமேஸ்ரோ  வைஸ்ரவணோ  ததாது
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம//


என்ற சுலோகத்தைக் கூறியவாறு மங்களாரத்தி செய்கிறார்கள்.

குபேர பூஜை துவங்குவதற்குமுன், எப்போதும் போல் விநாயகரை தியானித்து அவரைப் பூஜிக்க வேண்டும். தொடர்ந்து லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ வைத்து தூபதீபம் போன்ற பதினாறு உபசரணை கள் செய்து, அஷ்டோத்திர (நூற்றியெட்டு) திருநாமங்களைக் கூறி பூஜிக்க வேண்டும்.

அப்பூஜையை அடுத்து நவகிரகங்களைப் பூஜித்து, தொடர்ந்து தேவி வழிபாடு செய்யவேண்டும்.

கடைசியாக வடக்குத் திக்கில் குபேரனின் படம் அல்லது தர்ப்பைகளாலான கூர்ச்சத்தில் குபேரனை ஆவாகனம் செய்து குபேர பூஜையைத் தொடங்கலாம். பின் குபேரனை நூற்றியெட்டு திருநாமங்களால் பூக்களைக் கொண்டு அர்ச்சித்து, இனிப்புப் பண்டங்களை நிவேதனம் செய்து பூஜையை நிறைவுபெறச் செய்யவேண்டும்.

தியான சுலோகம்


மநுஜ வாஹய விமாந வரஸ்திகம்
கருடரத்த நிபம் நிதிதாயகம்/
ஸிவஸகம் முருடாதி விபிஷிதம்
வரகதம் தநதம் பஜ துத்திலம்//


மனிதர்களால் தாங்கப்படும் சிறந்த விமானத் தில் அமர்ந்திருப்பவரும், மரகதம் போன்று ஒளிவீசுபவரும், நவநிதிகளின் தலைவரும், சிவபெருமானின் தோழரும், சிறந்த கதையை கையில் ஏந்தியவரும், பொன்முடி முதலிய ஆபரணங்கள் அணிந்தவரும், தொந்தியுடைய வரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானைப் போற்றுவாயாக!
மூல மந்திரம்:
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நம:
குபேர காயத்ரி:
ஒம் யக்ஷேசாய வித்மஹே
 
வைஸ்ரவணாய தீமஹி
 தந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்!

குபேர மந்திரம்


ஓம் யக்ஷராஜாய குபேராய வைஸ்வரவணாய/
தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா//
யட்சராஜனே, குபேரனே, விச்ரவசின் புதல்வனே, செல்வங்களின் அதிபதியே! என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.
தினசரி மேற்படி மந்திரத்தை வடக்கு முகம் நோக்கி அமர்ந்து 1008 முறை ஜெபம் செய்ய வேண்டும். பால் நைவேத்தியம் செய்யவேண்டும். பிரம்மசர்ய விரதம் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும்.
ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!
ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே, எனது வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.
துதி:
ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம் ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்!
குபேரனே, நர வாகனனே, வட திசைக்கதிபனே, கதாயுதனே, விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.
குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சௌபாக்யலட்சுமி யந்திரம் அல்லது படத்தையும் பூஜை செய்யவேண்டும்.

தீபாவளி தினத்தன்று குபேர பூஜை செய்வது சிறந்த பலனைத் தரும்.
 

தெரிந்துக்கொள்ளவேண்டிய ரகசியங்கள்


ஜீன்கள் சுக்லதாது :சுக்லதாதுவில் 84 அம்சங்கள் உள்ளது.


