திங்கள், 21 டிசம்பர், 2015

முக்கோடி ஏகாதசி


மாதந்தோறும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதம் வரும் ஏகாதசி தான் சிறப்புக்குரியதாகும். அதனால் தான் இது பெரிய ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என போற்றப்படுகிறது. பெருமாள் அருள்பாலிக்கும் அனைத்து திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

 
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியானது வைகுண்ட ஏகாதசியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தான், அர்ஜூனனுக்கு, கிருஷ்ண பகவான் கீதையை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ராவணனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கும்படி, முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை வணங்கி வேண்டிய தினமும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியாகும்.

இதனால் இந்த ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்ற பெயரும் உண்டு.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து அதிகாலையில் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்த பின்னர் விரதத்தை முடித்தால் இந்த உலகின் பிறவிப்பிணிகளில் இருந்து விடுபட்டு சொர்க்கத்தை அடையலாம் என்பது ஐதீகமாகும். அதனால் தான் விரதங்களில் சிறந்த விரதமாக வைகுண்ட ஏகாதசி விரதம் கருதப்படுகிறது.

ஏகாதசி விரதத்தை தசமியில் தொடங்கி அன்று இரவு, ஏகாதசி முழு தினமும், துவாதசி மாலையில் ஆக நான்கு வேளைகளுக்கு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். தசமியில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். தனியே சுத்தமான தரையில் படுக்க வேண்டும்.

இந்த உபவாச தினத்தின் போது, உடலில் நெல்லிப் பருப்பை அரைத்துப் பூசிக் கொண்டு, நதியில் நீராட வேண்டும். பின்னர் உபவாசம் செய்து கொண்டு ஹரியை நினைத்தபடி பஜனை, பூஜையில் ஈடுபட வேண்டும். ஏகாதசி இரவு உயர்ந்த ஆடைகளால் திருமாலை அலங்கரித்து, கந்த புஷ்பங்களை சாத்த வேண்டும். பின்னர் தூப தீபம் காட்டி, 108 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

பசு நெய்யும், சர்க்கரையும் கலந்த பாயாசமும், பலவித கனிகளும், கற்பூரம், சாபத்திரி, ஜாதிக்காய், லவங்கம் போன்றவை சேர்ந்த அடைக்காயமுது செய்து இறைவனுக்கு படைக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்து சமைத்து உண்ண வேண்டும்.. விருந்தினருக்கு உணவு அளிக்க வேண்டும்.

இந்த வழியில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கும் என்பது ஐதீகம். இதனை எடுத்துக்கூறும் வகையில்தான், வைணவ தலங்களில் ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு என்ற விழாவை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.

 
இது தவிர ஏகாதசி விரதமிருந்து தான் குசேலன் பெரிய செல்வந்தன் ஆனான். பாண்டவர் களில் ஒருவரான தர்மராஜா ஏகாதசி விரதத்தால் தான் துன்பங்களில் இருந்து விடுபட்டார். ருக்மாங்கதன் என்ற மன்னர் இதே விரதத்தை மேற்கொண்டுதான் மக்கட்பேறு பெற்றான். வைகானஸ் என்ற அரசன், இந்த விரதத்தின் மூலமாக தங்கள் மூதாதையர்களுக்கு நற்கதி கிடைக்கப் பெற்றான்.
 
 

சனி, 19 டிசம்பர், 2015

ஸ்ரீ கிருஷ்ண த்வாதச நாம ஸ்தோத்திரம்


பாண்டவர்கள் வனவாசத்தின் போது எல்லாவிதத் துன்பங்களையும் வென்று மனமகிழ்வோடு இருக்க ஸ்ரீ கிருஷ்ணனே த்வாதச நாமஸ்தோத்திரத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார்.
அவை:

த்வாதசம் என்றால் பன்னிரண்டு என்று பொருள். அந்தப் பன்னிரண்டு நாமங்கள் வருமாறு:


1.
ஓம் ஸ்ரீ ஹரியே நமஹ

2.
ஓம் ஸ்ரீ கேசவாய நமஹ

3.
ஓம் ஸ்ரீ பத்மனாபாய நமஹ

4.
ஓம் ஸ்ரீ வாமனாய நமஹ

5.
ஓம் ஸ்ரீ வேத கர்ப்பாய நமஹ

6.
ஓம் ஸ்ரீ மதுஸ்தனாய நமஹ

7.
ஓம் ஸ்ரீ வாசுதேவாய நமஹ

8.
ஓம் ஸ்ரீ வராஹாய நமஹ

9.
ஓம் ஸ்ரீ புண்டரீகாட்சாய நமஹ

10.
ஓம் ஸ்ரீ ஜனார்த்தனாய நமஹ

11.
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ

12.
ஓம் ஸ்ரீதராய நமஹ

 

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சிக்கும் இலைகளும், பலன்களும்



விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகரை வழிபடுவது சிறந்தது.  ஒவ்வொரு இலைக்கும் தனிதனிப் பலன்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த பலன்கள் குறித்த தகவல்கள் கீழே:


1.
முல்லை இலை - அறம் வளரும்.

2.
கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3.
வில்வம் இலை - இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4.
அருகம்புல் - அனைத்து நலன்களும் கிடைக்கும்.

5.
இலந்தை இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.

6.
ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.

7.
வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8.
நாயுருவி இலை - முகப் பொலிவும், அழகும் கூடும்.

9.
கண்டங்கத்தரி இலை - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10.
அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

11.
எருக்கம் இலை - கருவிலுள்ள குழந்தைக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

12.
மருதம் இலை - குழந்தைப்பேறு கிடைக்கும்.

13.
விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணிவு கைவரப்பெறும்.

14.
மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்.

15.
தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனதிடம் கிடைக்கும்.

16.
மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17.
அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் பெருமையும் கிடைக்கும்.

18.
ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19.
தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கும்.

20.
அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21.
தவனம் கர்ப்பூர இலை - நல்ல கணவன்/மனைவி அமையப்பெறும்.

இந்த 21 இலைகளில் அருகம்புல் கொண்டு வழிபடுவதால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பதால் அருகம்புல் மிகச்சிறந்ததாக இருக்கிறது.

ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்

ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்:


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம்
ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கேச்வரி
சர்வஜன மனோஹரி சர்வ முக ரஞ்சனி
க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்
சர்வ ராஜ வசங்கரி சர்வ ஸ்திரீ புருஷ வசங்கரி
சர்வ துஷ்டமிருக வசங்கரி சர்வ சத்வ வசங்கரி
சர்வ லோக வசங்கரி
த்ரைலோக்யம் மே வசமானய நமோ நமஹா!


ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்

ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:

1.
சங்கீதயோகினி
2.
ஷ்யாமா
3.
ஷ்யாமளா
4.
மந்திரநாயிகா
5.
மந்திரிணி
6.
சசிவேசானி
7.
ப்ரதானேசி
8.
சுகப்ரியா
9.
வீணாவதி
10.
வைணிகீ
11.
முத்ரிணி
12.
ப்ரியகப்ரியா
13.
நீபப்ரியா
14.
கதம்பேசி
15.
கதம்பவனவாசினி
16.
சதாமதா