1) தந்தை ,தாய் உட்கொள்ளும் உணவால் உருவாகக்கூடியது = 28

2) த்ந்தையிடமிருந்து = 21

3) பாட்டனிடமிருந்து = 15

4) முப்பாட்டனிடமிருந்து = 10

5) 4 வது பாட்டனிடமிருந்து = 6

6) 5 வது பாட்டனிடமிருந்து = 3

7) 6 வது மூதாதையிடமிருந்து = 1

ஆக மொத்தம் = 84

ஹோமங்களிலும், யாகங்களிலும் ஆகுதி செய்யப்படும் சமித்துக்களின் பலன்கள்


சமித்துக்கள்
 

வில்வம் (சித்திரை)-- ராஜ்யசம்பத்து

வில்வபழம்---------- செல்வங்களை பெறலாம்

பலாசு (பூரம் )------- சந்திரகிரக தோஷம் நீங்கும்

துளசி --------- திருமணத்தடை அகலும்,விவாகம் நடக்க

அரசு ( பூசம் )----- குரு சமித்து தலைமை பதவி வரும்

வெள்ளெருக்கு------- சூரியன் சமித்து அஷ்டமாசித்திகளையும் , சர்வ வசியங்களையும் அடையலாம்
(திருவோணம்)

அத்தி (கார்த்திகை)-- சுக்ரன் விரும்பியபொருள் கிடைக்கும்

வன்னி(அவிட்டம்)-- சனி சமித்து சகல தெய்வங்களும் மகிழும்

தர்ப்பை ------------ கேது சமித்து ஞான விருத்தி

அருகம்புல்---------- ராகு சமித்து பூர்வஜன்ம வினைகள் நீங்க

கரும்பு-------------- மனம் போல் மாங்கல்யம்

ஆல் (மகம் ) ------ யமன் ப்ரீத்தி.ஆயுள் கூடும்

வல்லாரை --------- சரஸ்வதி கடாட்சம்

சந்தனம் ---------- லட்சுமி கடாட்சம்

வேங்கை(அஸ்தம்)- பில்லி சூன்யம்,ஏவல் அகலும்

பூவரசு ----------- அரசு சமித்தின் பலன்

மஞ்சள்------------ முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்திற்கு சிறந்தது. சகல ரோக நிவர்த்தி ,
கல்வி,  செல்வ சிறப்பு.
 
 
 
 

இரவில் சாப்பிட கூடாதவை:



புளிப்பு, இஞ்சி, தயிர், எள், கீரை இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்

ஆயுள் வளர:


மாலை வெய்யிலில் காய்வது
 
ஹோமப்புகை மேலே படும்படியாக இருப்பது
 
தன்னைவிட இளையவளை திருமணம் செய்துக்கொள்வது

தூய்மையான தண்ணீரை குடிப்பது
 
இரவில் பால் சாதம் சாப்பிடுவது இவை ஆயுளை வளர்க்கும்.




ஆயுள் இழப்பு:
பகலில் தூங்கினால் ஆயுள் இழப்பு உண்டாகும். இளம் வெய்யிலில் காய்வது, பிணத்தின் புகை மேலே படும் படியாக இருப்பது, தன்னை விட மூத்தவளை திருமணம் செய்துக்கொள்வது, கலங்கிய தண்ணீரை
குடிப்பது இரவில் தயிர் சாதம் சாப்பிடுவது இதனால் ஆயுள் இழப்பு உண்டாகும்.

திங்கள், 21 டிசம்பர், 2015

முக்கோடி ஏகாதசி


மாதந்தோறும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதம் வரும் ஏகாதசி தான் சிறப்புக்குரியதாகும். அதனால் தான் இது பெரிய ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என போற்றப்படுகிறது. பெருமாள் அருள்பாலிக்கும் அனைத்து திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

 
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியானது வைகுண்ட ஏகாதசியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தான், அர்ஜூனனுக்கு, கிருஷ்ண பகவான் கீதையை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ராவணனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கும்படி, முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை வணங்கி வேண்டிய தினமும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியாகும்.

இதனால் இந்த ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்ற பெயரும் உண்டு.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து அதிகாலையில் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்த பின்னர் விரதத்தை முடித்தால் இந்த உலகின் பிறவிப்பிணிகளில் இருந்து விடுபட்டு சொர்க்கத்தை அடையலாம் என்பது ஐதீகமாகும். அதனால் தான் விரதங்களில் சிறந்த விரதமாக வைகுண்ட ஏகாதசி விரதம் கருதப்படுகிறது.

ஏகாதசி விரதத்தை தசமியில் தொடங்கி அன்று இரவு, ஏகாதசி முழு தினமும், துவாதசி மாலையில் ஆக நான்கு வேளைகளுக்கு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். தசமியில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். தனியே சுத்தமான தரையில் படுக்க வேண்டும்.

இந்த உபவாச தினத்தின் போது, உடலில் நெல்லிப் பருப்பை அரைத்துப் பூசிக் கொண்டு, நதியில் நீராட வேண்டும். பின்னர் உபவாசம் செய்து கொண்டு ஹரியை நினைத்தபடி பஜனை, பூஜையில் ஈடுபட வேண்டும். ஏகாதசி இரவு உயர்ந்த ஆடைகளால் திருமாலை அலங்கரித்து, கந்த புஷ்பங்களை சாத்த வேண்டும். பின்னர் தூப தீபம் காட்டி, 108 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

பசு நெய்யும், சர்க்கரையும் கலந்த பாயாசமும், பலவித கனிகளும், கற்பூரம், சாபத்திரி, ஜாதிக்காய், லவங்கம் போன்றவை சேர்ந்த அடைக்காயமுது செய்து இறைவனுக்கு படைக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்து சமைத்து உண்ண வேண்டும்.. விருந்தினருக்கு உணவு அளிக்க வேண்டும்.

இந்த வழியில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கும் என்பது ஐதீகம். இதனை எடுத்துக்கூறும் வகையில்தான், வைணவ தலங்களில் ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு என்ற விழாவை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.

 
இது தவிர ஏகாதசி விரதமிருந்து தான் குசேலன் பெரிய செல்வந்தன் ஆனான். பாண்டவர் களில் ஒருவரான தர்மராஜா ஏகாதசி விரதத்தால் தான் துன்பங்களில் இருந்து விடுபட்டார். ருக்மாங்கதன் என்ற மன்னர் இதே விரதத்தை மேற்கொண்டுதான் மக்கட்பேறு பெற்றான். வைகானஸ் என்ற அரசன், இந்த விரதத்தின் மூலமாக தங்கள் மூதாதையர்களுக்கு நற்கதி கிடைக்கப் பெற்றான்.
 
 

சனி, 19 டிசம்பர், 2015

ஸ்ரீ கிருஷ்ண த்வாதச நாம ஸ்தோத்திரம்


பாண்டவர்கள் வனவாசத்தின் போது எல்லாவிதத் துன்பங்களையும் வென்று மனமகிழ்வோடு இருக்க ஸ்ரீ கிருஷ்ணனே த்வாதச நாமஸ்தோத்திரத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார்.
அவை:

த்வாதசம் என்றால் பன்னிரண்டு என்று பொருள். அந்தப் பன்னிரண்டு நாமங்கள் வருமாறு:


1.
ஓம் ஸ்ரீ ஹரியே நமஹ

2.
ஓம் ஸ்ரீ கேசவாய நமஹ

3.
ஓம் ஸ்ரீ பத்மனாபாய நமஹ

4.
ஓம் ஸ்ரீ வாமனாய நமஹ

5.
ஓம் ஸ்ரீ வேத கர்ப்பாய நமஹ

6.
ஓம் ஸ்ரீ மதுஸ்தனாய நமஹ

7.
ஓம் ஸ்ரீ வாசுதேவாய நமஹ

8.
ஓம் ஸ்ரீ வராஹாய நமஹ

9.
ஓம் ஸ்ரீ புண்டரீகாட்சாய நமஹ

10.
ஓம் ஸ்ரீ ஜனார்த்தனாய நமஹ

11.
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ

12.
ஓம் ஸ்ரீதராய நமஹ